புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
108 Posts - 74%
heezulia
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
273 Posts - 76%
heezulia
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_m10இன்று புதிதாய் பிறந்தோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று புதிதாய் பிறந்தோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 6:43 pm

இன்று புதிதாய் பிறந்தோம்! Ka3
-
திவ்யாவிற்கு தினந்தோறும் மார்க்கெட்டுக்குப் போய்
காய்கறிகளை வாங்கியாக வேண்டும். வசதிப் பட்டபோது,
தேவையான காய்களை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில்
அடைத்து... அவ்வப்போது எடுத்துச் சமைக்கிற பழக்கம்
இல்லை.

தினேஷ் வேலை பார்க்கும் ஆபீஸ், வீட்டிலிருந்து மூன்று
கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். ஆனாலும் டூவீலர் உள்ளதால்
மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவான்; அவன் சூடான
சோறு, ஃபிரஷாக காய்கறி வகைகளுடன் சமைத்த மதிய
உணவையே விரும்பிச் சாப்பிடுவான்.

எனவே திவ்யா காலையில் பம்பரமாகச் சுழல்வாள். ஐந்து வயது
மகளை ஸ்கூல் வேன் வருவதற்குள் தயார் செய்து, கணவன்
ரெடியானதும் காலை டிபன், அணிய வேண்டிய பேண்ட், சர்ட்
இத்தியாதிகளைத் தேர்வு பண்ணி தினேஷை அலுவலகம் அனுப்ப
வேண்டும்.

அதன் பிறகு, டிபன் முடித்து, மார்க்கெட்டிற்குக் கிளம்புவாள்.
இது இம்மியளவு கூட பிசகாமல் அவளால் தினசரி கடைப்பிடிக்கப்
படும் நடைமுறை ஆகும்.

என்றும் போல் இன்றும் பத்தரை மணி வாக்கில் மார்க்கெட்
வளாகத்திற்குள் நுழைந்தாள் திவ்யா. எப்போதும் வாங்குகிற
காமாட்சி காய்கறிக் கடை பூட்டப்பட்டு இருந்தது. இந்த ஊருக்கு
வந்த நாள் முதல் காமாட்சியிடம்தான் காய்கறி வாங்குகிறாள்.

வேறு கடைகளில் இதுவரை வாங்கினதில்லை. தினமும் கடைக்கு
வருவதால் இருவருக்குள் ஒருவித அந்நியோன்யம்... பரஸ்பரப்
பழக்கம் ஏற்பட்டுப் போயிற்று. காய்கறிகளை எடுத்து நிறுத்துக்
கொண்டே பற்பல விசயங்களைப் பேசுவாள், விசாரிப்பாள்.

அவ்வப்போது அவளுக்குத் சரியெனப்படுகிற ஆலோசனைகளையும்
வழங்குவாள். "இந்தாக்கா இந்த தித்திப்பான கொய்யாப் பழத்த
ஒம்மகனுக்கு கொடு... ஆப்பிளை விடச் சத்தானது'' இரண்டு மூன்று
கொய்யாக் கனிகளை இலவசமாகக் கொடுப்பாள்.

திவ்யா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தே முக்கால் ஆயிற்று.
"இன்னம் இந்த காமாட்சியைக் காணமே. பதினொன்றரைக்கு வேலைக்
காரப் பெண் வந்துவிடுவாளே... வீடு பூட்டி இருந்தா அவ பாட்டுக்குப்
போயிடுவாளே. அப்பறம் கழுவ வேண்டிய பாத்திரங்களக் கழுவி.
களைந்து போட்ட துணிகள துவைச்சு... சமைத்து முடிக்க நேரமாகிடுமே...

டாண்ணு ஒண்ணரைக்கெல்லாம் அவர் சாப்பிட வந்திடுவாரே...'
என்கிற தினுசில் திவ்யாவின் மனது பதைபதைத்தது. "அம்மா வாங்க...
என்ன வேணும். எல்லாக் காய்கறிகளும் இங்க இருக்கு. வெல மலிவுதான்''

அடுத்த கடைக்காரர் தூண்டில் போட்டார். "சரி நேரமாய்க்கிட்டே போகுது'
என்று அந்தக் கடையை நோக்கிப் போனாள். இவள் அந்தப் பக்கம் போய்
தேவையான காய்கறிகளை விலை விசாரித்து எடுக்கும் போது காமாட்சி
வேகமாக வந்து கடையைத் திறந்தாள்.

ஓரக்கண்ணால் காமாட்சியை திவ்யா பார்க்க... இரண்டு பேர்களின்
பார்வைகளும் அரை குறையாய்ச் சந்தித்துக் கொண்டன. திவ்யாவின்
மனதிற்குள் தாம் தப்புப் பண்ணி விட்டோமோ என்கிற எண்ணம் தோன்றியது.
இன்னும் சிறிது நேரம் காத்திருந்து காமாட்சியிடமே வாங்கி இருக்கலாமோ.
"ம்... எவ்வளவு நேரந்தான் காத்திருக்கிறது. நமக்கும் அடுத்தடுத்து செய்ய
வேண்டிய காரியங்கள் இருக்கிறதே'" தனக்குத்தானே சமாதானப்படுத்திக்
கொண்டாள் திவ்யா.

காய்கறி வாங்கி கிளம்புகிற பொழுது, காமாட்சி கடையில் இரண்டொருவர்
காய்கள் வாங்கியவாறு இருந்தார்கள். அதனால் அவள் முகத்தை நேருக்கு
நேர் சந்திக்கிற சிரமம் ஏற்படாமல் காமாட்சியின் கடையைக் கடந்தாள்
திவ்யா.

சாலையில் போகிற போது திவ்யாவின் அலைபேசி ஒலித்தது.
எடுத்துப் பார்க்கும் போது காமாட்சி அழைப்பில் இருந்தாள். அலைபேசியை
"அட்டர்ன்' பண்ணாமல் நடந்தாள் திவ்யா. காமாட்சியிடம் காய் வாங்காத
உறுத்தல் மனதை அழுத்திற்று. தொடர்ந்து ஒலித்த அலைபேசியை எடுத்து,
"ஹலோ யாரு?" என்றாள்.

"திவ்யாக்கா நெஜமாவே யாருன்னு தெரியலையா?"

"வெயில் சாஸ்தியா இருக்கிறதால பதிஞ்சிருக்கிற பேரு தெளிவாத் தெரியல"

"என்னோட கொரலு எப்பிடி தெரியாது போகும்? ஃபோன் எடுத்த உடனே
சொல்லு காமாட்சின்னு எத்தன தடவ சொல்லி இருக்கிங்க''

"வெயிலு கவனக்கொறச்சல். அதான் யாருன்னு சட்டுன்னு புரியல காமாட்சி"

"அடுத்த கடையில காய் வாங்கிக்கிட்டு போனதுக்கு நான்
கோவிச்சுக்கிடுவேன்னு என்னயக் கண்டும் காணாமப் போயிட்டிங்க...
இதுல கோபிக்கிறதுக்கு என்னக்கா இருக்கு...

எனக்கு கிடைக்கிற பத்து ருபாய் இன்னக்கி அந்த அண்ணனுக்கு கெடச்சிட்டுப்
போகுது. அதெல்லாம் எனக்கு வருத்தம் கெடையாது. "கடைய லேட்டாத் தெறந்தியே
ஏன்? என்ன காரணம்னு ஒரு வார்த்த விசாரிக்காம போயிட்டிங்களே... அதுதான்
என்னால தாங்கிக்கிட முடியல.

கொய்யாப் பழம் எப்பவும் கொடுக்கிறவரு இன்னக்கி வந்து போடல. கொய்யாப்
பழம் கேக்கிறவுங்களுக்கு எப்பிடி இல்லைன்னு சொல்றது. பெரிய மார்க்கட்டுக்கு
போய் கொய்யாப் பழம் வாங்கிட்டு வந்தேன். நேரமாகிடுச்சு... வேற ஒண்ணுமில்ல...
நீங்க ஒரு வார்த்த கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்... ம்... என்ன இருந்தாலும்
நான் சாதாரண காய்கறி வியாபரம் பண்ணுறவதானே? நீங்க ஆபீஸர் பெஞ்சாதி...
ரெண்டு பேரும் தோஸ்த்தா இருக்க முடியுமா? சரி விடுங்க''" படபடவென்று பட்டாசு
வெடித்தாற் போல பொரிந்து தள்ளி விட்டு ஃபோனை வைத்து விட்டாள் காமாட்சி.

"நாம இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் காத்திருந்திருக்கலாம்... இல்ல... அடுத்த
கடையில காய்கறி வாங்கிட்டு வரும்போது காமாட்சியக் கண்டு பேசிட்டு
வந்திருக்கலாம். கடைய ஏன் லேட்டாத் தெறந்தேன்னு கேட்டிருக்கலாம்...
அவள்ட்ட காய் வாங்காமப் போறோமே... எப்பிடிப் பேசுறதுன்னு தயங்கி தப்பிச்சு
வந்தது அவளச் சங்கடப் படுத்திருச்சு. ம்... நாளைக்குப் பாத்து... விசயத்த வெளக்கி...
கோவிச்சுக்கிடாத... இனி இப்பிடி நடக்காதுன்னு சொல்லிடுவோம்' என்கிற முடிவோடு
வீடு வந்து வேலைகளில் ஈடுபட்டாள் திவ்யா.

மறுநாள் மார்க்கெட்டிற்கு வழக்கம் போல் போனாள். கூச்சத்தோடு காமாட்சி
கடை முன் நின்றாள்.
"வாங்க திவ்யாக்கா... என்ன காய் வேணும். எல்லாமே இப்ப வந்ததுதான்''
"காமாட்சி நேத்து...''

"அத விடுக்கா. நேத்து விசயம் நேத்தோடு போச்சு... அதயே நெனச்சுக்கிட்டு இருந்தா
அவ்வளவுதான்... பொதன் கெழம போயிடுச்சு... இன்னக்கி வெயாழக்கிழம வந்திருச்சு.
வெயாழக் கெழமப் பொழுதக் கஷ்டமில்லாம கடக்கணும்னு சாமியக் கும்பிட்டு
வேலைகளப் பாத்துக்கிட்டே போகணும்...

பழச நெனச்சுப் புழுங்கிக்கிட்டே திரிஞ்சோம்னு வையுங்க... நிம்மதி போயி மனசு
கொழம்பிக் கிடக்க வேண்டியதுதான்''

என்ன காய்ங்க வேண்டுமென கேட்டு அவளே நல்ல காய்களைப் பொறுக்கி எடுத்துப்
போட்டு... நிறுத்துக் கொடுத்து பணத்தை வாங்கி... "இந்தா இது ஒங்க பிள்ளைக்கு''
என்று கனிந்த கொய்யாப் பழங்கள் இரண்டை தந்தாள் காமாட்சி.

"இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற பாரதியின் வரியை காமாட்சி அறிந்திருக்க
மாட்டாள். ஆனாலும் அவள் அதன் பிரகாரம் நடந்தது திவ்யாவின் நெஞ்சை நெகிழ
வைத்தது.
-
--------------------------
By செல்வகதிரவன் | தினமணி கதிர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக