புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
156 Posts - 79%
heezulia
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
Pampu
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
321 Posts - 78%
heezulia
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 22 Mar 2019 - 19:27

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில், கணவனின் மர்ம உறுப்பை துண்டித்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர்,சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, தம்பதி ஷேர் சிங், ௨௬ - சந்தோஷி, ௨௪. இவர்கள், ௧௦ நாட்களுக்கு முன், வேலை தேடி, ஐதராபாதுக்கு வந்தனர்.இந்த தம்பதிக்கு, ௪ வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐதராபாதில் உள்ள, 'மார்பிள்' தொழிற்சாலையில், ஷேர் சிங் வேலைக்கு சேர்ந்தார். சந்தோஷி, வீட்டிலேயே தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்தாள்.இந்நிலையில், ஷேர் சிங், நேற்று முன்தினம், போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதில், கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சந்தோஷி, கணவனின் மர்ம உறுப்பை, கூர்மையான ஆயுதத்தால் துண்டித்தாள்.ஷேர் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த, அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனையில், சேர்த்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், சந்தோஷி மீது வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷேர் சிங், நலமுடன் இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சந்தோஷி கைது செய்யப்படாத நிலையில், மருத்துவமனையில், கணவனுக்கு உதவியாக இருந்து வருகிறாள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 22 Mar 2019 - 19:29

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், தற்போது, 27 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.நீதித்துறையின் செயல்பாடு ஒளிவு மறைவற்று இருக்க வேண்டும் என்பதற்காக, நீதிபதிகள், தங்கள் சொத்து விபரங்களை, தாங்களே முன் வந்து தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில், சொத்து விபரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில், 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை, இதுவரை வெளியிட்டுள்ளனர்.தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு ஜூனில், தன் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார். அதில், தன் தாய், தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள நிலத்தை விற்றதில், 65 லட்சம் ரூபாய் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனக்கும், தன் மனைவிக்கும், சொந்தமாக வாகனங்களும் இல்லை என்றும், கடனும் இல்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.நீதிபதிகள், பானுமதி, கன்வில்கர், அசோக் பூஷண், அருண் மிஸ்ரா, என்.வி.ரமணா, எஸ்.வி.பாப்டே ஆகியோரும், தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 22 Mar 2019 - 19:30

பெங்களூரு : கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ள 11 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 22 Mar 2019 - 20:51

திருவண்ணாமலை ஆரணியில், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பணியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்குமார், 45; கல்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நித்யா, 30, மாமண்டூர் அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.கடந்த, 2016-ல், பையூர் அரசு பள்ளியில் நித்யா பணிபுரிந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில பாடம் டியூசன் எடுத்தபோது, 17 வயது பள்ளி மாணவன் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார்.இந்நிலையில், ஆசிரியை நித்யா, செங்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் ஒரு மாணவனுடன் தொடர்பு ஏற்பட்டது. மாணவர்களுடன் தனிமையில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். இரு மாணவர்களையும் தனித்தனியாக வெளியூர் அழைத்து சென்று, ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு உமேஷ்குமாருக்கு, மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.பள்ளி விடுமுறை நாளில், நித்யா வீட்டில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அவரது போனை எடுத்து பார்த்த உமேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.அதில், இரு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று,தனிமையில் இருந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.இதையடுத்து, மனைவியை பிரிந்தார் உமேஷ்குமார்.மாணவர்களுடன் நித்யா, தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். பின், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் ஆகியோர் விசாரித்ததில் உண்மை என, தெரியவந்தது.இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆசிரியை நித்யாவை, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து, நித்யாவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 24 Mar 2019 - 23:48

விவசாயிகளுக்கு ஏப்ரலில் 2,000 ரூபாய்
புதுடில்லி, 'விவசாயிகளுக்கு இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாய், அடுத்த மாதம் வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.'சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்; இது, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்படும்' என, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.இதற்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என, தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தை, கடந்த மாதம், 24ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.'இந்த நிதியுதவியை பெற, தகுதியுள்ள விவசாயிகள், இந்த திட்டத்தில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. கடந்த, 10ம் தேதி வரை, இந்த திட்டத்தின் கீழ், 4.74 கோடி விவசாயிகள், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, லோக்சபா தேர்தல் தேதி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில், மத்திய விவசாயத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள, 4.74 கோடி விவசாயிகளில், 2.74 கோடி விவசாயிகளுக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாய், அவர்களது வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள விவசாயிகளுக்கு, இம்மாத இறுதிக்குள், 'டிபாசிட்' செய்யப்படும்.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், இந்த திட்டத்தில், தங்கள் பெயரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு, இரண்டாவது தவணை தொகையை வழங்க, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல், 15க்குள், இரண்டாவது தவணை தொகை, 4.74 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில், டிபாசிட் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 24 Mar 2019 - 23:48

லோக்பால்' தலைவராக பி.சி.கோஷ் பதவியேற்பு
புதுடில்லி, நாட்டின் முதல், 'லோக்பால்' தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திர கோஷ், 66, நேற்று பதவியேற்றார்.மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட, அரசு உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் அமைப்பு, சமீபத்தில் உருவாக்கப்பட்டது. உத்தரவுலோக்பால் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஷை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.லோக்பாலில் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக, உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், திலீப் போஸ்லே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நீதித்துறை சாராத உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி, அர்ச்சனா ராமசுந்தரம், ஓய்வு பெற்ற, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி மகேந்திர சிங், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இந்திரஜித் பிரசாத் கவுதம், மஹாராஷ்டிரா முன்னாள் தலைமை செயலர் தினேஷ் குமார் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.பதவி பிரமாணம்இந்நிலையில், டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், லோக்பால் தலைவராக, பி.சி.கோஷ், நேற்று பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு, 70 வயதாகி விட்டால், அவர்களது பதவிக் காலம் முடிந்து விடும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 24 Mar 2019 - 23:50

ஜெயலலிதாவாக நடிக்கிறார் நடிகை கங்கணா ரணாவத்.............

மும்பை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார்.நடிகையாக, தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, பின், அரசியலுக்குள் நுழைந்து, தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர், ஜெயலலிதா. உடல் நலக்குறைவால், ௨௦௧௬ டிசம்பரில் காலமானார்.ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில், திரைப்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.தமிழில், மதராச பட்டிணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய், இந்த படத்தை இயக்குகிறார். விஷ்ணுவர்த்தன் இந்துாரி, சைலேஷ் சிங் ஆகியோர் இணைந்து, இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்துக்கு, தமிழில், தலைவி என்றும், ஹிந்தியில், ஜெயா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பிரபல பாலிவுட் நடிகை, கங்கணா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே, தமிழில் தாம் துாம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இது குறித்து கங்கணா கூறியதாவது:ஜெயலலிதா, இந்த நுாற்றாண்டின் மிகப் பெரிய வெற்றி சரித்திரத்தை படைத்தவர். திரைப்படத் துறையில், வெற்றிகரமான நடிகையாக இருந்து, அரசியலில் மிகப் பெரிய ஆளுமையாக மாறியவர். இந்த கருத்தை மையமாக வைத்தே, இந்த படம் எடுக்கப்படுகிறது. ஜெயலலிதாவாக நடிப்பதற்கு பெருமைப்படுகிறேன்.இவ்வாறு அவர்
கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 24 Mar 2019 - 23:52

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,கோடை காலம் துவங்குவதை அடுத்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. (மார்ச் 24,28) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. (மார்ச் 25,26,27) தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். வேலூர் ,திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி , சேலம் ,நாமக்கல் , திருச்சி ,கரூர், திண்டுக்கல்,மதுரை ஆகிய உள்மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஆய்வு மையம் கூறியுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 25 Mar 2019 - 22:42

ஆண் வேடத்தில் வழிப்பறி இளம்பெண் அதிரடி கைது
புதுடில்லி: டில்லியில், ஆண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜனக்புரி பகுதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக, 53 வயதான பெண் ஒருவர் வந்தார்.அவர் சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பெண்ணை இழுத்து, கீழே தள்ளி, அவரது கைப்பையை பறித்துச் சென்றனர்.இது குறித்து விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் நடவடிக்கை, பெண்ணைப் போல இருப்பதாக, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இது குறித்து விசாரித்த போது, ரமன்ஜீத் கவுர், 33குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இவள், பின், ஜாமினில் வந்து, தலைமறைவானது தெரிய வந்தது.இதையடுத்து, விகாஷ்புரி என்ற பகுதியில், ரமன்ஜீத் கவுரையும், அவளுடன் இருந்த ராம்நீக் சிங், 24, என்பவனையும் கைது செய்தனர். விசாரணையில், போலீசை ஏமாற்றுவதற்காக, ரமன்ஜீத் கவுர், ஆண் வேடமணிந்து, ராம்நீக் சிங்குடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 25 Mar 2019 - 22:44

புதுடில்லி: டில்லியில், ஆண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜனக்புரி பகுதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக, 53 வயதான பெண் ஒருவர் வந்தார்.அவர் சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பெண்ணை இழுத்து, கீழே தள்ளி, அவரது கைப்பையை பறித்துச் சென்றனர்.இது குறித்து விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் நடவடிக்கை, பெண்ணைப் போல இருப்பதாக, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இது குறித்து விசாரித்த போது, ரமன்ஜீத் கவுர், 33குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இவள், பின், ஜாமினில் வந்து, தலைமறைவானது தெரிய வந்தது.இதையடுத்து, விகாஷ்புரி என்ற பகுதியில், ரமன்ஜீத் கவுரையும், அவளுடன் இருந்த ராம்நீக் சிங், 24, என்பவனையும் கைது செய்தனர். விசாரணையில், போலீசை ஏமாற்றுவதற்காக, ரமன்ஜீத் கவுர், ஆண் வேடமணிந்து, ராம்நீக் சிங்குடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக