புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
15 Posts - 83%
heezulia
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
351 Posts - 79%
heezulia
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
8 Posts - 2%
prajai
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதல் பார்வை: தடம் Poll_c10முதல் பார்வை: தடம் Poll_m10முதல் பார்வை: தடம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: தடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2019 11:11 am

முதல் பார்வை: தடம் Thadam-Movie-Stills-14JPGjfif
-
ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே ‘தடம்’ படத்தின் கதை.

எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார்.

கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிறது.

அப்போது கிடைத்த ஒரு செஃல்பியைக் கொண்டு எழிலைக் கைது செய்கிறது போலீஸ். அதே ஸ்டேஷனில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக கவினும் வந்து சிக்குகிறார். ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இருவரில் யார் கொலையாளி என்று கண்டுபிடிப்பதில் போலீஸ் திணறுகிறது.

இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் (‘பெப்ஸி’ விஜயன்) தனிப்பட்ட முன் பகையின் காரணமாக எழிலை கொலை வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார். உண்மையில் நடந்தது என்ன? ஆகாஷ் கொலையானதற்கான பின்னணி என்ன, குற்றவாளி யார், யாருக்கு தண்டனை கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பரபர பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.

சிக்கலும் குழப்பமும் மிகுந்த ஒரு கொலை வழக்கை போலீஸ் புலனாய்வு செய்யும் விதத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

சவாலான இரட்டைக் கதாபாத்திரங்களில் கச்சிதம் காட்டி ஈர்க்கிறார் அருண் விஜய். நடை, உடை, பாவனைகளிலும் போலீஸாரை எதிர்கொள்ளும் விதத்திலும் அருண் விஜய் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என்று இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் எஸ்.ஐ.ஆக திறமை காட்டி நடிப்பில் மிளிர்கிறார் வித்யா ப்ரதீப். கோபாலகிருஷ்ணன் கேரக்டரில் பெப்ஸி விஜயனும், கவின் நண்பனாக சுருளி கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நிறைவாக நடித்துள்ளனர்.

‘அம்மா அப்படிப்பட்ட பொம்பளை இல்லடா’ என்று மகனிடம் சொல்லும் சோனியா அகர்வாலின் கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் புரியாத புதிர்.

புகை பிடிக்கும் காட்சிகளில் தில்லாக வந்து போகும் மீரா கிருஷ்ணன் கதையின் ஓட்டத்தில் காணாமல் போகிறார்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அருண்ராஜ் இசையில் இணையே உயிர்த்துணையே பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் அருண்ராஜ் டெம்ப் ஏற்றாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார். கவினும் எழிலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் சில்வாவின் உழைப்பு பாராட்டுக்குரியது.

வழக்கம் போல் ரொமான்ஸ் காட்சிகளில் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கொலை வழக்கு முதலில் மந்தமாகச் செல்வது, முழு டீமும் மும்முரமாக இறங்கிய பிறகு வழக்கின் கோணம் மாறுவது, தடயத்தைத் தேடி போலீஸார் அலைவது பின் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து சேர்வது, அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கப் புரியாமல் திணறி நிற்பது என புலனாய்வு செய்யும் விதத்தின் நுட்பங்களை விரிவாகச் சொல்வது படத்தின் பெரும் பலம்.

கவினா, எழிலா யார் குற்றவாளி என்பதில் இருவர் மீதான பிளஸ், மைனஸை அலசிய விதம் படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. திரைக்கதை ட்விஸ்ட்டுகள் அத்தனை முன்முடிவுகளையும் மாற்றும் அளவுக்கு மிக வலுவாக உள்ளது. தீர்ப்புக்குப் பிறகான உண்மையைச் சொன்ன விதத்திலும் இயக்குநர் தனித் தடம் பதிக்கிறார்.

அருண் விஜய் தான்யா ஹோப்பை தேநீர் அருந்தச் செல்லலாமா? என்று கேட்கும் கேள்விகளும் அதற்கான பதிலும் எளிய இனிய கவிதை. அந்த தப்புதண்டா பாடல் மட்டும் காட்சிகளுக்கு இடையே வேகத்தடை. சோனியா அகர்வால் ஏன் சூதாடுகிறார் என்பது குறித்த டீட்டெயில் இல்லை.

அதனால் வரும் பின்விளைவுகளும் அழுத்தமாக இல்லை. முதல் பாதியில் இருக்கும் மந்த நிலையையும் கொஞ்சம் கத்தரி போட்டு சரி செய்திருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தடம் டைட்டிலுக்கு ஏற்றவாறு ‘தடம்’ பதித்துள்ளது.
-
நன்றி
உதிரன், இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக