புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
91 Posts - 67%
heezulia
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
3 Posts - 2%
prajai
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
1 Post - 1%
sram_1977
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
1 Post - 1%
nahoor
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
145 Posts - 74%
heezulia
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
8 Posts - 4%
prajai
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
3 Posts - 2%
Barushree
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நீதி மன்ற துளிகள். Poll_c10நீதி மன்ற துளிகள். Poll_m10நீதி மன்ற துளிகள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற துளிகள்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:25 pm

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:31 pm

புது டில்லி;- டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு டில்லி ஆம்ஆத்மி அரசு மற்றும் துணைநிலை கவர்னருக்கு இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பது தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு சார்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் துணைநிலை கவர்னருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக 2018 ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.இதில், டில்லியில் நிலம், போலீஸ் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் டில்லி அரசுக்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய முடியாது எனக் கூறி நீதிபதி சிக்ரி, துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்றார். நீதிபதி பூஷண், டில்லி அரசுக்கே அதிகாரம் என மாறுபட்ட தீர்ப்பை வாசித்தார். இதனால் டில்லி அரசு - துணைநிலை கவர்னர் இடையேயான யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது.டில்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை கவர்னர் - முதல்வர் இடையேயான மோதல் தீவிரடைந்து வருகிறது. கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் யூனியன் பிரதேச அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:34 pm

பெங்களூர்: தன்னை பணியிடை நீக்கம் செய்தது தொடர்பாக, சட்டசபை சிறப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சட்டசபை செயலர் மூர்த்தி தாக்கல் செய்த மனு தொடர்பாக, சபாநாயகர், சட்டசபை சிறப்பு வாரியத்துக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில் 2016, 2017ல் சட்டசபை கூட்ட ஏற்பாடுகள் செய்தது; சட்டசபை அமைச்சகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.எனவே, சபாநாயகர் ரமேஷ்குமார் சிபாரிசுபடி, சட்டசபை செயலர் மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, சட்டசபை சிறப்பு ஆணையம், 2018 டிச., 27ல், உத்தரவு பிறப்பித்தது.முறைகேடு குற்றச்சாட்டு குறித்து, விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், தன்னை பணியிடை நீக்கம் செய்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மூர்த்தி மனு செய்திருந்தார்.இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், சபாநாயகர் ரமேஷ்குமார், சட்டசபை சிறப்பு வாரியம், தற்காலிக செயலருக்கு, நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:36 pm

திருச்சி: முதல்வர் குறித்து, அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மார்ச், 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, திருச்சி, முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை உடைந்ததை பார்வையிட வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்., மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.இதையடுத்து, திருச்சி அரசு வக்கீல் சம்பத், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், ஸ்டாலின் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று ஸ்டாலின் ஆஜராக உத்தரவிடப்பட்டது.ஆனால், ஸ்டாலின் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல், 'ஸ்டாலின் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், ஆஜராக முடியவில்லை' என, மனு செய்தார். இதை ஏற்ற நீதிபதி குமரகுரு, 'மார்ச், 8ம் தேதி ஸ்டாலின் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:37 pm

மதுரை: தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரக் கோரிய வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வக்கீல், மணவாளன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:சேவை பெறும் உரிமைச் சட்டம், ம.பி., பீஹார், டில்லி, பஞ்சாப், கேரளா, கர்நாடகா உட்பட, பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளது.இச்சட்டப்படி, மாநில அரசு அளிக்கும் சேவைகளை, குறிப்பிட்ட காலத்தில் மக்கள் பெற முடியும். சேவையை வழங்கத் தவறும் அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகுக்கிறது.இச்சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், 'சகாலா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, சேவை பெற விண்ணப்பிக்கும் மக்கள், மனுவின் நிலையை, இணையதளம் மூலம் அறிய முடியும்.உரிய காலத்தில் சேவை அல்லது பதில் அளிக்க தவறும் அலுவலர்களுக்கு, 20 முதல், 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். விண்ணப்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, மனுதாரர்களின் அலைபேசிக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.தமிழக அரசுத் துறைகளில், சேவைகளை மக்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது, லஞ்சம், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.தமிழகத்தில் சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வந்தால், பிறப்பு, இறப்புச் சான்று, வருமானச் சான்று, ரேஷன் கார்டு, பட்டா, மின் இணைப்பு பெறுவது உட்பட பல்வேறு சேவைகளை, உரிய காலத்தில் மக்கள் பெற முடியும். சேவை அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வர, தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்து, தமிழக சட்டத் துறை செயலர், உள்துறை செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, மார்ச் 6க்கு ஒத்திவைத்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:39 pm

புதுடில்லி: தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.தற்போது சுஷில் சந்திரா, நேரடி வரிகள் ஆணைய தலைவராக(CBDT) உள்ளார். ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1980ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஆர்எஸ்(வருமான வரித்துறை) அதிகாரி ஆவார். 2016 நவம்பரில் சிபிடிடி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவரது பதவிக்காலம் ஒராண்டு நீட்டிக்கப்பட்டது. வரும் மே 31ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சுஷில் சந்திரா தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.3 பேரை கொண்ட தேர்தல் கமிஷனில், தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா உள்ளார். மற்றொரு கமிஷனராக அசோக் லவாசா உள்ளார்.மார்ச் முதல்வாரத்தில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:41 pm

சென்னை: தமிழகம் முழுவதும், விவசாய நிலத்தில், எத்தனை மதுபான கடைகள், 'பார்'கள் உள்ளன என்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் தாக்கல் செய்த மனு:மயிலம்பாடி கிராமத்தில், விவசாயம் தான் பிரதானம். இந்த கிராமத்திலும், அதை சுற்றியுள்ள கிராமங்களிலும், ௧,௦௦௦ குடும்பங்கள் உள்ளன. திடீரென, இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், மதுபான கடை திறக்கப்பட்டது.வேறு இடத்தில் உள்ள கடையை, எங்கள் பகுதிக்கு மாற்றி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மதுபான கடையை, விவசாய நிலத்திற்கு மாற்ற, கலெக்டர் அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. எனவே, கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. விவசாய நிலத்தில் உள்ள மதுபான கடையை, உடனடியாக மூடி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மாநிலம் முழுவதும், விவசாய நிலங்களில், எத்தனை மதுபான கடைகள் மற்றும் பார்கள் உள்ளன என்ற விபரங்களையும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், ௨௦ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:42 pm


புது டெல்லி;= தொலை தொடர்பு சேவைகளுக்காக, 'எரிக்சன்' நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில், 550 கோடி ரூபாயை வழங்க, அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த தொகையை அம்பானி நிறுவனம் செலுத்தாததால், எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:31 pm

அருமை தொடருங்கள் .

 ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 7:52 pm

புதுடில்லி: சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தகுதியானோரை நியமிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம், நேற்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தகவல் உரிமை ஆர்வலர், அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அதில், 'சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம், எஸ்.ஐ.சி., எனப்படும், மாநில தகவல் ஆணையங்களில் உள்ள பதவிகள் காலியாக இருப்பதால், 23 ஆயிரத்து, 500 தகவல் உரிமை மனுக்களும், புகார்களும், பதில் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு பின்பற்றப்படும் நடைமுறைப்படி, தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு உரிய அதிகாரியை தேர்ந்தெடுக்கவேண்டும்.சி.ஐ.சி.,மற்றும்எஸ்.ஐ.சி.,அமைப்புகளில்உள்ளகாலிஇடங்களை,ஆறுமாதங்களில்நிரப்பவேண்டும்.இதற்கானநடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் எடுக்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக