புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 30, 2019 5:14 pm

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான மத்திய வாரியம், 2018-19 நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி மற்றும் டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து, ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் தந்தது

பொருளாதார மந்தநிலை மற்றும் பணப்புழக்கத் தட்டுப்பாட்டால் நாட்டின் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், ஆள்குறைப்பு, உற்பத்தி நிறுத்தம் போன்ற செயல்பாடுகளின்மூலம் தங்களது நஷ்டத்தைச் சமாளிக்கும் முயற்சியில் இறங்கின. நிறுவனங்களின் ஜூன் வரையான காலாண்டு முடிவுகளும் மிக மோசமாக வந்ததையடுத்து, பங்குச்சந்தையும் பெரிய சரிவை நோக்கி பயணித்தது.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Vikatan%2F2019-08%2F3260ea10-6a36-4810-86ee-927f6a05f5c3%2FRBI_1_17170_16578__2_

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றை செயல்படுத்துவதற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இந்தச் சூழலில்தான், ரிசர்வ் வங்கி தன்வசமுள்ள உபரி நிதியான ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான மத்திய வாரியம், 2018-19 நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி மற்றும் டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் தந்தது.

முன்னதாக, ரிசர்வ் வங்கியின் வசமுள்ள உபரித்தொகையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை வைத்துக்கொள்ளலாம், பணப்புழக்கத்துக்குத் தேவையான நிதி எவ்வளவு, மத்திய அரசுக்கு எவ்வளவு உபரி நிதியை வழங்கலாம் என்பது குறித்து அந்தக் குழு ஆய்வுசெய்யும் என்று கூறப்பட்டது.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Vikatan%2F2019-08%2F33765f24-dd75-4288-83e5-c2d7175fdcc6%2Fsakthikantha_dass

இந்தக் குழுவில், மத்திய அரசின் சார்பாக மத்திய நிதித்துறை செயலர் ராஜீவ்குமார் இடம்பெற்றிருந்தார். இந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது. அந்த ஆய்வறிக்கைகுறித்து கலந்தாய்வுசெய்து முடிவெடுப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி என்பது, உலகிலுள்ள குறிப்பிட்ட சில நாடுகளின் மத்திய வங்கிகளின் நிதி கையிருப்பைக்கொண்டு கணக்கிடப்படும். மற்ற நாட்டு மத்திய வங்கிகளின் நிதி கையிருப்பு, 14 சதவிகிதமாக உள்ளது. நமது ரிசர்வ் வங்கியின் கையிருப்பு அதைவிட இருமடங்காக, அதாவது 28 சதவிகிதமாக உள்ளது. எனவே, உபரியாக உள்ள நிதியை வழங்கும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Vikatan%2F2019-08%2F8dbc4a88-8d9a-44a8-b2c8-c092e6eb7250%2Fvikatan_2019_06_798d6bbf_df6d_4078_b954_2078bdf07dee_159224_thumb

மத்திய அரசின் இந்த வேண்டுகோளை, அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் ஏற்க மறுத்தார். அது, பெரிய பிரச்னையானது. அதன்பின், 2018 நவம்பர் மாதம், ரிசர்வ் வங்கியின் நிதி நிலவரம்குறித்து ஆய்வு செய்வதற்காகக் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின்பேரில்தான் தற்போது மிகப்பெரிய நிதி உதவியை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.

மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதியுதவி செய்வது வழக்கமான நடைமுறைதான். இருந்தாலும், முன்னெப்போதையும்விட, தற்போது வழங்க உள்ள தொகை மிகமிக அதிகம் என்பதால், அது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த 2015-16 நிதியாண்டில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.65,876 கோடி நிதி அளித்தது. 2016-17 நிதியாண்டில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ரிசர்வ் வங்கியும் நிதிச் சிக்கலில் சிக்கியிருந்ததால், கடந்த நிதியாண்டைவிட பாதி அளவே (ரூ.30,659 கோடி) மத்திய அரசுக்கு வழங்கியது. 2017-18 நிதியாண்டில், சற்று கூடுதலாக ரூ.40,659 கோடி வழங்கப்பட்டது.

தற்போது, மிகப் பெரிய அளவிலான நிதி உதவியை அளிக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. `ஜிடிபி பற்றாக்குறை அளவு 3.3 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படும். வங்கிக்கடனை ஊக்குவிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி உதவியைக்கொண்டு, சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுமா?!

--நன்றி விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 5:35 pm

நம்மிடம் இருந்து அரசு பெறுகிற  வரிகள் அந்தந்த துறைக்கு போகிறது.
ரிசர்வ் வங்கிக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது,பாலாஜி?

ரமணியன்  
@பாலாஜி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 30, 2019 5:56 pm

பணவியல் கொள்கையை அறிவித்து அதன் மூலம் பொருளாதாரத்தில் ஸ்திர தன்மையை நிலை நாட்டுகிறது. விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும், வட்டி விகிதங்களை கட்டுபடுத்துவதும் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதும், ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு வினியோகம் செய்வதும் மற்றும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துவதும் ரிசர்வ் வங்கியின் தலையாய கடமை ஆகும்.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் வங்கி கணக்குகளை ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. மேலும் அனைத்து வங்கிகளும் தங்கள் கணக்குகளை சில நடைமுறை வசதிக்காக ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. இந்த கணக்கில் வைக்கப்படும் டெபாசிட் தொகைகளுக்கு ரிசர்வ் வங்கி வட்டி எதுவும் கொடுப்பதில்லை. அதற்கு ரிசர்வ் வங்கி சட்டத்திலும் இடமில்லை. ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் முதலீடு ரூ.5 கோடி மட்டுமே. ரிசர்வ் வங்கியின் நூறு சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கைகளை ஆய்வு செய்தால், கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி கீழ்கண்ட தொகைகளை தனது நிகர லாபமாக மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது.

2017-18 ரூ.50,000 கோடி, 2016-17 ரூ.30,659 கோடி, 2015-16 ரூ.65,876 கோடி, 2014-15 ரூ.65,896 கோடி, 2013-14, ரூ.52,679 கோடி.

அப்படியென்றால் ரிசர்வ் வங்கியின் லாபம் எங்கிருந்து வருகிறது? இதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் சில முக்கிய பணிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கடன் பத்திரங்கள் விற்பனை மூலம் தொடர்ந்து கடன்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. 30.6.2018 உடன் முடிவடைந்த ஆண்டில் மத்திய அரசு ரூ.4,19,100 கோடிகளும், மாநில அரசுகள் ரூ.5,88,000 கோடிகளும் கடனாக பெற்றுள்ளன. இதற்கான கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி மூலமாக விற்பனை செய்கின்றன. ரிசர்வ் வங்கி இவ்வாறான கடன் பத்திரங்களை மற்ற வங்கிகளுக்கும் மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள் இவைகளுக்கு விற்பனை செய்கிறது. விற்பனையாகாத பத்திரங்களை ரிசர்வ் வங்கியே வாங்கிக்கொள்கிறது. சராசரியாக 10 முதல் 12 சதவீத கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குகிறது. மேலும் வங்கிகள் தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியில் கொடுத்து அதற்கு ஈடாக கடன் பெறுகின்றன. எனவே, கணிசமான கடன் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியிடம் உள்ளன. ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள பத்திரங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது. இது ரிசர்வ் வங்கியின் வருமானத்தில் பெரும்பகுதி ஆகும். கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கும் போது, ரிசர்வ் வங்கி தனது பணத்தைத்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு கடனாக வழங்குகிறது. இதில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் பணம் வெளியே செல்லும்போது அது நாட்டில் பண புழக்கத்தை அதிகரித்து பண வீக்கத்துக்கு வழி வகுக்கும். மேலும், மத்திய அரசும், மாநில அரசுகளும் கடன் பத்திரங்கள் இல்லாமல் நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் வாங்கிய கடனுக்கு 30.6.2018-ல் செலுத்திய வட்டி ரூ.586 கோடி ஆகும். ரிசர்வ் வங்கிக்கு இவ்வாறாக வந்து சேரும் வட்டி வருமானம் என்பது மீண்டும் ரிசர்வ் வங்கியின் லாபமாக மத்திய அரசுக்கே போய் சேரும்.

இரண்டாவது, ரிசர்வ் வங்கியிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 30.6.2018 அன்று ரூ.26,09,807 கோடி ஆகும். இவைகள் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவோ, ஐரோப்பாவின் யூரோ கரன்சி ஆகவோ உள்ளன. இவைகளை வெளிநாட்டு வங்கிகளிலும் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்தின் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கிறது. 30.6.2018 உடன் முடிவடைந்த ஆண்டில் இதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.27,401 கோடிகள் ஆகும். இந்த அன்னிய செலாவணி எப்படி கையிருப்பாக ரிசர்வ் வங்கியிடம் வந்து சேர்ந்தது?. இதை எளிமையாக புரிந்துகொள்வோம். அன்னிய செலாவணி சந்தையில் (இங்கு சந்தை என்பது வங்கிகள், அன்னிய செலாவணியை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் அடங்கிய, சந்தை போன்ற ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாத, அமைப்பு) ஏற்றுமதி வணிகம் மூலமாகவும், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் மூலமாகவும், வெளிநாட்டு நிறுவனங்களில் வாங்கும் கடன்கள் மூலமாகவும் மற்றும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம் மூலமாகவும் அன்னிய செலாவணி சந்தையில் வந்து சேருகின்றன. இந்த அன்னிய செலாவணியை வாங்குபவர்கள் ஏற்றுமதியாளர்களும், அன்னிய கடன்களை திருப்பி செலுத்துபவர்களும், அன்னிய முதலீடு செய்பவர்களும் மற்றும் பலரும் ஆவார்கள். ஒரு பொருள் அதிகமாக சந்தைக்கு வரும்போது அதன் விலை குறையும் என்பது நியதி. அதேபோல் அமெரிக்க டாலர்கள் அதிக அளவில் சந்தைக்கு வரும்போது அதன் மதிப்பு (விலை) குறையும். உதாரணமாக ரூ.70-க்கு விற்ற அமெரிக்கா டாலர் ரூ.69 அல்லது ரூ.68-க்கு அல்லது அதற்கு கீழே விற்கும் நிலைமை வரும். இது நமது ஏற்றுமதி வணிகத்தை பாதிக்கும். எனவே, சந்தையில் அதிகமான டாலர் வரத்தை ரிசர்வ் வங்கி வாங்கிக்கொண்டு, டாலரின் விலையை சம நிலைப்படுத்தும். இவ்வாறுதான் அன்னிய செலாவணி ரிசர்வ் வங்கியின் இருப்பாக மாறுகிறது.

இப்போது நினைவு கூருங்கள். ரிசர்வ் வங்கியின் லாபம் உயர்கிறது என்றால் வங்கிகளும் மத்திய, மாநில அரசுகளும் அதிக கடன்களை ரிசர்வ் வங்கியில் இருந்து பெறுகின்றன மற்றும் அன்னிய செலாவணி சந்தையில் ஸ்திர தன்மை இல்லாமல் அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி வாங்குகிறது என்பதுதானே உண்மை. ரிசர்வ் வங்கியின் லாபம் குறைகிறது என்றால், மத்திய, மாநில அரசுகளும் மற்றும் வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் பத்திரங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கடன் வாங்குவதை குறைத்துக்கொண்டு தங்கள் நிதி நிலைமையை தாங்களே கவனித்துக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

அதுபோல, அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு குறிப்பிட்ட அளவு தேவைதான். அது சந்தையில் அமெரிக்க டாலரின் விலையில் ஸ்திரதன்மையை கொண்டு வர உதவும். ஆனால் அந்த தேவையான அளவு எவ்வளவு என்பதை நிர்ணயித்து, அதற்கு மேல் அன்னிய செலாவணியை வங்கிகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலைமை இல்லை என்றால், சந்தையில் ஸ்திரதன்மை நிலவுகிறது என்றுதானே அர்த்தம். லாபம் குறைகிறது என்றால் மற்ற வங்கிகள்தான் கவலைப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த குறையும் லாபம் நாட்டுக்கு நல்லதையே செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

- எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 7:23 pm

நன்றி நன்றி பாலாஜி .
கட்டுரை தெளிவாகவும் விளக்கமாகவும் இருந்தது.
ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக