புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீடு முழுவதும் மிகவும் அமைதியாக இருந்தது. லதா, அவள் மாமியார் லலிதா மற்றும் அவள் கணவன் ரங்கன் மூவரும் தங்களின் இரண்டு பெண் குழந்தைகளையும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
ஆமாம் அவர்களின் கோரிக்கை அப்படி இருந்தது. இரண்டு பெண்களும் ஆவலுடன் தங்களின் பெற்றவர்களின் முகங்களை பார்த்தபடி இருந்தனர்.
"சரி என்று சொல்லும்மா" என்று அம்மாவிடம் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினார்கள். ரங்கனும் லலிதாவும் கூட லதாவின் முகத்தை பார்த்தனர். அப்படி என்ன தான் கேட்டர்கள்குழந்தைகள்?
ஒன்றும் பெரிதாக இல்லை, இந்த வருடம் கோடை விடுமுறைக்கு தங்களின் பெரியப்பா பிள்ளைகள் மற்றும் அத்தை இன் மகளை தங்கள் வீட்டுக்கு அழைக்க விரும்பினார்கள். நேற்று பள்ளி இல் ஆசிரியை தங்களின் அந்த கால நினைவுகளை பகிர்ந்ததன் விளைவு.
பொதுவாகவே லதா 'காம் சோர்' என்று சொல்வார்களே அதுபோல வேலை செய்வதற்கு மூக்கால் அழுபவள்; தன் மாமியார், கணவன் மற்றும் குழந்தைகளுக்கும் சமைத்து போடவே கஷ்டப்பட்டு, சமைக்காமல், எத்தனை எத்தனை ரெடி மேட் வகைகள் உண்டோ அத்தனையும் வாங்கிவிடுவாள். இவர்களை அனைவரும் சாதாரண இட்லி தோசைக்கு கூட ஏங்குவார்கள். அவளிடம் போய் இந்த குழந்தைகள் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தன.
ஒருவேளை அம்மாவை நிறைய தின்பண்டங்கள் மற்றும் டிபன்கள் செய்யவைக்கலாம் என்கிற எண்ணமோ என்னவோ. லலிதாவிற்கும் ரங்கனுக்கு கூட இவளின் சோம்பல் ஒழிந்து விதவிதமாய் சமைத்து தந்தால் தேவலாம் என்று இருந்தது.
எனவே தான் அவர்களும் லதாவின் முகத்தை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரங்கனின் அண்ணா தில்லி இல் இருப்பவர். அந்த குழந்தைகள் பெங்களூர் வர ஆவலாய் இருந்தார்கள். அதேபோல் ரங்கனின் தங்கை மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறாள். இப்போது தான் முதன் முதலாக இந்தியாவருகிறாள் அவள். ஏழு எட்டு வயது குழந்தை அவள். முதலில் டில்லி சென்று விட்டு பிறகு அனைவரும் பெங்களூர் வருவதாக ஏற்பாடு. அவர்கள் அனைவரும் தங்கும் அளவிற்கு பெரிய வீடுதான் என்றாலும் லதா மனம் வைத்தாகவேண்டுமே....
அதைத்தான் இவர்கள் அனைவருமே எதிர்பார்த்தார்கள். இனியும் தப்ப முடியாது என்று உணர்ந்த லதா ஒருவாறு சம்மதித்தாள். அவ்வளவுதான், எல்லோரும் "ஓ" என்று கூச்சல் இட்டு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.
"ஆனால் ஒன்று" என்று ஆரம்பித்தாள் லதா...உடனே எல்லோரும் "நீ எது சொன்னாலும் நாங்க செய்கிறோம் " என்று ஒத்த குரலில் சொன்னார்கள்.
தொடரும்....................

"ம்ம்.. எனக்கு வேலை அதிகம் ஆகும், நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் எனக்கு உதவ வேண்டி இருக்கும். வேலைக்கார அம்மாவையும் லீவு போடாமல் வரச்சொல்கிறேன். என்ன என்ன பக்ஷணம் வேண்டுமோ எனக்கு சொல்லிவிடுங்கள் நான் ஆர்டர் செய்கிறேன் " என்றாள்.
"ம்ம்... வேண்டாம் அம்மா, நீயே செய்து குடுமா , கடை பக்ஷணம் வேண்டாம்"..என்றார்கள் மகள்கள்.
" அத்தனை பேருக்கும் சமைக்கவேண்டும், பக்ஷணமும் செய்யவேண்டுமா? என்னால் ஆகாது மா" என்றாள். ரங்கன் உடனே "ஒரு வேலைக்கார அம்மாவை சேர்த்துக்கொள் சமையல்வேலைகளில் உனக்கு உதவ." என்றான்.
என்றாலும் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டாள். எப்படியும், மச்சினர் ஓர்படி அவர்களின் இரண்டு பிள்ளைகள், நாத்தனார், அவளின் கணவர், அவளின் பெண், இங்கு ஐந்து பேர் மற்றும் இரண்டு வேலைக்காரர்கள் என பத்து பதினைந்து பேர்களுக்கு செய்யவேண்டும். ம்ம்.. என்று யோசித்தாள். சரி ஒரு நல்ல சமையல்கார மாமியை பிடிக்கலாம் என்று எண்ணி தன் தோழிக்கு போன் செய்து ஒரு சமையல் மாமியை ஏற்பாடு செய்ய முடியுமா என்று விசாரித்தாள்.
அந்தம்மா வந்துவிட்டால் தனக்கு அதிகம் சிரமம் இருக்காது என்று எண்ணிக்கொண்டாள். அடுத்தது வேலைக்காரி, அவளைக் கூப்பிட்டு அடுத்த ஒருமாதம் ஒருநாள் கூட லீவு போடாமல் வரும்படி சொன்னாள். ஆனால் அவள் சொன்னது தான் இவளுக்கு பெரிய கவலையாய் போனது.
ஆமா , அவள் மாமியாருக்கு உடல்நலம் சரி இல்லை என்றும் அதனால் வேறு ஒரு வேலைக்காரி ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னாள். அவள் சொன்ன மேலதிக தகவல் என்ன வென்றால் அவள் மாமியார் ஒரு காய்கறி டாக்டரை பார்த்ததாகவும், அவர் வெறும் காய்கறியை பச்சையாக சாப்பிட சொல்லி அதன் மூலம் ட்ரீட்மெண்ட் தருவதாகவும் சொன்னாள்.
அதை கேட்ட லதா மிகவும் ஆச்சர்யம் அடைந்தாள். அவளின் உடன்பிறந்த சோம்பல், மீண்டும் முருங்கை மரம் ஏறியது .மனதளவில் இந்த குழந்தைகள் அனைவரையும் ஒருமுறை அந்த டாக்டரிடம் காட்டினால்.... சம்மர் கேம்ப் போல .... வெறும் காய்கறி பழங்களை மட்டும் சாப்பிட்டு பழகினால் அவர்கள் உடலுக்கும் நல்லது, தனக்கும் வேலை மிச்சம். ஓர்படி நாத்தனார் இருக்கும் வரை நல்லா சமைத்து போடலாம், பிறகு பசங்களை அழைத்துக் கொண்டு அந்த டாக்டரிடம் போகலாம் என்று மனதளவில் நினைத்துக் கொண்டாள்.
தொடரும்............

அடுத்தடுத்து வேலைகள் நடந்தேறின. ஒவ்வொரு குடும்பமாக வந்து இறங்கினார்கள். வீடு களை கட்டியது. வேளா வேளைக்கு விதம் விதமான உணவு வகைகள் தின்பண்டங்கள், ஊர் சுற்றல்கள் என்று ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. வந்த ஓர்படி மச்சினர் இருவரும் குழந்தைகளை இங்கு விட்டு விட்டு ஊர் திரும்பினார்கள்.
நாத்தனார் மற்றும் அவள் கணவன் இருவரும், அவர்களின் செல்ல மகளும் இவர்களுடன் இன்னும் ஒருவாரம் இருக்கவேண்டும் என்று விரும்பியதால், அவர்களும் தங்கள் பெண்ணை இங்கு விட்டு விட்டு நாத்தனாரின் மாமியார் வீட்டுக்கு சென்றனர்.
குழந்தைகள் மட்டுமே சந்தோஷமாய் விளையாடிக்கொண்டிருந்தார்கள். லலிதாவிற்கும் ரங்கனுக்கும் மிகவும் மகிழ்ச்சி. லதாவை வெகுவாய் புகழ்ந்தார்கள். மிகவும் நன்றாக, சாமர்த்தியமாக அனைவருக்கும் எல்லாம் செய்து கொடுத்து பற்றி பேசி பேசி மாய்ந்தார்கள். இனியும் இப்படியே தொடரும்படி கேட்டுக்கொண்டார்கள். இவர்கள் வார்த்தைகளால் மிகவும் சந்தோஷப்பட்ட லதாவுக்கு கடைசி வார்த்தைகள் அவ்வளவாக பிடிக்கவில்லை. என்றாலும் புன்னகையுடன் மௌனம் காத்தாள்.
மறுநாள் எல்லா குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அந்த காய்கறி டாக்டர் வீட்டுக்கு கிளம்பினாள். குழந்தைகளும் எங்கோ வெளியே செல்கிறோம் என்று நினைத்து ஆவலுடன் சென்றார்கள். அந்த டாக்டருக்கு போர்டோ விட்டு வாசலில் பேரோ எதுவும் இருக்காது என்று வேலைக்கார அம்மா முன்பே சொல்லி இருந்தாள். எனவே, நேரே அவள் சொன்ன வீட்டின் கதவை தட்டவேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டு போனாள் லதா.
ஆனால் அந்த குறிப்பிட்ட வீட்டில் ஏற்கனவே நான்கைந்து குழந்தைகள் ஒரு பெண்ணுடன் காத்திருந்தார்கள். இவர்களும் சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொண்டார்கள். உள்ளேயும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது உள்ளே இருந்து வந்த பேச்சு சப்தத்தில் கேட்டது.
சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து இவர்ளை பார்த்து முறுவலித்தாள்; எல்லோருக்கும் 'சில்' என்று இருந்த பழரசம் கொடுத்தாள். குழந்தைகள் எவருமே அதை எதிர்ப்பார்க்க வில்லை ஆதலால் "வாவ்" என்று சத்தமாக சொல்லி மகிழ்ந்தனர்.
'உஷ்' சத்தம் போடாதீர்கள் என்று லதா அவர்களை அடக்கும் முன்னே, அந்த பெண் "குழந்தைகளை கோபிக்காதீர்கள் " என்று புன்னகையுடன் சொன்னாள். வெறும் ஜாடை யாலே குழந்தைகளை சத்தம் போடாமல் ஜூஸை குடிக்க சொன்னாள் .
தொடரும்.......

இதற்குள் உள்ளே டாக்டருடன் பேசிக்கொண்டிருந்த குடும்பம் வெளியே வந்தது. ஒரு ஆணும் பெண்ணும் இரண்டு பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் சில வார்த்தைகள் லதாவின் காதில் விழுந்தது, இன்பமாக இருந்தது.
" நல்ல காலம் இந்த டாக்டர் கிடைத்தார்....இல்லாவிட்டால் இந்த கறிகாய் எல்லாம் பசங்க" .... என்று சொன்னது வரை கேட்டது .....
சூப்பர் டாக்டர் இவர் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். இதற்குள் இவர்கள் முறை வரவே அனைவரும் உள்ளே சென்றனர். உள்ளே பார்த்தா அது டாக்டர் ரூம் போலவே இல்லை. ஏதோ அந்தக்கால பயிர்கள் படங்கள், தானியங்களின் படங்கள், தின்பண்டங்கள் படங்கள் என்று இருந்தது. காய்கறிகள் படங்களும் இருந்தன.
நடுத்தர வயதில் ஒரு ஆண் உட்கார்ந்து இருந்தார். நட்பாக சிரித்து இவர்களை வரவேற்றார். லதாவிடம் நீங்கள் எதுவும் பேசக்கூடாது, நான் முதலில் குழந்தைகளிடம் பேசவேண்டும் என்று சொன்னார். இவளும் தலையாட்டிவிட்டு உட்கார்ந்தாள்.
அவர் குழந்தைகளை நோக்கி உங்களின் உணவு பழக்கம் என்ன?....உணவில் பிடித்தவை என்ன ? அம்மா அவர்களுக்கு அதைத்தான் செய்து தருகிறாளா ? என்பது போன்ற கேள்விகளை கேட்டார். குழந்தைகளும் தாங்கள் நிறைய காய் கறிகள் பச்சையாக, பச்சடியாக சாப்பிடுவதாகவும் நிறைய ரெடி மேட் உணவு வகைகள் சாப்பிடுவதாகவும் சொன்னார்கள்.
இதில் தில்லி குழந்தைகளோ அமெரிக்க குழந்தையோ மாறுபடவில்லை. அப்படி சாப்பிடுவதே உடலுக்கு நல்லது என்று அவர்களின் பெற்றவர்கள் நம்புகிறார்கள் என்றும் சொன்னார்கள். அவர் காண்பித்த சில தின்பண்டங்களை இவர்கள் பார்த்ததும் இல்லை உண்டதும் இல்லை. தானியங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்தது அவர்களுக்கு ஆனால் சிறுதானியங்கள் பற்றி கொஞ்சமும் தெரிவில்லை.
சிறுதானியங்கள் பற்றி லதாவிற்கே எதுவும் தெரியவில்லை. அவளும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தாள். அந்த மருத்துவர் சின்ன சொற்பொழிவே ஆற்றிவிட்டார் சிறுதானியங்கள் பற்றியும் நாம் மறந்து போன பல சிற்றுண்டிகள் பற்றியும்.
"கண்டிப்பாக நாம் காய்கறிகள் பழங்கள் உண்ணவேண்டியது தான் என்றாலும், நம் பாரம்பரிய உணவுகளையும் மறக்காமல் உண்ணவேண்டும். நம் உடலுக்கு எல்லாவித சத்துகளையும் வெறும் காய்கறிகள் மற்றும் பழங்களிடமிருந்து மட்டும் பெற்றுவிட முடியாது. நான் மிகவும் நிறைய தேடி நம்முடைய பழைய உணவு பழக்கங்கள், பல அபூர்வமான தின்பண்டங்கள் ஆகியவற்றை தொகுத்து வைத்திருக்கிறேன். இதில் உங்களால் இயன்ற அளவிற்கு செய்து பார்த்து பழக்கப் படுத்திக்கொள்ளுங்கள். இவை உங்கள் உடலுக்கு ஏற்றது.
தொடரும்.....

அந்த காலத்தில் தொண்ணுறு வயது கிழவர் கூட கண்ணாடி போடமாட்டார், ஊசி இல் நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருந்தது அவருக்கு. அதேபோல சர்க்கரை வியாதி, கொழுப்பு அதிகமாய் அவதிப்படுவது, இரத்தக் கொதிப்பு போன்றவை வருவது அபூர்வமாக இருந்தது. ஆனால் இன்று பாருங்கள் எத்தனை சிறிய வயதினருக்கும் இவை எல்லாம் வருகிறது? என்ன காரணம்? நாம் நம் பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து விலகி, துரித உணவுகள் ரெடி மேட் உணவுகள் என்று எதை எதையோ உண்டு எல்லாவிதமான வியாதி களையும் வரவழைத்துக் கொள்கிறோம். அதுதான் காரணம்.
நீங்கள் எல்லாம் எட்டு ஒன்பது வயது குழந்தைகள், நான் சொல்வது உங்களுக்கு நன்கு புரியும். உங்கள் வகுப்புகளில் சில பெண்குழந்தைகள் 'பெரியவள்' ஆகி இருக்கும் . பொதுவாக பதின்மூன்று பதினான்கு வயதில் ஏற்படும் இது சமீப காலங்களில் மிகவும் சீக்கிரம் ஆவதன் காரணம்????
எல்லாம் நம் உணவுப் பழக்கத்தால் தான். நீங்கள் சாப்பிடும் காய்கறிகள் பழங்கள் எல்லாம் உரங்கள் போட்டு வளர்க்கப்படுபவை. நல்ல குண்டு குண்டாக இருக்கவேண்டும் என்று அவற்றுக்கு போடப்படும் உரம் மற்றும் நன்கு பால் கொடுக்கவேண்டும் என்று மாடுகளுக்கு போடப்படும் ஊசி மருந்தின் பின்விளைவே பெண் குழந்தைகள் சீக்கிரம் பெரியவளாவது, ஆண்குழந்தைகள் சீக்கிரம் மெச்சுயூர் ஆவது என்பது போன்ற ஆபத்துகள்.
உங்களுக்கு எத்தனை புரியும் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நாம் உண்ணும் உணவு தான் எல்லாவற்றுக்குமே ஆதாரம். வெறும் காய் கறிகள் பழங்கள் மட்டும் சாப்பிடுவதால் எந்த நன்மையையும் விளையப்போவது இல்லை. மாறாக, இன்றய காலத்தில் உரம் போட்டு வளர்க்கும் அதுவே ஆபத்தாகிறது.
அதனால் தான் நான் இங்கு வருபவர்களுக்கு உரங்கள் போடாமல் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண சொல்கிறேன். முடிந்தால், உங்கள் வீட்டில் இடம் இருந்தால் சின்ன தோட்டம் போடுங்கள். அதில் காய்கறி செடிகள் வளருங்கள்.
சிறுதானியங்கள் நிறைய உபயோகிக்க சொல்கிறேன். நிறைய சத்துகள் அதில் தான் இருக்கிறது. செக்கில் ஆட்டிய எண்ணெய் உபயோகியுங்கள், சாக்கலேட்டுகளுக்கு பதில் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டை , எள் உருண்டை போன்றவற்றை உண்ணுங்கள் என்று சொல்கிறேன்.
தொடரும்......

இவற்றை பெரியவர்களுக்கு சொல்லி புரியவைப்பதைவிட, குழந்தைகளான உங்களுக்கு சொல்வதும் எளிது, உங்களை உண்ண வைப்பதும் எளிது. உங்களுக்காக உங்கள் பெற்றோரும் மற்றோரும் நிச்சயம் தங்களை மாற்றிக்கொள்வார்கள். குழந்தைகள் கேட்கிறார்கள் என்று தான் நூடுல்ஸ், பீஸா, சாக்கலேட் என்று வாங்குகிறார்கள். நீங்களோ , கடைகளில் அழகாக , ஈசியாக கிடைக்க க்கூடிய பொருட்களை கேட்கிறீர்கள் உங்கள் பெற்றோரும் சுலபமாய் அவற்றை வாங்கித்தந்து விடுகிறார்கள்.
ஆனால், கொஞ்சம் உடலுழைப்பு தேவைப்படும் நம் பாரம்பரிய உணவுகளை தங்களின் சோம்பலினால் செய்து தர மறுக்கிறார்கள். வெள்ளை வெளீர் என்று உள்ள ஓட்ஸை குடிக்க விரும்பும் குழந்தைகள், கருப்பாக உள்ள கேழ்வரகு கூழை குடிக்க விரும்புவது இல்லை...ஆனால் அது தான் நம் உடலுக்கு நல்லது என்று சொல்ல வேண்டிய அம்மாவும் சுலபமாக இருக்கிறது என்று கண்டதையும் வாங்கி தந்து விடுகிறார்கள் . ஆனால் அது தன் குழந்தைகளுக்கு தீங்கு என்று தெரியாமலே இந்த தவறை செய்கிறாள். அதை திருத்துவது யார் என்று யோசித்து தான் என்னால் முயன்றதை நான் செய்து வருகிறேன்.
உங்களை போல இளம் பிள்ளளைகளின் உணவுப்பழக்கத்தை மாற்றிவிட்டால், தன் குழந்தைக்காக தாயும் மாறிவிடுவாள். நம் உணவு பண்டங்கள் விற்பனை அதிகரித்தால் தானாகவே வெளிநாட்டில் இருந்து வந்துள்ள உணவுவகைகள் தாமாகவே அழிந்து விடும். அல்லது குறைந்துவிடும்.. என்றாவது ஒருநாள் அவற்றை ஆசைக்காக உண்பது வேறு, அதையே எப்பொழுதும் உண்பது என்பது வேறு.
அவ்வாறு உண்பது அவர்கள் நாட்டு தட்ப வெட்ப நிலைக்கு சரிப்படலாம் ஆனால் நம் நாட்டிற்கு அவை சரிப்படாது என்கிற உணர்வை நான் சிறிய குழந்தைகளின் மனதில் பதிய வைக்க முயல்கிறேன். அப்படி செய்து , செய்து அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றிஆகவேண்டும் என்று நினைத்து இதை நான் செய்கிறேன் குழந்தைகளே! ...நான் செய்யலாமா?... என்ன சொல்கிறீர்கள்?" என்று புன்னகையுடன் கேட்டார்.
மழை பொழிந்து ஓய்ந்தது போல இருந்தது அனைவருக்கும். முதலில் சுதாதரித்துக்கொண்டவள் லதா தான். தன்னை நினைத்தாலே தனக்கு கோபமாய் வந்தது. அம்மா தனக்காக எத்தனை எத்தனை பண்டங்கள் செய்து தந்திருக்கிறாள், தான் ஏன் அதுபோல தன் குழந்தைக்கு செய்து தரவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து இருக்கிறோம் இதுவரை என்று தோன்றியது.

சே... இனியாவது நாம் நம் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. நாம் நம் தாய் தந்தையரிடமிருந்து என்ன பெற்றுக்கொண்டோமோ, அதை மாற்றாமல் அப்படியே தன் குழந்தைகளுக்கு தந்துவிட்டு போகவேண்டும். ஒரு மாம்பழமோ ஒரு பாகற்காயோ தன் குணத்தை அப்படியே தன் விதைகளில் சேமித்து, அடுத்த மாம்பழமோ பாகற்காயோ வர ஏற்பாடு செய்யும்போது நாம் மனிதர்கள் ....???? என்கிற எண்ணம் மேலோங்கியது அவளுக்கு.
கைத்தட்டல்களுடன் கூடிய குழந்தைகள் கூச்சலால் அவளின் நினைவுகள் தடைப் பட்டன. "எஸ் எஸ் அங்கிள்...என்று அவர்கள் கூட்டாக கத்தினார்கள். அப்படியே அவர்கள் அனைவரும் டாக்டரையும் அந்த பெண்ணையும் சூழ்ந்து கொண்டு ஏதேதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அவரிடம் இருந்து நிறைய பாரம்பரிய உணவுகளின் செய்முறை அடங்கிய புத்தகத்தை வாங்கி அதில் இருந்த படங்களை பார்த்து இது நல்லா இருக்கு இல்ல, அது நல்லா இருக்கு இல்ல என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவரிடம் இருந்த கடலை உருண்டை, பொருள் விளங்கா உருண்டை போன்றவற்றை சுவைத்து மகிழ்ந்தனர். இது போல செய்து தருவீர்களா என்று லதாவின் காலைக் கட்டிக்கொண்டு கேட்டார்கள். அவளும் மிக்க மகிழ்வுடன் சம்மதித்தாள்.
டாக்டரிடம் அவருக்கு எத்தனை பணம் தரவேண்டும் என்று கேட்டாள், ஆனால் அவரோ "எனக்கு எதுவும் வேண்டாம் நான் இதை ஒரு சேவையாகத்தான் செய்து வருகிறேன். நீங்கள் நம் பாரம்பரிய உணவுக்கு மாறினால் அதுவே போதும்" என்று சொன்னார்.
லதாவுக்கு மிகவும் ஆச்சர்யமாகிப்போனது. அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மனநிறைவோடு கிளம்பினாள். தன் வேலைக்கார அம்மாவுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
தான் இத்தனை விதமாக, சத்தான உணவை சமைத்தால் தன் கணவனும் மாமியாரும் எத்தனை சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்துக்கொண்டாள். மேலும் அந்த மாற்றம் தன் குழந்தைகளின் மற்றும் தன் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது அவளுக்கு.
தொடரும் .....

மறுநாளில் இருந்து அவளின் சமையல் அறைஇல் சிறுதானியங்கள் அணிவகுத்து நின்றன , பழைய கால சமையல் முறைகளும் தின்பண்டங்களும் அணிவகுத்தன. குழந்தைகள் அடுத்த ஒருவாரத்தில் நிறையவே புதுப்புது உணவு வகைகள் பற்றி தெரிந்து கொண்டார்கள். அளவோடு காய்கறி பழங்களும் எடுத்துக் கொண்டார்கள். ஆரோக்கியமாய் உண்டார்கள்.
அப்படியே இத்துடன் கதை முடிந்து இருந்தால் நல்லா இருந்திருக்கும் ஆனால் இனிதான் இருக்கு டிவிஸ்ட் ....
மறுநாள் வேலைக்காரி வந்தாள். லதா அவளிடம் ,' வாவா, உன்னிடம் ஓன்று முக்கியமாய் சொல்லவேண்டும் . நீ சொன்ன அந்த காய்கறி டாக்டர் , இல்ல இல்ல அந்த பாரம்பரிய டாக்டர் ரொம்ப நல்லவர். எத்தனையோ புத்தி சொன்னார், நம் பாரம்பரிய உணவு வகைகளை செய்ய குறிப்புகள் கொடுத்தார்..." என்று அடுக்கிக்கொண்டே போனவளை ஒரே கையசைப்பால் நிறுத்தினாள் அந்த அம்மா.
" ஐயோ, அந்த டாக்டர் பேஜாரு புடிச்சவன் மா... எங்க மாமியார் பாவம் முட்டிவலிக்கு எங்கெல்லாமோ அலஞ்சுது... யாரோ இந்த ஆள் சரி செய்வாரு என்று சொல்லி இருக்காங்க , சரி காய் கறிதானே சாப்பிட சொல்லுவாங்க சாப்பிட்டா போச்சு என்று நினைத்து போனாங்க. முதலில நம்ம எதுவுமே கேக்கறது இல்ல அந்த ஆளு... கண்ணை, வாயை திறக்க சொல்லி பார்த்துவிட்டு , ஒரு அஞ்சாறு கறிகாய் களை ஜுஸாகவும் சிலதை அப்படியே காம்புடன் பச்சையாக மென்றும் சாப்பிட சொன்னாராம்.
பாவம் அவங்க; வெவ்வேறு காய்களை அரைத்து, ( ஒருமுறை பத்து கொத்தவரை மற்றும் ஐந்து கோவைக்காய், மறுமுறை நூறு கிராம் புடலங்காய், அடுத்தது பரங்கிக்காய் நூறு கிராம் என்று கால் டம்ளர் தண்ணீரில் அரைத்து குடிக்கவேண்டும். விதைகள், காம்பு , தோல் என்று எதையும் நீக்கக் கூடாது. ஆனால் அரைத்ததும் வடிகட்டலாம்.) அப்படி ஒரு முழுங்கு ஜூஸை ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டும், மதியம் ஐந்து வெண்டைக்காய், சாயங்காலம் அரை வாழைக்காய் பச்சையாய் என்று லிஸ்ட் தந்து விட்டார்.
சில காய்களை சாப்பிடக் கூடாது என்று வேற சொன்னாராம். அவரு சொன்னபடியே செய்தாங்க....ம்ம்...வாழைக்காயைக் கூட பச்சையா தின்னாங்க. ஆனா இருபத்து ஒருநாளும் , முடிந்த பிறகு மறுபடி போனா இப்போவா அப்போவா ன்னு இசுத்து அடிக்கிறாராம். இன்னா செய்யறது மூட்டுவலி சரியாவலையே னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டறாராம்...வலி தங்களை, அதான் பாவம் எங்க மாமியார் இப்போ வேற டாக்டரை பாக்க போய் இருக்கு மா" என்றாள்.
தொடரும்....

லதாவுக்கு தலையே சுற்றுவது போல இருந்தது. நான் பார்த்த டாக்டருக்கும் இவள் சொல்லும் டாக்டருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கே. நான் நீ சொன்ன டாக்டரைத்தான் பார்த்தேன் என்று சொல்லி தன் கதையை சொன்னாள் இவள்.
மிகவும் ஆச்சரியப்பட்ட அந்த வேலைக்கார அம்மாள், " நீ எங்கம்மா போன என்று கேட்டாள்...இவள் சொன்னதும் ஐயோ அந்த ஊடு இல்லமா, நான் சொன்னது 'ஈ' பிளாக்கு, நீ போனது 'பி' பிளாக்கு .... அங்க ஒரு லூசு டாக்டர் தானே இருக்கிறதா கேள்விப்பட்டேன் "என்று குண்டைத்தூக்கி போட்டாள் அவள்.
மறுநாள் அங்கு போய் விசாரித்தார்கள் இருவரும். இருவர் சொன்னதுமே சரிதான். அந்த காய்கறி டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் போன இந்த ஆள் அவரின் பொறுப்பில்லாத ட்ரீட்மெண்ட் ஆல் நொந்து நூலாகிப் போனதால், பித்து பிடித்தது போல சிலகாலம் இருந்திருக்கிறார். பிறகு இதெல்லாம் நாம், நம் பாரம்பரிய உணவுகளை உண்ணாததால் வரும் கேடுகள் என்று உணர்ந்து, பாரம்பரிய உணவுவகைகளை தேடி குறிப்புகள் எடுப்பது, இயற்கை விவசாயத்தை பற்றி பிரச்சாரம் செய்வது என்று தன்னை மாற்றிக்கொண்டாராம்.
இதற்காக தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு ஒரு சமூக சேவையாக இப்படி குழந்தைகளை நல்வழிப்படுத்தி ஒரு சமுதாய புரட்சி யையே அமைதியாக செய்து வருகிறாராம் . என்று கேள்விப்பட்டதும் தான் லதாவுக்கு மூச்சே வந்தது.
நல்லகாலம் நாம் தப்பாக போனாலும் ஒரு நல்ல மனிதரிடம் தான் போனோம் என்று உணர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
பின் குறிப்பு: மக்களே, இந்த காலத்தில் எந்த வைத்தியரையும் முழுசாக நம்பாதீர்கள் எல்லோரும் அவரவர் வைற்றுப்பாட்டைத்தான் முதலில் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து , எழுதிருக்கிறேன்.
அன்புடன்,
கிருஷ்ணம்மா

எப்பொழுதும் போல படித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.......50 பேருக்கு மேலே படித்திருந்தும் பின்னூட்டம் இல்லையே???????...............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|