ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Today at 7:37 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 4:50 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 4:48 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 4:47 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 2:46 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 10:33 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 10:30 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 8:10 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 8:07 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 8:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Today at 1:16 am

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Today at 1:14 am

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 2:50 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 11:57 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 7:15 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 1:24 am

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 1:21 am

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:36 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:35 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:34 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு!

அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு! Empty அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு!

Post by krishnaamma Sun Dec 22, 2019 10:14 pm

அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு!

அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு! L7Qw9ZfTCPax5b7qRbqw+E_1576983813

'ஆர்த்ரடீஸ்' எனப்படும், முழங்கால், மூட்டு தேய்மானத்திற்கு, அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. தற்போது, அவரவர் ரத்தத்தில் இருந்தே, மூல செல் எனப்படும், 'ஸ்டெம் செல்'லை பிரித்தெடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்துவதன் மூலம், அறுவை சிகிச்சை இல்லாமல், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.

ரத்தத்தில் இருந்து, ஸ்டெம் செல்லை பிரிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால், குழந்தை பிறந்ததும், தொப்புள் கொடியிலிருந்து ரத்தத்தை எடுத்து, எதிர்காலத்தில் உடல் கோளாறுகள் வந்தால் பயன்படுத்தலாம் என்று, சேமித்து வைக்கிறோம்.
இனி, இது அவசியம் இல்லை. தேவைப்படும் சமயத்தில், அவரவரின் ரத்தத்தில் இருந்தே, ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.

இத்தொழில்நுட்பம், கடந்த, 10 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது; இரண்டு ஆண்டுகளாக, சென்னையிலும் இந்த முறையில் சிகிச்சை செய்து வருகிறோம்; ஸ்டெம் செல்லை செலுத்தி, பல நோய்களுக்கு தீர்வு காண முடியும்.

ரத்தம், எலும்பு மஜ்ஜை, கொழுப்பு என்று பல வழிகளிலும், ஸ்டெம் செல்லை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்கா, மெக்சிகோ, லண்டனில் இதற்கான சிறப்பு பயிற்சியை எடுத்துள்ளேன்; தொடர்ந்து எடுத்து வருகிறேன்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு! Empty Re: அறுவை சிகிச்சையின்றி மூட்டு தேய்மானத்திற்கு தீர்வு!

Post by krishnaamma Sun Dec 22, 2019 10:15 pm

செல்கள் பிரிப்பு

ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் உள்ளே, வளர்ச்சி ஊக்கியான ஸ்டெம் செல்கள் உள்ளன. 30 மில்லி ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்களை பிரித்தால், 3 மில்லி ரத்தத்தில் சராசரியாக, 100 ஸ்டெம் செல்கள் இருக்கும். ஸ்டெம் செல் அடங்கிய இந்த ரத்தத்தை உடனடியாக, நோயாளிக்கு ஊசி மூலம் செலுத்தி விடுவோம்.

இரண்டு மணி நேரத்தற்குள் முடியும் சிகிச்சையை, புற நோயாளியாகவே செய்து கொள்ளலாம். மூட்டு தேய்மானம் இருக்கும் எந்த வயதினரும், இதைச் செய்ய முடியும்.
ஸ்டெம் செல்லை நாம் சோதனைக் கூடத்தில் வளர்க்க, சர்வதேச அளவில் எங்குமே அனுமதி இல்லை. ஒருவரிடமிருந்து, ஒரு முறை எடுக்கும் ரத்தத்தில், 100 செல்கள் இருந்தால், அதை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இளம் வயதினராக இருந்தால், அதிக ஸ்டெம் இருக்கும். வயது கூடும் போது, செல்களின் எண்ணிக்கை குறையத் துவங்கலாம். ஆரம்ப நிலை, மத்திய நிலையில் இருப்பவர்களுக்கு, ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனைத் தரும்.

ஆர்த்ரடீஸ் எந்த நிலையில் இருக்கிறது; எவ்வளவு ஸ்டெம் செல் செலுத்தி உள்ளோம்; நோயாளியின் வயது, இவற்றைப் பொருத்தே, அழிந்த செல்கள் வளர்ச்சி பெறுவதற்கு, மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

ரத்தம் தவிர, எலும்பு மஜ்ஜை, நல்ல கொழுப்பிலும், இந்த செல்கள் உள்ளன. கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள், நல்ல பலனைத் தரும். காரணம், இவை புதிதாக இருக்கும்; வயிறு, தொடை, இடுப்பின் பின் பக்கம் என்று, உடம்பின் எந்த பகுதியில் இருந்தும், தேவையான அளவு எடுக்க முடியும்.

ஆர்த்ரடீஸ் தவிர, எலும்பு முறிவு, ஆறாத புண் இருக்கும் இடத்தில், இந்த செல்களை செலுத்துவதால், அந்த இடத்தில் புதிய செல்கள் உருவாகி, புண் ஆறும். அழியும் செல்களில், புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.

தலைமுடி வளர்ச்சிக்கு, தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு, நீண்ட நாட்களாக புண் ஆறாமல் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு என்று, அனைத்து துறை நிபுணர்களும், இந்த ஸ்டெம் செல் செலுத்தும் முறையை, தற்போது பயன்படுத்த துவங்கி உள்ளனர். ரத்த புற்று நோய் தவிர, மற்ற கேன்சர் வகைகளுக்கும், இந்த முறை பலன் தரும்.

டாக்டர் லட்சுமி நாதன்
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
ரீஜென் ஆர்த்ரடீஸ் மையம், சென்னை.
நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை