புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
74 Posts - 57%
heezulia
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_m10ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 10:42 pm

ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்!

ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar ! 1zdaHv9RKOTBZ5eLgRr1+Tamil_News_large_2441974

சென்னை: பல்துறை வித்தகர் எஸ்.வி.சேகர் நாளை மறுதினம் 70வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் தன் திரையுலக நாடக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் பேசியதிலிருந்து:

உங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்களேன்...

யதார்த்தவாதி, வெகுஜன விரோதி.

உங்கள் கலைக் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

என் தந்தை, எஸ்.வி.வெங்கட்ராமன். சினிமாவில், விஜயா வாகினி, 'லேப்'பில், 50 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கியவர். ரோஜா படத்தில், வெள்ளைப் பணியாரம் கேட்டு நடித்தார். அவர், அந்தக் காலத்து அவ்வை சண்முகி; நிறைய நாடகங்களில், பெண் வேடங்களில் நடித்துள்ளார். அதன்பின், நாடகங்களை இயக்கினார். சோவின் முதல் இரண்டு நாடகங்களை, அப்பா தான் இயக்கினார்.

சித்தப்பா, எஸ்.வி.சங்கரன். சோவின், விவேகா பைன் ஆர்ட்ஸில், மேடை இயக்குனர். அம்மா, அலமேலு வெங்கட்ராமன். பள்ளி ஆசிரியர் மகள். அந்த காலத்து, எஸ்.எஸ்.எல்.சி., அவருக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகள் கூட, நமக்கு தெரியாது. ஒரு தங்கை, கணவருடன் துபாயில் இருக்கிறார். தம்பிகள் ராஜா, எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி.

என் மனைவி உமா மகேஸ்வரி, பிரபல இசையமைப்பாளர், ஜி.ராமநாதனின் பேத்தி. பெரிய இசை குடும்பம். என் மகள் அனுராதா, கணவர் பரத் உடன் அமெரிக்காவில் இருக்கிறார்.மகன், அஷ்வின் சேகர், பி.எஸ்.சி., விஸ்காம் முடித்து விட்டு, நடிகராக உள்ளார். அவரது மனைவி ஸ்ருதி, ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 10:43 pm

உங்கள் நகைச்சுவை உணர்வு எப்படிப்பட்டது?

'தினமலர்' நாளிதழையும், காபியையும்; ஞாயிற்றுக் கிழமையையும், வாரமலரையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல், 'எஸ்.வி.சேகரையும், நகைச் சுவையையும் பிரிக்க முடியாது' என்கின்றனர். சோ தான், என் குரு. அவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சோவின் அரசியல் நையாண்டி என்ற விஷயத்தை, என் நாடகங்களில் பின்பற்றுகிறேன்.

ரேடியோ, நாடக கலைத்துறையில், உங்கள் பயணம் எப்படி இருந்தது?

நான், 10 வயதில் நாடகத்தில் நடித்தேன். நடிக்க வந்து, 60 ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை, 25 நாடகங்கள், 6,500 காட்சிகளில் நடித்துள்ளேன். 13 வயதில், நாடகத்தில், 'ஸ்பெஷல் எபெக்ட்' போடும் பணியில் இறங்கினேன்.

'சினிமா, நிரந்தர தொழில் இல்லை; வேறு ஏதாவது படி' என, அப்பா கூறினார். அப்போது, 'ஏசி' மெக்கானிக்கல் டிப்ளமோ சேர்ந்தேன். டிப்ளமோ இன்ஸ்டிட்யூட்டுக்கு அருகில் தான், பிலிம் இன்ஸ்டிட்யூட் இருந்தது. அங்கிருந்தபடியே, சினிமா மீதான ஆர்வம் அதிகரித்தது.என் முதல் படம், நம் நாடு; அடுத்து, வசந்த மாளிகை. 1969ல், 'விவித் பாரதி' வர்த்தக ஒலிபரப்பு துவங்கியது. அதில், முதல் விளம்பரம், நான் செய்தது தான். இலங்கை ரேடியோவுக்காக, 'நாகேஷை கேளுங்கள்' என்ற நிகழ்ச்சியை, 150 வாரங்கள் நடத்தினேன்.இதற்கு பின், பாலச்சந்தரின் தொடர்பு ஏற்பட்டது. நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு என, சினிமாவில், 90 படங்கள் நடித்தேன்.

கடந்த, 1972ல், சிங்கப்பூர் சென்ற போது, எம்.வி.சிதம்பரம் என்ற கப்பலிலேயே, நடுக்கடலில் ஆரம்பித்த நாடகக்குழு தான், என் நாடகப்பிரியா. 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தில், கிரேஸி மோகனை எழுத்தாளராக அறிமுகப்படுத்தினேன். அவரைப் போல், யாரும் எழுத முடியாது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 10:44 pm

எம்.ஜி.ஆரின், உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் நடந்த, சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி சொல்லுங்கள்?

சென்னை சத்யா ஸ்டூடியோவில், உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கான படப்பிடிப்பு நடந்த போது, எம்.ஜி.ஆர்., இயக்க, நாகேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்ஜி.ஆர்., ஒரு காட்சிக்காக, 'ஆக் ஷன்' எனச் சொல்ல, அருகில் இருந்த நான், 'கட்' என்றேன். அனைவரும், அதிர்ச்சியில் மிரண்டனர்.

'யார் கட் சொன்னது' என, எம்.ஜி.ஆர்., கேட்க, 'நான் தான்' என்றேன். 'வெளிநாட்டு லொகேஷன் போட்டுள்ளீர்கள். ஆனால், நாகேஷ் பாக்கெட்டில், சிசர்ஸ் சிகரெட் பாக்கெட் இருக்கிறதே' என்றேன். இதற்காக, எம்.ஜி.ஆர்., என்னை பாராட்டியதை, மறக்க முடியாது.

நடிகர்களின் தற்கால மனோபாவம் குறித்து?

நான் நடிகனாக, நேர்மையான எம்.எல்.ஏ.வாக., வெளிப்படையாக தான் இருந்தேன். என் மொபைல் எண், மெயில் அனைவருக்குமே தெரியும். இப்போதுள்ள சில நடிகர்களை தொடர்பு கொள்வதே, ரொம்ப சிரமமாக உள்ளது.

'நாம், எந்த தொடர்பிலும் இருக்க கூடாது. படம் வந்தால் மட்டும், அனைவரும் நம்மை பார்க்க வேண்டும்' என, நினைக்கின்றனர். தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என, நினைக்க வேண்டும். நமக்கு பணம் கொடுத்தவன் சாலையில் நின்றால், அவன் சாபம் நம்மை சும்மா விடாது. என் தந்தை சொல்லிக் கொடுத்த ஒரு விஷயம், 'நீ ஆசிர்வாதம் வாங்கவில்லை என்றாலும், சாபம் வாங்கி விடாதே' என்பது தான்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 10:44 pm

மறக்க முடியாத வார்த்தை?

கடற்கரையில், 'தினமலர் - வாரமலர்' அந்துமணியுடன், ஒருநாள் வீராவேசமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அந்துமணி, 'உங்களுக்கு தேவை காரியமா... வீரியமா?' என, கேட்டார். 'எனக்கு, காரியம் தான் தேவை' என்றேன். 'அதற்கு ஏன் இப்படி, வீரியமாக கத்துகிறீர்கள்' என்றார். அதை, இன்று வரை பின்பற்றுகிறேன். மனதில் நினைப்பதை, தைரியமாக சொல்ல வேண்டும். நாம் எதை பின்பற்றுகிறோமோ, அதையே மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இது, என் தந்தையும், என் குரு சோவும் கற்றுக் கொடுத்த விஷயம்.

ரத்த தானத்தில் அதீத ஆர்வம் வந்த காரணம்?

என் தந்தை, 'லயன்ஸ் கிளப்' தலைவராக இருந்தபோது, 86 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக கிடைக்க, காரணமாக இருந்துள்ளார். என் தந்தை வழியில் நான், 53 முறை ரத்த தானம் வழங்கியுள்ளேன். எனக்கு, 'ரத்த திலகம்' பட்டமே கொடுத்துள்ளனர்.


அரசியலில் இடம் மாறியது குறித்து?

அரசியலில், கட்சிகளால் வெளியே அனுப்பப்பட்டவன் நான். இனி, பா.ஜ., தவிர, வேறு கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை. அவர்களாக அனுப்பும் வரை, அந்த கட்சியில் இருப்பேன். என் ஒரே தலைவர் மோடி. அவர், யுகபுருஷன்.

என்னைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், விமர்சனங்களை சந்திக்கும் தெம்பு வேண்டும். அதைப்பற்றி கவலைப்படாதவன் நான். என் வெற்றியின் தாரக மந்திரமும் இது தான். கடவுளை நம்பினால், எதிரிகள் இல்லை.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 25, 2019 2:33 pm

வாரமலர் ஞாயிறுக்கு முன்னரே வந்துவிடும் .
விசுவுடன் நடிக்கும் போது இருந்த SVS இன்று? இருவருமே மாறி விட்டார்கள்.
நல்லவர்கள் மேலும் நல்லவர்களாக மாற வேண்டும் ......................ஆனால் ..............................?
இவர்கள் ??? சாரி .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 26, 2019 4:35 am


யதார்த்தவாதி, வெகுஜன விரோதி. அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக