புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_m10தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்திய சக்தி பீடங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:40 pm

First topic message reminder :


சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின்
உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.
தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.

சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப்
பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும்
அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற
நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.

சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை
சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின்
மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.

ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது
யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அ
ழைக்காதது ஏன் என்று கேட்க‌ சென்ற தாட்சாயணியையும்,
சிவபிரானையும் அவமதித்தான்.

இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற
இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக்
கொண்டாள்.

இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக்
கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின்
உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.

அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எ
ழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப்
பார்ப்போம்.
-

நன்றி- இனிது- இணைய இதழ்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:51 pm

கால பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Abirami-1
-
அபிராமி

இவ்விடம் தமிழ்நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது.
இங்கு அம்மை அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள்.

அன்னை தன் பக்தனுக்காக தை அமாவாசை அன்று பூரண
முழுநிலாவாகக் காட்சி அருளி அதன் காரணமாக அபிராமி
அந்தாதி பாடப்பட்ட தலம். இங்கு மாங்கல்ய காணிக்கை சிறப்பு.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:52 pm

காளிசக்தி பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Kali
-
மகாகாளி
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவள்ளுர் அருகில் திருஆலங்காட்டில்
உள்ளது. இவ்விடத்தில் அன்னை இறைவனுடன் நடனப் போட்டி
ஆடிய மகாகாளித் தலம். ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம் இது.

இங்கு வண்டார்குழலி அம்மை, காரைகால் அம்மை ஆகியோர் சிறப்பு
பெறுகின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:54 pm

தரணி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில்
அமைந்துள்ளது. இங்கு அம்மை குழல்வாய்மொழி, பராசக்தி
என்ற திருநாமங்களுடன் அருளுகிறாள். இவ்விடத்தில் உள்ள
அருவிகள் காரணமாக இது புண்ணிய தீர்த்த தலமாகக் கருதப்படுகிறது.

இங்கு பவுர்ணமி இரவு நவசக்தி பூஜை நடைபெறுகிறது.
-
----------------------------------------------------------------
வீமலை பீடம்

இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில்
பாபநாசத்தில் அமைந்துள்ளது.

இவ்விடத்தில் அன்னை உலகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள்.
இசை வல்லுநர்கள் இவ்வன்னையை வழிபட அவர்களின் இசைத்திறன்
மேம்படும். இவ்வன்னையே அகத்தியருக்கு திருமணக்காட்சி அருள
காரணமானவள். இவ்விடம் நவகைலாய தலங்களுள் ஒன்று.
-
-----------------------------------------------------------------------

காந்திசக்தி பீடம்
இப்பீடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது.
இங்கு இறைவி காந்திமதி என்ற பெயரில் அருளுகிறாள்.
இவ்வம்மை மாலையில் ஞானசரஸ்வதியாகக் காட்சியளிக்கிறாள்.
இவ்விடத்தில் அம்மையே இறைவனுக்கு நைவேத்தியம்
படைப்பதாகக் கருதப்படுகிறது.

பிரணவ பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சீர்காழி அருகில் திருவெண்காட்டில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை பிரம்மவித்யாம்பிகை
என்று அழைக்கப்படுகிறாள்.

இவ்வன்னையை வழிபட குழந்தைப்பேறு, திருமணப்பாக்கியம்,
கல்வி மேன்மை, நாவன்மை ஆகியவற்றைப் பெறலாம். நரம்பு
நோயையும் இவ்வன்னை தீர்ப்பாள். நவக்கிரகங்களில்
புதனுக்குரிய தலமாக இவ்விடம் விளங்குகிறது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:55 pm

சாயா பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Lalitha-2
-
லலிதா
இவ்விடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து
முசிறி செல்லும் வழியில் ஈங்கோய்மலை என்ற இடத்தில்
அமைந்துள்ளது.

இவ்விடத்தில் அம்மை மரகதாம்பிகை, லலிதா என்ற
திருநாமத்துடன் அருளுகிறாள். இறைவனான சிவபிரான்
உமையம்மைக்கு தனது இடது பாகத்தை தருவதாக
உறுதியளித்த தலம் இது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:57 pm

தரும பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவையாற்றில் உள்ளது.
இங்கு அன்னை தர்மசம்வர்த்தினி என்ற பெயரில்
அருளுகிறாள்.

இவ்வன்னையே உலகிற்கு படியளக்கும் நாயகி ஆவாள்.
இவ்விடத்தில் அஷ்டமி திதியில் இரவு வேளையில்
இவ்வன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இஷீசக்தி பீடம்
இவ்விடம் தமிழ்நாட்டில் சென்னை திருவொற்றியூரில்
உள்ளது. இங்கு அன்னை வடிவாம்பிகை என்ற பெயரில்
அருளுகிறாள்.

இவ்வன்னை ஞானசக்தியின் வடிவம் ஆவாள்.
இங்கு தினமும் சுயம்வர புஷ்பாஞ்சல் நடைபெறுகிறது.

அர்த்தநாரி பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் - Page 2 Kolloor-moogaambigai
-
மூகாம்பிகை
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அன்னை மூகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள்.
இவ்வன்னைக்கு அபிசேகம் கிடையாது. இவள் சரஸ்வதியின்
அம்சமாவாள். ஆதிசங்கரர் இவ்வன்னையின் மீது கலாரோஹணம்
பாடினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 8:59 pm

கர்ண பீடம்
இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கோகர்ணத்தில்
அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை தாமிர கவுரி என்ற
நாமத்தில் சிவனை திருமணம் செய்த தலம். இவள் நதி
வடிவ அம்பிகை ஆவாள். இங்கு சிறப்புமிக்க கோடிதீர்த்தம் உள்ளது.

சைல பீடம்
இவ்விடம் ஆந்திர மாநில ஸ்ரீசைலத்தில் உள்ளது.இங்க அன்னை
பிரம்மராம்பாள் என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே
பவானி வடிவில் மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாள் அளித்தவள்
ஆவாள். இவ்விடம் பூலோகக் கைலாயம் என்றழைக்கப்படுகிறது.
சிவானந்த லஹரி பிறந்த தலம் இது.

ஞான பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ளது.
அன்னை இவ்விடத்தில் ஞானப்பூங்கோதை என்ற பெயரில்
அருளுகிறாள். இவ்வன்னை கல்வி மற்றும் அறிவை வழங்கும்
தெய்வமாக வழிபடப்படுகிறாள்.
கண்ணப்பர் வழிபட்ட தலம் இது. இங்கு சரஸ்வதி தீர்த்தம்
அமைந்துள்ளது.

மாணிக்க பீடம்
இவ்விடம் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில்
அமைந்துள்ளது. காளிதாசர் சியாமளா தண்டகத்தில்
குறிப்பிடும் மாணிக்கவீணா என்ற ஸ்லோகத்தின்
அதிபதியான‌ மாணிக்காம்பாள் அருளும் தலம் இது.

மகாசக்தி பீடம்
இவ்விடம் கேரள மாநிலத்தில் கொடுங்களுரில் அமைந்துள்ளது.
இது சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கோவில்.
இவ்விடத்தில் அன்னையின் திருவுருவம் பலாமரத்தினால் ஆனது.
இங்கு கண்ணகியே பகவதியாக அருளுகிறாள். இவ்வன்னையை
வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.

சிறப்புக்கள் வாய்ந்த தென்னிந்திய சக்தி பீடங்களைப் போற்றுவோம்.

– வ.முனீஸ்வரன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக