ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 2:58 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

Admins Online

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 31, 2019 10:57 am

First topic message reminder :

ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:38 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:மலை மீது ஏறியதும் வியப்பில் விழிகள் விரிகின்றன நமக்கு. வகோரா நதியானது உயரமான மலையைப் பிளந்துகொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து பாய்கிறது. வகோரா நதியின் இரண்டு கரைகளிலும் குதிரைக் குளம்பைப் போன்றே நீண்டுக்கிடக்கும் சுமார் 76 மீ உயரமான மலைச் சரிவில் வரிசையாகக் காணப்படுகின்றன இக்குடைவரைகள். இதுவரை சுமார் 30 குடைவரைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குகைகள், சைத்யங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது பௌத்த வழிபாட்டுத் தலங்கள்.
பௌத்ததில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பிருந்த அருவுருவமாக ஸ்தூபியாக வழிபடப்பட்ட நிலை, பின்பு ஸ்தூபியும் புத்த உருவமும் சேர்ந்த நிலை, அதன் பிறகு புத்தரே தனித்த உருவமாக வழிபடப்பட்ட நிலை என்று புத்த மதத்தின் மூன்று வழிபாட்டு நிலைகளையும் ஒரே இடத்தில் இங்கு காண முடியும். இங்கு, பௌத்த துறவியர்கள் தங்கியிருந்த குகைகளையும் பார்க்க முடியும்
நீங்கள் சொல்வதை பார்த்தால் இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக நாம் எல்லா குடைவரை கோவில்களையும் கண்டுபிடிக்க வில்லை  என்றே தோன்றுகிறது.....இதே வெளிநாடாக இருந்தால், இதற்காகவே தனி டூர் வைத்து கோலாகலமான டுரிஸ்பாட்டாக மாற்றி இருப்பார்கள்....சோகம் ..........இப்பொழுதும் நிறைய பேர் வந்து போகிறார்கள் ஆனால் மொத்தமும்  கண்டுபிடித்து பெரிய அளவில் விளம்பரம் செய்து நிறைய வெளிநாட்டவரை வரவழைக்கலாம் என்று சொல்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:42 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 GTp3RRsKSSinGfVmupLd+Screenshot_20190331-105230

இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான குடைவரைக் கோயில்கள், போரில் சிதைந்தே கிடக்கின்றன. இதற்கு, நேரடி ஆதாரமாக எல்லோரா குடைவரைக் கோயில்களைச் சொல்லலாம். எழில் மிகுந்த, பிரமாண்ட சிலைகள் அனைத்தும் உடைபட்ட மூக்குடன் இங்கு பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், வரலாற்றில் சுமார் 1,200 வருடங்களுக்கும் மேலாக மறைந்திருந்ததால், அஜந்தா குடைவரைகள் அனைத்தும் எவ்வித சேதமுமில்லாமல் எழிலுடன் காணப்படுகின்றன. இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், அஜந்தாவில் காணப்படும் குடைவரைகள் அனைத்தும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. வேறு எந்தவித பிற்சேர்க்கையோ அல்லது திருத்தமோ இல்லாமல் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே காட்சியளிக்கின்றன.
எத்தனை அழகாக உள்ளன....அருமை அருமை...எத்தனை கஷ்டப்பட்டு அந்த குகைகளில் இப்படி செதுக்கி இருப்பார்கள்...மிகவும் திறமை வாய்நதவர்கள் மற்றும் தங்கள் மதத்தை பரப்ப, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்க வழி வகுத்துள்ளார்கள்.... கிரேட் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:45 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 EK7rkJkS5C0frKNnFPRl+Screenshot_20190331-105318

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சிற்பம்

அஜந்தாவில் காணப்படும் புத்தர் பெரும்பாலும் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் புன்னகைப்பார், மறு பக்கத்திலிருந்து பார்த்தால் சோகத்துடன் இருப்பார். அஜந்தா குகைகளிலேயே தனிச்சிறப்பு மிக்க சிற்பமாகக் கருதப்படுவது, எண் 26-ம் குகையில் உள்ள புத்தரின் பரிநிர்வாணக் காட்சிதான். புத்தர் இறப்பதற்கு முன்பு ஒரு பக்கமாகப் படுத்திருக்கிறார். அவருக்குக் கீழே அவரது சீடர்கள் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு மேலே, வானுலகத் தேவர்கள் அனைவரும் அவரது வருகையை எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குகை முழுவதுமே உயிரோட்டமான சிற்பங்கள் நிறைந்துள்ளன.  
ம்ம்...இந்த புகைப்படத்தில் மேலே உள்ள தேவர்கள் நன்றாகத் தெரியவில்லை, கீழே உள்ள சீடர்கள் மட்டுமே தெரிகிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:50 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:அஜந்தா குடைவரைகளின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் ஓவியங்கள்தான். அஜந்தா குடைவரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை, இத்தாலிய ஓவியக் கலையே தொன்மைவாய்ந்தது என்று ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். ஆனால், அஜந்தா குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தக் கருத்துகள் அனைத்தும் மறைந்துவிட்டன. உலகில் இந்திய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என்று அஜந்தா ஓவியங்கள் உலகுக்கு வெளிப்படுத்தின.

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 DXY8qr3pQ2Viek9CNiRw+Screenshot_20190331-105400

போதிசத்துவர் பத்மபானி அஜந்தா ஓவியம்

புத்தர் தொடர்பான கதைகளைக் கூறும் புத்த ஜாதகக் கதைகளே, அஜந்தா குகைகளில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும், புத்தர் துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு மற்றும் துறவறம் மேற்கொண்ட பிறகு என்று இரண்டு கூறுகளில் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உயிரோட்டத்துடன் இருப்பதைக் காணமுடியும். அதிலும் குறிப்பாக, மனநிலைக்கு ஏற்றவாறு பெண்களின் முகத் தோற்றத்தை தீட்டியிருக்கிறார்கள் ஓவியர்கள்.
அஜந்தா ஓவியம் என்று நினைத்தாலே மேலே உள்ள ஓவியம் அதாவது சிற்பம் தான் என் நினைவுக்கு வரும் புன்னகை...மிக அழகு....மோனாலிசா அழகு என்று சொல்பவர்கள் ,  முதலில் இதை பார்க்கவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:51 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றவை 17-வது குகையில் வரையப்பட்டிருக்கும் `வஜ்ரபாணி' மற்றும் `தாமரை மலருடன் காட்சி தரும் பத்மபாணி' ஓவியங்களே...
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Q7Musnh6S7WuwelJFaNN+Screenshot_20190331-105432

அஜந்தா குறுஞ்சிற்பங்கள்அஜந்தா குறுஞ்சிற்பங்கள்

காலத்தைக் கடந்தும் அதே அழகுடன் காட்சிதரும் இந்த ஓவியங்கள் வரையப்பட்ட விதம் பற்றி அங்கிருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தது...
அருமை, அருமை அருமை.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:52 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:``இப்போ வரையற ஓவியங்களல்லாம் நிறுத்தி, நிதானமா வரைய முடியும். ஆனால், இங்க அஜந்தாவுல வரையப்பட்ட ஓவியங்கள் அப்படிப்பட்டது இல்ல. சுவத்துல பூசுன அடிப்பூச்சு காயறதுக்குள்ள மொத்த ஓவியங்களையும் வரைஞ்சி முடிச்சிடணும். அப்பதான், அந்த ஓவியங்கள் காலத்துக்கும் அழியாம, சுவத்துலேருந்து உதிராம இருக்கும். அப்படி வரையப்பட்டதுதான் இந்த ஓவியங்கள். இப்போ நாம வியந்து பாத்துக்கிட்டு இருக்கற ஓவியங்கள் எல்லாம் ஈரம் காய்வதற்குள் வரையப்பட்ட ஓவியங்கள்.”
மேலும் அவைகளில் பூசப்பட்டவை இயற்கையான வண்ணங்கள் என்றும் சொல்வார்களே ஐயா...அதனால் தான் அவை இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் நன்றாக உள்ளது என்று சொல்வார்கள்....நான் ஒரு சாண்டில்யன் கதை இல் கூட படித்துள்ளேன் இது பற்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 10:10 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:இங்கிருக்கும் குடைவரைகளில் ஒரு சில, கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருத்து நிலவுகிறது. பெரும்பாலான குடைவரைகள், கி.பி 4-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 6-ம் நூற்றாண்டுக்குள்  உருவாக்கப்பட்டவை. 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்புடன் இருந்த ஓவியங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் படும்பாடு கொடுமையானது. பெரும்பாலான ஓவியங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தக் குடைவரையைக் கண்டுபிடித்த ஸ்மித், 10-வது எண் குகை ஓவியம் ஒன்றின் மீது தன் கையெழுத்தைப் போட்டிருப்பார். அதேபோன்று, பார்வையாளர்கள் அனைவரும் ஓவியங்களின் மீது கிறுக்கி பெரும்பாலான ஓவியங்களை அழித்துவிட்டனர்.
ம்ம்..அதை சொல்லுங்கள்.....நம்மவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்....ஒன்றும் செய்ய வகை இல்லை என்றாலும், நம் முன்னோர்கள் செய்து வைத்ததை பாதுக்காக்கவும் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்....என்ன சொல்ல????? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 10:11 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 BuYRzpGYTxmSq74flu0h+Screenshot_20190331-105508

அஜந்தா சிற்பங்கள்

தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
மேற்கோள் செய்த பதிவு: 1295514

உண்மை ஐயா, எனக்கும் அந்த ஆவல் உண்டு...பார்ப்போம்....புன்னகை ......அருமையான பகிவுக்கு மிக்க நன்றி...கட்டுரை பகிர்வும்  படங்களும் மிக அருமை புன்னகை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 10, 2019 6:09 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 10, 2019 6:15 pm

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 BuYRzpGYTxmSq74flu0h+Screenshot_20190331-105508

அஜந்தா சிற்பங்கள்

தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
மேற்கோள் செய்த பதிவு: 1295514

உண்மை ஐயா, எனக்கும் அந்த ஆவல் உண்டு...பார்ப்போம்....புன்னகை ......அருமையான பகிவுக்கு மிக்க நன்றி...கட்டுரை பகிர்வும்  படங்களும் மிக அருமை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1296064
முதலில் நன்றி அம்மா
உங்களின் ஒவ்வொரு பின்னோட்டமும்
அருமையிலும் அருமை.
ஒவ்வொன்றாக நிதானமாக படித்து
பின்னோட்டம் வழங்கியமைக்கு
நன்றி.
ஒவ்வொன்றாக பார்க்கும் போது வியப்பு மேலிட்டது.
அதனால் இதை பதிவிட்டேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma on Wed Apr 10, 2019 9:51 pm

மிக்க நன்றி ஐயா, எனக்கு மேலோட்டமாக படிக்க தெரியாது..... படித்தால் ஊன்றி படிக்க வேண்டும், படித்ததை மனதில் நிறுத்த வேண்டும், படித்தவுடன் தோன்றுவதை பதிவு போடவேண்டும்...அவ்வளவுதான்.... ஜாலி  ஜாலி ஜாலி 
.
.
.
என்னுடைய திரிகளுக்கு வரும் ஒவ்வொரு பதிலுக்கும் பொறுமையாக படித்து பதில் போடும் வழக்கமும் வைத்துளேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை