புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:04 pm

First topic message reminder :

ஒரு நாள் காலையில் ஒரு குருவானவர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் அங்கத்தினர் ஆராதனையின் முடிவில் அக்குருவானவரிடம் சென்று, ஐயா, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசவேண்டியதில்லை. காரணம் எங்களுடைய வாலிபப் பையன்களும் பெண்களும் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொல்வீராக. ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம் என்றார்.

உடனே அக்குருவானவர் தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று தீட்டப்பட்டிருந்த ஒரு விஷ மருந்தை எடுத்து வந்து, அந்த அங்கத்தினரிடம் காட்டி, ஐயா, நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அறிகிறேன். நஞ்சு என்று தீட்டப்பட்ட சீட்டை இந்த மருந்துப் புட்டியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேன் என்ற பெயரை அல்லது யாவரும் விரும்பும் இன்னொரு இனிய பெயரை, அதே நஞ்சு நிறைந்த புட்டியின்மேல் எழுதச் சொல்லுகிறீர். அதே நஞ்சை எவ்வளவு தூரம் இனிப்பான மருந்து என்று எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் ஆபத்தாக முடியும். நஞ்சு நஞ்சுதான். நஞ்சுதனை நஞ்சு என்று வெளியரங்கமாய், தெளிவாக வெகு திட்டவட்டமாய்க் கூறாவிட்டால் ஆபத்து நேரிடும். அது வஞ்சகமாகும். உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். இல்லாததை இல்லாததென்று சொல்லவேண்டும். பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் மோசம் போவது திண்ணம்.

தற்காலத்தில் பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணருகிறதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் தன்மையுடையது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூறாது, தற்காலத்தில் அதனை இலேசாக மதித்து, அப்பாவத்தோடு விளையாடி, அப்பாவத்தை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் இலேசாக அதனைச் சாக்குப்போக்குச் சொல்லி நிர்விசாரமாக இருந்துவிடப் பார்க்கிறோம். ஆனால் சத்திய வேதாகமம் பாவத்தின் பயங்கரத்தையும், பாவம் விளைவிக்கும் மரணத்தையும் வெகு திட்டவட்டமாய் வெளிப்படுத்தியிருப்பதுபோல, நாமும் பாவத்தைப் பாவம் என்று கூறிப் பகிரங்கமாய் முகதாட்சண்யமின்றி கண்டித்துணர்த்த வேண்டும்.

மாபெரும் போப் கிரகோரி என்னும் புகழ்பெற்ற போப்புவானவர் ஆறாம் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்தார். அவர் பாவங்களையெல்லாம் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். அவையாவன: ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை, இவை கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு என இத்தனை நூற்றாண்டுகளிலும் பெயர்பெற்று வந்திருக்கின்றன. பரிசுத்த வேதாகமத்தில் இந்தக் கொடிய பாவங்கள் ஏழும் மொத்தமாக ஒரே வசனத்தில் தொடர்ந்து கூறப்படாவிட்டாலும், வேவ்வெறு இடங்களில் பரிசுத்த வேதாகமத்தில் மனிதனைக் கொல்லக்கூடிய பாவங்களைப்பற்றி வாசித்தறிகிறோம். தாமஸ் அக்குவினாஸ் போன்ற பிரபல திருமறைப் பண்டிதரெல்லாம் போப் கிரகோரி என்பவர் பாவங்களையெல்லாம் இவ்வாறு ஏழு வகையாகப் பிரித்திருப்பதை அங்கீகரித்துள்ளார்கள். எனவே, நீதி நெறிப்படி பாவங்களை ஏழு வகைப்படுத்துவது எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:49 pm

4.காமம்

பார்வைக்கு காமம் பெரும் பகட்டாகவே தோன்றும். ஆரம்பத்தில் அது அழகாகவே காட்சியளிக்கும். அதன் வெளிப்பகட்டு கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்து நிற்கும். எடுத்த எடுப்பில்தானே அதன் ஆபாசமும், அசுத்தமும், விஷமமும் கண்பார்வைக்கு எளிதில் தென்படுவதில்லை. முதற்பார்வைக்கு அந்த ஆபாசம் அழகாகவே காட்சி தரும். தொடக்கத்தில் அது வனப்பு என்னும் மாறுவேடம் தாங்கி வெளிப்படும். விரும்பத்தக்க பொலிவும், ஆசைப்படத்தக்க அழகும், இச்சிக்கத்தக்க இன்பமும், வஞ்சகமாகத் தாங்கிவரும். பார்த்த பார்வைக்கு வெறுக்கத்தக்கதாக அதில் யாதொரு ஆபாசமும் இருக்காது. காமத்தைச் சாத்தான் ஒரு வெறுக்கத்தக்க அவலட்சண தேவதையாக அல்ல, யாவரும் விரும்பத்தக்க வனப்புத் தேவதையாக, அன்புத் தேவதையாக, இன்பத் தேவதையாக அழகுபடுத்தி யாவர் கண் முன்னும் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறான். அந்தக் காம தேவதையின் புறத்தோற்றம் பெரும் வீரர்களையும்கூட வஞ்சித்திருக்கிறது. என்ன இது, ஓர் இயற்கையான உணர்ச்சிதானே என்று பகுத்தறிவாளன் பகர்கிறான். இது கடவுள் கொடுத்த இயற்கை எழுச்சிதானே என்று அறிஞர் அறை கூவுகின்றனர். கொஞ்சம்பொறு. சத்தியவேதாகமம் சாற்றுவதைக் கேள். ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன். அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான். அவன் நிந்தை ஒழியாது (நீதி.6:32-33).

கடவுள் காமத்தை வெறுக்கிறார். கடவுள் காமம் அற்றவர். அவர் பரிசுத்தர். அவரிடம் அசுத்தம் இல்லை. அவர் அசுத்தத்தை அருவருக்கிறார். நாமும் பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறவர். அவர் அசுத்தத்தைப் பார்க்கமுடியாத முற்றிலும் பரிசுத்த கண்ணர். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்று சொன்னவர், அசுத்தமானதொன்றும் தம்முடைய பரிசுத்த இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாதென்று பறைசாற்றியுள்ளவர், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்தான் தேவனைத் தரிசிக்க முடியும் என்று முழங்கியுள்ளவர், பரிசுத்த தேவன். தம் மக்களும் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்று ஆசிக்கிறவர்.

அசுத்தம், காமம், ஆபாசம், விபசாரம், வேசித்தனம் மனிதனைப் பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிடுகிறது. ஆண்டவர் எவ்வளவுதான் அன்புள்ளவராக இருந்தபோதிலும், அவர் அசுத்தத்தோடே வாழத் தெரியாதவர். அசுத்தம் இருக்கும் இடத்தில் பரிசுத்த தெய்வம் வாழமுடியாது. எனவே, அசுத்தம் மனிதனைத் தேவனிடமிருந்து பிரித்துக்கொன்றுவிடுகிறது. காமம் மனிதனைக் கொல்லும் கொடிய பாவம்.

காம அசுத்தம் மனிதனைப் பாழாக்கும், குடும்பத்தைப் பாழாக்கும், தேசத்தைப் பாழாக்கும். உலகத்தைப் பாழாக்கும். மனுக்குலத்தையே பாழாக்கிவிட்டது. காமத்தால் சீரழிந்த மக்கள் எத்தனைபேர்! மாணவர் எத்தனைபேர்! வாலிபர் எத்தனைபேர்! பெண்கள் எத்தனைபேர்! அரசர்கள் எத்தனைபேர்! வீடுகள் எத்தனையோ! நாடுகள் எத்தனையோ! காமம் கொடிய விஷம். அதால் மாண்டவர் கணக்கற்றவர். காமம் பயங்கர பாவம். அப்பாவத்தின் சம்பளம் மரணம்.

மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துக் கொல்ல சாத்தான் பயன்படுத்தும் பயங்கர விஷ ஆயுதம் காமமே. காமச் சிற்றின்பத்தால் பேசின்பம் இழந்தோர் பலர். காமம் மனிதனை அசுத்த மிருகமாக்கிவிடும். சாத்தான் ஓர் அசுத்த மிருகமாக பரிசுத்த வேதாகமத்தில் காட்டப்பட்டுள்ளான். அந்த அசுத்த மிருகத்தால் ஆட்கொள்ளப்படுகிறவர்களும் தங்களை அறியாமலே அசுத்த மிருகமாகிவிடுகிறார்கள். அசுத்தமானதை நடப்பிக்கிறார்கள். அசுத்தமானதைச் சிந்திக்கிறார்கள், அசுத்தமானதைப் பேசுகிறார்கள். அசுத்தமானதை வெளியிடுகிறார்கள். அசுத்த ஆபாச படங்கள் எத்தனை! ஆபாசப் புத்தகங்கள் எத்தனை! ஆபாசக்கதைகள் எத்தனை! ஆபாசச்செயல்கள் எத்தனை! ஆபாசச் சுவரோட்டிகள் எத்தனை! ஆபாசப்பாட்டுகள் எத்தனை! ஆபாசக் காட்சிகள் எத்தனை!

இம்மண்ணுலகமாகிய மாயாபுரிச் சந்தையில் மக்களை மயக்கி சாத்தான் விற்பனை செய்வதற்குப் பகட்டாக அழகாய் அடுக்கி வைத்திருக்கும் சாமான் சிற்றின்பமே. கண்ணைக்கவரும் இந்த வெளிப்பகட்டுச் சிற்றின்பச் சாமான்களை எல்லாரும் வாங்கத்தக்கதாக சாத்தானும் அவனுடைய தூதரும் விநோதம் விநோதமான விளம்பரங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இம்மாயாபுரிச் சந்தையில் இந்தச் சரக்கு அதிகமாய் விற்பனையாகிறது. இந்தச் சரக்கை வாங்கும்போது இன்பமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் அனுபவித்த பின்னரோ பெரும் நரகத் துன்பத்தை அனுபவிக்கவேண்டியிருக்கிறது. பின்னால் வரும் பெருந்துன்பம் முன்னால் தெரிவதில்லை. சாத்தான் அதனை வஞ்சகமாக மறைத்துவிடுகிறான். இந்தச் சரக்கை வாங்குவோரின் இருதயம் பாழ்படுவதையும் அன்னாரின் வீடும் நாடும் பாழ்படுவதையும் பற்றிச் சாத்தான் அவர்களுக்கு முன்னரே தெரிவிப்பதில்லை. தொடக்கத்தில் பேரின்பமாகத்தென்படும் இதே சிற்றின்பம் பின்னர் கொடிய வேதனையாக மாறிவிடும். அதனை அனுபவிக்கும் சரீரமும், ஆத்துமாவும் பெரும் அழிவுக்குட்படும்.

அசுத்த வாழ்வில் ஆழ்ந்திருக்கும் ஆட்களைக் கேட்டுப் பாருங்கள். தங்கள் மானத்தை விலைக்கு விற்பனை செய்யும் விலைமாதரை வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள். அடிக்கடி விவாகரத்து செய்துவிட்டு வௌ;வேறு கணவர்களை மணந்து கொள்ளும் பெண்களை வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். சிற்றின்பம் உண்மையான பேரின்ப வாழ்வு தரமுடியுமா என்று, இத்தகையோரை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் நரக வேதனையைப்பற்றி தங்கள் அனுபவச்சாட்சியைப் பகருவார்கள். அவர்கள் சமாதானம் இழந்து, சாந்தி இழந்து, மனஅமைதி இழந்து, உடல் நலம் இழந்து, ஆன்ம மகிழ்ச்சி இழந்து, பேரின்னம் இழந்து, கடவுளையும் இழந்து தத்தளிப்பதைக் கண்ணுறலாம். மருத்துவ மனைகளிலும், சிகிச்சை சாலைகளிலும் தாங்கமுடியாத நோயுற்று, தீர்க்கமுடியாத பிணியுற்று அவதிப்படும் ஆட்களை ஆராய்ந்து பாருங்கள். அதன் காரணம் யாதென்று அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஏழாம் கற்பனையை மீறினதால்தான் அவர்கள் இந்தப்பாடுபடவேண்டியதிருக்கிறதென்று உங்களுக்குச் சொல்லுவார்கள். அவர்கள் ஏகோபித்து: பாவத்தின் சம்பளம் மரணம் (ரோ.6:23) என்று கூறுவார்கள்.

நரகத்தின் ப+தகணம் இம்மண்ணுலக மக்களின் ஆத்துமாக்களை அழிப்பதற்கு அதிகமாகப் பயன்படுத்தும் கருவி காம இச்சையே. இவ்வுலகம் படைக்கப்பட்டதிலிருந்து இதுகாறும் சாத்தான் அதிக வெற்றியோடு பயன்படுத்திவரும் ஆயுதம் இதுதான். இந்த ஆயுதம் ஆரம்பத்தில் மனிதரை வஞ்சிக்கத்தக்கதாக அதிக வனப்புடன் தோன்றும். இறுதியிலோ, நிச்சயமாய் அழிவையே தந்து நிற்கும். அதன் அழகைவிட அதன் அழிவு பெரிது. அதன் அழகைக் காட்டிலும் அதன் அழிவு இதிக நிச்சயம். அது செல்லுமிடமெல்லாம் அழகு அழிந்துவிடும். அழிவு பெருகிவிடும்.

தற்காலத்தில் தலைதூக்கி நிற்கும் கொடிய பாவம் காமமாகும். தற்கால ஆண்களையும் பெண்களையும் அரிபிளவைப்போல் அரித்து நிற்கும் பயங்கர தீமை காம இச்சையே. பார்க்குமிடமெல்லாம் இப்பாவம் நல்லபாம்புபோல் படமெடுத்து ஆடி நிற்கிறது. அதன் விஷத்துக்குத் தப்பின ஆண்களையோ பெண்களையோ காண்பதரிது. நமது வாலிபப் பெண்களும் ஆண்களும் பெரும்பாலும் இந்த விஷப் பாம்பால் தீண்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உலகம் முழுவதும் இந்த விஷக்காற்றால் நிறைந்திருக்கிறது. தற்கால உலகம் பத்துக் கற்பனைகளைப் பார்த்து பகடி பண்ணுகிறது. கடவுளைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது. தூய்மையைப் பார்த்து செய்கிறது. கற்பைப் பார்த்து காரி உமிழ்கிறது. பேரின்பத்தைப் பார்த்து நகைக்கிறது. புனித ஒழுக்கத்தை அலட்சியம் செய்கிறது. அசுத்தத்தையோ அதிகம் கவுரவப்படுத்துகிறது. காமத்தையோ கனப்படுத்துகிறது. மாம்ச இச்சையையோ மதித்து மாலையிடுகிறது. சிற்றின்பத்தையோ வரவேற்கிறது. விபசாரத்தையோ மகிமைப்படுத்துகிறது. காம இச்சையையோ இயற்கையென்கிறது. இதெல்லாம் கடைசி அழிவு காலத்தின் அறிகுறிகள். மனிதன் ஒரு மிருகமே எனத் தற்காலத்தவர் கருதுகின்றனர். தாங்கள் மிருக இச்சைகளுக்கு இடம் கொடுப்பதில் தவறொன்றுமில்லையென்று தவறாய்ப் போதிக்கப்படுகின்றனர். கற்புடன் தூய வாழ்க்கையாற்ற விரும்புகிறவர்கள் எள்ளி நகையாடப்படுகின்றனர். பரிசுத்தம் பரியாசம் பண்ணப்படுகிறது. கற்புக்கு இக்காசினியில் இடமில்லை போலும்! அந்தோ பரிதாபம்! இப்பாழ் உலகம் அசுத்த மிருக வாழ்வில் உழன்று சிக்கித் திக்குமுக்காடிச் செத்துக் கிடக்கிறதன்றோ!

காம இச்சையான அசுத்தததைப்பற்றி மூன்று காரியங்களைக் கவனிப்போம். முதலாவது, அசுத்தம் எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தில் அது இருப்பதைப் பற்றிய அடையாளமும் வெளியரங்கமாய்த் தென்படுகிறது. அடிமை வியாபாரம் இருந்த காலத்தில், ஒவ்வொரு எஜமானும் தன்னுடைய அடிமைகளுக்கு ஒவ்வொரு வகை அடையாயாளக் குறியிட்டுக் கொள்வது வழக்கம். அந்த வெளிப்படை அடையாளக் குறியைக் கண்டவுடனே இந்த அடிமை இந்த எஜமானுக்குரியவன் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதுபோலவே பாவத்துக்கு அடிமைப்பட்டிருக்கிறவர்களையும் நாம் வெகு எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதுபோலவே பாவத்துக்கு அடிமைப்பட்டிருக்கிறவர்களையும் நாம் வெகு எளிதில் கண்டுபிடித்துவிடலாம். புகை பிடிப்போரை அவர்களுடைய உதடும் பல்லும் காட்டிவிடும். குடிகாரரை அவர்களுடைய கண்ணும், சொல்லும் காட்டிவிடும். பெருமைக்காரரை அவர்களுடைய அகந்தையான விழியும், ஆணவமான தோற்றமும் காட்டிவிடும். காம சிந்தை கொண்டோரை அவர்களுடைய அசுத்தப் பார்வையே காட்டிவிடும். அவர்களுடைய முகத்தில் ஒரு ஜோதியும் மிளிராது. ஓர் அருளும் நிலவாது. ஒரு புனித ஒளியும் வீசாது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகத்தில் தூய்மையாயிருந்தால் அது தானாய் முகத்தில் பொங்கி வழியுமன்றோ!



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:50 pm

காமம் அது குடியிருக்கும் இதயத்தைக் கறைப்படுத்திவிடும், சிந்தையை மாசுபடுத்திவிடும், சொல்லை அசுத்தப்படுத்திவிடும், செயலை மிருகத்தனமாக்கிவிடும், ஆளைக்கெடுத்துவிடும், ஆத்துமாவை அழித்துவிடும், சரீரத்தையும் சிதைத்துவிடும். அசுத்தமானதெதுவும் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளவே முடியாது என்பதைப் பரிசுத்த வேதாகமம் அழுத்தம் திருத்தமாக அறைகூவியுள்ளது. வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும்... தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை (1.கொரி.6:9-10). விபசாரம் செய்யாதிருப்பாயாக, என்ற ஏழாம் கற்பனைக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கொடுத்துள்ள சரியான விளக்கத்தைக் கேளுங்கள். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று. (மத்.5:28). செய்கையில் மட்டுமல்ல, சொல்லிலும், சிந்தையிலுங்கூட ஒரு மனிதன் விபசாரம் செய்யக்கூடும் என்பதை ஆண்டவர் அறிவுறுத்துகிறார். தற்காலத்தில் எண்ணிறைந்த பேர் தங்கள் மனோவாக்குச் செயலில் அசுத்தராகி காம இச்சைக்குட்பட்டு, ஆண்டவரைவிட்டு வழிவிலகி போயுள்ளார்கள். காமம் மனிதனைக் கடவுளிடமிருந்து கத்தரித்துவிடுகிறது.

இரண்டாவதாக, காமம் மனிதனை வஞ்சித்துப் பாழாக்கிவிடுகிறது. எல்லாவற்றைப் பார்க்கிலும் மாம்ச இச்சையே மனிதனை அதிகமாய் வஞ்சித்துக் கொல்லும் தன்மையுடையதாயிருக்கிறது. முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழி தப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களுமாய் இருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் தமது இரக்கத்தின்படியே நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்ப+ரணமாய்ப் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள் (தீத்து 3:3-8).

சிற்றின்பப் பாவத்தோடு விளையாடாதே. நீ துணிந்து விளையாடினால் உன் மானம் போய்விடும். பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக்.18:20). சிம்சோன் விபசாரத்தோடு விளையாடினான். அந்த விபசார பாவமே அவனை அழித்துவிட்டது. தாவீது இப்பயங்கர பாவத்தோடு விளையாடினான். அது அவனை அவமானப்படுத்தி, அழிவுக்குட்படுத்தி, அழுகையும் கண்ணீருமாக்கிவிட்டது. அவர் பின்னர் அதற்காக மனம் வருந்தி, குழந்தையைப்போல், விம்மி விம்மி அழுதான். அவன் உள்ளம் உடைந்தது. மனம் நொறுங்கியது. நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடும், பாவ மனஸ்தாபக் கண்ணீரோடும் பாவமன்னிப்புக்காக கடவுளிடம் கதறிக் கதறி அழுதான். தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன். என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன். நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன் (சங்.51:1-4) என்று தாவீது மனங்கசந்து அழுது தன் பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, தேவனே என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். உமது சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலுமிரும். உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என்னுள்ளத்திலே புதுப்பியும் என்று தாவீது மன்றாடினான். ஆண்டவர் அவனுக்கு இரங்கி, அவன் பாவத்தையெல்லாம் கிருபையாய் மன்னித்தார். தாவீது பாவமன்னிப்பின் நிச்சயம் அடைந்தவனாய் நன்றி பொங்கக் கர்த்தரைப் போற்றித் துதிக்கிறான். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடி சூட்டுகிறார். ப+மிக்கும் வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

மூன்றாவது அசுத்தம் அசுத்தர்களை அடிமைப்படுத்திவிடுகிறது. மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்கும் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகாளயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோ.6:16).

இலண்டன் மாநகரில் பண்டிதர் பில்லி கிரகாம் அவர்களால் நடத்தப்பட்ட எழுப்புதல் கூட்டத்தில் இலண்டனிலுள்ள ஒரு மருத்துவர் மனந்திரும்பி, தன்னை முழுவதுமாகக் கிறிஸ்துவிடம் ஒப்புவித்தார். அவருடைய மனந்திரும்புதலுக்கு முன்னர் அவர் காம இச்சைகளுக்கு அடிமைப்பட்டவராய் சிற்றின்ப சேற்றில் ஆழ்ந்து கிடந்தவர். அவருடைய அறை முழுவதும் ஆபாசப் படங்ள் நிறைந்திருந்தன. அவருடைய படிப்பகம் முழுவதும் காமத்தைத் தூண்டும் அசுத்த நூல்கள் குவிந்திருந்தன. சிற்றின்பக்காட்சிகள் நிறைந்த சினிமாப் படங்களைப் பார்ப்பதில் அவர் பேரின்பம் கொள்வார். அவருடைய நெஞ்சமெல்லாம் காமத்தால் கறைபட்டு இருளடைந்து கிடந்தது. அவருடைய அகமுழுவதும் காம அசுத்த உணர்ச்சிகளால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. அவருடைய நினைவெல்லாம் அசுத்தம், கனவெல்லாம் அசுத்தம், செயலெல்லாம் அசுத்தம், வாழ்வெல்லாம் அசுத்தம். அத்தகைய அழுகிப் புழு புழுத்து நாறிப்போன வாழ்வு நடத்திய வைத்தியர் மனந்திரும்பினார். மனங்கசந்து அழுதார். தன் பாவத்தை அறிக்கையிட்டார். கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்புக்காக கெஞ்சி மன்றாடினார். தன்னிடத்தில் வருகிற ஒருவனையும் புறம்பே தள்ளாத இயேசு கிறிஸ்;து இந்த மருத்துவரையும் புறம்பே தள்ளவில்லை. அந்த வைத்தியர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டார். பரிசுத்தாவியானவர் அவரை ஆட்கொண்டார். அவர் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானார். பழையவைகளெல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின. அவர் ஒரு புது மனிதரானார், தன்னுடைய வீட்டிலுள்ள எல்லா அசுத்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும், ஆபாசப்படங்களையும், ஒன்றாகத் திரட்டி எடுத்துக்கொண்டு தேமஸ் ஆற்றில் வீசி எறிந்தார். அந்த அசுத்த நூல்களும் படங்களும் வெள்ளத்தில் அடிபட்டுப்போனபோது அவர் அவற்றைப் பார்த்து: அதோ என்னுடைய பழைய அசுத்த ஜீவியமெல்லாம் கொல்கொதா இரத்த வெள்ளத்தில் அடிபட்டுப் போகிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை இரத்த புண்ணியத்தால் இப்போது நான் கிறிஸ்துவுக்குள் புரு சிருஷ்டியாகிவிட்டேன். கிறிஸ்துவுக்குத் தோத்திரம்! எனக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக ஆமென் என்றார். இப்பொழுது அந்த வைத்தியரின் இதயத்தில் இயேசு கிறிஸ்து தங்கி அவருடைய வாழ்வில் பரிசுத்தமாய் பொங்கி வழிகிறார். அவர் கிறிஸ்துவுக்குள் பரிசுத்த வெற்றி வாழ்க்கை நடத்துகிறார்.

ஆயிரக்கணக்கான மக்கள் பாவ அசுத்தத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பாவம் அவர்களை ஆட்கொண்டு, மேற்கொண்டு அவர்களை ஆட்டி அசைத்து ஆட்சிபுரிகிறது. காம இச்சைகளுக்கும் சிற்றின்ப ஆசைகளுக்கும் கீழ்ப்படிந்து அசுத்த ஆவி சொல்லுகிறபடியெல்லாம் நடந்து மாம்ச இச்சைகளுக்குத் தங்களை விற்றுப்போட்டவர்கள், பாவத்திற்கு அடிமைகளாகிவிடுகிறார்கள். பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் (யோ.8:34). சிற்றின்ப ஆபாசத்தில் ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்வது தவறு என்று தெளிவாய்த் தெரிந்தும், அப்பாவ வாழ்க்கையை விட்டுவிடச் சத்தியற்றவர்களாய் இருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு எஜமானாகிவிடுகிறது. அசுத்த ஆவி அவர்களுக்கு எஜமானாகி விடுகிறது. அசுத்த ஆவி அவர்களைக் கைப்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கிறது. நிர்ப்பந்தமான மனிதன் நான் என்று அலற ஓலமிடுகிறார்கள்.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:50 pm

இவ்வாறு காம இச்சைகளுக்கும், விபசார வேசித்தனங்களுக்கும், அசுத்த சிற்றின்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறவர்களுக்கு விமோசனமே இல்லையோ? அவர்களுக்கு விடுதலையே இல்லையா? விடுதலை உண்டு. அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த ஒரே வழி இறைவனாகிய இயேசு இரட்சகர்தான். இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினால் நாம் மெய்யாகவே விடுதலையாவோம். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோ.8:36). எண்ணிறந்த பேர் இயேசு கிறிஸ்துவால் பாவத்தினின்று விடுதலை பெற்றுள்ளார்கள். அசுத்த வாழ்வில் ஆழ்த்திருந்த மகதலேனா மரியாளைக் கேட்டுப்பாருங்கள். யாக்கோபின் கிணற்றருகே வந்த சமாரிய விபசார ஸ்திரீயை விசாரித்துப்பாருங்கள். விபசாரத்தில் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்ட, பட்டணம் அறிந்த படுபாவியான ஸ்திரீயைக் கேட்டுப்பாருங்கள். அவர்களைப்போல் கோடா கோடி மக்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சகல பாவங்களுமற கழுவிச் சுத்திகரிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளாக மாறி, பேரின்பத்தால், பரிசுத்தத்தால் நன்றியால் பொங்கிவிடும் பாட்டைச் செவிமடுத்து கேளுங்கள்.

இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதனால்
நிவிர்த்தி யாகுமே

விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் வரலாற்றை விவரமாய்க் கவனியுங்கள். விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும்மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்கிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையில் எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக்கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங்காணாமல் ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோ.8:3-11).

இந்த விபசார ஸ்திரீயைப்போல் எல்லா மனிதர்களும் பாவிகளே. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி விட்டோம் (ரோ.3:23). இயேசு கிறிஸ்து ஒருவரே நம்மைப் பாவத்திலிருந்து இரட்சிக்க வல்லவர். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். இயேசு கிறிஸ்து ஒருவரே உலகத்தின் பாவத்தைத் சுமந்து தீர்த்துவிட்டார். நமது மரணத்தைச் சுமந்து தீர்த்துவிட்டார். நமது நரக ஆக்கினையைச் சுமந்துவிட்டார். அவரை விசுவாசிக்கிறன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியால், அவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (யோ.3:17-18).

முதலாவது, நீ ஓர் அசுத்த பாவி என்பதை ஒத்துக்கொள். இரண்டாவது, உன் பாவத்தை இயேசு கிறிஸ்துவிடம் மனத்தாழ்மையோடும் உண்மையான உத்தம மனஸ்தாபத்தோடும் அறிக்கையிடு. மூன்றாவது, இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக உன் இதயத்தில் ஏற்றுக்கொள். அப்பொழுது இயேசு கிறிஸ்து தமது பரிசுத்த இரத்தத்தால் உன் சகல பாவங்களுமற உன்னைக் கழுவிச் சுத்திகரித்து, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் உன்னை ஆட்கொள்ளுவார். பழைய அசுத்த ஜீவியம் ஒழிந்து போகும். எல்லாம் புதிதாகும். கிறிஸ்துவே உன் பரிசுத்தம் ஆவார். அவரே உனக்குப் பரிசுத்தமாக உன் இதயத்திலிருந்து பொங்கிவழிவார். கிறிஸ்துவையல்லாமல் உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. கிறிஸ்து உன்னிலும், நீ கிறிஸ்துவிலும் நிலைத்திருந்தால், நீ பரிசுத்தாவியானவர் மூலமாய்ப் பரிசுத்த கனிகளைக் கொடுப்பாய். பரிசுத்த வெற்றி வாழ்க்கை ஆற்றுவாய். கிறிஸ்துவையல்லாமல் நீ ஒன்றும் செய்யவே முடியாது. கிறிஸ்துவே பரிசுத்தம்.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:52 pm

5.பெருந்தீனி

300 கிலோ நிறையுள்ள ஒரு மனிதனை நான் அறிவேன். அவர் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். அவர் உயிர் வாழ்வதற்காக உண்கிறவர்போல் தெரியவில்லை. உண்பதற்காகவே உயிர்வாழ்கிறவர்போல் தெரிகிறது. அந்தோ, பரிதாபம் ! அவருடைய பெருந்தீனியே அவருடைய உயிருக்கு உலைவைத்துவிடும் என்பதை அவர் அறியார் போலும்! தம்முடைய பிரேதக் குழியைத் தம்முடைய சொந்தக் கையால் தோண்டிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறியாது போய்விட்டார். பட்டினிச் சாவுகளைவிட இக்காலத்தில் பெருந்தீனிச் சாவுகளே அதிகம். தற்கால உலகில் தலைவிரித்தாடும் பெரும்பாலான பயங்கர நோய்களுக்கக் காரணம் பெருந்தீனியே. பெருந்தீனி மனிதனைக் கொல்லும் ஒரு கொடிய பாவம் என்று பரிசுத்த வேதாகமம் பறைசாற்றியுள்ளது. பெருந்தீனிக்காரருடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை இலச்சையே, அவர்கள் ப+மிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் (பிலி.3:19).

ஏழு கொடிய பாவங்களுள் பெருந்தீனியும் ஒன்று ஆணவம், கோபம், பொறாமை, காமம் போன்ற பாவங்களைப்போல் பெருந்தீனியும் மனிதனைக் கொல்லக்கூடிய ஒரு கொடிய பாவமே என்று திருச்சபை முற்பிதாக்கள் எச்சரித்தள்ளார்கள். நம்மில் அநேகர் பெருந்தீனியை ஒரு பாவமாக கருதுகிறதில்லை. அநேகர் பெருந்தீனிக்காரராயிருக்கின்றனர். கிறிஸ்தவர்களிடையே உலாவும் மோசமான பாவங்களுள் பெருந்தீனியைத் தடுப்பதற்குத் தேசத்தில் சட்டமில்லையானாலும் பெருந்தீனியை எதிர்த்து எச்சரிப்பதற்குச் சத்திய வேதாகமத்தில் வேதவசனங்கள் உண்டு.

பெருந்தீனிக்காரர் தங்கள் கண்களிலிருக்கிற உத்திரத்தை உணராமல், தங்கள் சகோதரர் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ உன் கண்ணில் பெருந்தீனியாகிய உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்லுவதெப்படி? பெருந்தீனிக்காரனே முன்பு உன் கண்ணிலிருக்கிற பெருந்தீனியாகிய உத்திரத்தை எடுத்துப்போடு. பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய். குடிக்கிறவனைக் கண்டு நகைக்கிறோம். அவனை அருவருக்கிறோம். ஆனால் மித மிஞ்சி உண்கிறவனைக்கண்டு நாம் நகைக்கிறதில்லை, அவனை அருவருக்கிறதுமில்லை. பெருந்தீனியை ஒரு பாவம் என்று நாம் சாதாரணமாகக் கருதாததே இதற்குக் காரணமாகும். பெருந்தீனிக்காரன் பிறரைப்பார்த்து இகழ்கிறான். தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைக்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் (லூக்.18:11). என்பதுபோல பெருந்தீனிக்காரன் மற்றவர்களை மிகமிகப் பெரிய பாதகர்களாகவும், தன்னையோ மிகமிக நல்லவனாகவும் எண்ணிக்கொள்ளுகிறான். தான் வயிற்றுச் சாமியைக் கும்பிடுகிறவன் என்பதை மறந்துபோகிறான். தான் பெருந்தீனி என்னும் பாவத்தில் கண்மூக்குத் தெரியாமல் மூழ்கிக்கிடப்பதை அறியாதிருக்கிறான். தன் பாவம் தனக்குத் தெரிவதில்லை. தங்கள் பாவத்தை மனிதர் உணருகிறதுமில்லை. தங்கள் பாவத்தைப் பெரிதாக நினைக்கிதுமில்லை. மற்றவர்களுடைய பாவமே அவர்கள் கண்ணுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. தாங்கள் அளவுக்கு மிஞ்சி உண்பது பாவம் என்பதைச் சிந்தியாமலிருக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமன்றோ!

பெருந்தீனிக்காரருக்கு அவர்களுடைய சுகபோகவாழ்வே தெய்வமாகி விடுகிறது. இவ்வுலகில் ஒரே ஒரு தடவைதான் வாழமுடியும். ஆகவே அந்த ஒரு வாழ்நாளில் எவ்வளவு உண்ண முடியுமோ அவ்வளவு உண்டு, எவ்வளவு குடிக்கமுடியுமோ அவ்வளவு குடித்து எவ்வளவு இன்புறமுடியுமோ அவ்வளவு இன்புற்று, எவ்வளவு களித்து ஆடமுடியுமோ அவ்வளவு களித்து ஆடி, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பதுபோல் சம்பிரமமாய் இம்மண்ணுலகில் வாழ விரும்புகிறார்கள் மனிதர்கள். நாளைக்குச் சாகுமுன் இன்று உல்லாசமாய் உண்டு, உடுத்தி மகிழ்கொண்டாடுவோம் என்று கொக்கரிக்கிறார்கள் மனிதர்கள். அதற்கென்று பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். செல்வத்தைத் திரட்டுகிறார்கள். பொருள்களைச் சேர்க்கிறார்கள். உணவுதானியங்களை மலைப்போல் குவித்து வைத்துக்கொள்கிறார்கள். இவ்வுலக சுகபோக ஆடம்பர வாழ்க்கையே அவர்களுக்குப் பிரதானம். அவர்கள் மறுவுலக வாழ்க்கையைப்பற்றி சிறிதும் சிந்திக்கிறதில்லை. ஆண்டவர் இத்தகைய மனிதருடைய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே, நான் ஒன்றும் செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருட்களையும் அங்கே சேர்த்து வைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தில் இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார் (லூக். 12:16-21). ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாய் இருக்கிறது. மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். மனிதருடைய ஜீவஅப்பம் இயேசு கிறிஸ்துவே. எனவே மனிதனுடைய கண்ணும் கருத்துமெல்லாம் கிறிஸ்துவைச் சொந்தமாக்கிக் கொள்வதிலும், அவரையே விசுவாசித்து நேசித்து சேவிப்பதிலேயுமே இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதே நம்முடைய மெய்யான உணவு.

தன்னடக்கம், கட்டுப்பாடு, இச்சையடக்கம் போன்ற பண்புகள் தற்காலத்தில் மதிப்பிழந்து வருகின்றனபோலும். மனம்போனபடி, தன் இஷ்டம்போல் வாழ்வதுதான் தற்கால வாழ்க்கை முறைபோலும்! கட்டுப்பாடு, தனது கண்ணியத்தை இழந்து வருகிறதுபோலும்! இச்சைகளை நிறைவேற்றுவதிலேயே தற்கால மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறதற்கு தயங்குவதில்லை என்று கூடக்கூறலாம். தன் மனத்தையெல்லாம் ஆபாச எண்ணங்களாலும், தன கண்களையெல்லாம் அசுத்த பத்திரிகைகளாலும், தன் வயிற்றையெல்லாம் மிதமிஞ்சிய கொழுத்த உணவுகளாலும் நிரப்புவதிலேயே தன் முழுநேரம் முழுவதையும் செலவிடுகிறான் தற்கால மனிதன். அவனுக்குக் கடவுளைப்பற்றி எண்ணுவதற்குக்கூட நேரமில்லாது போய்விடுகிறது. தன் உடலை கொழுக்க வைக்கிற மனிதன் தன் ஆத்துமாவைப் பட்டினிபோட்டு கொன்று போடுவதற்கு தயங்காதிருக்கிறான். சரீரம் கொழு கொழுவெனச் செழித்தோங்குகிறது. ஆனால் ஆத்துமாவோ பட்டினி கிடந்து சாகிறது. உபாகமம் 8:3ல் ஆண்டவர் கூறியுள்ளதை மீண்டும் நினைவில் இருத்திக்கொள்வோம். மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவை, அன்றாடம் நமது ஆத்துமா உட்கொண்டு, வளர்ந்து வருகிறதா?

என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து உன் இருயத்தை நல் வழியிலே நடத்து. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் மாம்சப்பிரியனும் தரித்திரராவார்கள். தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும் (நீதி.23:19-21).



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:53 pm

உண்பதும், உடுப்பதும், குடிப்பதும் நமது வாழ்வில் முதலிடம் பெறவேண்டியதில்லை. இயேசு கிறிஸ்துவுக்குத் தான் நாம் முதலிடம் கொடுக்கவேண்டும். ஆகாரத்தைத் தேடுவதற்கு நாம் நமது வாழ்வில் முதலிடம் அளிக்கவேண்டியதில்லை. தேவனுடைய இராஜ்யத்தைத் தேடுவதற்குத்தான் நாம் முதன்மை அளிக்கவேண்டும். இயேசு கிறிஸ்து இயம்பியுள்ளதைக் கேளுங்கள். ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக்குடிப்போம், என்னத்தை உடுப்பொம் என்று கவலைப்படாதிருங்கள்.... முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:31-33). நமது மாம்ச பசி தாகங்களைத் தீர்ப்பதில் மட்டுமே நமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டு விடக்கூடாது. மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும் அழிந்துபோகக் கூடியவை. ஆனால் அழியா ஆத்துமாவுக்குரிய ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவை அனுதினமும், புசித்து ஜீவத்தண்ணீராகிய இயேசு கிறிஸ்துவை அனுதினமும் அள்ளி அள்ளிப் பருகி அழியாப் பேரின்பப் பாக்கியம் பெறுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும். அநேகர் வாழ்க்கை முழுவதும் மாம்ச காரியங்களிலும், உலககாரியங்களிலும், பிசாசின் காரியங்களிலும், செலவிட்டுவிட்டு, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்: கடவுளே, என்மீது கிருபையாயிரும், என் ஆத்துமாவுக்கு இரங்கும் என்று ஓலமிடுகிறார்கள். வாழ்க்கையில் மிகமிக முக்கியமான ஆத்தும பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவதற்கு நாம் முதலிடம் கொடுக்காது, வாழ்க்கையின் இறுதி நிமிடத்தில் ஆத்துமாவைப்பற்றிக் கவலைப்படுவது எவ்வளவு மதியீனம்! இவ்வாழ்வில் ஆன்ம வாழ்வைக்கவனிப்பதல்லோ மாபெரும் முக்கியமான காரியம். மரணப்படுக்கையில் மனந்திரும்புதலின் நம்பிக்கை வைத்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் மனந்திரும்பாது வாழ்வது எவ்வளவு புத்தியீனம்! வாழ்க்கை முழுவதையும் கிறிஸ்துவின் நாம மகிமைக்காகக் செலவிடுவதல்லவோ புத்தியுள்ள செயல்! இரட்சிப்பைப்பற்றி வாழ்வில் ஒரு தடவைகூடக் கேள்விப்படாதவர்களுக்கும், சுவிசேஷத்தை அறியாதவர்களுக்கும், இதற்கு முன்னர் பாவ வாழ்க்கையைப்பற்றி ஒரு தடவை கூட எச்சரிக்கப்படாதவர்களுக்கும் மரணத்தருவாயில் மனந்திரும்புவதற்கு ஒருவேளை கடவுள் ஒரு தருணம் கொடுக்கலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவைப்பற்றிக் கேள்விப்பட்டும், அவரை வேண்டாம் என்று தள்ளினவர்களும், மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டு மனந்திரும்பாதவர்களும் மரணப்படுக்கையில்கூட மனந்திரும்புவது அரிது. ஆண்டவரைத் தேடியும் காணமுடியாதுபோகும் காலம் வரும் என்று ஆண்டவர் இவ்வுலக மாந்தரைப் பலமாய் எச்சரித்துள்ளதை எப்பொழுதும் நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும்.

பெருந்தீனி நம்மைக் கல்லறைக்கு அழைத்துச்செல்வதோடு நில்லாமல், நரகத்திற்கும் அழைத்துச் சென்றுவிடும். பெருந்தீனி நம்மை மாம்ச அழிவுக்குட்படுத்துவதோடு, நரக ஆக்கினைக்கும் உட்படுத்திவிடும். எல்லாவற்றிலும் நிதானமாயும், ஒழுங்காயும், அடக்கமாயும் இருக்கவேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுரை பகர்ந்துள்ளது. எனவே, நாம் எல்லாவற்றிலும் மிதமாயும், இச்சையடக்கமாயும் ஒழுக வேண்டும். கடவுள் நமக்கு அருளிய எல்லா ஆசீர்வாதங்களையும் பயபக்தியோடும், அளவோடும் அனுபவிக்கவேண்டும்.

உலகில் எண்ணிறந்த மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்பொழுது, நாம் மட்டும் உணவை நிதானத்தோடு பயன்படுத்தாது, மிதமிஞ்சித் தின்று நம் உடலையும் பிறரையும் சாகடித்துக் கொண்டிருப்பது பாவமாகும். பெருந்தீனி தன்னயத்தின் உச்ச கட்டமாகும். எனவே பிறகொடிய பாவங்களைப்போல் பெருந்தீனியும் அருவருத்து ஒதுக்கித் தள்ளவேண்டிய கொடிய பாவமே. ஆமோஸ் 6:4,6 வசனங்களில் ஆண்டவர் கூறியுள்ளதைக் கேளுங்கள். தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று... பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து சிறந்த பரிமளத்தைலங்களைப் பூசிக்கொள்கிறார்கள்.....

இவ்வையகத்தின் மக்களுள் ஐந்தில் மூன்று பாகத்தினர் உண்ண உணவும், உடுக்க உடையும், தங்க உறைவிடமும் இன்றி வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கும் தங்கள் அவசியத்திற்கும் அதிகமான மிதமிஞ்சின பொருள்களைக் குவித்துக், பெருந்தீனி தின்று தங்களைக் கொழுக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பசிப்பிணியால் வாடுவதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (யோ.3:17).

நாம் நமது உதடுகளால் இனிக்க இனிக்கப் பேசுகிறோம். ஆனால் நமது கைகளையோ இறுக மூடிக்கொள்ளுகிறோம். நமது கைகளால் அன்னத்தையும், ஆடைகளையும், பயன்மிக்க பிறபொருள்களையும், அள்ளி அள்ளி பிறர்க்கு அன்புடன் வழங்குவோம். பசியுற்றோர்க்கு ஆகாரம் கொடுப்போம். தாகமுள்ளோருக்கு பானம் வழங்குவோம். ஆடையற்றோருக்கு ஆடைகள் அளிப்போம். பிணியுற்றோருக்கு மருத்துவம் செய்வோம். தேவை உள்ளோருக்குச் சேவை செய்வோம். மருத்துவமனையில் இருப்போருக்கு ஆறுதலும், சுகமும் அளிப்போம். தன்னலம் கருதாது, பிறர் நலம் கருதி பிறருக்குப் பணிபுரிவோம். தன் வயிற்றைக் கொழுத்த உணவுகளால் நிரப்பித் திணித்து, வெடிக்கவைப்பதிலேயே ஈடுபட்டு உணவையும், நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்களின் பெருந்தீனியே அவர்களை வதைத்துக் கொன்றுவிடும் என்பதை அவர்கள் அறிந்துகொண்டால் நலமாயிருக்கும். காலதாமதம் ஆபத்தாக முடியும். உடனே விழித்தெழுவோம். பெருந்தீனியை ஒழித்திடுவோம்!!



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:53 pm

நமது சரீரம் பரிசுத்தாவியானவர் தங்குவதற்கென்று கடவுளால் கட்டப்பட்ட ஆலயமாகும். நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றும் தேவனுக்குரியவை. கடவுளே நம்மைச் சிருஷ்டித்தார். நாம் பாவத்தில் வீழ்ந்தபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே தம்மைப் பலி கொடுத்து இரத்தக் கிரயத்தால் நம்மை மீட்டுக்கொண்டார். எனவே, நாம் முழுக்க முழுக்க கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் தங்கி வாசம் பண்ணவேண்டிய சரீரத்தை நாம் கெடுத்தால், தேவன் நம்மைக் கெடுப்பார். நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? எனவே சரீரத்திற்கு விரோதமாய்ச் செயல்படுகிற எந்தப் பாவமும் கடவுளுக்கு விரோதமாய்ச் செய்யப்படுகிற பாவமாகும். நாம் மனம்போனபடி நமது சுய இஷ்டம்போல் நடந்தால், அழிவது திண்ணம். நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள். கிறிஸ்துவின் சித்தப்படி நடக்கவேண்டியவர்கள். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்று... அறியீர்களா?? கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவைன மகிமைப்படுத்துங்கள் (1.கொரி.6:19-20).

பெருந்தீனி, மதுபானவெறி, காமம் ஆகிய மூன்று பாவங்களும் சேர்ந்து ரோம சாம்ராஜ்யத்தையே வீழ்த்தி விட்டன. அக்காலத்தில் உலகப் புகழ்பெற்றிருந்த மாபெரும் வல்லரசு மக்களாகிய ரோமர் தங்கள் கல்லறைகளைத் தாங்களாகவே தங்கள் பெருந்தீனிப்பற்றகளால் தோண்டிக்கொண்டார்கள். பெருந்தீனியால் செத்த தங்கள் பிணங்களுக்குத் தங்கள் வேசித்தனத்தால் தங்களையே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆடம்பர விருந்துகளில் விதவிதமாகக் கொழுமையான உணவு வகைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளி அள்ளித் தின்று, தங்கள் வயிற்றில் திணத்துக் கொள்ளலாம். அவர்கள் உண்ணும் அளவுக்கு வரம்பே கிடையாது. அக்கொழுமையான ஆகாரத்தில் அவர்கள் அளவற்ற ஆசை கொண்டவர்களாய், மேலும் மேலும் உண்பதற்கு பேராசை கொண்டு, தாங்கள் முன்னால் தின்றதையெல்லாம் ஜன்னலுக்கு வெளியே வாந்தி பண்ணிப் போட்டு, மீண்டும் அமர்ந்து தங்கள் வயிற்றைக் கொழுமையான ஆகாரங்களால் நிரப்பிக் கொண்டேயிருப்பது அக்காலத்து ரோம விருந்துகளில் காணப்படும் சாதாரணக் காட்சியாகும். பெருந்தீனிக்கும் குடிவெறிக்கும் விபசாரத்திற்கும் தங்களை ஒப்புக்கொடுத்த எந்த மனிதனோ அல்லது மனுஷியோ அல்லது தேசமோ கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது. சரீரத்தைப் பெருந்தீனியால் கொழுக்க வைத்து ஆத்துமாவைப் பட்டினி போட்ட ரோமசாம்ராஜ்யம் வீழ்ந்ததுபோல், பெருந்தீனி பாவத்துக்குட்படும் எந்த நாட்டினரும், எந்த தனிநபரும் வீழ்ச்சியுறுவது உறுதி. பிழைக்கத்தக்கதாக அல்ல, அநேகர் சாகத்தக்கதாக அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிறார்கள். சுகபோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள் (1.தீமோ.5:6). கடவுளை மறந்து, மிதமிஞ்சி, நிதானமிழந்து உண்பதிலும் உடுப்பதிலும், குடிப்பதிலும், உல்லாசமுற்றிருப்பதிலுமேயே ஆழ்ந்து கிடக்கிறவர்கள் தங்கள் ஆத்துமாக்களைத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மனசாந்தி இழந்து, ஆன்ம சமாதானமற்று, இரட்சிப்பின் பேரின்ப மகிழ்ச்சியில்லாதவர்களால் மக்கள் அவதியுறுவதைக் காணுங்கால், தற்கால மக்கள் எவ்வளவாய்த் தங்கள் வயிற்றையே ப+சித்து தங்கள் ஆத்தும வாழ்வை அறவே மறந்து விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் சரீரமானது பெருந்தீனியால் சுகமாக இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. எனவே பெருந்தீனியானது சரீரத்தையும், ஆத்துமாவையும் கொல்ல வல்லதொரு கொடிய பாவமாகும். விபசாரத்தை விலக்குவது போல பெருந்தீயையும் விலக்கவேண்டும். பெருந்தீனியை நாம் விலக்காவிட்டால், பெருந்தீனி நம்மைக் கொன்றொழித்துவிடும்.

நமக்கு சரீரமட்டுமல்ல, ஆத்துமாவும் உண்டு என்பதை மறந்துபோகக்கூடாது. சரீரத்திற்கு எவ்வாறு உணவு, தண்ணீர், காற்று அத்தியாவசியத் தேவையோ, அவ்வாறே ஆத்துமாவுக்கும் கிறிஸ்து தேவையாகும். ஆத்துமாவைப் போஷிக்கும் ஜீவஆகாரம் இயேசு கிறிஸ்துவே. ஆத்துமாவுக்கு வேண்டிய ஜீவகாற்று இயேசு கிறிஸ்துவே. எனவே மனிதன் வெறும் சரீர அப்பத்தினால் மாத்திரமல்ல, ஜீவஅப்பமாகிய இயேசு கிறிஸ்துவால் பிழைக்கவேண்டியவன். மனிதனுடைய சரீரத்திற்கும், ஆவிக்கும், ஆத்துமாவிற்கும் உயிரானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. நானே ஜீவன் என்றவர், நமக்கு ஜீவனாகாவிட்டால் நாம் செத்துப்போவோம்.

ஆத்துமாவை அறவே மறந்து, தங்கள் சரீரத்தை மட்டும் பேணிவளர்த்துக் கொழுக்கவைத்து வருகிறவர்கள் பெருந்தீனி என்னும் பாவத்திற்கு உட்பட்டவர்கள். கெட்ட குமாரன் உவமை நமக்கு அரியதொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. கெட்டகுமாரனுக்கு மனம்போனபடி உண்டு, உறங்கி, குடித்து, வெறித்து ஆடிப்பாடி உலகத்தில் சுகபோகமாய் வாழவேண்டுமென்று ஆசை உண்டானவுடனே, அப்பாவ ஆசை அவனைத் தகப்பன் வீட்டினினின்று பிரித்து விடுகிறது. அவன் கண்டதே காட்சி, கொண்டமே கோலம், தின்றதே மகிழ்ச்சி, குடித்ததே குதூகலம், ஆடினதே ஆனந்தம், பாடினதே பரமானந்தம், சுகபோகமே சொர்க்கம் என்று சிற்றின்பத்தில் சொக்கித் திளைக்கிறான். ஆனால் அது பேரின்பமல்ல, சிற்றின்பந்தான் என்பதைச் சிறிது காலத்திற்குள் கண்டுகொள்ளுகிறான். அவனுடைய சுகபோக வாழ்க்கை நீடித்து நித்திய பேரின்ப வாழ்க்கையைக் கனிந்து நிற்கமுடியாது. பாவத்திற்கோர் சிதைவுண்டு. பாவ வாழ்க்கை மனிதனுக்கு நிலையான சமாதானத்தையும் நித்திய சாந்தியையும் அளிக்கமுடியாது. எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்தில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கினான் (லூக்.15:14). மனம்போன சுகபோக சிற்றின்ப வாழ்க்கை கெட்டகுமாரனுக்கு அவன் நினைத்தவாறு நிலைவரமான திருப்தியையும், சாந்தியையும் பேரின்பத்தையும் அளிக்கமுடியாது போய்விட்டது. அவன் குறைவுபடத்தொடங்கினான். அத்தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. சரீர சுகபோகத்திற்காக ஆத்தும வாழ்வை உதறிவிட்டு வந்தவனுக்கு, இப்பொழுது சரீர சுகபோக வாழ்விற்கும் பஞ்சம் உண்டாயிற்று. அவ்வாழ்வு அவனுக்கு திருப்தியளிக்க முடியாது போய்விட்டது. ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை போன்ற எப்பாவமும் நமக்குத் திருப்தியளிக்கவே முடியாது. நமக்குத் திருப்தியளிக்கக்கூடியவர் ஒரே ஒருவர்தான். அந்த ஒருவர் இயேசு கிறிஸ்துதான். உலக உல்லாச வாழ்க்கை, சிற்றின்ப வாழ்க்கை, கடவுளைவிட்டு சாத்தான் சொற்படி கேட்டு நடக்கும் அக்கிரமவாழ்க்கை, நமக்கு ஒருக்காலும் நித்திய சாந்தியையும், பேரின்பத்தையும் தர இயலா. இவ்வுண்மையைக் கெட்ட குமாரன் கண்டுகொண்டவுடனே, தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்த பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு மனந்திரும்பி, தன் தந்தையிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் அவனை மன்னித்து, மீண்டும் அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு, ப+ரண பேரின்ப வாழ்வு இரக்கமாய் அளித்ததுபோல், உனக்கும் எனக்கும் பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் பாவ மன்னிப்பு தந்து நித்திய பேரின்ப வாழ்வு அளிக்கத் தயாராக நம்முன் நிற்கிறார். உடனே நாம் பாவமனஸ்தாபக் கண்ணீரோடு மன்னிப்புக்காக கிறிஸ்துவை கெஞ்சுவோமாக.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:54 pm

தன் குற்றங்களை நினைத்து மனம் வருந்தி, இரக்கத்திற்காகச் சிலுவையிலறையுண்ட இயேசு இரட்சகரை நோக்கி ஆண்டவரே, அடியேனை நினைத்தருளும் என்று கிறிஸ்துவின் கிருபைக்காக கெஞ்சின கள்ளனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (லூக்.23:42-43) என்று கனிவோடு வாக்களித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, நீ இப்பொழுதே பாவமன்னிப்பக்காக கெஞ்சு.

கடந்த கால பாவங்களையெல்லாம் கண்ணெதிரே கொண்டு வந்து கண்ணீர் சிந்திநிற்கும் நண்பரே! இவ்வளவு கொடிய பயங்கர பாவங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பொறுத்து மன்னிப்பாரா என்று தயங்கிக் கொண்டிருக்கிற நண்பரே, என் போன்ற மா பாதகர்களையும் நீசர்களையும் அவர் ஏற்றுக்கொளவாரா என்று சிறிது சந்தேகித்துக்கொண்டிருக்கும் நண்பரே! என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்றுரைத்துள்ள ஆண்டவர், அன்போடு தமது காயப்பட்ட இரு கரங்களையும் நீட்டி உன்னை மனமுவந்து ஏற்றுக்கொளாவார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும், உறைந்த மழையைப்போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்தகரிக்கும்.

ஓர் எழுப்புதல் கூட்டம் நான் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் தொலைபேசி வாயிலாக ஒரு பெண் இவ்வாறு கூறிளாள். இரவும் பகலும் என்னை வாட்டிப்பிழியும் பயங்கரப் பாவம் என்னை அடிமைப்படுத்தியிருக்கிறது. அப்பாவத்தினின்று விடுதலை பெற முடியாது நான் தவித்து தத்தளிக்கிறேன். எண்ணிறந்த தடவைகளில் நான் வருந்தி முயன்றும் எனக்கு இப்பாவத்தின்மீது வெற்றி கிட்டவில்லை. இவ்வாறு என்னை ஆட்கொண்டு அவதிப்படுத்தும் அக்கோரப்பாவம் பெருந்தீனியே. இப்பாவத்தினின்று நான் விடுதலை அடைய வழி வகையோ இல்லையா?

இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி இயேசு கிறிஸ்துவே. நானே வழி என்றுரைத்துள்ள இயேசு இரட்சகரே பாவவிடுதலைக்கு ஒரே ஒப்பற்ற வழியாகத் திகழ்கிறார். பாவமன்னிப்புப் பெற, பாவத்திலிருந்து விடுதலை அடைய, புது புனித வாழ்க்கையாற்ற, பரிசுத்த வெற்றிவாழ்க்கை நடத்த ஒரே ஒரு வழிதானுண்டு. அந்த ஒரே ஈடு இணையற்ற தனிப்பெரும் வழி இறைவனாகிய இயேசு இரட்சகரே. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்களித்துள்ள எல்லாம் வல்ல இறைவனாகிய இயேசு இரட்சகரண்டை உடனே ஓடிவருவோம். பாவ மனஸ்தாப நொறுங்குண்ட நருங்குண்ட இதயத்தோடும் அவர் பாதத்தை இரட்சிப்புக்காக இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்வோமாக. பெருந்தீனி என்னும் பெரும் பாதகத்தால் பெரும்பாடுபட்ட இப்பெண் இயேசு கிறிஸ்துவண்டை சென்று தன் பாவத்தை மனஸ்தாபக் கண்ணீரோடு அறிக்கையிட்டாள். இயேசு இரட்சகரண்டை பாவமன்னிப்புக்காக கெஞ்சினாள். அப் பாவத்தினின்றும் விடுதலைக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டாள். அப்பாவத்தின்மீது வெற்றி தருமாறு கிறிஸ்துவை நோக்கி ஊக்கத்தோடும் விசுவாசத்தோடும் ஜெபித்தாள். அப்பொழுது என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று திருவாக்கருளியுள்ள இயேசு இரட்சகர் அவளை ஏற்றுக்கொண்டு அவளுக்குப் பாவமன்னிப்பின் நிச்சயமளித்து, அவளைத் தமது பரிசுத்த இரத்தத்தால் சகல பாவங்களுமற கழுவிச் சுத்திகரித்து அவளைப் புது சிருஷ்டியாக்கி அவரே அவளுக்குள்ளிருந்து பரிசுத்தமாய், அன்பாய், அடக்கமாய், மீட்பாய் பொங்கி அருளிப் போந்தார். அவருடைய பழைய பெருந்தீனி இச்சைகளெல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. அவளுக்கு ஆண்டவர் புதிய இதயத்தையும், புதிய மனதையும், புதிய உணர்ச்சிகளையும், இச்சையடக்கத்தையும் கொடுத்தார். அவள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்யானதுபோல் இதை வாசிக்கிற நீயும் கிறிஸ்துவுக்குள் புரு சிருஷ்டியாகி பரிசுத்த கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை ஆற்ற முடியும். கிறிஸ்துவையல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய நமக்குப் பெலனுண்டு. மனிதரால் கூடாதுதான். ஆனால் தேவனால் எல்லாம் கூடும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:53 pm

6.சோம்பல்

அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் சோம்பல் சொகுசாகத் தொட்டிலாட்டிக் கொல்லும் ஒரு கொடிய பாவமென்று சத்திய வேதாகமம் வெகு திட்டவட்டமாக அறைகூவியுள்ளது. சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும் (நீதி.21:26). சோம்பல் தூக்கிவிழப்பண்ணும். அசதியானவன் பட்டினியாயிருப்பான் (நீதி.19:19). பொல்லாதவனும் சோம்பனுமான... பிரயோஜனமற்றவனுமான இந்த ஊழியக்காரனை புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத்.25:26-30). ஆதலால் தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார் (எபேசி.5:14). நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்கிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (எபேசி.6:11).

பரிசுத்த வேதாகமம் நமது சரீர சோம்பலையும், ஆத்தும சோம்பலையும் கண்டித்துணர்த்தியுள்ளது. ஆவிக்குரிய சோம்பல் நம்மை அழிவுக்குட்படுத்தும். ஆகையால்தான் நாம் அசதியாயிராமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஆவியிலே அனல் உள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்று சத்திய வேதாகமம் பறைசாற்றியுள்ளது (ரோ.12:11). ஆவியிலே அசதியாயிருப்பது ஆண்டவருக்கு விரோதமான பாவமட்டுமல்ல, நமக்கு விரோதமான பாவமாகும். நாம் சோம்பலுற்று காலாகாலங்களில் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் விட்டுவிடும்பொழுது, நமது வளர்ச்சி குன்றிவிடும். நமது முன்னேற்றம் பாதிக்கப்படும். நமது வாழ்வு கெட்டுவிடும். அழிவு ஏற்பட்டுவிடும். அந்தந்தக் காலத்தில் சொல்லவேண்டியதைச் சொல்லி, சிந்திக்கவேண்டியதைச் சிந்தித்து, செயலாற்றவேண்டியதைச் செயலாற்றி வந்தால் நாம் வாழ்வில் முன்னேறுவோம். பிறரையும் வாழச்செய்வோம். நாம் தக்க காலத்தில் தக்க விதமாய் நடந்தால், இச்சீரழிவு நேரிட்டிருக்காதே என்று எத்தனையோ வேளைகளில் நமது சோம்பலைக்குறித்து வருந்திக் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். உழுது பயிர் செய்ய வேண்டிய காலத்தில் உறங்கிக்கிடந்தால், அறுவடைக்காலத்தில் அழுது நிற்கநேரிடும். நன்று செய். அதனை இன்றே செய். நாளை நமது நாளல்ல.

நாம் காலதாமதம் இன்றி உடனடியாகச் செய்யவேண்டிய காரியங்கள் உண்டு. அதி முக்கியமாக நமது ஆத்தும இரட்சிப்பைப் பற்றி நாம் அதிக அக்கறை உள்ளவர்களாய் இருக்கவேண்டும். மறுமையில் மனந்திரும்புதல் இல்லை. நாம இம்மையில் இருக்கும்பொழுதே மனந்திரும்பி, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாகிவிடவேண்டும். இயற்கையாக மாம்சத்தின் பிள்ளைகளாய் இருக்கும் நாம், இம்மையில் இருக்கும்பொழுதே தேவனுடைய பிள்ளைகளாகிவிடவேண்டும். இயற்கையாகப் பாவிகளாகப் பிறந்துள்ள நாம், கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்து, கிறிஸ்துவின் இரத்தப் புண்ணியத்தால் பாவ மன்னிப்புப் பெற்று, இரட்சிப்பின் நிச்சயம் உள்ளவர்களாவிடவேண்டும். இம்மையில் இருக்கும்பொழுதே தேவனுடைய இராஜ்யத்தின் பிள்ளைகளாகிவிடவேண்டும். இவ்வுலகில் இருக்கும்பொழுதே கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக நமது சொந்ததெய்வமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் மறுவுலகில் செல்லும்பொழுது இயேசு இரட்சகர் நம்மை மோட்ச இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளுவார் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்? நாம் இவ்வுலகில் இருக்கும்பொழுதே கிறிஸ்துவோடு வாழாவிட்டால், நாம் மறுஉலகில் பிரவேசித்த பிறகு கிறிஸ்துவோடு வாழ்வோம் என்று எப்படி நம்பிக்கொண்டிருக்கலாம்? எனவே, இம்மையில் இருக்கும் பொழுதே இயேசு கிறிஸ்துவை நமது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வது மகா முக்கியமான காரியமாகும். இதைச் செய்வதற்குச் சோம்பல்பட்டு அசதியுற்று, காலதாமதம் செய்வது ஆபத்தாக முடியும். இந்த ஆபத்து இவ்வுலகத்தோடு நில்லாமல் மறு உலகத்துக்கும் தொடர்ந்து வந்து நித்திய கால ஆபத்தாக வந்து முடியும். ஆகவே இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், வரும் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்? இன்றே இரட்சண்ய நாள், சோம்பல்படாது இன்றே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வோமாக. அசதியுறாமல் உடனே இயேசு இரட்சகரை ஏற்றுக்கொள்வோமாக. அதில் கால தாமதம் செய்து அஜாக்கிரதையாய் இருந்தால், நித்திய காலமாக நித்திய நரக வேதனையை அடைய வேண்டியதிருக்கும். எனவே, சோம்பல் நம்மை எரிநரகத்திற்குள் தள்ளிவிடும்.

போரில் எற்படும் தோல்விகளுக்கும், வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும் ஒரு காரணம் சோம்பல். சோம்பலால், தூக்க மயக்கத்தால் அனுதினமும் அநேக விபத்துக்கள் ஏற்பட்டு அநேகர் உயிர் இழக்கின்றனர். ஆவிக்குரிய போராட்டத்தில் தோல்வி ஏற்படுவதற்கும், ஆவிக்குரிய விபத்து உண்டாவதற்கும் ஒரு காரணம் சோம்பலாகும். ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு! அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார் (எபேசி.5:14).

சோம்பல் சரீர சுகத்தைக்கெடுக்கும். ஆத்தும சுகத்தை அழிக்கும். அஜாக்கிரதையால் அழிவுற்ற மக்கள் அனந்தம் பேர். அவதியால் நாசமுற்ற தேசங்கள் பலபல. அசமந்ததத்தால் வீதிகளிலும், சாலைகளிலும் ஏற்படும் சாவுகள் கணக்கற்றவை. எனவே ஆணவத்தைப்போல் அசதியும் மனிதனைக் கொல்லவல்ல கொடியதாரு பாவமாகும்.

நாம் இவ்வுலகில் இருக்கும்பொழுது ஆவிக்குரிய காரியங்களில் செய்யவேண்டியவைகளைச் செய்யாமல் நிர்விசாரமாய் இருந்தால், நாம் மறுமையில் நரகம் செல்வது நிச்சயம். ஆணவம், கோபம், பொறாமை, வேசித்தனம், காமவிகாரம், கொலைபாதகம், சூனியம், விக்கிரக ஆராதனை, பொய், அவிசுவாசம் போன்ற பாவத்துக்குட்பட்டவர்கள் நித்திய நரக அக்கினியிலே பங்குபெறுவதுபோல், இரட்சிப்பைக் குறித்து நிர்விசாரிகளாய் இருப்பவர்களும் நித்திய நரக ஆக்கினையிலே பங்குபெறுவது திண்ணம். ஆண்டவர் இந்த உண்மையை ஓர் உவமை வாயிலாக நமக்கு விளக்கிக் காட்டியிருக்கிறார். தாலந்து உவமையில்: ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து, ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும், சோம்பனுமான ஊழியக்காரனே: நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால் நீர் என் பணத்தைக்காசுக்காரர் வசத்தில் போட்டு வைக்க வேண்டியதாயிருந்தது. அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபரணமும் அடைவான். இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான் (மத்.25:24-30).



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:54 pm

இந்த உவமையில் ஒரு தாலந்தை வாங்கினவன் இருளிலே தள்ளப்பட்டதற்குக் காரணம் கொலைபாதகமல்ல, விபசாரமுமல்ல, சோம்பலாகும். அவன் செய்யவேண்டியதைச் செய்யாமல், சோம்பலுள்ளவனாய்க் காலத்தை வீணாகக் கடத்தின காரணத்தால் அவன் ஆக்கினை அடைந்தான்.

புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் கலியாண வீட்டிற்குள் பிரவேசிக்க முடியாது போய்விட்டதற்குக் காரணம் வேசித்தனமல்ல, பொய்யும் களவுமல்ல, சோம்பலேயாகும். அவர்கள் தீவட்டிகளோடு எண்ணெயும் கூடக்கொண்டு போவதற்குள் சோம்பல்பட்டு விட்டார்கள். அவர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாய்க் காலா காலத்தில் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டிய எண்ணெயையும் வாங்கி வைத்திருப்பார்களானால், அவர்களும் தாராளமாய்க் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்துக் களிப்படைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய அஜாக்கிரதையின் காரணமாக பிந்தி வந்து: ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்குத் திறக்கவேண்டும் என்று கேட்டபொழுது, ஆண்டவர் உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத்.25:11-12).

அசதி அல்லது சோம்பல் ஆக்கத்தை அழித்துவிடும். தோல்வியைப் புகுத்திவிடும். நஷ்டத்ததை திணித்துவிடும். சோம்பல் புகுந்த இடத்தில் அழிவும் புகுந்துவிடும். படிக்க வேண்டிய காலத்தில் சோம்பலுற்றுப் படிக்காமல் நிர்விசாரமாய் இருக்கிற மாணவர் பரீட்சையில் எப்படி வெற்றி பெற இயலும்? தொழிற்சாலைகளிலோ, கல்விச்சாலைகளிலோ, எந்த அலுவலகங்களிலோ, அசதி ஆட்சி புரிந்தால் அவை வீழ்ச்சியுறுவது அதி நிச்சயம்.

சோம்பேறிகளால் குட்டிச்சுவராய்ப்போன வீடுகள் ஏராளம், நாசமாய்ப்போன நாடுகள் ஏராளம், கெட்டழிந்த குடும்பங்கள் ஏராளம், உடைந்துபோன உள்ளங்கள் ஏராளம், இடிந்துபோன இதயங்கள் ஏராளம்.

இவ்வுலகில் இருக்கும்பொழுது நாம் செய்த பாவங்களுக்கு மாத்திரமல்ல, நாம் செய்யாமல் விட்டுவிட்ட நன்மைகளுக்காகவும், நாம் மறுமையில் நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினை அடைவோம்.

ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும் (யாக்.4:17).

துயருற்ற மனிதனக்கு நாம் சொல்லாமல் விட்ட ஆறுதலுக்காகவும், பாவத்தில் வாழ்கிறவனுக்கு நாம் இயம்பாது விட்ட எச்சரிப்புக்காகவும், அறியாத மக்களுக்காக நாம் இயேசு இரட்சகரைப்பற்றி அறிவிக்காத அஜாக்கிரதைக்காகவும், சோம்பல் காரணத்தால் வியாதியாயிருந்தவனைப் போய்ப் பார்த்து உதவி செய்யாத குற்றத்திற்காகவும், பசியும் பட்டினியுமாயிருக்கிறவர்களையும் கண்ணீரும் கம்பலையுமாயிருப்பவர்களையும் போய்ப் பார்த்து உதவி செய்யாத நிர்விசாரத்திற்காகவும், நாம் கடைசி நாளில் நியாயந்தீர்க்கப்பட்டு நித்திய நரகாக்கினை பெறுவோம். செய்ய வேண்டிய நன்மைகளை யார் யார் அக்கறையோடு செய்யாது விட்டார்களோ அவர்களைப் பார்த்து நியாயத்தீர்ப்பு நாளில் ஆண்டவர்: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதீருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி இவர்கள் நித்திய ஆக்கினையை அடையப்போவார்கள் என்றார் (மத்.25:45-46).

சோம்பல் காரணமாக எத்தனையோ பேர் ஆலயம் சென்று ஆண்டவரை ஆராதிப்பதில்லை. வாரம் முழுவதும் அலுவலகத்தில் ஓயாது வேலை செய்துவிட்டோம். இந்த ஞாயிற்றுக்கிழமையிலாவது கொஞ்சம் தூங்கிக்கொள்ளலாமே என்கிறார்கள். வாரம் முழுவதும் வயிற்றைப் போஷிப்பதற்காக அலுவலம் சென்றவர்கள், இந்த ஞாயிற்றக்கிழமை ஒரு நாளாகிலும் ஆலயம் சென்று ஆத்துமாவைப் போஷிக்காவிட்டால், அவர்களுடைய ஆத்துமா அழிந்துபோகுமே என்பதைப்பற்றி கவலையற்று அசதியாயிருக்கிறார்கள். ஆண்டவர் தாம் மாம்சத்திலிருந்த நாட்களில் அலயத்திற்கு ஒழுங்காகச் சென்றார். அதுபோல் நாமும் ஆலயம் செல்வதற்குச் சோம்பல் படாதிருப்போமாக. ஆலயம் செல்வதில் அசதியாயிருக்கிறவர்கள் தங்கள் ஆத்துமாக்களைப் பட்டினிபோட்டுக் கொல்லுகிறார்கள்.

அநேகர் சோம்பல் காரணமாக ஒழுங்காக ஜெபம் செய்கிறதில்லை. அதிகாலையில் எழுந்து ஜெபம் செய்வதில் அசதியாயிருக்கிறோம். தூக்க மயக்கம் நமது ஜெப வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டது. ஆகையால்தான் ஆண்டவர் நீங்கள் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்று அறிவுரை பகர்ந்துள்ளார். நாம் இடைவிடாமல் ஜெபித்து, கிறிஸ்துவோடு எப்பொழுதும் உறவாடி ஐக்கியப்பட்டிருக்க வேண்டியவர்கள், கொடியானது செடியில் நிலைத்திருப்பதுபோல, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவேண்டும். இந்த அந்நியோன்னிய ஐக்கியம் கொள்ளுவதற்கு, அசதியுற்றால் அழிவது திண்ணம். ஆகையால்தான் பரிசுத்த பவுல்: இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் (1.தெச.5:17) என்று பறைசாற்றியுள்ளார். ஜெப வாழ்க்கையில் நாம் தூங்கிவீழ்ந்தால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் தூங்கிவீழ்ந்து அழிவுக்குட்படும். எனவே, நாம் தூக்க மயக்கத்தை ஒழித்துவிட்டு, சோம்பலை உதறிவிட்டு, விழித்திருந்து எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும். அதிகாலை ஜெபத்தை அசட்டை பண்ணுகிறவர்கள் அதிக அல்லலுறுவார்கள். நமது ஒன்றுமில்லாமையை அறிந்து, ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்து, விசுவாசக்கரம் நீட்டி, கிறிஸ்துவின் ஆவியானவரின் அருளையும், வல்லமையையும் நிரம்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் நிர்விசாரம் கொண்டால் மாண்டுபோவோம்.

இங்கிலாந்து அரசியைப் பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரந்தவறாமல் சென்றுவிடுவோம். அமெரிக்க ஜனாதிபதியைப் பார்ப்பதற்கோ அல்லது இந்திய ஜனதிபதியைப் பார்ப்பதற்கோவென்றால் குறித்த நேரந்தவறாமல் முன் ஆயத்தத்தோடு கவனமாய்ச் சரியான நேரத்திற்குச் சென்றுவிடுவோம். ஆனால் ஆண்டவரைச் சந்திப்பதற்கே சோம்பல் கொண்டு, தூங்கிவிடுகிறோம். ஆண்டவரோடு ஜெபத்தில் அந்நியோன்னியமாவதற்கு அவ்வளவு அசதி! அவ்வளவு அஜாக்கிரதை! அவ்வளவு சோம்பல்!

கர்த்தரோடு பேசுவதற்கு சோம்பல் கொள்ளுகிறதுபோல், கர்த்தர் நம்மோடு பேசுவதைக் கேட்பதற்கும் அவ்வளவு சோம்பல் கொள்ளுகிறோம். கர்த்தருடைய வசனத்தை வாசிப்பதில் எவ்வளவு சோம்பல். தற்கால மக்கள் எதெதையோ வாசிப்பதற்குத் தயங்குவதில்லை. ஆனால் வேதம் வாசிப்பதற்குத்தான் அவ்வளவு அசதி ஏற்பட்டுவிடுகிறது. வேதவாசிப்பில் நமக்கு அக்கறையில்லாவிட்டால் நமது ஆத்துமா பட்டினிகிடந்து செத்துவிடும். நீங்கள் வளரும்படி புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் (1.பேது.2:2). அநேகர் கிறிஸ்தவ ஜீவியத்தில் வளர்ச்சியுறாதிருப்பதற்குக் காரணம், அவர்கள் கர்த்தருடைய வசனத்தை ஒழுங்காய் வாசித்து தியானித்து உட்கொள்ளாதிருப்பதுதான். அவர்கள் கர்த்தருடைய வசனத்தை வாசியாதிருப்பதற்குக் காரணம் சோம்பல்தான். கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. அவர்களுக்கு இடறலில்லை. அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் கர்த்தர் விளம்பின வேதமே நமக்கு நலம். கர்த்தருடைய வேதம் தேனிலும் மதுரமானது. தெளிதேனிலும் தித்திப்பானது. ஆகையால் கர்த்தருடைய வசனத்தைத் தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும் என்று சங்கீதக்காரன் செப்பியுள்ளான். அந்தக் கிறிஸ்தவ விசுவாசிகளின் அகத்திலும் முகத்திலும் அருள், அன்பு, ஆனந்தம் பொங்கி வழிகின்றனவே. அந்த கிறிஸ்தவன் பரிசுத்த கிறிஸ்தவ வெற்றிவாழ்க்கை நடத்துகிறானே. என் வாழ்விலோ எப்பொழுதும் தோல்வி. என் முகத்திலோ எப்பொழுதும் இருள். இதற்குக் காரணம் யாதென்று அதிசயித்துக் கொண்டிருக்கும் நண்பரே! இரகசியம் சொல்கிறேன் கேளும். அவர்கள் சோம்பல் படாமல் தினமும் அதிகாலையிலெழுந்து, வேதம் வாசித்;து கிறிஸ்துவோடு ஐக்கியமாகி அந்த நாளுக்கு வேண்டிய சக்தியையும் ஆசீர்வாதங்களையும், பரிசுத்த வல்லமையையும் விசுவாச கரம் நீட்டி, கிறிஸ்துவிமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆகையால் அந்த விசுவாசிகளுடைய அகத்திலும் முகத்திலும் அருள் பொங்கி வழிகிறது. அவர்கள் வாழ்வு வெற்றி சிறந்து மிளிர்கிறது. ஆனால் நீயோ, அந்த நாளை துவங்குமுன் அந்நாளுக்கு வேண்டிய அசீர்வாதங்களை ஆண்டவரிடமிருந்து பெறவேண்டிய அதிகாலை நேரத்தில் எழும்பி வேதம் வாசித்து ஜெபம் செய்யாது சோம்பல் கொண்டு, தூங்கிக் கிடக்கிறாய். சோம்பல், நீ பெறவேண்டிய ஆசீர்வாதத்தைப் பெறாதபடிக்குத் தடுத்து நிறுத்திவிடுகிறது.



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 3:54 pm

உன் வாழ்க்கையில் எத்தனையோ நபரோடு நீ பழகியுள்ளாய். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் உன்னோடு பழகுகிறார்கள். அவர்களில் எத்தனையோபேர் கிறிஸ்துவைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறியாது நரகம் சென்றால், அதற்கொரு காரணம் உனது சோம்பல்தானல்லவா? நீ அவர்களுக்குக் கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க சோம்பல் கொண்ட காரணத்தாலல்லவோ அவர்கள் நரகம் சென்றுள்ளார்கள். கிறிஸ்துவுக்குச் சாட்சி பகருவதில் உனக்கு எவ்வளவு சோம்பல்! உனக்கு எவ்வளவு நிர்விசாரம். கிறிஸ்துவை பிறருக்குக்கூறி அறிவிப்பதில் நாம் எவ்வளவு அக்கறைகாட்டவேண்டும். இதிலுமா சோம்பல்! நமது சோம்பல் நம்மையும் இன்னும் எத்தனையோ ஆத்துமாக்களையும் எரிநரகத்துக்குள் பிடித்துத் தள்ளிவிடுகிறதே. சுவிசேஷத் திருப்பணியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிற நாம் வழித்தெழும்புவோமாக. ஆத்தும ஆதாயம் செய்வதில் ஆர்வம் கொள்வோமாக. சுவிசேஷத்தைப் பிரங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ என்ற துடிப்புக்கொண்டெழுவோமாக. அவனுடைய காவற்காரர் எல்லாரும் என்றும் அறியாத குருடர். அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள். தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர் (ஏசா.56:19). அசதியாயிராமல் ஐhக்கிரதையாக இருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் (ரோ.12:11).

மனந்திரும்புவதற்குச் சோம்பல். மன்னிப்புப் பெறுவதற்குச் சோம்பல். இரட்சிக்கப்படுவதற்குச் சோம்பல். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்குச் சோம்பல். பரிசுத்தம் அடைவதற்குச் சோம்பல். பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்வதற்குச் சோம்பல். ஜெபிப்பதற்குச் சோம்பல். வேதம் வாசிப்பதற்குச் சோம்பல். இடைவிடாமல் இயேசுவில் நிலைத்திருப்பதற்குச் சோம்பல். சுவிசேஷ ஊழியத்தில் சோம்பல். சாட்சி பகருவதில் சோம்பல். ஆத்தும ஆதாயம் செய்வதில் சோம்பல். ஓர் ஆறுதலான சொல் சொல்லுவதில் சோம்பல். ஒரு சிறு நன்மை செய்வதில் சோம்பல். ஒரு தம்ளர் தண்ணீர் கொடுப்பதற்குச் சோம்பல். ஒரு பிடி அன்னம் கொடுப்பதற்குச் சோம்பல். ஒரு கந்தைத் துணி கொடுப்பதற்குச் சோம்பல். தங்களுக்கு அருமையானவர்களை இழக்க கொடுத்தவர்களுக்கு ஆறுதல்மொழி சொல்வதற்குச் சோம்பல். ஒரு மரியாதைச் சொல் சொல்வதற்குச் சோம்பல். குளிப்பதற்குச் சோம்பல். உடலை சுத்தமாக வைப்பதற்குச் சோம்பல். ஒரு புன்னகை காட்டி ஒரு புண்பட்ட உள்ளத்தைத் தேற்றுவதற்குச் சோம்பல். அதைரியப்பட்டுக் கிடப்போரை ஓர் உற்சாகச்சொல் கூறி ஊக்கப்படுத்தவதற்குச் சோம்பல். ஏழைகளையும், அனாதைகளையும், விதவைகளையும், திக்கற்றோர்களையும் ஆதரிப்பதற்குச் சோம்பல். ஆலயம் செல்வதற்குச் சோம்பல். தசமபாகம் கொடுப்பதற்குச் சோம்பல். ஊர் ஊராய்த் தெருத் தெருவாய் நடந்து சென்று சுவிசேஷத்தைக்கூறி அறிவிப்பதற்குச் சோம்பல். நீங்கள் அசதியாயிராமல் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினதலும், நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம் (எபி.6:11-12).

மார்ட்டின் லூத்தர் ஒர பிரசங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். சாத்தான் ஒரு மாநாடு கூட்டி, தன்னுடைய தூதர்களையெல்லாம் அதற்கு வரவழைத்து, அவர்கள் செய்துவரும் தொண்டுகளைப்பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டான். அப்பொழுது அம்மாநாட்டில் ஒரு பேய் எழுந்து நின்று: கிறிஸ்தவர்களில் சிலர் கூட்டமாக ஒரு வனாந்தரத்தைக் கடந்துகொண்டிருக்கும்பொழுது, நான் காட்டு விலங்குகளை ஏவி அவர்களைக் கொன்றொழிக்குமாறு தூண்டினேன். அவ்வாறே அக்கிறிஸ்தவர்களை அவ்வன விலங்குகள் பீறீப்பட்சித்துப் போட்டன. அவர்களுடைய எலும்புகள் இப்பொழுது வனாந்தரத்தில் உலர்ந்துகொண்டிருக்கின்றன என்று கர்ச்சித்தது. அப்பொழுது சாத்தான் மாறுத்தரமாக: அவர்களுடைய சரீரம் செத்து எலும்புகள் உலர்ந்தால் நமக்கு யாது பயன்? அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான். இன்னொரு பேய் எழுந்து நின்று: கிறிஸ்தவர்கள் குழுமியிருந்த ஒரு கப்பலின்மீது பலத்த காற்று அடிக்குமாறு செய்து, அக்கப்பலை மூழ்கச்செய்தேன் என்றது. அப்பொழுது சாத்தான் அதற்கு விடையாக, அக்கிறிஸ்தவர்கள் கடலில் மூழ்கிச் செத்துப்போனதால் நமக்கு லாபம் என்ன? அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான். மற்றொரு பேய் எழும்பி நின்று: ஒரு மனிதனை ஆத்தும இரட்சிப்பைப்பற்றிக் கவலையற்று நிர்விசாரமாய் இருக்குமாறு, பின்னர் மனந்திரும்பிக் கொள்ளலாமென்றும் பத்து ஆண்டுகளாகச் சோம்பலோடு நிர்விசாரமாய் இருக்குமாறு செய்துவிட்டேன். இப்பொழுது அவன் நம்முடையவன் என்றது. அப்பொழுது சாத்தான் வெற்றிமுரசு கொட்டி, அப்பேயை பாராட்டிப் பெரிதும் அகமகிழ்ந்தான். நரகமும் பேய்கணங்களும் பரித்து ஆரவாரம் செய்தன.

சோம்பல் காரணமாக எண்ணிறைந்த ஆத்துமாக்கள் நரகம் செல்கிறார்கள். நம்மை நரக அக்கினிக் கடலிலே தள்ளும் சோம்பலைக் குறித்து நாம் மிக மிக ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். வெளிப்பார்வைக்கு வெகு அற்பமாகத் தோன்றும் சோம்பல் நம்மையும் நம் சரீரத்தையும் ஆவியையும், ஆத்துமாவையும் அழித்துவிடும் கொடிய பயங்கர பாவமாகும். நாம் உடனே, இன்றே மனந்திரும்பி இயேசு இரட்சகரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொளாதபடி நம்மைத் தடுத்து நிற்பது சோம்பலே. இயேசு இரட்சகரை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாம் நரக ஆக்கினை அடைவது அதிக நிச்சயம் (யோவான் 3:18,36) என்னும் உண்மை நன்கு தெரிந்திருந்தும், அநேகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் சோம்பலே, அசதியே, நிர்விசாரமே, பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற காலதாமதமே, அசமந்தமே, அசட்டையாகும்.

இந்தச் சோம்பல் என்னும் பாவத்தை நாம் நினைத்து மனம் வருந்தி அதை கர்த்தரிடம் அறிக்கையிடுவோமாக. நீ இன்னும் இரட்சிக்கப்படாவிட்டால், இந்த நிமிடத்தில்தானே, இதனைப் படித்துக்கொண்டிருக்கும் போதுதானே இப்புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, மனந்திரும்பி பாவமனஸ்தாபக் கண்ணீரோடு இயேசு கிறிஸ்துவை உனது சொந்த இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக்கொள். இப்பொழுது நீ மனந்திரும்பாவிட்டால், நீ அழிவது திண்ணம். இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போனாமால், தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம் (எபி.2:4)



கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக