புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_m10தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 03, 2010 9:17 am

First topic message reminder :

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Makam%20pasukirathu%2001விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது.

மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 6:16 pm

antokkuly wrote:ஒப்பற்ற ஒரே தமிழின தலைவர்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 7:41 pm

வீரத்தமிழன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 30, 2010 9:21 pm

உலக தமிழர்களின் தலைவர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 30, 2010 10:20 pm

அண்ணன் பிரபாகரனுக்கு எனது சல்யூட்...! தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 30, 2010 10:28 pm

தாமு wrote:தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Makam%20pasukirathu%2001

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

நிச்சயமாக இறுதி சமரில் காயமடைந்த தலைவரின் கையில் காணப்பட்டது அந்த பெட்ரோல் கலன் தானாம்,
அழிவில்லாத தமிழின தன்மானத் தமிழன் ....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 10:32 pm

கலை wrote:அண்ணன் பிரபாகரனுக்கு எனது சல்யூட்...! தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 678642

தம்பி கலை அண்ணன் பிரபாகரன் பேசுகிறேன் தமிழுக்காக தமிழ் மக்களுக்காக என் பணி நடந்த வண்ணம் உள்ளது தம்பி நன்றி தம்பி நன்றி.

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat May 01, 2010 3:34 am

உலகின் தனது ஊழல் செல்வாக்கின் மூலம் வெட்கம் கெட்டு தன்னை தானே தமிழின
தலைவன் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்த கால கட்டத்தில் , தனது இனம்
அடிமை தனம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்க முதன்மையான நீண்ட கால
போராட்ட குழுவை உருவாக்கிய உன்னத தமிழ் தலைவன் . அன்று எட்டப்பன் மூலம்
கட்டபொம்மன் உயிர் போனது போல் இன்று அதே போல ஒரு சில தமிழின கருப்பு
ஆடுகளால் இயக்கம் கடுமையாக பாதிக்க பட்டாலும் எதிரியின் காலடியில் பணிந்து
போகாமல் போராடிய இயக்கதலைவரை தமிழ் மொழி வாழும் வரை வாழ்த்திக்கொண்டே
இருக்கும்

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat May 01, 2010 6:24 am

vbharathan wrote:உலகின் தனது ஊழல் செல்வாக்கின் மூலம் வெட்கம் கெட்டு தன்னை தானே தமிழின
தலைவன் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்த கால கட்டத்தில் , தனது இனம்
அடிமை தனம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்க முதன்மையான நீண்ட கால
போராட்ட குழுவை உருவாக்கிய உன்னத தமிழ் தலைவன் .
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 359383 தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 359383 தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 359383

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 10:02 am

vbharathan wrote:உலகின் தனது ஊழல் செல்வாக்கின் மூலம் வெட்கம் கெட்டு தன்னை தானே தமிழின
தலைவன் என்று சொல்லிக்கொண்டு திரியும் இந்த கால கட்டத்தில் , தனது இனம்
அடிமை தனம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்க முதன்மையான நீண்ட கால
போராட்ட குழுவை உருவாக்கிய உன்னத தமிழ் தலைவன் . அன்று எட்டப்பன் மூலம்
கட்டபொம்மன் உயிர் போனது போல் இன்று அதே போல ஒரு சில தமிழின கருப்பு
ஆடுகளால் இயக்கம் கடுமையாக பாதிக்க பட்டாலும் எதிரியின் காலடியில் பணிந்து
போகாமல் போராடிய இயக்கதலைவரை தமிழ் மொழி வாழும் வரை வாழ்த்திக்கொண்டே
இருக்கும்
தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 359383 தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 359383 தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 359383

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Aதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Aதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Tதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Hதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Iதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Rதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Aதலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக