புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
418 Posts - 48%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
28 Posts - 3%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:04 pm

சென்னை,:தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார்.இந்தியதலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்கள் அசோக் லாலவசா சுஷில் சந்ரா ஆகியோர் ஒவ்வொரு மாநிலமாக சென்றுதேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இன்று மாலை சென்னை வருகின்றனர்.மாவட்ட கலெக்டர்கள் எஸ்.பி.க்கள் கூட்டம் நடத்தி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். அதன்பின் தலைமைச் செயலர் டி.ஜி.பி.வருமான வரித்துறை கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய உள்ளனர்.இதற்கிடையில் சென்னையில் நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.க்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அதில் வருமான வரித் துறை இயக்குனர் முரளிகுமார் போலீஸ் ஐ.ஜி.க்கள் சேஷசாயி ஜெயராமன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்பட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:07 pm

புதுடில்லி: காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் எந்த பொய்யும் இல்லை என்றும், மக்களின் எண்ணமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்றும் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் காங்., தலைவர் ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.டில்லியில் நடந்த விழாவில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசுகையில்: இது இந்திய மக்களின் கருத்தை கொண்டு தேர்தல் அறிக்கை இயற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் குரலாக இருக்கும் என்றார்.ல்லியில் நடந்த விழாவில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசுகையில்: இது இந்திய மக்களின் கருத்தை கொண்டு தேர்தல் அறிக்கை இயற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் குரலாக இருக்கும் என்றார்.விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: மாணவர்கள், விவசாயிகள், ஏழைகள், பெண்கள் தலித்துகள், சிறுபான்மை, சிறு, குறு தொழில், சுகாதாரம், தொழிலாளர்கள்,. நலம் மற்றும் வளம் தொடர்பானது. வறுமையை ஒழிக்க காங்., கடும் பாடுபடும். 2020 ல் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். இந்தியா புதிய முன்னேற்றத்தை நோக்கி செல்லும். புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகள் இந்த அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.காங்., தலைவர் ராகுல் பேசுகையில்: இந்த அறிக்கை தயாரிக்கப்படும் முன்பு நான் தயாரித்தவர்களிடம் மக்களின் எண்ணங்களாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும். பொய் எதுவும் இருக்கக்கூடாது என்றேன். ஏனெனில் தற்போதைய ஆட்சியாளர்கள் பல பொய்களை சொல்லி வருகின்றனர். பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்தார்.
இந்த தேர்தல் அறிக்கையில் 5 முக்கிய கொள்கை விஷயங்களை முன் வைத்துள்ளோம். நாங்கள் முதலில் ஏழைமக்களுக்கு மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்குவோம். வறுமையை ஒழிப்பதே காங்கிரசின் நோக்கம். விவசாயிகள் நலன் காக்கப்படும், 22 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்படும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இது போன்ற விஷயங்களே இன்றைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.வயநாட்டில் போட்டி ஏன் ?தென் மாநிலத்தில் போட்டியிடுவது ஏன் என ஒரு நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு ராகுல் அளித்த பதில்: தென் மாநிலங்கள் பா.ஜ., அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே நான் கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுகிறேன் என்றார்.





சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:25 pm

வெற்றியை தீர்மானிப்பது ஜாதியா, வளர்ச்சியா?
ஜாதி, மத பேதமில்லாத சமத்துவ சமூகம் தான் தங்கள் கொள்கை என, வேடம் போடும் அரசியல் கட்சிகளின் சாயம் வெளுப்பது, தேர்தலின்போது தான்!
ஜாதி பலத்தின் அடிப்படையில் தான், வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். சில தொகுதிகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போட்டியிட்டு, வென்றும் வருகின்றனர்.இதற்கு, உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில், ஜாட் வகுப்பினர் பெரும்பான்மையாக உள்ள, பக்பட் லோக்சபா தொகுதியே சான்று.இங்கு, ஜாட் வகுப்பைச் சேர்ந்த, பாரதிய லோக்தள தலைவர் சரண்சிங், 1977 தேர்தலில் வென்று, மொரார்ஜி தேசாயை தொடர்ந்து, 1979ல் பிரதமரானார்.அடுத்து நடந்த, 1980, 1984 தேர்தல்களிலும் வென்றார். அதன் பின், அவர் மகன், அஜித்சிங், 1989, 1991, 1996 தேர்தல்களில் வென்றாலும், 1998ல், பா.ஜ., வேட்பாளர், சோம்பால் சிங்கிடம் தோல்வியடைந்தார்.இதையடுத்து, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியை துவக்கிய, அஜித்சிங், 1999, 2004, 2009 தேர்தல்களில் தொடர்ந்து வென்றார். இந்த வகையில், பக்பட் தொகுதி மக்கள், ஒன்பது தேர்தல்களில், தந்தை, மகனை, டில்லிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், அதே வாக்காளர்கள், 2014ல், பா.ஜ., வேட்பாளர், சத்யபால் சிங்கிற்கு, ஆதரவளித்து, அஜித்சிங்கை வீட்டிற்கு அனுப்பினர். இதற்கு, மோடி அலை காரணம் எனலாம்.இம்முறை, அஜித்சிங், தன் மகன், ஜெயந்த் சவுத்ரியை, பக்பட் தொகுதி, ராஷ்ட்ரீய லோக் தள வேட்பாளராக களமிறக்கியுள்ளார். இவர் கட்சி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியுடன், 'மெகா' கூட்டணியில் இணைந்துள்ளது.அதனால், இம்முறை, ஜாட், யாதவ், முஸ்லிம் ஓட்டுகளை, சுலபமாக அள்ளலாம். 2013ல் நடந்த மதக் கலவரத்திற்கு பின், பா.ஜ.,வுக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டும் சுளையாக கிடைக்கும் என, அஜித்சிங் கணக்கு போட்டுள்ளார்.ஆனால், பா.ஜ., வேறு கணக்கு போடுகிறது. பக்பட் தொகுதியில், அக்கட்சி, சார்பில் மீண்டும் போட்டியிடும், மத்திய இணை அமைச்சர், சத்யபால் சிங், தொகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர். தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதனால், ஜாட் மட்டுமின்றி, குர்ஜார், காஷ்யப், சைனிஸ் போன்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஓட்டுகளும், பா.ஜ.,வுக்கு உள்ள, உயர் ஜாதியினர் ஓட்டும் வெற்றிக்கு கைகொடுக்கும் என, அவர் நம்புகிறார்.அது, சாத்தியமா என, தெரியவில்லை. ஏனெனில், பக்பட் தொகுதியில், 16 லட்சம் வாக்காளர்களில், 4.35 லட்சம் பேர், ஜாட் வகுப்பைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள், 3.25 லட்சமும், 2.25 லட்சம் தலித் வாக்காளர்களும் உள்ளனர்.பா.ஜ.,வுக்கு எதிராக, பகுஜன், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகியவை, மெகா கூட்டணி அமைத்துள்ளதால், ஜாதி, மதம் தான், இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் என, தெரிகிறது.ஆனால், ''ஜாதி, மத ரசவாத வேலையெல்லாம் பக்பட் மக்களிடம் எடுபடாது. வளர்ச்சி, சீரிய நிர்வாகம், பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பார்கள்,'' என, பா.ஜ.,வின் சத்யபால் சிங் கூறுகிறார்; பார்ப்போம்!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Apr 07, 2019 8:39 pm

கிரிமினல், கோடீஸ்வரர், குற்றவாளி வேட்பாளர்கள்
புதுடில்லி: முதல்கட்டமாக நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 213 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக அவர்கள் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் கூறியுள்ளனர். மேலும் இதில் கொலை, கொலை முயற்சி, பலாத்காரம், அருவருக்கதக்க பேச்சு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பானவர்கள் என்ற விவரமும் தெரிய வந்துள்ளது.தேர்தல் கண்காணிப்பு ஜனநாயக சீர்திருத்த அமைப்பு National Election Watch and Association for Democratic Reforms (ADR) சார்பில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அதன்மூலம் பெறப்பட்ட விவரம் வருமாறு:வரும் ஏப்.11 ல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இதில் மொத்தம் 1,266 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 17 சதவீதத்தினர் அதாவது 213 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 146 பேர் மீது கொடூர குற்ற வழக்கு உள்ளது. 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். 10 பேர் மீது கொலை வழக்கும், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 4 பேர் மீது பெண் கடத்தல் வழக்கும் உள்ளது.16 பேர் மீது பெண் பலாத்காரம் மற்றும் பெண்ணை தாக்கியதாக வழக்கு நிலுவையில் உள்ளது.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 83 பேரில் 35 பேர் மீதும், பா.ஜ., சார்பில் போட்டியிடும் 83 பேரில் 30 பேர் மீதும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியில் 8 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரசில் 13 பேர், தெலுங்குதேசம் கட்சியில் 4 பேர் , தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதியில் 5 பேர் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள்.401 பேர் தங்களிடம் ஒரு கோடிக்கு சொத்து உள்ளதாகவும், 213 பேர் ஒரு கோடிக்குமேல் சொத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆந்திராவில் தெலுங்குதேச கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக தங்களுக்கு ரூ. 57 ஆயிரம் கோடி சொத்து உள்ளதாக கூறியுள்ளனர்.
தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வேஸ்வர ரெட்டி அதிகப்பட்சமாக ரூ. 895 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதே மாநிலத்தில ஜனதாதள கட்சி வேட்பாளர் நல்லபிரேம் குமார் என்பவருக்கு ரூ.500 கோடி சொத்து உள்ளது.இவ்வாறு அந்த விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 08, 2019 8:43 pm

2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாகும்: பிரதமர் பேச்சு
புதுடில்லி: மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், தேசியம் தான் எங்களது நோக்கம். பலவீனமான சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பது எங்களது கொள்கை. சிறந்த நிர்வாகம் எங்களது மந்திரம். 5 ஆண்டில் எனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க ராஜ்நாத் 3 மாதங்கள் பணியாற்றியுள்ளார். அரசு தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை அறிந்து சிறந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் ஆன்மாவை தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் கனவு நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படும். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுவோம். இந்தியா வளர்ச்சி பெற, வளர்ச்சி என்பது பெரிய இயக்கமாக மாற வேண்டும்.2047 க்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். ஆசியாவை இந்தியா வழிநடத்தி செல்லும். இவ்வாறு பிரதமர் பேசினார்.தேர்தல் அறிக்கையை தயாரித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை சாத்தியமானது. நடைமுறைபடுத்தக்கூடியது. பயங்கரவாதத்தை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். முற்றிலும் அகற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். ராமர் கோவில் கட்டுவது குறித்து கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை மீண்டும் அளிக்கிறோம். சுமூகமான முறையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்வோம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கியுள்ளோம். 60 வயது நிரம்பிய சிறு குறு விவசாயிகளுக்கு பென்சன் வழங்குவோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் நிதி அமைச்சர் ஜெட்லி பேசுகையில், வலிமையான தேசிய கொள்கையுடனும், மக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றில், நடுத்தர மக்களை ஒருங்கிணைத்ததுடன், ஏழை மக்களை விரைந்து வறுமையில் இருந்து அகற்றியுள்ளோம். இவ்வாறு அவுர் பேசினார்.வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேசுகையில், மற்றவர்களைப் போல் நாங்கள் வெற்று கோஷங்களுடன் வரவில்லை. நாங்கள் உறுதியுடன் வந்துள்ளோம். இதனை நாங்கள் நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி தலைமையில், உலகளவில் இந்தியாவின் பெருமை முன்னர் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 08, 2019 8:47 pm

பா.ஜ., தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கை இன்று (ஏப்.,08) வெளியிடப்பட்டது. டில்லியில் பா.ஜ., தலைமையகத்தில் நடந்த விழாவில் "சங்கல்ப் பத்ரா" என பெயரிடப்பட்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.* இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022 ம் ஆண்டிற்குள் பா.ஜ., அளித்துள்ள 75 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
* பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.
* 2030 க்குள் உலகில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்.
* மகாத்மா காந்தி கண்ட கிராமத்தை நனவாக்க அனைவருக்கும் வீடு, குடிநீர், டிஜிட்டல் இணைப்பு, சாலை வசதி, தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும்.
* 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படும்.
* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 வருமானம் கிடைக்க செய்யப்படும்.
* சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விரைவில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன்
* ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.
* ராணுவம் போலீஸ் படைகள் நவீனமயமாக்கப்படும்.
* உள்கட்டமபை்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி
நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள்
* முத்தலாக் தடை சட்டம் மற்றும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படும்
* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
* 2022க்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக்கப்படும்
* நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்* எல்லையோர பகுதிகள் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்புக்கு தரம் உயர்த்தப்படும்
* வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை
* அனைவருக்கும் வீடு, கழிப்பறை, வங்கிக்கணக்கு கிடைக்க நடவடிக்கை
* பெண்கள் நலன், முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
* பார்லிமென்ட், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்
* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்படும்
* 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 08, 2019 8:50 pm

எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க! தேர்தல் அதிகாரி கண்டிப்பு
திருவனந்தபுரம்,:''தேர்தல் நடத்தை விதிகள் குறித்து, கலெக்டர்களுக்கு, அரசியல் கட்சிகள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி, டீக்கா ராம் மீனா தெரிவித்து உள்ளார்.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், வரும், 23ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
சர்ச்சைதிருவனந்தபுரம் தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், நடிகர் சுரேஷ் கோபி, 59, போட்டியிடுகிறார்; இவர் சமீபத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது, சபரிமலை விவகாரம் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், சுரேஷ் கோபி பேசியது குறித்து, தேர்தல் ஆணையத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அனுபமா, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம், சுரேஷ் கோபி கூறியதாவது:ஒருவர்,தன் இஷ்ட தெய்வத்தின் பெயரைக் கூட வெளியே சொல்ல முடியாத நிலையில், நாம் இருக்கிறோம். இது என்ன மாதிரியான ஜனநாயகம்? இதற்கு, மக்கள் சரியான பதிலை அளிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரம் குறித்து, செய்தியாளர்களிடம், தலைமை தேர்தல் அதிகாரி, டீக்கா ராம் மீனா கூறியதாவது:சுரேஷ் கோபி பேசியது குறித்து, நன்கு ஆராய்ந்த பின் தான்,அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இது பற்றி குறைகள் இருந்தால், அதை தன் விளக்க கடிதத் தில், அவர் தெரிவிக்கலாம். அதை விடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் குறித்து, கலெக்டர் களுக்கு அரசியல் கட்சிகள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக