ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by ayyasamy ram Fri Feb 21, 2020 6:08 am

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Tamil_News_large_2485636

வாஷிங்டன்:
தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை
தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.

சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Gallerye_053831422_2485636

முடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.

மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by Guest Fri Feb 21, 2020 4:25 pm

எடையை குறைக்க யாராவது நடக்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.
avatar
Guest
Guest

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 7:14 pm

நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by krishnaamma Sat Feb 22, 2020 10:09 am

ayyasamy ram wrote:ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Tamil_News_large_2485636

வாஷிங்டன்:
தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை
தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.

சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Gallerye_053831422_2485636

முடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.

மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.

தினமலர்
ம்ம்... எத்தனையோ மருத்துவம் வளர்ச்சி அடைந்து விட்டாலும், இன்னமும் 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படுகிற உடல் பருமனை குறைக்க இன்னும் வழி கண்டுபிடிக்கப்படவில்லையே.............சோகம் சோகம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by krishnaamma Sat Feb 22, 2020 10:11 am

சக்தி18 wrote:எடையை குறைக்க யாராவது நடக்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.

நீங்கள் சொல்வதெல்லாம் 'சைடு எபக்ட்ஸ்' சக்தி, உடல் எடையைக்குறைக்கத்தான் எல்லோரும் மூச்சு வாங்க வாங்க நடக்கிறார்கள் இங்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by krishnaamma Sat Feb 22, 2020 10:16 am

T.N.Balasubramanian wrote:நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள்  நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1313523

நல்லது , உட்கார்ந்து கொண்டே இல்லாமல் கொஞ்சம் நடக்கலாம் அவ்வளவுதான் ஐயா புன்னகை...மற்றபடி ஒரு ஜோக் சொல்வார்கள், ஒரு ஆள் 100 வயது கடந்து வாழ்ந்து வந்தாராம் அவரிடம் " இப்படி நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100  வயது ஆரோக்கியமாய் இருக்க காரணம் என்ன , சொல்லுங்கள்"  என்று கேட்டபொழுது அவர் " எனக்கு எந்த கெட்டப்  பழக்கமும் இல்லை அது தான் காரணம்"  என்று சொன்னாராம். புன்னகை................

அவர்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது மாடி இல் இருந்து ஏதோ கூச்சல் போடுவது போலவும் பொருட்கள் உருளுவது போலவும் சப்தம் வந்ததாம். இந்த நிருபர்கள் அது என்ன சத்தம் என்று கேட்கவும் , அந்த 100  வயது மனிதர் சொன்னாராம், " அது ஒன்றும் இல்லை எங்க அப்பன், 135 வயசாச்சு, குடிகாரன், கூச்சல் போடுகிறான்" என்று.............. ஜாலி ஜாலி ஜாலி ....அப்படி இருக்கிறது இந்த வாக்கிங் கதை..... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by Guest Sat Feb 22, 2020 12:11 pm

மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?

ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
avatar
Guest
Guest

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by krishnaamma Sat Feb 22, 2020 2:08 pm

சக்தி18 wrote:மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?

ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
மேற்கோள் செய்த பதிவு: 1313573

ம்ம்.. இருக்குமிருக்கும்.....புன்னகை.... ஒரு ரெண்டு மாசம் ஆளைக் காணவில்லை என்றதும் இப்படி கேட்பது நியாயம் தான்....என்ன செய்வது கொஞ்சம் ஊரை சுற்றிவிட்டு வந்தேன், அதுதான் உடல் நலக்குறைவு , இனி தொடர்ந்து வருகிறேன்....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ! புன்னகை

(ஊர்: சென்னை மற்றும் துபாய் ஜாலி ஜாலி ஜாலி )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 6:22 pm

சக்தி18 wrote:மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?

ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
மேற்கோள் செய்த பதிவு: 1313573

எங்களுக்குக்கெல்லாம் இந்த பெயர் பார்த்த மாதிரி இருக்கிறது.
உங்கள் கணினி பேசுமோ சக்தி???

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 6:39 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள்  நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1313523

நல்லது , உட்கார்ந்து கொண்டே இல்லாமல் கொஞ்சம் நடக்கலாம் அவ்வளவுதான் ஐயா புன்னகை...மற்றபடி ஒரு ஜோக் சொல்வார்கள், ஒரு ஆள் 100 வயது கடந்து வாழ்ந்து வந்தாராம் அவரிடம் " இப்படி நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100  வயது ஆரோக்கியமாய் இருக்க காரணம் என்ன , சொல்லுங்கள்"  என்று கேட்டபொழுது அவர் " எனக்கு எந்த கெட்டப்  பழக்கமும் இல்லை அது தான் காரணம்"  என்று சொன்னாராம். புன்னகை................

அவர்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது மாடி இல் இருந்து ஏதோ கூச்சல் போடுவது போலவும் பொருட்கள் உருளுவது போலவும் சப்தம் வந்ததாம். இந்த நிருபர்கள் அது என்ன சத்தம் என்று கேட்கவும் , அந்த 100  வயது மனிதர் சொன்னாராம், " அது ஒன்றும் இல்லை எங்க அப்பன், 135 வயசாச்சு, குடிகாரன், கூச்சல் போடுகிறான்" என்று.............. ஜாலி ஜாலி ஜாலி ....அப்படி இருக்கிறது இந்த வாக்கிங் கதை..... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1313561

முழுதும் முடியவில்லையே!
இதற்கு மேலும் உண்டு கதை.
100 வயது இளைஞரிடம் பேட்டி எடுத்து
135 வயது குடிகார தந்தையை பேட்டி எடுக்க சென்றார்.
அங்கே அந்த 135 வயது இளைஞரை மற்றொருவர் திட்டிக்கொண்டும்
மிரட்டிக்கொண்டும் இருந்தார். அவர் கையில் சிகார் மற்றும் இரெண்டு
பக்கமும் இளம் வயது அழகு பெண்கள் அவரை அணைத்துக்கொண்டு
இருக்க, அவரை பார்த்து பேட்டியாளர், எதற்கையா அவரை திட்டுகிறீர்கள்
என வினவ, அதற்கு அவர்,
" அவனுக்கு அப்பன் நான், நிம்மதியா கேர்ள் ஃ பிரெண்ட்ஸோடு குஷியாக
இருக்கலாம் என்றால் குடிச்சு கூச்சல் போடுகிறான் என்றார்." அவருக்கு வயது
160

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்! Empty Re: ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...
» வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை?
» நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
» விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?
» வாக்கிங் பண்ணுவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum