புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
117 Posts - 50%
heezulia
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
93 Posts - 40%
mohamed nizamudeen
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
4 Posts - 2%
prajai
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
1 Post - 0%
eraeravi
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
1 Post - 0%
Barushree
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
47 Posts - 43%
mohamed nizamudeen
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
2 Posts - 2%
Barushree
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பொறாமை என்னும் பாவம் … Poll_c10பொறாமை என்னும் பாவம் … Poll_m10பொறாமை என்னும் பாவம் … Poll_c10 
1 Post - 1%
Rutu

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமை என்னும் பாவம் …

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 17, 2019 10:23 pm

பொறாமை என்னும் பாவம் … 201912170828266831_Jealous_SECVPF

சமூகத்தின் பார்வையில் மிக உயர்வான இடத்தில் அல்லது அடித்தளத்தில் என்று எந்த நிலையில் வாழ்பவராக இருந்தாலும் அவரவருக்கென்று தனித்தனி இயல்புகள் இருப்பது கண்கூடு. ஆனால் எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் பண்பு ஒன்றுண்டு. அதுதான் பொறாமை என்னும் நெருப்பு! தன்னிடம் பல்வேறு செல்வங்கள் இருந்தபோதிலும் தன்னிடம் இல்லாத ஒன்று அடுத்தவரிடம் இருந்துவிட்டால், அவ்வளவுதான்! எத்தனை பெரிய மனிதனுக்கும் பொறாமைப் பேய் பிடித்து ஆட்டிவிடும். நெருப்புச்சுடர்கள் தண்ணீர் ஊற்றினால் அணைந்து விடும். ஆனால் பொறாமை நெருப்பை மட்டும் எதனாலும் அணைக்க முடியாது.

பொறாமையின் அடிப்படை என்னவென்றால் அது நம் மனத்தின் ஆழத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாது. நாம் பகுத்தறிவு உடையவர்கள் என்பது உண்மையென்றால் நமது மனத்தின் ஆழத்தில் குடி கொண்டிருக்கிற பொறாமைப்பேயைக் கையும், களவுமாக பிடித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் ஒருவராலும் அதைச் செய்ய இயலாது என்பதுதான் நடைமுறையில் நாம் காணும் உண்மை. பொறாமையைக் கண்டறிந்து நீக்குவதை விட பொறாமையே இல்லாமல் வாழ்வதுதான் சிறப்பு என்று கருதிய வள்ளுவர்,

“ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு” என்று தெளிவாக கூறினார்.

ஒரு பெரும் கல்வி நிறுவனத்தின் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தபோது காலம் சென்ற ஒரு பேராசிரியரின் பரந்த மனப்பான்மை குறித்து நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்பெரியவர், “என்னிடம் அந்த பெருந்தன்மை இல்லையா?” என்று கேட்டார். வயதில் மிக மூத்த அவரிடம் அந்த கேலியை நான் எதிர்பார்க்கவில்லை. இவையெல்லாமே சிறு அளவிலான பொறாமையின் வெளிப்பாடுதான் என்று நான் புரிந்துகொண்டேன். வீட்டில் ஏதாவது புதிதாக வாங்கி வைத்தால் அதை பார்த்தவுடன் எவரும் பாராட்டிவிடமாட்டார்கள்.

தங்கள் வீட்டில் வாங்கியுள்ள இதைப்போன்ற ஒரு பொருளைப் பற்றித்தான் பேசுவார்கள்; அது அவர்களுக்கே தெரியாமல் உரையாடலில் வெளிப்படும் பொறாமை உணர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொறாமை உணர்வு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொறாமை குறித்து வள்ளுவர் மிக கடுமையாக கூறுகிறார். பொறாமையை ஒரு உயிர்ப்பொருளாக உருவகம் செய்து “பாவி” என்று வசை பாடுகிறார். அக்குறட்பா

“அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத்

தீயுழி உய்த்து விடும்”

என்று கூறுகிறார். பொறாமை கொண்ட ஒருவன் மற்றவர்களுக்கு தீமை செய்து அழிப்பது மட்டுமல்ல; அப்பொறாமையால் தானும் அழிந்துபோகிறான் என்பது வள்ளுவர் எடுத்துக்காட்டும் நுட்பமான செய்தி.

பிரபல உளவியலறிஞர் ஹேவ்லக் எல்லிஸ் என்பார் “பொறாமை என்பது சிறகுகள் உள்ள ஒரு நாகம் (டிராகன்); அது அன்பைப் பாதுகாப்பது போல பாசாங்கு செய்து கொண்டே அதனை அழித்துவிடக்கூடியது” என்று குறிப்பிடுகிறார். இது மிகவும் உண்மையான கருத்துதான்! ஏனென்றால் நம்மை அறியாதவர்களை விட நெருங்கிய நண்பர்களே நம் மீது மிகுதியாக பொறாமைப்படுவதை கண்கூடாக காணலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 17, 2019 10:24 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான கிறிஸ்டைன் ஹாரிஸ் என்பவர், “சந்தேகத்திற்கு இடமில்லாமல் பொறாமை ஒருவரின் தனிப்பட்ட துயரங்களின் ஊற்றுக்கண் தான். அது சமுதாய நிலையிலும் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது” என்று கூறுகிறார். தன் நண்பன் தன்னை விட சிறப்பாக பணியாற்றி பிறரை கவர்ந்து விடுவான் என்று தோன்றும்போதே ஒருவனுக்கு பொறாமை தோன்றி விடுகிறது. அச்சம், பாதுகாப்பற்றவனாக தன்னை உணர்தல் ஆகிய காரணங்களால்தான் ஒருவன் மனதில் பொறாமை எண்ணம் தோன்றுகிறது என்று கிறிஸ்டைன் ஹாரிஸ் நீண்ட கால ஆய்வுக்கு பின் கூறுகிறார்.

பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தில் இயாகோ என்பவன் ஒத்தெல்லோவின் பெருமைகளைப் பொறுக்கமாட்டாமல் சதிசெய்கிறான். ஒத்தெல்லோவின் மனைவி டெஸ்டிமொனாவின் கற்பினை குறித்து அவதூறு பரப்புகிறான். ஒத்தெல்லோ தன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்கிறான். ஷேக்ஸ்பியர் பொறாமையை “பச்சைப் பிசாசு” என்று குறிப்பிடுகிறார். இயாகோ என்ற தனிமனிதனின் பொறாமை ஒரு மாபெரும் வீரனையும் உலகின் தலைசிறந்த அழகியையும் அழித்துவிட்டது மாபெரும் சோகம்தான்!

குழந்தைகளின் வளர்ப்பு முறையில் ஏற்படும் குறைகளும் கூட பொறாமை உணர்வு முளைவிடுவதற்கு காரணமாகின்றன என்று பவுல் பை என்ற இன்னொரு அமெரிக்க உளவியல் வல்லுனர் 1960-ல் வெளியிட்ட ஆய்வில் கூறுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் எல்லாக் குழந்தைகளையும் சமமாக கவனித்து வளர்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் பெற்றோரின் முழு கவனிப்பும் கிடைக்காமல் ஏமாற்றமடையும் குழந்தைகள் தாங்களே எல்லாவற்றையும் செய்து கொள்ளத் தலைப்படுவார்கள். இக்குழந்தைகள் பிற்காலத்தில் எவரையும் எண்ணிப்பார்க்காமல் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

அமெரிக்காவின் உளவியல் ஆய்வாளர்களுள் ஒருவரான ஷார்ப் ஸிடீன் என்பவர் பொறாமை உணர்வானது அச்சம், கோபம், கவலை ஆகிய உணர்வுகளின் கலவையாக வெளிப்படுகிறது என்ற ஆய்வு முடிவை 1991-ல் வெளியிட்டார். உலகின் முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளின் குழந்தைகளிடையே நடைபெற்ற தகராறு நமக்கு இதை எடுத்துக்காட்டுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 17, 2019 10:24 pm

மகாபாரதத்தில் பாண்டவர் கவுரவர் போராட்டத்தின் தொடக்கமே துரியோதனனின் பொறாமை உணர்வில் தான் அடங்கியிருக்கிறது. மிக இளம் வயதிலேயே பீமன் வீரவிளையாட்டுகளிலும், உடல் திறனிலும் மேம்பட்டு விளங்கியதால் துரியோதனனின் மனம் பொறாமை உணர்வில் கொதிக்கிறது. துரியோதனன் தான் மாமன் சகுனியிடம்

“பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் எந்தன் மாமனே

தீச்செயல் நற்செயல் எதேனினும் ஒன்று செய்து நாம் அவர்

செல்வம் கவர்ந்து அவரைவிட வேண்டும் தெருவிலே”

என்று புலம்புகிறான். அஸ்தினாபுரத்தின் இளவரசனாக இருந்தும் துரியோதனனால் நிறைவான வாழ்க்கை வாழ முடியவில்லை. பொறாமை உணர்வின் காரணமாக அவன் பீமனின் கையால் உயிரை இழக்கிறான். ஒருவனின் பொறாமை அவனையே அழித்துவிடும் என்பதற்கு துரியோதனன் தகுந்த சான்று! இது குறித்து வள்ளுவர் ,

“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு ஈன்பது”

என்று கூறி பொறாமையின் விளைவுகளை விளக்குகிறார். புதிய அறிவியலாளரின் கண்டுபிடிப்புக்களுக்கு நிகராக தமிழரின் சிந்தனை மரபு திகழ்கிறது.

முனைவர் ம.திருமலை,
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம்.

நன்றி-மாலைமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 17, 2019 11:29 pm

மாலை மலரின் காப்பி செய்தமைக்கு நன்றி.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 18, 2019 5:17 pm

Code:

பொறாமையின் அடிப்படை என்னவென்றால் அது நம் மனத்தின் ஆழத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாது. நாம் பகுத்தறிவு உடையவர்கள் என்பது உண்மையென்றால் நமது மனத்தின் ஆழத்தில் குடி கொண்டிருக்கிற பொறாமைப்பேயைக் கையும், களவுமாக பிடித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் ஒருவராலும் அதைச் செய்ய இயலாது என்பதுதான் நடைமுறையில் நாம் காணும் உண்மை. பொறாமையைக் கண்டறிந்து நீக்குவதை விட பொறாமையே இல்லாமல் வாழ்வதுதான் சிறப்பு என்று கருதிய வள்ளுவர்,

இது நூறு சதவீதம் உண்மை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக