புதிய பதிவுகள்
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் - Page 2 Poll_c10தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் - Page 2 Poll_m10தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் - Page 2 Poll_c10 
17 Posts - 41%
ayyasamy ram

14 Posts - 34%
mohamed nizamudeen

3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 5%
mini

1 Post - 2%
kavithasankar

King rafi

Barushree

சுகவனேஷ்

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 46%

61 Posts - 40%

7 Posts - 5%

3 Posts - 2%
prajai

2 Posts - 1%

1 Post - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Page 2 of 2 Previous  1, 2

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Wed Feb 27, 2019 6:42 pm

First topic message reminder :

அன்பு நட்பூக்களே பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் வாரத்தில் ஆறு நாட்கள் உங்களை சந்திக்க வந்து விடுவார்கள். இவர்களின் உரையாடலில் ஆரோக்கியம் காப்போம் என்ற தலைப்பில் உடற்பயிற்சி, உணவுபழக்கம், பழங்கால வாழ்வுமுறைக்கும் இன்றைய வாழ்வு முறைக்கும் ஒப்பீடு , பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள், செயல்களும் அதன் எதிர் வினைகளும் காய்கறி பழங்களும் அதன் நன்மை தீமைகளும் என பலவிஷயங்களை கையில் எடுத்து கொள்வார்கள். இதற்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து எதிர்வரும் நாட்களில் தலைப்புக்கள் மாறலாம் எனவே தயவு செய்து இவர்களுடன் பயணம் செய்யும் போது உங்கள் கருத்துக்களை கூற மறவாதீர்கள். இதோ இவர்களை பற்றி ஒரு மினி அறிமுகம்: பாலு தாத்தா அந்தகால பட்டதாரி மனதால் இளைஞர், மாலு பாட்டி அனுபவபட்டதாரி ஜாடிகேத்த மூடி.... நன்றி

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Wed Mar 06, 2019 6:19 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-9
மில்க் தாத்தா மால்ஸ் பாட்டி எங்கே இருக்கீங்க ? என் சவுண்ட் விட்டபடியே துள்ளிக்கொண்டு வந்தாள் சௌமியா ஏய் என்னதிது மரியாதை இல்லாம மில்க்தாத்தா நு கூப்பிடற ? என அவள் அம்மா சகுந்தலா  மிரட்ட ஏன் தாத்தா மட்டும் என்னை சேமியானு கூப்பிடலாம் நான் அவரை மில்க் தாத்தா நு கூப்பிட கூடாதோ? என எதிர் கேள்வி போட

அதுக்கென்ன நீ கூப்பிடாம யார் கூப்பிட போறா பேத்தி பொண்ணு என கொஞ்சியபடியே வந்தார் பாலுதாத்தா வாம்மா சகுந்தலா உக்காரு என்னம்மா விஷயம் ? என கேட்டு கொண்டே வந்தது மாலு பாட்டி

ஒண்ணுமில்லமா நாளைக்கு வாக்காளர் அடையாள அட்டைக்கு முகவரி மாற்றத்துக்காக படிவம்7 குடுக்க சொல்லி இருக்காங்க இறந்துட்ட என் மாமியார் பேர நீக்கவும் அதே படிவம் குடுக்க சொல்லறாங்க ஒண்ணும் புரியல தாத்தா அதான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம் நு வந்தேன்

அதுக்கென்னடியம்மா சொல்லி குடுத்தா போச்சு
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்த வேண்டும். படிவம் - 6 உடன், ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படம் இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்

வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம் அல்லது நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா. - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்-8 ஐ பயன்படுத்த வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்
வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம்.

முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.
அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே / எப்படி விண்ணப்பிப்பது?
மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்), வட்டாட்சியர் அலுவலகம் (துணை வாக்காளர் பதிவு அலுவலர்) ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPICCENTREADDRESS1.pdf இத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://eci-citizenservices.nic.in/default.aspx இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
http://www.elections.tn.gov.in/eregistration/ இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையை http://elections.tn.gov.in/apptrack/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
http://www.elections.tn.gov.in/contacts/ இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.
இவ்வளோதாண்டியம்மா இது போக முகாம் நடத்தும் போதும் விண்ணப்பிக்கலாம்

ஓ அதுனால தான் ஒரே மாதிரி படிவம் குடுத்தாங்களா என சகுந்தலா சொல்ல பாலு தாத்தாவின் விஷய ஞானத்தை கண்டு வாய்பிளந்து நின்றார் மாலு பாட்டி

மால்ஸ் என்னாச்சுடி ஒரு ஈ உன் வாய்க்குள்ளே டூர் போயிட்டு வருது பார் என பாலுதாத்தா கலாய்க்க  இப்போதான் உங்களை பத்தி நல்லதா நினைச்சேன் அதுக்குள்ளே என்ன சீண்டலேனா உங்களுக்கு பொழுதே போகாதே இதத்தான் ஐயோ பாவம் நா ஆறுமாசம் பாவம் கையோட வந்துடும் நு சொல்றது என பாட்டி நொடிக்க சூப்பர் பாட்டி உங்களை மாதிரி பழமொழி சொல்ல யாராலயும் முடியாது என சேமியா பாராட்ட தேவையா உனக்கு இது தேவையா என வடி வேலு ஸ்டைலில் தாத்தா தன்னை நொந்து கொண்டார்

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Thu Mar 07, 2019 9:26 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-10
மாலு பாட்டி மாலு பாட்டி என ஏலம் விட்டு கொண்டே வீட்டுக்குள் வந்தார் நம்ம வரதன் (வத்சலாவோட வீட்டுக்காரர் ) வாப்பா இப்போதான் வரயா? டூரெல்லாம் முடிஞ்சதா ? வத்சு சாவி கொடுக்கும் போது கூட நீ வரதா சொல்லியே? நீ வரது அவளுக்கு தெரியுமா? என கேட்டார் மாலு பாட்டி இல்லபாட்டி அவளுக்கு தெரியாது நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் அதனால நான் சர்பிரைசா இருக்கட்டுமேனு இன்னைக்கே வந்துட்டேன் என சொன்னான் வரது ஓஹோ அதுதான் விஷயமா என சிரித்த மாலு பாட்டி அவ சமைச்சிருக்காளோ என்னவோ தெரியலயே? எதுக்கும் நீ ஆத்துக்கு போய் கொஞ்சம் குளிச்சு தெளிச்சுட்டு வா நான் சூடா சாதம் வெச்சு வைக்கறேன் சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தையானா சந்தியாகாலம் அவளை அழைச்சிண்டு வரத்துக்கே நீ போகலாம் என சொன்னார் மாலு பாட்டி இல்ல பாட்டி உடம்பு வலி, அசதி எல்லாம் இருக்கு வயறு வேற சித்த உப்புசமா இருக்கு பாட்டி நான் இதுல நேத்தி ராத்திரி வேற சாப்பிடல என சொல்ல
அதெல்லாம் உன் முகத்தை பார்த்தாலே தெரியறது என்றார் மாலு பாட்டி

நானே உனக்கு அங்காயப்பொடி சாதமும் ஜீரக ரசமும் தான் போட போறேன் அதுனால மொணமொணனு பேசிண்டு இருக்காம சட்டு புட்டுனு ஆறகாரியத்தை பார் தாத்தா எழுந்திருக்கற நேரம் ஆச்சு அவருக்கும் அதே மெனு தான் அதனால உனக்கு மட்டும் எதோ ஸ்பெசலா பண்ண போறது இல்ல சரியா நாழியாறது சட்டு புட்டுனு வா என சொல்லி விட்டு சமைக்க உள்ளே சென்றார் பாட்டி

சிறிது நேரம் கழித்து வரதன் வரவும் பாலுதாத்தா தூக்கத்தில் இருந்து எழுந்து வரவும் சரியாக இருந்தது ஹலோ டியூட் எப்போவந்தே ? என பாலுதாத்தா நலம் விசாரிக்க இப்போதான் வந்தேன் டியூட் என பதில் சொன்னான் வரது என்ன இன்னைக்கு உங்களுக்கும் பத்திய சமையலாமே? என வரது பாலுத்தாத்தாவை வம்பிழுக்க ஒண்ணுமில்லடா நம்ம கமலி இருக்காளோனோ அவ நேத்தைக்கு அடையும் வெண்ணையும் குடுத்தா அடை ரொம்ப நன்னா இருந்ததா நிறையா சாப்பிட்டுடேன் செமிக்கலை இது மாலு கிழவிக்கு தெரிஞ்சு போச்சு உடனே வயத்துக்கு ஆகாதுனு பத்திய சமையல் பண்ணிட்டா இப்போதான் நீ வந்துட்டேல உன்னை சாக்கா வெச்சு ஒரு பிடி பிடிசிற மாட்டேன் என பொங்க

ஸாரி டியூட் Y BLOOD SAME BLOOD எனக்கும் இன்னைக்கு வயறு வேற சித்த உப்புசமா இருக்கு ஸோ எனக்கும் பத்திய சமையல் தான் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஆமா அது என்ன சொன்னீங்க நம்ம கமலியா அது உங்க கமலி அப்புறம் என்ன மாலு கிழவியா ? ரொம்ப ஏத்தம் தான் டியூட் உங்களுக்கு பாட்டி காதுல விழுந்தது அப்புறம் என்ன நடக்கும் நு மறந்து போச்சா ? என வரது மிரட்ட அவளோதான் தாத்தா பொங்கிட்டார் என்னடா பண்ணுவா ஒருதரம் இல்ல நூறுதரம் சொல்லுவேன் கிழவி நு யார் என்னை என்ன கேக்க முடியும் ? அவ்ளோ ஏன் போஸ்டர் கூட அடிச்சு ஓட்டுவேன் என்ன பண்ணிடுவா அந்த கிழவி என சொல்ல தாத்தா பாத்து பின்னால என வரது தந்தியடிக்க புரிந்து கொள்ளாத தாத்தா மேலும் மாலு பாட்டி இமேஜை டேமேஜ் பண்ண இதெயல்லாம் கேட்டு கொண்டு தாத்தாவின் பின்னால் இருந்து முன்னால் வந்த மாலு பாட்டி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தாத்தாவையும் வரதனையும் சாப்பிட அழைத்தார்

பாட்டி அந்தபுறம் போன பின் டேய் அவ பின்னாடி நிக்கறானு சொல்றதுக்கு என்ன? என வரதனிடம் காய ஏன் தாத்தா நாந்தான் பின்னால பாத்து பின்னால பாத்து நு ஜாடையா சொன்னேனே நீங்க புரிஞ்சுக்கல அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ?என அசல்ட்டாக கேட்டான் வரது அடப்பாவி உன் ஜாடை பேச்சுல தீய வைக்க இன்னைக்குனு பாத்து மாட்டிகிட்டேன்னே என்னை காப்பாத்த என் வானரபடை கூட இல்லையே எல்லாம் பரிட்சையில பிசியா இருக்குதே என புலம்பிய வண்ணம் சாப்பிட போனார்

இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த மாலு பாட்டி வரது இதுல கொஞ்சம் அங்காய பொடியும் அதோட செய் முறையும் இருக்கு அதை வத்சுகிட்ட கொடுத்துடு என சொல்ல
ஏன் பாட்டி நீங்களே கொடுத்துடுங்களேன் என நழுவ முயன்றான் வரது இல்ல வரது தாத்தா காலேல பாத்ரூம் ல கால் தடுக்கினுட்டார் பார்த்தியா முகம் கை கால் எல்லாம் நன்னா வீங்கிருக்கு சாயங்காலமா டாக்டர் கிட்ட கூட்டிண்டு போணும் என சொல்ல ஆமாம் பாட்டி முகம் கை கால் எல்லாம் நன்னா வீங்கிருக்கு தான் எதுக்கும் நீங்க டாக்டர் கிட்ட கூட்டிண்டு போயிட்டு வாங்கோ எதாவது உதவி வேணுமினா என்னை கூப்பிடுங்கோ என எடுத்து கொடுக்க டேய் நீ வரதனா? இல்ல நாரதனா? என பல்லை கடித்தார் தாத்தா

எப்படியும் இன்னைக்கு தாத்தாவுக்கு உடம்பு வீங்கற அளவுக்கு அடி உறுதி அது தெரிஞ்சு போச்சு
என்னது தாத்தா ஐயோ பாவமா? ஹலோ சகோஸ் அவங்க பஞ்சாயத்து நமக்கு எதுக்கு வாங்க பாட்டியோட அங்காய பொடி செய் முறையும் அதன் பலன்களையும் பாப்போம்

தாத்தாவை நாளைக்கு வந்து பாப்போம்
அங்காயப்பொடி

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் - தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், நெய் - தலா அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு - 3 கிராம்.
செய்முறை: கடாயைக் காயவைத்து, நெய் விட்டு, வற்றல்கள், வேப்பம்பூ, மிளகு, சீரகம், காயம் இவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியே போட்டு வாசம் வர வறுத்து, தட்டில் தனியாக வைக்கவும்.
வறுத்த பொருட்கள், இந்துப்பு சேர்த்து நன்கு பொடித்து, டப்பாவில் எடுத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்த அங்காயப்பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டியதுதான்.

பலன்கள்:
செரிமானத்துக்கு உற்ற நண்பன், இந்தப் பொடி.
மாசுபட்ட தண்ணீர் அல்லது உணவினால், செரிமானம் பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்தப் பொடி கட்டுப்படுத்தும். வயிறு தொடர்பான உபாதைகள் சரியாகும். இந்தப் பொடியைப் போட்டுச் சாப்பிட்டால், உடம்பு வலி, அசதி எல்லாம் பறந்துவிடும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 07, 2019 10:50 pm

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Fri Mar 08, 2019 1:46 pm

Dr.S.Soundarapandian wrote:சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1294270நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 08, 2019 3:01 pm

இந்த தொடரில் மருத்துவக்குறிப்புகள் மட்டும் இருந்தால் தலைப்புக்கு தக்கபடி இருக்கும்.

மற்றபடி பதிவு  # 11 தேர்தல் பெயர் சேர்த்தல் விண்ணப்பங்கள் போன்றவையை இதில் சேர்க்கவேண்டாம். அவைகளை பொது பகுதியிலோ அல்லது சுற்று சூழல் பகுதியிலோ பதிவிடவும்.

@ANUBAMA KARTHIK 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Fri Mar 08, 2019 4:48 pm

சரி ஐயா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக