ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Today at 6:41 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

Admins Online

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 30, 2019 6:40 pm

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கத் தொடங்கும்போது பூமியின் ஏதாவதொரு மூலையில், உலகம் அழிந்துகொண்டிருப்பதன் விளைவுகளை உங்களைப் போன்ற ஏதேனும் ஒரு மனிதர் அனுபவித்துக்கொண்டிருப்பார். நாளை அது நீங்களாகவும் இருக்கலாம்..

உலகம் அழியப்போகிறது. அழிந்துகொண்டிருக்கிறது. இல்லை, அழிந்தேவிட்டது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 30, 2019 6:43 pm

இடம்: மெசாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்கா.

1972-ம் ஆண்டில் ஒரு கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. அதன் பெயர் வோர்ல்டு 1 (World1). க்ளப் ஆஃப் ரோம் என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் உலகின் பிரச்னைகளைச் சரிசெய்வதில் கவனம்
செலுத்தியிருந்தார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது, அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சிக் கோட்பாட்டை உலகம் எந்த எல்லைவரை தாக்குப்பிடிக்கும் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். வோர்ல்டு 1 என்ற எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய அந்த மென்பொருள் ஜே ஃபாரஸ்டர் (Jay Forrester) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 30, 2019 6:45 pm

மனித நாகரிகத்தின் எதிர்கால தலையெழுத்தை கணிக்க வேண்டியதுதான் அந்த மென்பொருளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அது பல காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. மாசுபாடு, மக்கள் தொகை அதிகரித்தல், இயற்கை வளங்களின் இருப்பு, சர்வதேச அளவில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியல் தரம் உட்பட பசி, வறுமை என்று பலவும் அந்தப் பட்டியலில் முக்கியமான காரணிகளாக இருந்தன
இவற்றையெல்லாம் ஜேய் ஃபாரஸ்டர் கணக்கில் எடுக்குமாறு மென்பொருளுக்குக் கட்டளையிட்டபோது க்ளப் ஆஃப் ரோம் அமைப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அவர்கள் இத்தனையை ஏன் கவனிக்க வேண்டும். அவையெல்லாம் தனித்தனி பிரச்னைகள் என்று வாதிட்டார்கள். ஆனால், இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றும் அவர் உறுதியாகக் கூறினார். அவர் சொன்னதுபோல், இந்தப் பிரச்னைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 30, 2019 6:46 pm


வோர்ல்டு 1 கணிப்பது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்காது. அது எடுத்துக்கொண்ட காரணிகளை அப்போதைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்பதைப் புரிய வைக்க வரைகட்டப் பகுப்பாய்வை (Graph analysis) உருவாக்கியது. காலநிலை மாற்றத்தை அப்போது கணக்கில் எடுக்கவில்லை. வோர்ல்டு1 எடுத்துக்கொண்ட காரணிகள் அனைத்தின் நிலையும் எதிர்காலத்தில் அதாவது, இன்றைய காலகட்டத்தில் இறங்கு முகமாக இருக்குமென்று அந்த வரைகட்டப் பகுப்பாய்வு கூறியது.
பூமியில் மனித இனத்தின் பயணப்பாதை எதிர்காலத்தில் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்பதை வோர்ல்டு1 மென்பொருளின் கணிப்பு கூறியது. இது வெறும் மென்பொருள்தான் அது கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று பலரும் வாதிட்டார்கள். அவர்கள் முன்வைத்த வளர்ச்சிக் கோட்பாடுமீது இப்படியொரு ஆபத்தான குற்றச்சாட்டுகளை யாரும் வைப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணித்தது தவறாகிவிட்டது. வோர்ல்டு1 கணித்தது சரியாகிவிட்டது. ஆம், அவர்களின் வளர்ச்சிக் கோட்பாடு பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 30, 2019 6:48 pm

1972-ம் ஆண்டின் வோர்ல்டு1 கூறியதன்படி, 2020-ம் ஆண்டுதான் அந்தப் பேரழிவுக்கான தொடக்கமாக இருக்குமென்று கணிக்கப்பட்டது. அப்படி ஏற்படாமல் தவிர்ப்பதற்காக நாம் எதையும் செய்யவில்லை என்றால் பூமியில் மனித நாகரிகத்தின் தரம் பூஜ்ஜியத்தைத் தொடும் வரை இந்தப் பேரழிவின் வீரியம் ஓயாது என்று அது கணித்திருந்தது. மாசுபாடு மிகத் தீவிரமான பிரச்னையாக உருவெடுக்கும், அது மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதாக மாறி நிற்கும் என்று அது கணித்தது. ஆம், இன்று மாசுபாடு உலகளவில் பலரையும் கொன்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலை 2040-க்குப் பிறகு மேலும் மோசமாகும் என்று கூறப்பட்டது. அதுவும் உலகின் இப்போதைய மக்கள் தொகையை 1900-ம் ஆண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ அந்த அளவுக்கே குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டது. 2050-ம் ஆண்டிலிருந்து நாகரிகம் என்று நாம் இப்போது எதை நினைக்கிறோமோ அது இருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் வோர்ல்டு1 கூறியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 30, 2019 6:49 pm

இந்தக் கணிப்புகளை மையமாக வைத்து "வளர்ச்சிக்கான எல்லை (The Limits to Growth)" என்றொரு புத்தகத்தை க்ளப் ஆஃப் ரோம் அமைப்பு வெளியிட்டது. அதன்பிறகு, வோர்ல்டு 3 என்றொரு மென்பொருள் டொனெல்லா, டென்னிஸ் மீடோஸ் மற்றும் அவர்களின் குழுவால் உருவாக்கப்பட்டது. இந்த முறை, அவர்கள் மக்கள் தொகை, தொழிற்புரட்சி, இயற்கை வளங்களின் நுகர்வு, உணவு உற்பத்தி என்று மேலும் சில
காரணிகளையும் சேர்த்துக்கொண்டார்கள்.
வளர்ச்சிக்கான எல்லை' புத்தகம் இதே வேகத்தில் போனால் மனித நாகரிகம் 2072-ம் ஆண்டு அழிந்துவிடும் என்று எச்சரித்தது. அந்த நூலின் மீதான விமர்சனங்கள் மிகக் கடுமையாக வந்தன.

"கணினித் தொழில்நுட்பம் கூறுவது வெறும் பிதற்றல்தான். அதை உருவாக்கியவர்கள் மனம்போன போக்கில் தங்கள் அனுமானங்களைக் கூறியுள்ளார்கள். இதை வைத்துக்கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. இந்த நூல் வெறுமையான தவறாக வழிநடத்தக்கூடிய ஒன்று" என்று மிகக் கடுமையாக விமர்சித்தது நியூயார்க் டைம்ஸ்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by T.N.Balasubramanian on Thu May 30, 2019 8:26 pm

ஒரு நாள் அழிவு ஏற்படும் ஆனால் எப்போது ?

நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26630
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 31, 2019 11:00 am

@T.N.Balasubramanian wrote:ஒரு நாள் அழிவு ஏற்படும் ஆனால் எப்போது ?

நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1298741
நமக்கு பிரச்சனை இல்லை என்கிறீர்களா ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by T.N.Balasubramanian on Fri May 31, 2019 3:42 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:ஒரு நாள் அழிவு ஏற்படும் ஆனால் எப்போது ?

நிச்சயமாக நம்முடைய காலத்தில் இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1298741
நமக்கு பிரச்சனை இல்லை என்கிறீர்களா ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1298766


ஆம் அய்யா இப்போதைய பிரச்சனை /கவலை என்னவென்றால், ஸ்டாலின் அதிமுக அரசை கவிழ்ப்பாரா அல்லது OPS ம் EPS மே  அந்த செயலை செய்து விடுவார்களா என்பதுதான்.

ரமணியன் 


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26630
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by ayyasamy ram on Fri May 31, 2019 7:03 pm

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.ம.மு.க.,வை உடைக்கவும், அ.தி.மு.க.,வில் இணையவும் தயாராக இருப்பதாக,
கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் வாயிலாக,
முதல்வர், இ.பி.எஸ்.,க்கு, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ள தகவல் வெளியாகி
உள்ளது
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57885
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' Empty Re: பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை