புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை மரம்! -சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 02, 2020 7:10 pm

அகந்தை மரம்! -சிறுவர் கதை E_1582882573

திருவட்டாறு நந்தவனத்தில் அழகிய மாமரம் பூத்து
குலுங்கியது; எல்லா பருவ காலத்திலும் மாங்காய்கள்
குலுங்கின; வண்ணமயமாக கனிந்து மணம் வீசின.

இதனால் இறுமாப்பு அடைந்து, அகந்தையின் உச்சிக்கு
சென்றது மாமரம்; சார்ந்து வாழும் உயிரினங்களை
எல்லாம் அலட்சியம் செய்தது.

பழங்களை சாப்பிட அனுமதிக்காமல், பறவைகளை
விரட்டி அடித்தது; அணில்களை அதட்டி மிரட்டியது.

நிழலில் ஒதுங்கி இளைப்பாற வந்தோரை நிந்தித்து
துரத்தியது. கனிந்த பழங்கள் எல்லாம், அதன் கர்வத்தால்
அழுகி நாசமாயின.

அந்த பகுதியில் அருவிக்கரை வனதேவதை, அழகிய
வானம்பாடி ஒன்றை வளர்த்து வந்தது. அது, மெல்லிய
குரலால் பாடி, சிறகடித்து காட்டை வலம் வந்து
கொண்டிருந்தது.

கனிகளால் குலுங்கிய மாமரத்தை ஒருநாள் கண்டது;
மகிழ்வுடன் அதில் அமர்ந்து, பழத்தை கொத்தி சுவைக்கத்
துவங்கியது.

ஆத்திரம் அடைந்த மாமரம், ‘ஹூம்… உனக்கு எவ்வளவு
அகங்காரம்; அனுமதியின்றி என் கிளையில் அமர்ந்ததும்
அல்லாமல், பழத்தை வேறு புசிக்கிறாயே… வெட்கமாக
இல்லையா…’ என, கோபத்துடன் கேட்டது.

பதில் சொல்ல முயன்ற வானம்பாடியை, கிளைகளால்
பயங்கரமாக தாக்கியது.

காயம் அடைந்து, அழுதபடியே பறந்தது வானம்பாடி. இதை
அறிந்த வனதேவதை, சினம் கொண்டது. மாமரத்துக்கு பாடம்
புகட்ட சபதம் எடுத்தது. தக்க நேரத்துக்காக காத்திருந்தது.

கார்காலத்தில் சிறகை அசைத்தபடி வந்தது வனதேவதை.
அதை அலட்சியமாக பார்த்தது மாமரம். திடீர் என மின்னல்
வெட்டியது; பயங்கர இடி சத்தம் கேட்டது. மின்னல் கீறி,
தீப்பொறியாக பாய்ந்தது. தீப்பிடித்து எரியத் துவங்கியது
மாமரம். அதன் இலைகளும், கிளைகளும் கருகின.

அலறி துடித்தது மாமரம்; ஒரு பகுதி எரிந்த நிலையில், மேகம்
திரண்டு மழையாக பொழிந்தது; வெம்மையாக வாட்டிய தீயை
அணைத்தது வனதேவதை.

எரிந்தும், எரியாத நிலையில் பரிதாபமாக காட்சியளித்தது
மாமரம். அதன் பசுமையும், அழகும் காணாமல் போய்விட்டன.
மிகவும் சோகத்தில் தத்தளித்தது.

கோபம் தணிந்து, திரும்பியது வனதேவதை.

அதன் பின், மாமரத்தின் அருகே யாரும் செல்வது இல்லை;
அதன் நிழலைத் தேடி மனிதர்களோ, மற்ற உயிரினங்களோ
வரவில்லை; பழங்கள் இல்லாததால் பறவைகள் வரவில்லை.
அகந்தையால் அழிவு வந்ததே என புலம்பி, உறவற்றதை
எண்ணி துடித்தது.

ஒரு நாள் மாலை –

ஒரு சிறுமி அழுதபடியே, மாமரம் பக்கம் சென்றாள்; அவள்
கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்தியபடி, ‘அன்பே… உன்
துயரம் தீர உதவுகிறேன்…’ என்று, விவரத்தை கேட்டது
மாமரம்.

பரிவான வார்த்தையால் நம்பிக்கை பெற்ற சிறுமி, ‘காட்டில்
விறகு சேகரிக்க அனுப்பினார் என் அம்மா; ரொம்ப நேரமாக
தேடியும் எதுவும் கிடைக்கவில்லை; வெறும் கையுடன்
போனால் அடி வாங்க வேண்டுமே…’ என்றாள்.

‘பயப்படாதே… என் கிளைகளை ஒடித்து எடுத்துக்கொள்;
யாருக்கும், என் பழங்களைக் கொடுத்து உதவியதில்லை…
உனக்காவது, இந்த கிளைகள் உதவட்டுமே…’ என்றது மாமரம்.

கிளைகளை ஒடித்த சிறுமி, சற்று நேரத்தில் மறைந்தாள்;
வண்ண ஒளியுடன் வனதேவதை அங்கு தோன்றி, ‘அகந்தையை
அகற்றி, நற்பண்புகளை வளர்த்துள்ள மாமரமே… இதோ, உன்
பழைய உருவத்தை கொடுக்கிறேன்… நீ பசுமையாக தழைத்து,
குளிர் நிழலை பொழி; பூத்து குலுங்கி, காய், கனிகளை வழங்கி
எல்லாருக்கும் உதவு…’ என்றது.

அதன்படி, தழைத்து ஓங்கியது மாமரம்; வழிப்போக்கர்கள்
பசுமையான நிழலில் ஒதுங்கி ஓய்வெடுத்தனர். பறவைகள்,
பழங்களை ருசித்து மகிழ்ந்து பாடின. உயிரினங்களுக்கு பயன்
மிக்கதாக மாறியது மாமரம்.

செல்லங்களே… அறியாமை என்ற இருளில் தள்ளி விடும்
அகந்தை; கர்வம் இன்றி வாழ்ந்தால் நன்மைகள் தேடி வரும்
என்பதை, இந்த கதை மூலம் உணருங்கள்.
-
------------------------------------------
அருவிக்கரை அபிநந்தன்
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக