புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
களங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_lcapகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_voting_barகளங்கமில்லா மனசு! – சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களங்கமில்லா மனசு! – சிறுகதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:22 pm

களங்கமில்லா மனசு! – சிறுகதை E_1564723639

வேப்ப மர நிழலில் படுத்திருந்த வேணு, கண் விழித்து
பார்த்த போது, எதிரே சித்தப்பா நின்றிருந்தார்.

”எப்ப வந்தீங்க, சித்தப்பா?”

”இப்பதான் வந்தேன், வேணு. ஆமா… வெளியே,
‘மாணிக்கம் பவன்’னு எழுதி மாட்டிருக்கிறியே… எனக்கு
தெரிந்து, நம் குடும்பத்தில அப்படி யாரும் கிடையாதே?”
என்றார்.

”அதையேன் கேட்கிறீங்க, சித்தப்பா… காரணம்
இருக்கிறது.”
”சொல்லேன்… நானும் தெரிஞ்சுக்கிறேன்.”

”நானும், மாணிக்கமும், ஒரே பள்ளிகூடத்தில் படித்தோம்;
எப்போதும் சேர்ந்தே இருப்போம். குடும்ப சூழ்நிலை
காரணமாக, கொஞ்ச நாளில் படிப்பை பாதியிலே நிறுத்தி
அவன், விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

”நான், படிப்பை முடித்து, தற்போது, வேலையிலிருந்து
ஓய்வு பெற்று, பரம்பரை வீட்டில் இருப்பது, உங்களுக்கு
தெரிந்தது தானே, சித்தப்பா…”

”அதற்கும், வீட்டுக்கு வைத்திருக்கும் பெயருக்கும் என்ன
தொடர்பு?” என்றார்.

கொஞ்ச நாள் முன் நடந்த சம்பவத்தை, நினைவு கூர்ந்தான்,
வேணு.

அன்று, அவனது நண்பன், மாணிக்கம் வந்திருந்தான்…

‘ஏம்பா, வேணு… எப்படி இருக்கே… உன்னிடம், ஒரு உதவி…’
என்றான்.

‘என்ன… சொன்னாதானே தெரியும்…’ என்றான், வேணு.

‘வீட்டிற்கு விருந்தாளிங்க வர்றாங்க… என் வீடு, அவ்வளவு
பெரிசு இல்லை; உனக்கே தெரியும். கீழத்தெருவில் இருக்கே,
உன் வீடு, பூட்டிதானே கிடக்கிறது… இரண்டு நாளைக்கு
தாயேன்…’ என்றான்.

‘வரக்கூடியவர்கள், வீட்டை குப்பையாக்கி, சுத்தம்
செய்யாமல் போய் விடுவர்… பிறகு, நான் தான் எல்லாம்
சரி செய்ய வேண்டும்…’ என, நினைத்து கொண்டவன்…

‘இல்லை, மாணிக்கம்… அங்கே, வீட்டு வேலை இன்னும்
பாக்கி இருக்கிறது…’ என, பொய் சொன்னான்.

‘சரி… பரவாயில்லை, நான் வேற எதாவது வீடு கிடைக்குமா
பார்க்கிறேன்…’ என்றான்.

ஆறு மாதம் கழித்து, மீண்டும் வந்தான், மாணிக்கம்.

‘வேணு… எனக்கு, அவசரமாக, 5,000 ரூபாய் வேண்டும்…
கொடுக்க முடியுமா?’ என்றான்.

பணம் இருந்தும் கொடுக்க மனமின்றி, ‘அடடா… நேற்று
தானே சீட்டு கட்டினேன்…’ என, வடிகட்டின, இரண்டாவது
பொய் கூறினான்.

‘பரவாயில்லை, வேணு… வேறு எங்கேயாவது புரட்ட
முடியுமா பார்க்கிறேன்…’ என்று கூறி, போய் விட்டான்,
மாணிக்கம்.

‘கிட்டதட்ட ஒரு வருஷமாக, மாணிக்கத்தை
காணவில்லையே…’ என, வேணு நினைத்திருந்த போது,
திடீரென வந்து நின்றான்.

‘வா, மாணிக்கம்!’

‘வேணு… உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது…’
என்று கூறி, மடியிலிருந்து நகை ஒன்றை எடுத்து
கொடுத்தான்.

‘இதை வைத்து, 10 ஆயிரம் ரூபாய் தாயேன்…’ என்றான்.

‘மாணிக்கம்… தப்பா எடுக்காதே, நான் வெளியூர் போறேன்…
வீடு பூட்டியிருக்கும்… காலம் சரி இல்லை, பார்த்தியா…’
என்றான், வேணு.

‘வேறு எங்கேயாவது, பணம் புரட்ட முடியுமான்னு
பார்க்கிறேன்…’ என்று கூறி, கிளம்பி விட்டான், மாணிக்கம்.

இரண்டு நாட்களுக்கு பின், மதுரையில் நடக்கவிருக்கும்
கவி அரங்கத்திற்கான அழைப்பிதழ், தபாலில் வந்தது.

கிளம்பி சென்றான், வேணு. பேருந்து நிலையத்தில் கூட்டம்.
முண்டியடித்ததில், கால் தடுமாறி விழுந்தது தான் தெரியும்…
வேணு, கண் விழித்து பார்த்தபோது, மருத்துவமனையில்,
அவன் பக்கத்தில் இருந்தான், மாணிக்கம்.

‘என்ன ஆச்சு?’ எனக் கேட்டான், வேணு.

‘அவசர வேலையாக, திருச்சிக்கு போக, பேருந்து
நிலையத்திற்கு வந்தபோது, நீ கூட்ட நெரிசலில் தடுமாறி
விழுவதை பார்த்தேன். பயணத்தை பாதியிலேயே நிறுத்தி,
மருத்துவமனையில் உன்னை சேர்த்தேன்…
வந்ததற்கு, இப்போ எவ்வளவோ பரவாயில்லை…’ என்றான்,
மாணிக்கம்.

‘நிறைய செலவாகி இருக்குமே… உனக்கு, எவ்வளவு
தரவேண்டும்?’

‘அவசரப் படாதே… முற்றிலும் குணமானவுடன், செலவான
தொகையை வாங்கிக்கிறேன்…’ எனக் கூறினான், மாணிக்கம்.

நடந்ததை நெகிழ்ச்சியுடன், சித்தப்பாவிடம் கூறி முடித்தான்,
வேணு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:23 pm

”அவசர தேவைக்காக, யாரிடமும் போகாமல், உரிமையுடன்
என்னிடம் வந்து, மாணிக்கம் உதவி கேட்ட போது, பள்ளி
நண்பன் என்றும் பார்க்காமல், மனசறிந்து பல பொய்களை
சொன்னேன்…

”ஆனால், திருச்சிக்கு போக இருந்தவன், பயணத்தை
தொடராமல், என்னை காப்பாற்றி, கூடவே இருந்து பார்த்துக்
கொண்டான்,” என, கண்ணீர் வடித்தான்.

”நீ, பொய்யையும், பணத்தையும், வசதியையும் அளவாய்
எடுத்தாய்… ஆனால், உன் நண்பனோ, உயிரை அளவீடாக
எடுத்தான். இதுதான், வித்தியாசம். வீட்டிற்கு, நீ வைத்திருக்கும்
பெயர், மிகவும் பொருத்தமானதே,” என, தீர்க்கமாக சொன்னார்,
சித்தப்பா.

வேணுவின் மனதை தொட்டு நின்றான், களங்கமில்லாத
நண்பன், மாணிக்கம்.

‘இனி, நட்பில் தொய்வு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்…’
என, சபதம் எடுத்து கொண்டான், வேணு.

ந. சுந்தரா
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக