புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:10
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all time hit என்று சொல்லக்கூடிய பூரி வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம்

காரட் இனிப்பு சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
அரைக்க:
வேகவைத்தகாரட் (நடுத்தரமான அளவு) - 2
வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்
செய்முறை:
காரட்டை வெல்லத்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.

காரட் சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய காரட் - 2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
நமக்கும் பார்க்க ஆரஞ்சு கலரில் உள்ள சப்பாத்தி பிடிக்கும்.

காரட் மசாலா சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய காரட் - 2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்
'ஆம் சூர்' எனப்படும் மாங்காய் பொடி - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, 'ஆம் சூர்', கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
சுவையான காரட் மசாலா சப்பாத்தி தயார்.

முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா ! / பச்சை பயிறு ஸ்டஃப்டு பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
எலுமிச்சை சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்
பூரணத்துக்கு:
முளைப்பயறு - முக்கால் கப்
பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் ( தேவையானால் )
பச்சை மிளகாய் - 2
பூண்டு (விருப்பப்பட்டால்) - 3 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
முளைப்பயறை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆறியவுடன் பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலி இல் எண்ணெயைவிட்டு, அரைத்த விழுதை போட்டு , உப்பு போட்டு வதக்கவும்.
வாசனை போன பிறகு, அந்த விழுதுடன் பனீர் துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
கோதுமை மாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு , நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து, சொப்பு போல செய்து, மெல்ல இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
சரியாக வராவிட்டால், ஒரு சப்பாத்தி இன் மேல் பூரண கலவை வைத்து பரத்தி, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி மேலடுவாக தோசைக்கல்லில் போட்டு, இரண்டுபக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான, 'பச்சை பசேல்' என்கிற முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா தயார்.
வழக்கம் போல கெட்டி தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள
குறிப்பு : இதில் எலுமிச்சை சாறுக்கு பதில் தக்காளியும் சேர்க்கலாம். அல்லது ஆம் சூர் சேர்க்கலாம்.

வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) - ஒரு கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெயை விட்டு, அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
இதுதான் பூரணம்; இது நல்லா கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.
பிசைந்த மாவிலிருந்து, கொஞ்சம் எடுத்து சின்ன சப்பாத்தியாக இட்டு, அதன் நடுவே ஒரு காய்கறி உருண்டையை வைத்து, கொழுக்கட்டை போல மூடி, கைகளால் பரத்தி, பிறகு மெல்ல சப்பாத்தியாக இடவும்.
பிறகு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு எடுங்கள்.
அருமையான, வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.
எஸ், இதற்கும் தயிர் தான்

லட்சா பரோட்டா / கோதுமை பரோட்டா !
நாம் மைதாவில் பரோட்டா செய்வோம் வடக்கே கோதுமை பரோட்டாவும் செய்வார்கள். பிரி பிரியாக நன்றாக இருக்கும் அது. அதை எப்படிச்செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு - அரை சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்னெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா.

புல்கா / அதாவது மிருதுவான சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - அரை டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 'மெத்' என்று பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, ஓரளவிற்கு மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
பிறகு, தோசைக்கல்லை காய்ந்ததும், இட்ட சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் திருப்பித் திருப்பிவிடவும்.
பிறகு, பக்கத்து அடுப்பில், மிதமான தீயில், சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லது நேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியைப் போட்டால் அது நன்கு எழும்பி வரும்.
அவ்வாறு வந்தபின், திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
இதுதான், எண்ணெயில்லாத புல்கா.
புல்காவை எடுத்தபிறகு அதன் மேலே விருப்பம் போல, நெய் தடவி அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
எந்த சப்ஜியுடனும் இது நன்றாக இருக்கும்.
குறிப்பு: புல்காவுக்காக, சப்பாத்தி இடும் போது ஒரே சீராகத் இடவேண்டும். ஒரு பக்கம் கனமாக வும், ஒரு பக்கம் லேசாகவும் இருந்தால் எழும்பி வராது. மாவு நல்ல 'மெத்' என்று இருக்கவேண்டும். மேலும், எப்பொழுதுமே சப்பாத்தி இடும்பொழுது, ஒரே பக்கமாக இடவேண்டும், திருப்பி போட்டு திருப்பி போட்டு இடக்கூடாது.

காக்ரா / கரகரப்பான சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
மாவை உப்பு சேர்த்து, ‘மெத்’தென்று பிசைந்து கொள்ளவும்.
மிக மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போடவும்.
எண்ணெய் தடவத் தேவையில்லை.
இரண்டு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக தோசைக்கல்லில் போட்டு, கனமான துணி கொண்டு இருபுறமும் நன்கு அழுத்தி எடுங்கவும்.
சப்பாத்திகள் அப்பளம் போல நன்கு மொறுமொறுப்பாக வரும்வரை, இப்படியே திருப்பித் திருப்பிவிட்டு, துணியால் அழுத்திவிட்டு எடுத்தால், ‘கரகர’ காக்ரா ரெடி.
காக்ராவை பல நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப்போகாது.
பயணங்களுக்கு ஏற்றது.
குறிப்பு: இதில் மேத்தி இலைகள் அதாவது வெந்தயக் கீரை இலைகள் சேர்த்தும் செய்யாலாம், அல்லது மசாலா போட்டும் செய்யலாம். மீந்து போன சப்பாத்திகளை ஓவனில் காயவைத்தும் வைத்துக் கொள்ளலாம்.

நான்' .............+ 'பட்டர் நான்'
அடுப்பில் காட்டப்படும் 'நான்' !
வட இந்திய உணவுகளில் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் இது .................இதை செய்ய முட்டை வேண்டும்...................... தந்துரி அடுப்பு வேண்டும்............... அது இது என்று ரொம்ப சொல்வார்கள்................ஆனால் நம்ப வேண்டாம் கூடாது கூடாது கூடாது இது ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடியது.......நிஜம் தான்......................நாம் சாதாரணமாக செய்யும் ரொட்டியை விட இதை சுலபமாக செய்யலாம்..........நான் அப்படித்தான் 'நான்' செய்தேன்...................நீங்களும் செய்து பார்க்கலாம் புன்னகை
தேவையானவை :
மைதா 2 கப்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 1 டீ ஸ்பூன் ( நன்கு பொடிக்கவும் )
உப்பு 1/2 ஸ்பூன்
பேகிங் சோடா 1/2 ஸ்பூன்
தயிர் 1/4 கப் ( குழப்பி வைக்கவும் )
செய்முறை:
மைதாவை பேக்கிங் சோடா போட்டு சலிக்கவும்.
அதில் நடுவில் குழி செய்து எண்ணெய், சர்க்கரை, உப்பு எல்லாம் போட்டு கலக்கவும்.
இப்போ குழப்பி வைத்துள்ள தயிரை அதில் விடவும்.
மாவை மிருதுவாக பிசையவும்.
அநேகமாய் தண்ணிரே வேண்டி இருக்காது.
இந்த மாவை சுமார் 6 - 7 நிமிடங்கள் தொடர்ந்து ( கடிகாரத்தை பார்த்து கொண்டு ) பிசையவேண்டும்.
அப்படி பிசைந்த மாவை சுமார் 4 மணி நேரம் ஊர வைக்கவும்.
இந்த நேரம் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான்புன்னகை .............குளிர் பிரதேசம் என்றால் 12 மணி நேரம் கூட வைக்கலாம்.
அல்லது இரவே மாவு பிசைந்து வைத்து விட்டு காலை செய்யலாம்..............சரியா?
ஸோ, இப்போ மாவு தயார்.
மேலே சொன்ன அளவிற்கு சுமார் 8 வட்டமான 'நான்கள்' வரும்.
வட்டமாக இடாமல் 'ஓவல்' ஆக கூட இடலாம்.............. ஆனால் அப்படி செய்தால் கல்லில் இருந்து விழுந்து விடுகிறதுசோகம்.................எனவே தான் வட்டம் புன்னகை
மொத்த மாவையும் 8 சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துகொள்ளவும்.
மாவை நல்ல கனமான சப்பாத்தி போல வட்டமாக இடவும்.
கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, அதை சப்பாத்தி போல இட்டு வைத்திருக்கும் பகுதி இல் தடவவும்.
கைப்பிடி உள்ள தோசைக்கல்லில் ஈரமான பகுதி படும்படி 'நானை' போடவும்.
ஒரே நிமிடத்தில் அதில் கொப்புளங்கள் போல வரும், அந்த நேரத்தில் மெல்ல தோசைக்கல்லை எடுத்து அடுப்பிற்கு நேரே காட்டவும்.
கண்டிப்பாக 'நான்' அடுப்பில் விழாது................கொஞ்சம் சாய்த்து சாய்த்து முழுவதும் நெருப்பில் காட்டவும்.
அது வெந்ததும், மெல்ல தோசைக்கல்லை பழயபடி அடுப்பில் வைத்து விட்டு, அடுப்பை சின்னதாக்கவும்.
இப்போது தோசைக்கல்லில் இருந்து 'நானை' எடுக்கவும்.
உங்களுக்கு பிடித்த 'சைட் டிஷ்' உடன் பரிமாறுங்கள்.
அவ்வளவுதான் சூப்பர்...........மெத் மெத் என்கிற 'ப்ளைன் நான்' ரெடி.
'பட்டர் நான்' வேண்டும் என்றால்....................எடுத்த சூடான நானில் கொஞ்சம் வெண்ணையை தடவி பரிமாறவும்........அவ்வளவு தான் .
தயாரான 'பட்டர் நான்' தொட்டுக்கொள்ள 'ஆலு சோளேயுடன்'
குறிப்பு : ஒருவேளை................ஒருவேளை..................'நான்' விழுந்து விட்டால் அடுத்த முறை நிறைய ஈரம் இருக்கும்படி தண்ணீர் தடவவும்

சோளே பட்டூரா !
அடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா: வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு. தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று
இதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும். இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.
பட்டூரா செய்ய தேவையானவை :
மைதா மாவு 1/2 கிலோ
வெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) 100 கிராம்
உப்பு தேவையான அளவு
ஒரு சிட்டிகை சமையல் சோடா
தயிர் ஒரு கப்
பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை :
முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள் ளவும் , மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.
ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயைப் போட்டு நன்கு குழைக்கவும். குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும். கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு ஈரத்துணியால் மாவை மூடி வைக்கவும். குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.
சன்னா செய்ய தேவையானவை :
1 கப் ஊறவைத்த வெள்ளை கொத்துக்கடலை
2 உருளை கிழங்கு
2 வெங்காயம்
1 துண்டு இஞ்சி
சிறிய எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1 சின்ன துண்டு வெல்லம்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
2 ஸ்பூன் எண்ணை அல்லது டால்டா
செய்முறை :
ஒரு குக்கரில் ஊறிய கொத்துக்கடலை மற்றும் உருளை கிழங்கை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அதிலிருந்து 2 ஸ்பூன் கொத்துக்கடலை , வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் .
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
மிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் புளியை கரைத்து விடவும்.
அது நன்கு கொதிக்கும் போது, வெந்த கடலை மற்றும் உருளைக்கிழங்கை போடவும்.
கரம் மசாலா பொடி யை போடவும்.
நன்கு கொதித்து கொஞ்சம் இறுகும் வரை பொறுக்கவும்.
வெல்லத்தை தட்டி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் ரொட்டிக்கு எடுப்பது போல், உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.
செய்து வைத்துள்ள சன்னா வுடன் பரிமாறவும். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.
புளிப்பு அதிகம் தேவைபடுபவர்கள், சன்னா மேல் எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.
குறிப்பு: நாம் இட்லி மாவு பிரிட்ஜ் இல் வைத்திருப்பது போல பஞ்சாபிகள் சோளே பட்டுராவிற்கு மாவை தாயாராக பிரிட்ஜ் இல் வைத்திருப்பார்களாம்

- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5