புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை - ரீவைண்ட் Poll_c10ஈகரை - ரீவைண்ட் Poll_m10ஈகரை - ரீவைண்ட் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரை - ரீவைண்ட் Poll_c10ஈகரை - ரீவைண்ட் Poll_m10ஈகரை - ரீவைண்ட் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை - ரீவைண்ட் Poll_c10ஈகரை - ரீவைண்ட் Poll_m10ஈகரை - ரீவைண்ட் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை - ரீவைண்ட்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri May 08, 2020 8:31 pm

நான் ஒரு பொறுக்கி. ஈகரையில் பொறுக்கி எடுத்த சில பழைய பதிவுகள்...............................

பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.
சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.

புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.

சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.
வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.

வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.

சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.

நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

இது நகைச்சுவை தான்.................இருப்பினும் மருத்துவர் என்ன சொல்கிறார்?

ஈகரை - ரீவைண்ட் Vikatan%2F2019-05%2Fcd0ec307-d7a6-43d4-8ceb-439db8679ecc%2Fp46a


avatar
Guest
Guest

PostGuest Fri May 08, 2020 8:35 pm

இது அய்யாசாமி ராம் பதிவில் இருந்து…...

வாழ்க்கை இப்படித்தான் நம் பக்கத்தில் ஒருவர் நம்மைப் பார்த்து நகைப்பார்,இன்னொருவர் கண்டுகொள்ளாமல் தன் வேலையுண்டு என இருப்பார்.

ஈகரை - ரீவைண்ட் Team+leader+and+you
********************************************
இளைஞன் ஒருவன் சாலை யில் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது திடீரென நில் என்ற குரல் கேட்டது. நீ இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலையில் ஒரு கல் விழும் என்று எச்சரித்தது.
.
திகைத்துப்போய் இளைஞன் நிற்க, அவன் முன்பாக ஒரு கல் வந்து விழுந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் அதே குரல் நில் இல்லாவிட்டால், வேகமாக வரும் கார் உன் மீது மோதிவிடும் என்று எச்சரித்தது.உடனே அவன் நின்று விட்டான். அப்போது ஒரு கார் வேகமாக அவனைக் கடந்து சென்றது.

இதைக்கண்டு ஆச்சர்யமடைந்த இளைஞன், குரல் கொடுப்பது யார் என்று வினவினான். உடனே அந்த குரல் நான் உன்னை பாதுகாக்கும் தேவதை என்று தெரிவித்தது. இதைக்கேட்ட அந்த வாலிபன், தேவதையே எனக்கு திருமணம் நடைபெற்றபோது, நீ எங்கே சென்றிருந்தாய்? என்றான்.
…………….********************************************************
ஒரு தேவதை காலையில் காட்டு வழியே பறந்து கொண்டிருந்த போது, குள்ளன் ஒருவனைச் சந்தித்தது.
அது அவனை நோக்கி, “ குள்ளனே, நான் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். உனக்கு என்ன தேவையோ கேள்; உன் தேவை பூர்த்தியாகப்படும்” என்றது
குள்ளன் தன் தலையை சொறிந்து கொண்டான். அது அவனை சிந்திக்கத் தூண்டியது, ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு அவன் கூறினான் :
“ அப்படி யென்றால் எனக்கு ஒரு கேன் நிறைய குளிர்ந்த பீர் வேண்டும்!”
ஒரு டேங்க் நிறைய குளிர்ந்த பீர் அவன் எதிரே வந்தது

தேவதை கூறியது:
“இந்த டேங்க் பீர் வசீகரிக்கப்படுத்தப் பட்டது. எப்போதுமே காலியாகாது. இதிலிருந்து பீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும், நீ விரும்பும் வரை இதிலிருந்து குடிக்கலாம், இதனால் எந்தவித நோயும் உன்னை அணுகாது, கொஞ்சம் இதிலிருந்து ருசித்தாலும் போதும்; இதன் சுவயை நீ மறக்க மாட்டாய் , உன்னுடைய தாகத்தை இது தணித்துவிடும். மேலும் இதை நீ பருகிக் கொண்டே இருக்கப் போகிறாய் !”

அந்தக் குள்ளன் மிகவும் மகிழ்வுற்றான். சிறிதளவு பீர் எடுத்துப் பருகினான்.தன் நாவை கொண்டு உதடுகளை ருசி பார்த்தான். அவனுக்கு மிக மிக திருப்தி ஏற்பட்டது.
தேவதை அவனைப் பார்த்துச் சொன்னது;
“ இரண்டு வரத்தைக் கொடுத்தேன் , ஒன்றை பெற்றுக் கொண்டாய்; மற்றொன்றைக் கேள்!”
அந்த குள்ளன் மிகவும் மகிழ்ந்தவனாய் “ அப்படியா?….. இன்னொன்று!… அப்படியென்றால் எனக்கு மற்றோரு பீர் டேங்க் வேண்டும் ! இதே போல! “

ஓஷோ கூறுகிறார்

பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவுப் பூர்வமாகச் செயல் படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான்.“


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 8:46 pm

பொறுக்கி என கூறிக்கொள்ளும் சக்தி அவர்களே
எந்த பதிவில் இருந்து பொறுக்கினது என்று கூறினால்
உங்களை சிறந்த பொறுக்கி என்று கூறி இருப்பேன்.

சுருக்கமாக ,
RMS ரயில்வே மெயில் சர்வீஸில் எனது தாய் வழி பெரியப்பா வேலையில் இருந்தார்.
அந்த காலத்து சலுகைகள் படி அவரது மூத்த மகனுக்கும் அங்கேயே வேலை கிடைத்தது.
அவர்கள் sorting ஆபீஸிற்கு வரும் தபால்களை எடுத்து எந்த எந்த ஊருக்கு அனுப்பவேண்டுமோ அந்த ஊர் தபால்களை பிரித்தெடுத்து அதற்குரிய புறாக்கூண்டுகளில் போட்டுவிடுவார்கள்.
பெரியப்பா தலைமை sorter
மகன் sorter
பெரியப்பா மகனிடம் என்னடா என்னவா வேலை செய்கிறே என்று கேட்டால், தமாஷாக ,
"அப்பா வேலை செய்ற RMS இல் வேலை செய்கிறேன். அப்பா தலைமை பொறுக்கி,
நான் வெறும் பொறுக்கி" என்பார்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2020 8:57 pm

மேல்கண்ட பதிவு #3 ,
நீங்கள் போட்ட பதிவு #2 யின் இடை பட்ட காலத்தில் பதிவு செய்தது.

ரமணியன்

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat May 09, 2020 12:58 pm

Backlinks இல் மவுஸ்-சுட்டி- எங்கே போய் நிற்கிறதோ அந்தப் பதிவை படித்து பிடித்திருந்தால்………..…
ஆகா அப்போதெல்லாம் எப்படியான பதிவர்கள்….கருத்துகளை சொல்ல ஓடி வரும், இவர்கள் இப்போது எங்கே போனார்கள்?ஈகரை ஒரு கருத்துக் களம் (Forum site) என்பதை நிரூபித்தவர்கள் அவர்கள்.

பதிவு எண் 1 - 2009 இல் தாமு என்பவரால் பதிவிடப்பட்டது.

மேலே உள்ளவை நகைச்சுவை பகுதியில் வந்தவை.

இது கவிதைப் பகுதியில் வந்த ….ரமணியன் ஐயா கவிதை வரிகள்.….....

ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
…………
ஈகரை - ரீவைண்ட் AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"

பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
ரமணியன்.

2015 இல்.
ஈகரை - ரீவைண்ட் BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237

வண்ணக்கலவை உடையுடுத்தி
எந்தன் கவலை  போக்க வந்தவளே !
உந்தன் வர்ணஜால  உடையும் ,
நிந்திக்கப்படுமே பீச்சாங்குழல்
பீச்சிடும் வண்ணநீர்கலவையால்!!  

நீலவண்ணக் கண்ணன்
மோகம் மிகக்கொண்டு
ஓடி விளையாடும் ,  
ஹோலி விளையாட்டில் ,
வேலிப்போடா  
கேலி மிகவும் உண்டே ,
பார்த்து மகிழ ,
பாவி மகனுக்கு பங்கில்லையே!

ரமணியன்

⇩ ⇩ ⇩ ⇩ ⇩ ⇩ ⇩ ⇩

avatar
Guest
Guest

PostGuest Sat May 09, 2020 1:01 pm

2010 இல் புனிதம் ...தலைப்பில்...

எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் !
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக,
இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர்,
சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.  
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

ரமணியன்

நாள் : 20.09.2011,குத்து விளக்கு ஏற்றுதல்,ரமணியன் ஐயா ,ஈகரை பதிவாளர் சந்திப்பில்...

ஈகரை - ரீவைண்ட் IMG_0114

இப்படி பல பதிவுகள்..க.ந.கல்யாணசுந்தரம்,ஆதிரா,வித்தியாசாகர்,சக்தி ( நானல்ல) ...என பலரின் பதிவுகள்….கருத்துகள்…...மீண்டும் வருமா…..?

⇧ ⇧ ⇧ ⇧ ⇧ ⇧ ⇧ ⇧


avatar
Guest
Guest

PostGuest Sat May 09, 2020 1:03 pm

ராம் சார் பதிவிட்ட பதிவொன்றில்......................

ஏழு பாவங்கள்

உழைப்பற்ற செல்வம் 
நேர்மையற்ற வியாபாரம்
 
ஒழுக்கமற்ற கல்வி
 
ஈடுபாடற்ற வழிபாடு
 
உழைப்பற்ற செல்வம்
 
மனிதத்  தன்மையற்ற அறிவியல்
 
மனச் சாட்சியற்ற இன்பம்
 
கொள்கையற்ற அரசியல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2020 4:38 pm


முத்துப்பரல்களை பொறுக்கி எடுத்து
மலரும் நினைவுகளாக மலரவிட்டு
மகிழ்ச்சியை கூட்டினாலும்
அந்நாள் போல் பொன்னாள்
இந்நாளில் வருமா என
ஏக்கமும் உடன்வருதே.

ரமணியன்

@சக்தி18




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2020 4:55 pm

மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது சக்தி.
அந்த காலங்களில் பதிவுகள் இடுதல்
இரவையே உண்டிடும் வண்ணம் இரவு
பகல் பாராது இருக்கும்.ஆரம்பகால ஆர்வம்
.படிப்படியாக குறைந்து.....
படிப்படியாக குறைந்து
படிப்படியாக குறைந்து
இனிமேல் குறைவதிற்கில்லை என்ற நிலையில் இருக்கிறது.
அவரவர்கள் செய்யும் பணியின் அழுத்தம், மாறுபட்ட ஆர்வம்.
பத்தாண்டுகளுக்கு முன் இருந்த உறவுகளின் சிலருக்காவது
ஈகரை ஒரு தோணியாக /ஏணியாக இருந்திருக்கிறது.
படங்களுக்கு ஏற்ற கவிதைகள் பல வந்த காலம் இருந்தது.

பெருங்காய வாசனையில்
பெருங்காயம் பட்ட நிலையில்
இருக்கிறது ,

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 09, 2020 5:37 pm

T.N.Balasubramanian wrote:
முத்துப்பரல்களை பொறுக்கி எடுத்து
மலரும் நினைவுகளாக மலரவிட்டு
மகிழ்ச்சியை கூட்டினாலும்
அந்நாள் போல் பொன்னாள்
இந்நாளில் வருமா என
ஏக்கமும் உடன்வருதே.

ரமணியன்

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1319658
உங்கள் மலரும் நினைவுகளை பதிவு செய்து வருத்தப் பட்டு உள்ளீர்கள் .
இதை முடிந்த மட்டும் மாற்ற முயற்சிப்போம் உங்கள் ஆழ்ந்த யோசனை .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக