ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


‘சிறுகுடலை பெருங்குடல் சாப்பிடுது…?

‘சிறுகுடலை பெருங்குடல் சாப்பிடுது…? Empty ‘சிறுகுடலை பெருங்குடல் சாப்பிடுது…?

Post by kavinele Sun Dec 27, 2009 10:38 am

‘சிறுகுடலை பெருங்குடல் சாப்பிடுது…? 19223


சிலதினங்களுக்கு முன்னர் நடிகை இலியானாவின் வயிறைப்பற்றி(விஜய் விரும்பிய நாயகி) என்று ஒரு பதிவு இட்டிருந்தேன். ஏற்கனவே வயிற்றில் பம்பரம் விடுதல், முட்டை பொரித்தல், கயங்குண்டு விளையாடுத்தல், கஜுக்கொட்டை வறுத்தல் வரை பல வந்துவிட்டன. இவை எல்லாம் சுவாரசியத்திற்காகவே… சரி ஏதாவது கொஞ்சம் ஆளமாய் போய் பார்போம் என் எண்ணி இந்தப்பதிவை இடுகின்றேன்.
’சிறுகுடல பெருங்குடல் சாப்பிடுதுடா’ன்னு பசி வரும் நேரம் நாம்
சொல்லக் கேட்டிருப்போம், சொல்லியுமிருப்போம். பல்வகை உணவுகளை
செரித்துவிடும் தன்மை கொன்ட வயிறு தன்னைத் தானே செரித்துக்கொள்வதில்லை ஏன்?
இக்கேள்விக்கு மருத்துவமே திட்டவட்டமாக இன்னும் பதில் சொன்னபாடில்லை.
கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்குமென்று ஒரு பதில் இருக்கிறது. அதை
சொல்லிவிடுகிறேன். ஏகப்பட்ட புதுப்பெயர்கள் வருவதனால் குழப்பமாய்
இருப்பதுபோல் தோன்றலாம். உண்மையில் மிகவும் எளிமையான லாஜிக் தான்.
நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும்
உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும்
வயிற்றின் வேலைதான். நம் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் hydrochloric
acid. மிகவும் வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. இவ்வமிலம் தினந்தோறும்
நம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு செரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தானே.
சூட்சுமம் வயிற்றின் அமைப்பில் உள்ளது.
க்ராஸ் செக்ஷனில் மூன்று முக்கியமான லேயர்கள் இருக்கின்றது வயிற்றில்.

1. serosa – வெளிப்புறத்தில் இருப்பது
2. muscular – உள்ளே இருக்கும் உணவை சிறுகுடலுக்கு தள்ள உதவுவது இந்த லேயரின் contraction தான்
3. mucosa – இதுதான் உட்புறமாய் இருக்கும் கடைசி லேயர். மிகவும் முக்கியமானதும்கூட.
‘சிறுகுடலை பெருங்குடல் சாப்பிடுது…? Stomach_tcm75-26442
இதில் இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன.
1. oxyntic
2. pyloric
இதில் ஆக்ஸிண்டிக் சுரப்பிகள் சுரப்பது
1) ஹைட்ரோக்ளோரிக் அமிலம்
2) பெப்ஸினோஜன் என்ற வஸ்து – புரதங்களின் செரிமானத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இதன் பை ப்ராடக்டான பெப்ஸின்
3) intrinsic factor – வைட்டமின் B12 absorptionஉக்கு மிகவும் அவசியமானது
4) கொஞ்சமாய் ம்யூகஸ் (mucus)
பைலோரிக் சுரப்பிகள் சுரப்பது
1) காஸ்ட்ரின் (Gastrin)
2) mucus
இந்த இரண்டு சுரப்பிகளைத் தவிர வயிற்றின் உட்புறம் முழுவதும்
ஏகப்பட்டதுக்கு இடைவெளியே இல்லாமல் இருப்பது surface mucosal cells.
தண்ணீரிலும் அமிலத்திலும் கரையாத கெட்டியான mucus எனும் வஸ்துவை
சுரக்கின்றன. தமிழில் எனக்குத்தெரியவில்லை, viscous என்று சொல்வார்களே.
அந்த பதத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர் கனத்திற்கு இந்த ம்யூகஸ்
இருக்கும். இந்த ம்யூகஸில் இருக்கும் முக்கியமான பொருள் bicarbonate. இது
அல்கலி alkali ஆகும்.
அல்கலியும் அமிலமும் சேர்ந்தால் என்னாகும் என்று நான்
சொல்லவேண்டியதில்லையே? இந்த அல்கலியின் உதவியால்தான் இத்தனை
அமிலமிருந்தும் நம் வயிறின் உட்பகுதி செரிக்கப்படாமல் இருக்கின்றது.
மேலும் அதிகமாக சுரக்கவைக்கவோ அல்லது தேவைக்கதிகமாக சுரக்காமல்
இருக்கவோ positive மற்றும் negative feedback mechanism இருக்கின்றன.
மேற்சொன்ன gastrin மட்டுமல்லாமல் இன்னும் acetylcholine, histamine
போன்றவையும் பயன்படுகின்றன.
இந்த ம்யூகஸ் பாதுகாப்பு ஒன்றும் அசைக்கமுடியாத கோட்டையில்லை.
சிலருக்கு இயற்கையிலேயோ அல்லது வாழ்க்கைமுறைக்கு தகுந்தவாறோ
அமிலச்சுரப்பிகள் அபரிதமாக வேலை செய்யலாம் இல்லையெறால் இந்த ம்யூகஸ்
லேயரின் தயாரிப்பிலோ sustenanceஇலோ குறைபாடு இருக்கலாம். இன்னும்
அபூர்வமாக பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருந்தால் அது
அல்சரில் கொண்டுபோய் விடும். அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை
செரிப்பதுபோன்றதுதான்.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை