புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_lcapசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_voting_barசும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 1:30 pm



தாயுமானவர்!
-------

சிவபெருமானின் பெயரைதான் அந்தக் குழந்தைக்குச்
சூட்டியிருந்தார்கள். அதுவும் சிவன் மீது மிகுந்த பக்தியுடன்
வளர்ந்தது. இளவயதில் ஒருநாள் தாயுமானவர் ஆலயத்தில்
அமர்ந்து இறைவனை நோக்கித் தியானம் செய்து
கொண்டிருந்தார்.

அப்படியே அந்த ஆனந்தத்தில் மூழ்கிவிட்டார் அவர்.
சுற்றியுள்ளது எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால், எ
ல்லாரும் அவரைத் தேடத் தொடங்கினார்கள். நிறைவாக
அவரை ஆலயத்தில் கண்டறிந்தார்கள்,

‘ஏன் எந்நேரமும் இப்படியே உட்கார்ந்திருக்கிறாய்?
வீட்டுக்கு வா, மற்ற வேலைகளைக் கவனி’ என்று அவர்கள்
கேட்க, தாயுமானவர்,

‘சிவபெருமானை நினைப்பதையன்றி வேறு என்ன வேலை
நமக்கு?’ என்றே எண்ணியிருப்பார்!

‘எல்லாம் சிவன் செயல் என்றுஅறிந்தால்,
அவன் இன்அருளே
அல்லால் புகல் இடம் வேறும் உண்டோ? அதுவே நிலையா
நில்லாய், உன்னால் தமியேற்குக் கதி உண்டு இந்நீள் நிலத்தில்,
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து
ஆவதுஎன்ன புகல்நெஞ்சமே!’
--
நெஞ்சே, பொல்லாத மயக்கத்தில் ஏன் ஆழ்கிறாய்? அதனால்
என்ன கிடைத்துவிடும்? இங்கே நடப்பவை அனைத்தும்
சிவன்செயல் என்று அறிந்துகொண்ட பிறகு, அவனுடைய
இன்னருளைத்தவிர நாம் சேர்வதற்கு வேறு இடமுண்டா?
ஆகவே, சிவனின் திருவடிகளே கதி என்று நிலையாக நில்,
அதனால், வேறு துணையில்லாத தனியனாகிய எனக்கு
இவ்வுலகத்தில் நற்கதி கிடைக்கும்!

எப்போதும் இறை சிந்தனையில் இருந்தவர் தாயுமானவர்.
உலகக் கடமைகள், திருமணம் போன்ற குடும்பத் தேவைகளை
நிறைவேற்றினாலும், ஒருகட்டத்தில் தன் குருநாதரிடம்
உபதேசம் பெற்றுத் துறவறம் பூண்டார்.

தமிழை ஆழ்ந்து கற்ற தாயுமானவர் தனது பக்தியுணர்வை
அழகிய பாடல்களாகப் பாடினார். அவை வாசிக்க
எளியவையாகவும் சிவபெருமானின் பெருமைகளைப்
போற்றும் வண்ணமும் அமைந்தன.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 1:30 pm


‘சோதியாய் இருள்பிழம்பைச் சூறையாடும்
தூவெளியே, எனைத் தொடர்ந்து தொடர்ந்து
எந்நாளும்
வாதியா நின்ற வினைப்பகையை வென்ற
வாழ்வே, இங்கு உனைப்பிரிந்து
மயங்குகின்றேன்,
மயக்குறும் என்மனம் அணுகாப்
பாதை காட்டி,
வல்வினையைப் பறித்தனையே,
வாழ்வே, நான் என்
செயக்கடவேன்? செயலெலாம்
நினதே என்று
செங்கை குவிப்பேன், அல்லால்
செயல்வேறில்லை.’

பிரகாசமான சோதியாக, இருள்பிழம்பை அழிக்கின்ற
தூயவெளியே, என்னைத் தொடர்ந்து வந்து என்றென்றும்
துன்பம் தருகிற வினைகளை வென்ற என் வாழ்வே,

இங்கே உன்னைப் பிரிந்து நான் மயங்குகிறேன், என்
மனத்துக்கு வழிகாட்டி, என் வல்வினையைப் பறித்தவனே,
என் வாழ்வே, நான் இப்போது என்ன செய்வேன்?
‘எல்லாம் நின்செயல்’ என்று கைகள் குவித்து உன்னை
வணங்குவேன்,
மற்றபடி நான் செய்யக்கூடியது ஏதுமில்லை!

‘சும்மா இரு’
என்று சாதாரணமாகச் சொல்வார்கள், இருப்பதிலேயே
அதுதான் கடினம் என்றார் தாயுமானவர். அதற்கு அருள்
செய்யச்சொல்லி இறைவனை வேண்டினார்:

‘கந்துக மதக்கரியை வசமா
நடத்தலாம்,
கரடி, வெம்புலி வாயையும்
கட்டலாம், ஒருசிங்கம்
முதுகின்மேல் கொள்ளலாம்,
கண்செவி எடுத்து ஆட்டலாம்,
வெந்தழலின் இரதம்வைத்து
ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்,
வேறொருவர் காணாமல் உலகத்து
உலாவலாம்,
விண்ணவரை ஏவல் கொளலாம்,
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,
மற்றுஒரு
சரீரத்தினும் புகுதலாம்,
சலமேல் நடக்கலாம், கனல்மேல்
இருக்கலாம்,
தன்நிகர்இல் சித்திபெறலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது, சத்தாகிஎன்
சித்தம்மிசை குடிகொண்ட அறிவான
தெய்வமே,
தேசோமய ஆனந்தமே.’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 1:31 pm

சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! 18

என் சிந்தனையில் சத்தாகத் திகழ்கிற அறிவு தெய்வமே,
ஒளிமயமான ஆனந்தமே, மதயானையை நம் வசமாக்கி
விடலாம், கரடி, புலியின்  வாயைக் கட்டலாம், சிங்கத்தின்
மீது ஏறலாம்,

பாம்பைக் கையில் பிடிக்கலாம், மற்ற உலோகங்களைப்
பொன்னாக்கலாம்,  இன்னொருவருக்குத் தெரியாமல்
நடமாடலாம், தேவர்களை அடிமையாக்கலாம்,

எப்போதும் இளமையோடு இருக்கலாம், இன்னோர்  
உடலில் புகலாம், நீர்மேல் நடக்கலாம், நெருப்பின்மேல்
நடக்கலாம், தனக்கு யாரும் இணையில்லாத சித்திகளைப்
பெறலாம்.

ஆனால்,  இத்தனையையும் செய்தாலும், சிந்தனையை
அடக்கிச் ‘சும்மா’ இருப்பது சிரமம்.

அந்தத் திறன் எளிதில் வந்துவிடாது, அதை எனக்கு  
அருள்வாய்!

தன்னை மறந்து இறைவனின் திருவடிகளில் ஒன்றுவதே
தாயுமானவரின் கோரிக்கை. அந்த எண்ணம் வளர வளர,
எல்லா  உயிர்கள்மீதும் அவருக்கு நேசம் பொங்கியது,
அதுவும் இறைவன் அருளே என்று நம்பினார்.
--



‘கையினால் தொழுது ஏத்திக் கசிந்து உளம்
மெய்யினால் உனைக்காண விரும்பினேன்,
ஐயனே, அரசே, அருளே, அருள்
தையல் ஓர்புறம்வாழ் சகநாதனே!’
பெருமானே, உன்னைக் கையால் தொழுது,
போற்றிப் பாடி, உள்ளம் கசிந்து, மெய்யாக  
உன்னைக் காண விரும்பினேன்,
ஐயனே, அரசே, அருளே, கருணைமயமான
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட
சகநாதனே, அருள் புரிவாய்!

‘ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
நாட்டமே, நாட்டத்துள் நிறைந்த
வானமே, எனக்கு வந்து வந்து ஓங்கும்
மார்க்கமே, மருளர்தாம் அறியா
மோனமே, முதலே, முத்திநல் வித்தே,
முடிவிலா இன்பமே, செய்யும்
தானமே, தவமே, நின்னைநான் நினைந்தேன்,
தமியனேன் தனைமறப்பதற்கே.’
---
ஞானமே வடிவாகத் திகழ்கிறவனே, எல்லாரும்
தேடுகிற சிறப்பே, அப்பொருளினுள் நிறைந்த
வானமே, எனக்கு வழியாகத் திகழ்கிறவனே,  
பயந்தவர்களால் அறிய இயலாத மோன நிலையே,
முதலே, மோட்சத்துக்கு வழிகாட்டும் நல்விதையே,
முடிவில்லாத இன்பமே, செய்யும்  தானமே, தவமே,
தனியனான நான், என்னை மறக்க உன்னை
எண்ணுகிறேன், அருள் செய்வாய்!
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 1:31 pm


‘பிள்ளைமதிச் செஞ்சடையான்,
பேசாப் பெருமையினான்,
கள்அவிழும் பூங்கொன்றைக்
கண்ணியான், உள்ளபடி
கல்ஆலின்கீழ் இருந்து
கற்பித்தான் ஓர்வசனம்
எல்லாரும் ஈடேறவே.’

செஞ்சடையில் பிறைநிலவைச் சூடியவன், பேச்சில்
சொல்ல இயலாத பெருமையைக் கொண்டவன்,
தேன் சொட்டும் கொன்றை மலர் மாலையணிந்தவன்,
கல்ஆலின்கீழ் இருந்து நாம் எல்லாரும் ஈடேற
நல்வழியைக் கற்பித்தவன் அந்தச் சிவபெருமான்!

தாயுமானவரின் ‘பராபரக் கண்ணி’ பாடல்கள்
மிகவும் எளிய வடிவில் எல்லாரும் பாடக்கூடியவையாக
அமைந்தன, அதேசமயம் ஆழமான கருத்துகளைக்
கொண்டிருந்தன. அந்தப் பாடல்களில் சிவபெருமானிடம்
அவர் வைக்கும் கோரிக்கைகள் அவர் தனக்காகக்
கேட்டவை அல்ல, உலக நன்மைக்கானவை:

‘ஆரா அமுதே, அரசே,
ஆனந்தவெள்ளப்
பேராறே, இன்பப் பெருக்கே,
பராபரமே.’
‘முத்தே, பவளமே, மொய்த்த
பசும்பொற்சுடரே,
சித்தே, என்உள்ளத் தெளிவே,
பராபரமே.’
‘கண்ணே, கருத்தே, என் கற்பகமே,
கண்நிறைந்த
விண்ணே, ஆனந்த வியப்பே,
பராபரமே.’
‘அன்பைப் பெருக்கி எனது
ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே, இறையே,
பராபரமே.’
‘கன்றினுக்குச் சேதா கனிந்து
இரங்கல்போல எனக்கு
என்று இரங்குவாய் கருணை,
என்தாய், பராபரமே.’
‘கற்ற அறிவால் உனைநான் கண்ட
வன்போல் கூத்து ஆடில்
குற்றம் என்று என்நெஞ்சே
கொதிக்கும், பராபரமே.’
‘எவ்வுயிரும் என்உயிர்போல்
எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள்கருணை செய்யாய்,
பராபரமே.’
‘பித்தனை, ஏதும்அறியாப்
பேதையனை, ஆண்ட உனக்கு
எத்தனைதான் தெண்டன்இடுவேன்
பராபரமே.’
‘கேட்டதையே சொல்லும் கிளிபோல
நின்அருளின்
நாட்டம்இன்றி வாய்பேசல் நன்றோ,
பராபரமே.’
‘கல்எறியப் பாசிகலைந்து நல்நீர் காணும்,
நல்லோர்
சொல்உணரின் ஞானம்வந்து தோன்றும்,
பராபரமே.’
‘எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.’
‘நேசத்தால் நின்னை நினைக்கும்\
நினைவுஉடையார்
ஆசைக் கடலில் அழுந்தார், பராபரமே.’
‘தேடுவேன் நின்அருளை, தேடுமுன்னே
எய்தில், நடம்
ஆடுவேன் ஆனந்தம்ஆவேன், பராபரமே.’
‘கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த
மெய்யடியார்
சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன்,
பராபரமே.’

தெவிட்டாத அமுதமே, எங்கள் அரசே, ஆனந்தவெள்ளம்
பொங்கும் பேராறே, இன்பப் பெருக்கே, முத்தே, பவளமே,
பசும்பொற்சுடரே, சித்துப்பொருளே, என் உள்ளத்தின்
தெளிவே, கண்ணே, கருத்தே, என் கற்பகமே, கண்ணில்
நிறைந்த வானமே, ஆனந்த வியப்பே, பராபரமே.

என் உள்ளத்தில் அன்பைப் பெருக்கி, என் உயிரைக்
காக்கவந்த இன்பப் பெருக்கே, இறைவா, என் தாயே,
பசு தன் கன்றின்மீது இரக்கம் காட்டுவதுபோல்,
நீ எனக்கு இரக்கம் காட்டுவது எப்போது?

நான் கற்றுக்கொண்டவற்றை வைத்து உன்னைக் கண்டு
விட்டேன் என்று கூத்தாடினால், அது குற்றம் என்று
என் நெஞ்சே கொதிக்கிறது! எல்லா உயிர்களையும் என்
உயிரைப்போல் நான் எண்ணி அவற்றின் மீது கருணை
காட்ட நீ எனக்குக் கருணை காட்டு.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 1:31 pm



நான் ஒரு பித்தன், ஏதுமறியாப் பேதை, என்றாலும்,
நீ என்னை ஆண்டாய், உன்னை நான் எப்படி வணங்கி
நன்றி சொல்வேன்?

கிளி தான் கேட்டதை அப்படியே திரும்பச் சொல்லும்.
அதுபோல, நானும் உன்னைப் பற்றி எங்கேயோ
கேட்டவற்றை, வாசித்தவற்றைத் திரும்பச் சொல்லிக்
கொண்டிருக்கிறேன், அதனால் என்ன நன்மை?
நான் உன்னை அனுபவித்து உணரவேண்டும்.
--
பாசி படிந்த குளத்தில் கல்லை எறிந்தால், பாசி விலகி
நல்ல நீர் தோன்றும், அதுபோல, நல்லவர்களின்
சொல்லைக் கேட்டால் ஞானம் வரும். எல்லாரும்
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

இதை எண்ணிப் பிரார்த்தனை செய்வதைத்தவிர,
வேறேதும் எனக்குத் தெரியாது! இறைவா, அன்பாலே
உன்னை நினைக்கிறவர்கள் ஆசைக்கடலில் அழுந்த
மாட்டார்கள். நான் உன் அருளைத் தேடுவேன்,

அப்படித் தேடுமுன் நீ எனக்குக் காட்சி தந்தால்,
ஆனந்தமடைந்து நடனம் ஆடுவேன். கல்லாதவனான
நான், கற்றுணர்ந்த மெய்யடியார்களின் சொல்லைக்
கேட்டு நின்னைத் தொடர்ந்து வந்தேன், பராபரமே,
எனக்கு அருள் செய்வாய்! இறைவன் அருள் பெற்று
அவனை வணங்க வேண்டும் என்பதே தாயுமானவரின்
வேண்டுதல், சிந்தனை, அனைத்தும்:

‘ஆழ்ஆழி கரைஇன்றி நிற்கவிலையோ?
கொடிய
ஆலம் அமுது ஆகவிலையோ?
அக்கடலின்மீது வடஅனல் நிற்கவில்லையோ?
அந்தரத்து அகிலகோடி
தாழாமல் நிலை நிற்கவிலையோ? மேருவும்
தனுவாக வளைய விலையோ?
சத்தமேகங்களும் வச்ரதரன் ஆணையில்
சஞ்சரித்திடவில்லையோ?
வாழாது வாழவே ராமன் அடியால் சிலையும்
மடமங்கை ஆகவிலையோ?
மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு
சித்திகள் உலக
மார்கத்தில் வைக்க விலையோ?
பாழான என்மனம் குவிய ஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ?
பார்க்கும் இடம்எங்கும் ஒருநீக்கம்
அற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.’

ஆழமான கடலுக்குக் கரை இல்லை. ஆனாலும் அது
உனக்குக் கட்டுப்பட்டு நிற்கவில்லையா? கொடிய நஞ்சு
உன் அருளால் அமுதமாகவில்லையா? கடல்மீது வட
முகாக்னி எனப்படும் அனல் அணையாமல் நிற்க
வில்லையா? அண்டத்தில் எத்தனையோ உலகங்கள்
நிலைத்து நிற்கவில்லையா? மேரு மலை உன்னால்
வில்லாக வளையவில்லையா?

வானவர் தலைவனின் கட்டளைப்படி மேகங்களெல்லாம்
வானில் சஞ்சரிக்கவில்லையா? ராமன் காலடியால்
ஒரு பாறை பெண்ணாக மாறி வாழவில்லையா?

சிவபெருமானின் மணி, மந்திரம் போன்றவற்றால்
பெரியோர்கள் பல சித்திகளைப் பெறவில்லையா?
பார்க்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கிற பரிபூரண
ஆனந்தமே, இதையெல்லாம் நிகழ்த்துகிற உனக்கு
என்னுடைய அற்பமனத்தை உன் திருவடியில் குவிக்கச்
செய்ய ஒரு தந்திரம் செய்ய இயலாதா?

எனக்கு அருள் செய்!
--
ஓவியங்கள்: வேதகணபதி
----------------------------------
நன்றி- ஆன்மிகம் -குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 1:38 pm

சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல! Thayumanavar.1
-
( தாயுமானவர் திருமறைக்காடு என்று சைவ இலக்கியங்கள்
போற்றும் வேதாரண்யத்தில் பிறந்தவர். தமிழகத்தை
நாயக்கர்கள் ஆண்டபோது, திருச்சிராப்பள்ளியில்
விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக
வேலை பார்த்தார்.

மட்டுவார்குழலி என்ற பெண்ணை திருமணம் செய்தவருக்கு
இல்லறத்தில் நாட்டம் இல்லை. எனவே பட்டினத்தார் போன்று
துறவறம் மேற்கொண்டு பல கோயில்களுக்குச் சென்று
இலட்சுமிபுரம் (ராமநாதபுரம்) என்ற ஊரில் முக்தி அடைந்தார்.)


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக