உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by பூர்ணகுரு2101 Today at 1:14 am

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by பூர்ணகுரு2101 Today at 1:11 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 1:02 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by ayyasamy ram Today at 12:49 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 5:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» காெரோனாவை வெல்லட்டும்...
by சடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Mon May 25, 2020 9:00 pm

» புத்தகம் தேவை?
by ப்ரியா Mon May 25, 2020 8:59 pm

» Thiru Cho Ramaswamy books vendum
by saravanan1992 Mon May 25, 2020 8:45 pm

» "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'
by ayyasamy ram Mon May 25, 2020 8:11 pm

» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Mon May 25, 2020 8:10 pm

» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி?'
by ayyasamy ram Mon May 25, 2020 8:06 pm

» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
by ayyasamy ram Mon May 25, 2020 7:49 pm

» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா
by ayyasamy ram Mon May 25, 2020 7:47 pm

» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
by velang Mon May 25, 2020 6:34 pm

» நான் + நாம் = நீ
by ranhasan Mon May 25, 2020 2:03 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Mon May 25, 2020 1:58 pm

Admins Online

ஏமாறாதே !

ஏமாறாதே ! Empty ஏமாறாதே !

Post by T.N.Balasubramanian on Sat Apr 18, 2020 7:47 pm

ஏமாறாதே 


[ltr]*மார்கெட்டில் இது ஒரு புது fraud...*[/ltr]
[ltr]அது ஒரு திங்கள்கிழமை, ராஜேஷ் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான். 3 தடவை மனைவியிடம் இருந்து போன், 4வது தடவை எடுத்தான்.[/ltr]
[ltr]எதுக்கு இப்ப இத்தினி வாட்டி அடிக்கிற...உனக்கு அறிவில்லை என்றான் எரிச்சலாக.[/ltr]
[ltr]மறுமுனையில் இருந்து ஒரு ஆண் குரல்..ராஜேஷ் சார்ர்ர்ர்[/ltr]
[ltr]ஆமா நீங்க...?[/ltr]
[ltr]சார்...நான் அசோக் நகர் மசூதி எதிர்தாப்பல இருந்து பேசுறேன்.[/ltr]
[ltr]சிகப்பு கலர் ஸ்கூட்டில வந்த மேடம் அடிபட்டுடாங்க சார்...உங்க wifeஆ சார்... என்று கேட்கும் போதே இவனுக்கு நெஞ்சு படபடத்தது.. மூளை சம்பித்தது.[/ltr]
[ltr]ராஜேஷ்க்கு புரிஞ்சு போச்சு...[/ltr]
[ltr]பையன் ஜவகர் வித்யாலயா ஸ்குலா தான் படிக்கிறான்.[/ltr]
[ltr]ஐய்யோ ஆண்டவா..அவள மட்டும் திருப்பிக் கொடுத்துடு... அவகிட்ட பாசமா இருக்கேன். இனிமேல் திட்ட மாட்டேன்..அன்பா இருப்பேன்....[/ltr]
[ltr]ராஜேஷ்: இப்ப எங்க சார் அவங்க என்றான்.[/ltr]
[ltr]அந்த ஆள்: பில்ரோத் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க சார். என் கிட்ட போன் கொடுத்து ராஜேஷ் என்று மட்டும் தான் சொன்னாங்க. அப்புறம் மயங்கிடாங்க சார். கால்ல நல்ல அடி சார். நிறைய ரத்தம் வேற சார்... சீக்கரம் அங்கு வந்துடுங்க சார்.[/ltr]
[ltr]தோ...உடனே வரேன் சார் என்று ஒடினான்.[/ltr]
[ltr]கிழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணறதுகுள்ள மறுபடியும் போன் அவள் நம்பரில் இருந்து.[/ltr]
[ltr]சார் சொல்லுங்க என்றான்...[/ltr]
[ltr]ராஜேஷ் சார்..கொஞ்சம் காசு இருந்தால் அனுப்பி வையுங்க சார். மேடம் கிட்ட காசு இருக்கோ இல்லையோ... மேடம் வேற மயக்கத்தில் இருக்காங்க... அதனால treatment delay பண்ணக் கூடாது சார்.[/ltr]
[ltr]எப்படி சார் பணம் அனுப்பறது...நான் கிளம்பிட்டேன் ஆபிஸ்லிருந்து. ஆன்லயனில் அனுப்புவதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும் சார்..[/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
[ltr]தொடர்கிறது [/ltr]
[ltr]கோரா செய்தி [/ltr]


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26454
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9563

Back to top Go down

ஏமாறாதே ! Empty Re: ஏமாறாதே !

Post by T.N.Balasubramanian on Sat Apr 18, 2020 7:49 pm

[ltr]தொடர்ச்சி........[/ltr]

[ltr]சார் உங்களிடம் PAYTM / Gpay இருக்கா?[/ltr]


[ltr]உங்க friends கிட்டச் சொல்லி அனுப்பச் சொல்லுங்க சார் நான் என் நம்பரை மெசேஜ் பண்ணுறேன் என்றான்.[/ltr]


[ltr]சரி அனுப்புங்க என்றான்.. அதுக்குள்ள நண்பனைக் கூப்பிட்டு விஷயத்தை விளக்கி பணம் அனுப்ப சொல்லிட்டான்.[/ltr]


[ltr]பில்ரோத் ஆஸ்பிட்டல் பக்கத்தில் வந்து விட்டது. ஆண்டவா அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. ஐய்யயோ பையனுக்கு என்ன ஆனதுனு சொல்லவே இல்லையே என்று புலம்பிக் கொண்டு உள்ளே ஒடினான்.[/ltr]


[ltr]Reception: மேடம்...மேடம்..[/ltr]


[ltr]பிரியானு ஒரு பேஷண்ட் இப்ப தான் அட்மிட் பண்ணியிருப்பாங்க.. ஆக்ஸிடென்ட் கேஸ் மேம்... ப்லீஸ் எங்க இருக்காங்க மேம்.[/ltr]


[ltr]Reception lady: அப்படியாரும் வரல சார்... இன்னும் சொல்லப் போனா.. ஆக்ஸிடன்ட் கேஸ் எதுவும் காலையிலிருந்து வரலியே சார்.[/ltr]


[ltr]என்னடா இது..ஓரே குழப்பமா இருக்கு என்று பிரியா நம்புருக்கு திருப்பி அடித்தேன்...[/ltr]


[ltr]இரண்டாவது ரிங் அடிக்கறதுகுள்ளே.. சொல்லுங்க என்றாள்.[/ltr]


[ltr]என்னடி சொல்லுறது...[/ltr]


[ltr]எப்படி இருக்கே.. என்ன சொல்லுறாங்க டாக்டர்ஸ் என்றான்.[/ltr]


[ltr]என்னங்க சொல்லுறீங்க ஒன்னும் புரியல. நான் வீட்டுல தான் இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா.. இப்ப எங்க இருக்கீங்க என்றாள்.[/ltr]


[ltr]இருடி நான் திருப்பிக் கூப்பிடுகிறேன் என்று போனை கட் செய்தான்.[/ltr]


[ltr]அப்புறம் ராஜேஷ் ஓடிப் போய்க் கட்டி புடிச்சு அழுது.... நடந்தது எல்லாம் சொல்லி... இப்ப முன்னை விட இப்ப நல்லா தான் இருக்காங்க.[/ltr]


[ltr]இந்தக் கதையை ராஜேஷ் என்னிடம் சொல்லும் போது சம்பவம் நடந்து இரண்டு வாரம் இருக்கும்.[/ltr]


[ltr]ராஜேஷ் என்னிடம் கேட்டது இரண்டு கேள்வி தான்.[/ltr]


[ltr]எப்படி என் மனைவி போன்லிருந்து என்னைக் கூப்பிட்டான். அவனுக்கு எப்படி என் மனைவி போற ரூட் தெரிந்தது..அதுவும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி பேசி பத்தாயிரம் ருபாய் என்னை வைத்தே அவன் கணக்குக்கு அனுப்ப வைத்தான் என்றான்.[/ltr]


[ltr]நீங்க தான் அதற்குப் பதில் சொல்லிட்டீங்களே ராஜேஷ்... உங்கள கொஞ்சம் நேரம் சிந்திக்க விடாம பண்ணி உங்கிட்ட காசு அடிச்சுட்டான்.[/ltr]


[ltr]அவனுக்கு கண்டிப்பா உங்களப் பற்றியும், உங்க குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து இருக்கு. மேலும் அவன் தான் செஞ்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை. நீங்கள சில சமயம் Facebook ல சொல்லிருக்கலாம்..status போட்டு இருக்கலாம்.[/ltr]


[ltr]இயன்றவரை சமூக வலைதளைத்தில் எல்லாத்தையும் வாந்தி எடுக்காதீங்க.[/ltr]


[ltr]ராஜேஷ்: அப்போ அந்த போன் கால்?[/ltr]


[ltr]அது ரொம்ப சிம்பிள். Play store la நிறைய apps இருக்கு. Fake ID, Caller masking, Fake calls..அப்படி நிறைய.[/ltr]


[ltr]உங்களுக்குத் தெரியாம. உங்க மொபைல் நம்பரில் இருந்து கால் பேசவும் முடியும், மெசஜ்ம் அனுப்ப முடியும்.[/ltr]


[ltr]இதில் என்னனா.. கால் தான் பண்ண முடியும், கால்ஸ் ரிசீவ் பண்ண முடியாது.[/ltr]


[ltr]நீங்க உங்க மனைவிக்கு உடனே கால் பண்ணியிருந்தா ஏமாந்து இருக்க மாட்டிங்க. ஆனால்...அவன் உங்களை சிந்திக்க விடாம..அவனே பேசியிருப்பான் என்றேன்.[/ltr]


[ltr]ஆமா சார்...2 நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க இருக்கிங்க..சீக்கரம் வாங்க...ஜாக்கிரதையா வாங்க என்று பேசிகிட்டே இருந்தான் சார் என்றார்.[/ltr]


[ltr]இதில் நமக்குப் பாடம் என்னானா...சிக்கலான சூழ்நிலையில் பதட்டம் ஆகாதீங்க, சமுக வலைதளைத்தில் எல்லாத்தையும் கொட்டாதீங்க, தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் சேர்க்காதீர்கள்....நிறைய சொல்லலாம்... But நீங்களும் கொஞ்சம் யோசிங்க.[/ltr]


[ltr]நீங்கள் கேட்கலாம், அந்த போன் நம்பரை போலீசில் கொடுத்தால், கண்டு பிடித்து கொடுக்க மாட்டார்களா என்று...பத்து ஆயிரம் ரூபாய்க்காக பத்து நாள் அலைய முடியுமா?[/ltr]


[ltr]நம்ம ஊரில், சில்லறை வாங்காமல் காரியம் நடக்காது? பத்து ஆயிரம் திருட்டுக்கு எவுவளவு செலவு செய்வீர்கள். இதைத் தான் அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...[/ltr]


[ltr]நன்றி : திரு செல்வக்குமார்[/ltr]



[ltr]ரமணியன் [/ltr]


Last edited by T.N.Balasubramanian on Sat Apr 18, 2020 7:51 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26454
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9563

Back to top Go down

ஏமாறாதே ! Empty Re: ஏமாறாதே !

Post by krishnaamma on Wed Apr 22, 2020 10:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61531
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

ஏமாறாதே ! Empty Re: ஏமாறாதே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை