ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் Empty போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

Post by ayyasamy ram Mon Mar 09, 2020 4:59 am

பிரயாக்ராஜ்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச
மாநில தலைநகர் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம்
19-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை
வெடித்தது. அப்போது பொதுச் சொத்துகள்
சேதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம்
இருந்து நஷ்டஈடு வசூலிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்தது.
இதற்காக பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய விவகாரத்தில்
குற்றம்சாட்டப்பட்டவர்கள் என கூறி 53 பேரின் புகைப்படங்கள்
மற்றும் பெயருடன் லக்னோ மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
கடந்த வியாழக்கிழமை நகரின் முக்கிய இடங்களில் பேனர்கள்
வைக்கப்பட்டன.

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்கான நஷ்டஈடு
தொகையை செலுத்த தவறினால், அவர்களுடைய சொத்துகள்
பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் இந்த
பேனர்கள் வைக்கப்பட்டதாக உத்தரபிரதேச அரசின் செய்தித்
தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பேனர் விவகாரம் பெரும்
பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
கோவிந்த் மாத்தூர், நீதிபதி ரமேஷ் சின்கா ஆகியோர் அடங்கிய
அமர்வு நேற்று முன்தினம் தாமாக முன்வந்து இந்த பேனர்
விவகாரம் குறித்து விசாரணை நடத்தியது.

அப்போது, எந்த சட்டத்தின் கீழ் இந்த பேனர்கள் வைக்கப்பட்டன?
என்பது குறித்து லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜித் பாண்டே,
மாவட்ட கலெக்டர் அபிஷேக் பிரகாஷ் ஆகியோர் விளக்கம் அளிக்க
வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன் குடிமக்களை அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும்
அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும் கூறினார்கள்.

விடுமுறை தினமான நேற்று இந்த வழக்கை மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், அரசின் சார்பில்
பேனர்கள் வைக்கப்பட்டது தனிநபர் உரிமைகளை பறிக்கும்
செயல் என்று கூறி உத்தரபிரதேச அரசுக்கு கடும் கண்டனம்
தெரிவித்தனர்.

அத்துடன் அந்த பேனர்களை உடனடியாக அகற்றுமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து
தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா,
உத்தரபிரதேச ஆட்சியாளர்கள் அரசியல் சட்டத்துக்கு
மேலானவர்கள் போல் செயல்படுவதாக கூறி கண்டனம்
தெரிவித்து உள்ளார்.

ஐகோர்ட்டு கூறியுள்ளபடி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள
வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69535
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை