ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:24 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


தண்ணீரும் நஞ்சாகலாம்.

2 posters

தண்ணீரும்   நஞ்சாகலாம். Empty தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by Guest Sat Feb 16, 2019 4:14 pm

நாம் குடிக்கும் பச்சைத் (H2O ) தண்ணீர் இது இலகு தண்ணீர் (Light Water), தவிர அரை கன நீர்- Semiheavy water (protium (1H) - HDO) , கன நீர் (deuterium oxide,2H2O,/ D2O) ,சுப்பர் கன நீர் ( super-heavy water T2O (3H2O) ) (Tritiated water - tritium(3H) என்பதால் கதிர்வீச்சு கொண்டது.) என தண்ணீரில் உள்ள ஹைட்ரஜின் அணுக்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.

தண்ணீரும்   நஞ்சாகலாம். 360px-Hydrogen_Deuterium_Tritium_Nuclei_Schmatic-en.svg

கன நீரை (Heavy Water)  1931 இல் ஹரல்ட் சி .ஊரே என்பவர் கண்டு பிடித்தார்.

தண்ணீரும்   நஞ்சாகலாம். H2O-and-D2O

எந்த ஓர் அணுவானாலும் அதில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருக்கும். ஹைட்ரஜன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஹைட்ரஜன் அணுவை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான அணுக்களில் மையக் கருவில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அதை ஓர் எலக்ட்ரான் சுற்றி வரும்; நியூட்ரான் இராது. இவ்விதமான இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் வேதியல் ரீதியில் பிணையும் போது அது தண்ணீர் ஆகிறது. இதை H2O என்று குறிப்பிடுவர்.

அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் மையக் கருவில் புரோட்டானுடன் சேர்ந்து ஒரு நியூட்ரானும் இருக்கும். ஆகவே இதற்கு கன ஹைட்ரஜன் அணு என்று பெயர். சாதாரணத் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கே கன ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். பத்து லட்சம் ஹைடரஜன் அணுக்களில் 152 அணுக்கள் மட்டுமே கன ஹைட்ரஜன் அணுக்களாக இருக்கும்.

ஆனால் தண்ணீரில் அடங்கிய ஹைட்ரஜன் அணுக்களில் 99.75 சதவிகிதம் கன ஹைட்ரஜனாக இருக்கும்படி செய்ய முடியும் -இப்படிச் செய்து கன நீரை உற்பத்தி செய்கிறார்கள். கன நீருக்கு Deuterium என்ற பெயரும் உண்டு. இதை D2O என்று குறிப்பிடுவர்.

ஒரு லிட்டர் சாதாரணத் தண்ணீரின் எடை ஒரு கிலோ. ஆனால் ஒரு லிட்டர் கன நீரின் எடை 1.1056 கிலோ - கன நீருக்கு பொருத்தமான பெயர் தான்.  கன நீர் என்பது விசேஷ ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. கொதி நிலை 101.4 டிகிரி செல்சியுஸ்

உலகின் முதலாவது கன நீர் ஆலை 1940களில் நார்வே நாட்டில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் கன நீரைத் தயாரித்து வந்த ஒரே நாடு அது தான். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்க விரும்பியது.

ஆகவே ஹிட்லர் எப்படியாவது நார்வேயின் அந்த கன நீர் ஆலையைக் கைப்பற்ற முயன்றார். அதை முறியடிப்பதில் பிரிட்டிஷ் படைகளும் நார்வேயின் தேசபக்த வீரர்களும் நடத்திய போர் வீரம் செறிந்தது. சினிமாப் படம் கூட எடுத்திருக்கிறார்கள்.

சாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளில் கன நீரைப் பயன்படுத்துவர். அதன் மூலம் புளூட்டோனியத்தைப் பெற முடியும். புளூட்டோனியத்தைக் கொண்டு அணுகுண்டு செய்ய இயலும்.

மாறாக, செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் இலகு நீர் பயன்படுத்தப்படுகிறது. கூடன்குளத்திலும் இப்படித்தான்.

இந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவிய அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் சாதாரண யுரேனியம் இடம் பெறுவதால் கன நீர் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி உட்பட இந்தியாவில் பல இடங்களில் கன நீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கன நீர் உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவின் முதலாவது கன நீர் ஆலை 1962 இல் நாங்கலில் தொடங்கப்பட்டது.

(அறிவியல் ஆர்வத்தை தூண்டிய ராமதுரை ஐயாவுக்கு சமர்ப்பணம். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவர் நோய்வாய்ப்பட்டு இறந்த துயரச் செய்தி அவர் குடும்பத்தினர் வழியாக தற்போதே தெரிந்து கொண்டேன்.)

avatar
Guest
Guest


Back to top Go down

தண்ணீரும்   நஞ்சாகலாம். Empty Re: தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by T.N.Balasubramanian Sat Feb 16, 2019 5:21 pm

ஹெவி வாட்டர் பற்றிய தகவலுக்கு நன்றி.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32963
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

தண்ணீரும்   நஞ்சாகலாம். Empty Re: தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 6:04 pm

இது வரை H2O பற்றியே பேசிக் கொண்டு இருந்த நமக்கு D2O பற்றிய அறிவியல்
உண்மையை விளக்கி கூறிய சக்திக்கு
நன்றி...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

தண்ணீரும்   நஞ்சாகலாம். Empty Re: தண்ணீரும் நஞ்சாகலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை