புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
171 Posts - 79%
heezulia
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
1 Post - 0%
Pampu
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_lcapஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_voting_barஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 6:02 pm

ஆசை - அர்த்தமுள்ள இந்துமதம் R-3

ஆசை
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருகிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.

‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்” என்ற மனம் சாகும் வரை வருவதில்லை. ஐம்பது காசி நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்த கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது. சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்த போது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக் கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி,

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று, அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்த கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை. ‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபங்கள் இல்லாமற் போய் விடுகின்றன. அனுபங்கள் இல்லாயென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 6:02 pm

ஆசையை மூன்று விதமாக பிரிக்கிறது இந்து மதம்

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருப்பது போது; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்த போது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பறைப்

பற்றுக பற்று விடற்கு” என்பது திருக்குறள்

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல் என்று போதித்தது இந்த மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு., ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே ஏன்?

அது ஆசை போட்டசாலை.

அவன் பயணம் அவன் கையில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான் அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மதத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.

அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 6:06 pm

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும்
நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழ
வைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக
அல்ல.

உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக,
இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூசச்
சொல்லுகிறது.

உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது
என்பதற்காகவே, ‘குங்குமம்’ வைக்கச் சொல்கிறது. ‘
இவள் திருமணமானவள்’ என்று கண்டு கொண்டு அவளை
நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு
அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய
ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே,
அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.

கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும் போது கூட கண்
கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு,
அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது
போல் ஆகிறது.

“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு”
என்பது இந்துக்கள் பழமொழி, கூடுமானவரை மனிதனைக்
குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு
வளைக்கிறது இந்துமதம்,

அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி
கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத்
தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட்
தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப்
பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின்
உபதேசங்களைப் படிப்பானானால், இந்து மதம் என்பது வெறும்
“சாமியார் மடம்” என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்,
உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம். ஆசைகளைப்
பற்றி பரமஹம்சர் என்ன கூறிகிறார்?

“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்து
விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக
வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்து
விடாமல் இருக்க வேண்டும்”
என்கிறார்.

“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும்
செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. அனால்
அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது
சாந்தமாகி விடுகிறது.
இது போல அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”

“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி
விடுகிறது” என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.

நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது உன்னைக்
குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
-
----------------------------
-சைவ மஞ்சரி
thinakaran.lk

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக