உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by பூர்ணகுரு2101 Today at 1:14 am

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by பூர்ணகுரு2101 Today at 1:11 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 1:02 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by ayyasamy ram Today at 12:49 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 5:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» காெரோனாவை வெல்லட்டும்...
by சடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Mon May 25, 2020 9:00 pm

» புத்தகம் தேவை?
by ப்ரியா Mon May 25, 2020 8:59 pm

» Thiru Cho Ramaswamy books vendum
by saravanan1992 Mon May 25, 2020 8:45 pm

» "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'
by ayyasamy ram Mon May 25, 2020 8:11 pm

» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Mon May 25, 2020 8:10 pm

» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி?'
by ayyasamy ram Mon May 25, 2020 8:06 pm

» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
by ayyasamy ram Mon May 25, 2020 7:49 pm

» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா
by ayyasamy ram Mon May 25, 2020 7:47 pm

» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
by velang Mon May 25, 2020 6:34 pm

» நான் + நாம் = நீ
by ranhasan Mon May 25, 2020 2:03 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Mon May 25, 2020 1:58 pm

Admins Online

அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை

Go down

01052020

Post 

அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Empty அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை
ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்

பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.

இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.

மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.

இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?

இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.

அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.

உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.

அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Share this post on: redditgoogle

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum