புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_m10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_m10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_m10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_m10திருவாதவூர் திருமறைநாதர் கோவில் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 2:31 pm

திருவாதவூர் திருமறைநாதர் கோவில் 202004281321372706_Tamil_News_Thirumarainathar-Temple-Thiruvathavur_SECVPF
-

மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது
ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின்
தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும்.

அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம்.
அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி
என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத்
தூண்டுகிறார்கள்.

இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு.
வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில்
ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம். ‘எங்கோ கேள்விபட்ட பெயராக
இருக்கிறதே!’ என்று யோசிக்கிறீர்களா?

ஆம்! திருவாதவூரர் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகர்
அவதரித்த தலம்தான் இது. வாதவூர் என்றதும் வாத நோய் உள்ளவர்கள்
உள்ள ஊர் என்பது பொருள் அல்ல.

வேதங்களின் பொருளை வாதம் செய்து (Debate), மெய்ப்
பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால்
தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’
என்றும் அழைக்கப்படுகிறார்.

சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது.
அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை
வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது.

இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான்.
அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்க
விட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார்.

சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய
பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 2:32 pm


கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல்
உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக
வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய்
அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று,
கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள்
தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக
கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய்
தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும்.

வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு
நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின்
எண்ணிக்கை ஏராளம்.

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர்,
அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்.
அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த
பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில்
கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார்.

அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு,
திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று
வருகின்றன.

அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை
ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது.
இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும்.
இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு
‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார்.

எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.
பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும்
எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர்
ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.

ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து
அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற
பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில்
தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது.

தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால்
சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால்
அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை
செய்தார்.

இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து
விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. இந்த ஆலயத்தின்
தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது.

பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர்,
சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும்
பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம்
கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன்
சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை,


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 2:32 pm


‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய
பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண
வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும்,
இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக
சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த
ஆலயத்திலும் நடைபெறுகின்றன.

என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா
சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன்
நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள்
தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில்
திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ்
வசதிகள் உள்ளன.

மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து
சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை
அடையலாம்.

மலைமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக