புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_m10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_m10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_m10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_m10விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 24, 2019 4:57 pm

விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா FmyXLCOITSyAxEII5p3F+தன்_ஷிகா
பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் நடிகை சாய் தன்ஷிகா.

தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் இணைந்து நடிப்பது நல்லதொரு அனுபவத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘லாபம்’. இது விவசாயிகளின் வாழ்வியல் குறித்துப் பேசுவதுடன், வெள்ளையர்கள் காலத்திலிருந்து இன்றுவரை விவசாயிகளின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் படமாகவும் இருக்குமாம்.

“அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று எந்தளவு வளர்ந்துள்ளது என்பதை மிக ஆழமாகவும் அற்புதமாகவும் பேசுகிறது இந்தப் படம்.

“இதில் நான் நடிக்கவேண்டும் என்று ஜனநாதன் கேட்டுக்கொண்டபோது கதையைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்றேன்.

“காரணம் அவர்மீது எனக்கு அந்தளவுக்கு அபார நம்பிக்கை உள்ளது. சினிமாவின் அரிச்சுவடியை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

“பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல் பல நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டேனோ, அதுபோலவே இப்போதும் நடந்து வருகிறேன்.

“காரணம், அவரிடம் கற்பதற்கு இன்னும் நிறைய உள்ளது,” என்கிறார் தன்ஷிகா.

‘பேராண்மை’க்குப் பிறகு தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், பெரிய இயக்குநர் என்றாலும் தான் முன்வைக்கும் சில யோசனைகள் சரியாக இருப்பின், அதைப் பரிசீலிக்கும் பெருந்தன்மை ஜனநாதனிடம் இருப்பதாகப் பாராட்டுகிறார்.

ஜனநாதன் இயக்கிய அனைத்துப் படங்களும் தமக்குப் பிடிக்கும் என்றாலும், ‘ஈ’, ‘இயற்கை’ ஆகியவை தம்மை அதிகம் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறார் தன்ஷிகா.

விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான பரிணாமங்களைச் சிறப்பாக வெளிப்படுத்துவதாகப் பாராட்டுபவர், ‘லாபம்’ படத்திலும் அவரது நடிப்பு மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார்.

“விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதுடன் நல்ல தயாரிப்பாளராகவும் நடந்து வருகிறார்.

“தனக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்து வருவதாக வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர்.

“இப்படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யூகிக்க முடிகிறது. கதாபாத்திரத்தைவிட கதைக்குதான் ஜனநாதன் முக்கியத்துவம் அளிப்பார் என்பதும் எனக்குத் தெரியும்.

“தற்போது பெண்கள் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களும் அத்தகைய படங்களைக் வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் தன்ஷிகா.

‘லாபம்’ படம் சமூகத்திற்கு லாபம் தரும் படைப்பாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், காசு கொடுத்துத் திரையரங்குக்கு வரும் ரசிகர்களை இந்தப் படம் நிச்சயம் திருப்திபடுத்தும் என்கிறார்.

“இன்றைய தேதியில் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் எந்த வகையிலும் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தரமான படமாக இல்லாவிட்டாலும் மோசமான படைப்பாக இருக்கக் கூடாது என்றே விரும்புகின்றனர்.

“ஜனநாதனின் படங்கள் எப்படிப்பட்டவை என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் படமும் அவரது தரமான படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்பதை விரைவில் ரசிகர்கள் உறுதி செய்வர்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சாய் தன்ஷிகா.
-
தமிழ்முரசு-சிங்கப்பூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக