உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
லாக்டவுன் பிரச்சனை !
2 posters
லாக்டவுன் பிரச்சனை !
இன்றைய கால கட்டத்தில், வீட்டுக்குள்ளே பூகம்பம் என்று சொல்லக்கூடிய அளவில் சில பிரச்சைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்று தான் இன்று இந்த கட்டுரை வரைய காரணம் ஆயிற்று எனக்கு. வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகள் மிகவும் அமர்க்களம் செய்ததால் அப்பா அம்மா அவர்களை கண்டித்து கண்டித்து களைத்துப் போய் குழந்தைகளை அடித்து விட்டார்கள். மேலும், அவர்கள் ஸ்ட்ரெஸ் அதிகமாகி ஹெல்ப் லைன் உதவி கேட்கும் அளவுக்கு விஷயம் சிரியஸாக போய்விட்டது. என்னுடைய இந்த சிறிய கட்டுரை ஏதாவது உதவுமா தெரியவில்லை ...ஆனாலும் என் மன சாந்திக்காக எழுதுகிறேன் இங்கு
இன்று இந்த செய்தியைப் பார்த்ததும், நான் என்னுடைய கணவரின் உறவினர் மகனுக்கும் மாட்டுப்பெண்ணுக்கும் போன வாரம் செய்த அறிவுரைகள் தான் மனதில் வந்தன . அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
அதுவும் நீங்கள் எடுத்துக்கொண்ட பிரச்சனை தான். எப்பொழுதுமே தூங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு வரும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரு சின்னஞ் சிறிய வீட்டில் ஒருமாதத்திற்கும் மேல் இருக்க நேரும்பொழுது எழும் பிரச்னைகள் தான் அவர்களுக்கும் வந்தது.
இவர்கள் ஒன்று சொல்ல, அவன் சொன்னதையே திருப்பி சொல்ல, என்று பேச்சு முற்றி குழந்தை அடிவாங்கி இருக்கிறான். அப்பொழுது என்னிடம் பேசவேண்டும் என்று சொல்லி இருக்கிறான். என்னிடம் கொஞ்சம் செல்லம் கொண்ண்டாடுவான் அவன்
எனவே வீடியோ கால் போட்டுக்கொடுத்தார்கள். பெற்றவர்கள் இருவரும் மற்றும் குழந்தை இருவரும் ஒருவர் பற்றி மற்றும் ஒருவர் புகார் சொன்னார்கள். அவர்களுக்கு நான் செய்த அறிவுரைகளை இங்கு தருகிறேன்.
குழந்தையிடம் பேசும்பொழுது அவன் எதிர்க்கவே, அவனுடைய மன சாந்திக்காக, "எதுக்குடி குழந்தையை கோபித்துக் கொள்கிறீர்கள்?... ஆதி குட் பாய் நீங்க என்ன சொன்னாலும் கேட்பான், அவனை கோபிக்கக் கூடாது, உங்களுக்கு கோவம் வந்தால்
" ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே !!"
ன்று எட்டுத்தரம் சொல்லுங்கோ என்று சொன்னேன். அவர்களும் 'சரி சித்தி இவன் சொன்ன பேச்சை கேட்டுவிட்டால் எங்களுக்கு எதுக்கு கோவம் வரும். வி லவ் ஆதி ' என்றார்கள் ஒரே குரலில் .
So, by this நாங்க எல்லோருமே அவன் அப்பா அம்மா சொல்வதை கேட்பான் என்று சொல்லி மௌனமாக அவன் சம்மதத்தையும் பேர்த்துவிட்டோம். இது கொஞ்சநாளுக்கு தாங்கும்
எனக்குத்தெரிந்தவரை எத்தனை சிறிய குழந்தையானாலும், ஆசையாய் அருகில் உட்க்காரவைத்துக் கொண்டு நம் பிரச்னையை சொன்னால் அது புரிந்து கொள்ளும். அதாவது, ஒரு குழந்தை இரண்டு வயது அல்லது மூன்று வயது என்று வைத்துக் கொண்டால், அதற்கு அதிகம் இனிப்பு தரக்கூடாது என்று டாக்டர் சொன்னார் என்று சொன்னால் நாம் கண்டிப்பாக தரக்கூடாது தான். ஆனால் அதை குழந்தைக்கு புரியவைக்க சில பல பொய்கள் சொல்வோம். அதெல்லாம் மீறி அது அழும் அப்பொழுது அதை இழுத்து பக்கத்தில் உட்காரவைத்து, நாம் எதனால் குழந்தைக்கு இனிப்பு தரமாட்டோம் என்று சொல்கிறோம் என்று விளக்கினோம் என்றால் கண்டிப்பாக அது புரிந்து கொண்டு மறுபடி கேட்காது. இது உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம் ஆனால் உண்மை.
இப்படி நான் எங்க கிருஷ்ணா ( என் மகன்) க்கு செய்து இருக்கிறேன். நாம் விளக்க விளக்க அவனுக்கு துக்கமாய் வந்தது . " இனி எப்பவுமே சாப்பிடக் கூடாதா ?" என்று கம்மிய குரலில்
கேட்டான்.."இல்லை இல்லை உடம்பு சரியானதும் சாப்பிடலாம்... டாக்டர் சொல்வார், அதன் பிறகு எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்...ஆனால் அது வரை ஒருநாளைக்கு ஒரு சாக்கலேட் தான் ...யார் எத்தனை கொண்டுவந்து கொடுத்தாலும், நீ வாங்கி வைத்துக் கொள், ஆனால் ஒன்று தான் சாப்பிடவேண்டும்....நாங்கள் யாரும் அதை தொடமாட்டோம், அது உன்னுடையது தான், உடல் நலமானதும் சாப்பிடலாம்" என்று சொன்னேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், அவன் அப்புறம் எப்பொழுதுமே சாக்லெட்டுக்காக அடம் பிடித்தது இல்லை. பெரியவன் ஆனதும் கூட பள்ளி இல் அல்லது காலேஜில் ஏன் இப்பொழுது ஆபீஸ் இல் கூட நிறைய சொக்கொலேட் வந்தால் அப்படியே வீட்டுக்கு கொண்டுவந்து பிரிட்ஜ் இல் வைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவான். அந்த அளவுக்கு குழந்தைகள் சொன்னதை கேட்கும்.
இதைத்தான் முதலில் நான் ஆதித்யாவுக்கு சொன்னேன். ஆமாம் பேரனின் பேர் அதுதான்.
அதாவது முதலில் நாம் நம் இயலாமையை அவர்களுக்குத்தெரியப்படுத்த வேண்டும். அதாவது, அது சாக்கலேட்டாக இருக்கட்டும் கொரோனா வைரஸாக இருக்கட்டும். அது நம் கை இல் இல்லை. நம் உடல் நலத்திற்காக டாக்டரோ பிரதமரோ நம்மை கேட்டுக்கொள்ளும் பொழுது இதில் நாம் அதாவது அப்பா அம்மா செய்யக்கூடியது எதுவுமே இல்லை, அவர்கள் சொல்லுக்கு கீழ்படிவத்தைத் தவிர.
இந்த கீழ்படித்தல் தான் பிரச்சைக்குரியது ஆகிறது இன்றைய கால கட்டத்தில். ஆமாம் யாருக்கும் மற்றோருவரின் சொல்லுக்கு செவிசாய்ப்பது என்றாலே கசக்கிறது. என்ன இருக்கோ இல்லையோ ஈகோ இருக்கிறது முளைக்கும்பொழுதே. இப்படி வீட்டுக்குள் இருக்கும் மூவருக்கும் அல்லது நாலுபேருக்கு இருந்தால் எப்படி ஒரே கூரைக்கு கீழே அதுவும் மாதக்கணக்கில் வாழ்வது?...
அது தான் பலம் உள்ளவன் மற்றவனை அடிக்கிறான்.... இங்கு நான் சொல்லப்போவதை கேட்டால் நீங்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள் ஆவீர்கள். இங்கு மகன் அப்பா அம்மாவை ஆட்டிவைக்கிறான். அவர்களும் உடல் நலம் குன்றிய குழந்தை என்று கொஞ்சம் அதிகம் இடம் கொடுத்துவிட்டார்கள். அதை புரிந்து கொண்டு இவன் அவர்களை "TAX " செய்கிறான்.
இதை புரிந்து கொண்டு நான் அவனுக்கு சொன்னேன், " ஆதி, நான் அம்மா அப்பா வை உன்மேல் கோவம் படாமல் இருக்க சொல்கிறேன்....கோபம் வராமல் இருக்க சுலோகம் சொல்ல சொல்கிறேன். நீயும் கொஞ்சம் கோபப்படாமல் இரு... " என்று நான் முடிப்பதற்குள் " எதுக்கு பாட்டி இந்த வைரஸ், அதை போக சொல்லு நான் உன்னை இப்போ பார்க்கணும்" என்கிறான்.
" இல்ல இல்ல, அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும், நீயும் கோவிந்தனை வேண்டிக்கோ, இங்கு உனக்கு மட்டும் இல்லை நாட்டுக்கே இப்படித்தான் இருக்கிறது...உனக்கு time spend பண்ண பாட்டி சில கேம்ஸ் அனுப்பறேன், பண்ணு, நீ நல்லா பெயிண்ட் பண்ணுவியே அதை பண்ணு, ஏதாவது சுலோகம் புதுசா கத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே, அவனுடைய ட்ரா இங் போர்டில் ஒரு படம் வரைந்து திருப்பதி பெருமாளை வேண்டுவது போல " இந்த வைரஸ் சீக்கிரம் போகணும் கோவிந்தா, I BEG YOUஎன்று போட்டுவிட்டான். இது போல சில சமையம் சூட்டிகையாக உள்ள குழந்தைகளை வீட்டில் கட்டிப்போடுவது சிரமமான காரியம் தான்.ஆனால் முடியாதது இல்லை.
முதலில் நாம் அவர்களை அழைத்து உட்க்காரவைத்து பேசவேண்டும். இது தான் மிகமிக முக்கியமானது. நமக்கு சமமாக அவர்களை நடத்தவேண்டும் - அது மூன்றுவயது பொடிசாக இருந்தாலும்- " இதோ பாருங்கள் நாளை முதல் அம்மா வும் அப்பாவும் ஆபீஸ் போகவேண்டாம்" சொல்லி முடிப்பதற்கும் சந்தோஷமாக கத்துவார்கள் தான், ஆனால் அதை அடக்கிவிட்டு, ஆனால் இங்கிருந்தே வேலை பார்க்கவேண்டும். எனவே, எப்பொழுதும் போல நாம் அனைவரும் தயாராக வேண்டும். அவரவர்கள் அவரவர்கள் இடத்தில் இருந்தவாறே அவரவர் வேலைகளை பார்க்கவேண்டும். என்ன ஒன்று சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாம். டிராபிக் இல்லாமல் வேலை முடிந்ததும் சாயும்காலம் டீ சாப்பிடலாம், இரவு உணவு சாப்பிடலாம் விளையாடலாம்" என்று சொல்லவேண்டும். அதன் படி செய்யவும் வேண்டும்.
அடுத்தது, எல்லா வேலைகளையும் நாமே தான் செய்யவேண்டும் வீட்டில் வேலைக்காரர்கள் இருக்கமாட்டார்கள் . அம்மாவும் நானுமே எல்லாம் செய்து முடிக்க முடியாது. எனவே, உங்கள் பங்கிற்கு நீங்களும் வேலைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
சின்ன சின்ன வேலைகள் செய்தால் போதும். ( இந்த நாளில் ஏற்கனவே குழந்தைகள் நிறைய வேலைகள் செய்கின்றன
) அதாவது நீங்கள் சாப்பிட்ட தட்டை நீங்களே அலம்ப வேண்டும். கீழே சிந்தாமல் சாப்பிடவேண்டும். சாப்பிட்ட பிறகு மீதி டேபிள் மேல் உள்ள பொருட்களை உள்ளே கொண்டு போக உதவவேண்டும்.
காலை அல்லது மாலை அம்மா உணவு தயாரிக்கும் பொழுது அவர்களுக்கு தேவையானால் உதவவேண்டும். (பிரேட் சாலட் செய்யலாம், பிரட் க்கு ஜாம் வெண்ணை தரவித்தரச்சொல்லலாம் ) செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குளித்த பின் பழைய உடைகளை பக்கெட்டில் போட்டு கொண்டுவந்து வாஷிங் மெஷின் அருகே வைக்கவேண்டும். ஸ்வாமி எதிரில் அமர்ந்து காலையும் மாலையும் சின்ன சின்ன ஸ்லோகங்கள் சொல்லவேண்டும். பூணுல் போட்டா பசங்க ஒழுங்காக சந்தியாவந்தனம் செய்யணும், காயத்ரீ சொல்லணும்.
வீட்டில் 'பெட்' மிருகங்கள் இருந்தால் அதற்கு தேவையானதை செய்ய உதவவேண்டும்.
இப்படி எல்லோரும் சின்ன சின்ன தாக வேலைகளை பகிர்ந்து கொண்டால் அம்மாவிற்கும் வேலை பளு இருக்காது. நாம் அனைவருமாக சேர்ந்து நம் பிரதமர் கேட்டுக்கொண்டபடி கொரானா வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஓகே வா? "
என்று உங்கள் timetable ஐ அவர்களைக் கொண்டே fill up செய்யுங்கள்.
வாரக் கடைசி இல் பசங்க நல்லபடி ஒத்துழைத்ததற்கு சின்ன சின்ன பரிசாக அவர்களுக்கு மிகவும் பிடித்ததை சமைத்து கொடுங்கள். ( கொஞ்சம் முன்னே பின்னே அவர்கள் இருந்தாலும் பரிசு கொடுங்கள்
ஒருமுறை அவர்கள் புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டுவிட்டால் பிறகு அவர்கள் மாற மாட்டார்கள்... அப்பா அம்மாவான நீங்களும் அவர்களுக்குத்தரும் வாக்குறுதி இல் இருந்து கண்டிப்பாக மாறக் கூடாது. அப்படி மாறாமல் இருந்தால் தான் அவர்களுக்கு அடுத்த வாரம் இதை தொடர மனம் வரும்.
உங்களுக்கு ( பசங்களுக்கு) லீவு என்பதால் படிப்பு என்பது இருக்காது. எனவே, வேறு ஏதாவது ஒன்றை தேர்ந்து எடுத்து அவர்களை அதில் வேலை செய்ய வைக்க வேண்டும். அதாவது, அவர்களுக்கு பெயின்டிங் பிடித்தால் அது, பாட பிடித்தால் அது ஏதாவது வாசிக்க வேண்டும் என்றால் அது அல்லது சில பசில்கள் கொடுத்து அவர்களை போட வைக்கலாம். இதெல்லாம் நாம் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து மறுநாள் அவர்களை செய்ய சொல்லவேண்டும்.
நாம் பெற்றவர்கள், பெரியவர்கள் எனவே நாம் கொஞ்சம் அதிகமாகத்தான் உழைக்க வேண்டி வரும்.வாரக் கடைசி இல் எல்லோருமாக சேர்ந்து, ludo, snack and ladder போல விளையாடலாம். தாயக்கட்டை, பல்லாங்குழி, காரம்போர்டு , சீட்டுக்கட்டு விளையாடும் செட்டியார் ஆட்டம், கொஞ்சம் இளைய அம்மாவாக இருந்தால் பாண்டி என்று விளையாடவேண்டியதுதான்
வீட்டில் பாட்டி தாத்தா இருந்தால், அவர்களுடன் நிறைய பேசவேண்டும். அவர்கள் அந்த காலக் கதைகள் சொல்வார்கள். முக்கியமாக அப்பாவின் நிறைய குட்டுகள் வெளிப்படும். நாம் அவரச அவரசமாக கொண்டாடும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றி விரிவாக கதையாக சொல்வார்கள் அவர்கள்.
என்னைப்பொறுத்தவரை குழந்தைகள் மிக மிக புத்திசாலிகள் நம்மைவிட.... அதனால் நாம் அவர்களுக்கு "எனக்கு இது தான் தேவை உன்னிடமிருந்து" என்று காண்பித்துக் கொடுத்தால் போதும் அவர்களே நம்மை வழிநடத்திவிடுவார்கள்
ஆனால் அதை அம்மாவும் அப்பாவும் சரியான வழி இல் கையாளவேண்டும், அந்த அளவிற்கு இவர்களுக்கு வாக்குசுத்தமும் செய்ய மனதும் வேண்டும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: லாக்டவுன் பிரச்சனை !

-
மகாபாரதத்தில் வரும் கிளைக்கதைகளை
குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும் வண்ணம்
சொல்லலாம்.
-
கடோத்கஜன், அபிமன்யூ
பீமன் அனுமனை சந்தித்து ஆசி பெற்றது
அர்ச்சுனன் அம்பு பாலம் அமைத்து அனுமனிடம் தோற்றது
என பல கதைகளை சுவைபட சொல்லலாம்...
-
அப்படியே இறை நம்பிக்கை நம் கலாச்சாரம்
எல்லாம் சொல்லலாம்
-
------------------------------------
Re: லாக்டவுன் பிரச்சனை !
மேற்கோள் செய்த பதிவு: 1317652ayyasamy ram wrote:![]()
![]()
-
மகாபாரதத்தில் வரும் கிளைக்கதைகளை
குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும் வண்ணம்
சொல்லலாம்.
-
கடோத்கஜன், அபிமன்யூ
பீமன் அனுமனை சந்தித்து ஆசி பெற்றது
அர்ச்சுனன் அம்பு பாலம் அமைத்து அனுமனிடம் தோற்றது
என பல கதைகளை சுவைபட சொல்லலாம்...
-
அப்படியே இறை நம்பிக்கை நம் கலாச்சாரம்
எல்லாம் சொல்லலாம்
-
------------------------------------
மிகவும் நன்றி அண்ணா...............நீங்கள் சொல்வது மிகவும் சரி, இப்பொழுது நிறைய நேரம் இருக்கிறது......ஆனால் சொல்வதற்கு நம் பெரியவர்களுக்கு தெரிந்து இருக்கணுமே

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|