ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

Admins Online

அரசியல் துளிகள்.

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அரசியல் துளிகள். Empty அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:46 pm

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:49 pm

புதுச்சேரி : கிரண்பேடி வெறும் போஸ்ட் ஆபீஸ் மட்டும் தான் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக நேற்று முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கிரண்பேடிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் போஸ்ட் ஆபீஸ் மட்டும் தான். அமைச்சரவை அனுப்பும் கோப்புக்களில் கையெழுத்திடுவது தான் அவரின் வேலை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் தலையிட அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் அரசில் பிரச்னையை உருவாக்க பிரதமரால், கிரண்பேடி தூண்டி விடப்படுகிறார் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிரண்பேடி டில்லி புறப்பட்டு சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, எங்களுடன் போராட்டத்திற்கு பயந்து தான் கிரண்பேடி வெளியேறி உள்ளார். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நிலுவையில் உள்ள 39 கோப்புக்களுக்கு ஒப்புதல் பெறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:51 pm

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில் படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள். கடந்த முறை ப்ளஸ் 2 படித்த பிரதமரை தேர்வு செய்தது போல் மீண்டும் தவறு செய்து விடாதீர்கள் என ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.எதிர்க்கட்சிகள் நேற்று (பிப்.,13) நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், கடந்த முறை ப்ளஸ் 2 படித்தவரை நாட்டின் பிரதமர் ஆக்கி விட்டீர்கள். இந்த முறையும் அதே தவறை செய்து விடாதீர்கள். படித்தவரை பிரதமராக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் ப்ளஸ் 2 பாஸ் செய்தவரால், அவர் போடும் கையெழுத்துக்களால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:51 pm

மோடி அரசை வேரறுக்கவே இந்த தர்ணா போராட்டம். 2011 ம் ஆண்டு ஏப்ரல் 4 ஜந்தர்மந்தரில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு பிறகு அன்றைய அரசு அகற்றப்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை வெளிவந்தால் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும்.
மேற்குவங்கத்தில் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மோடி வீட்டு சொத்து இல்லை. அங்கு கமிஷனரை கைது செய்தால் அதற்கு பிறகு நாட்டில் உள்ளவர்களுக்கு மாநில அரசு மீது பயம் இருக்காது. மோடி அரசு மீதே பயம் இருக்கும். மோடி ஒன்றும் பாக்., பிரதமர் இல்லை. பாக்., பிரதமரை போல் நினைத்துக் கொண்டு டில்லியையும், காங்., ஐயும் மோடி விமர்சித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மோடியும், அமித்ஷாவும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர். பா.ஜ.,வை வீழ்த்த நாங்கள் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:55 pm

புதுடில்லி : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் 30 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:56 pm

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம். இதற்குக் காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை(பிப்., 15) ஸ்ரீநகர் செல்ல உள்ளார். இதற்காக தனது பாட்னா பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் கேட்டறிந்தார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 7:58 pm

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது, பெண் அமைச்சர் இடுப்பில் கை வைத்து, பா.ஜ., அமைச்சர், ஆபாசமாக நடந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திரிபுராவில், பா.ஜ.,வை சேர்ந்த, பிப்லப் தேவ், முதல்வராக உள்ளார். இங்கு, அகர்தலா நகரில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.மேடையில், பா.ஜ.,வை சேர்ந்த இளைஞர் விவகாரத்துறை அமைச்சர், மனோஜ் காந்தி தேவ், 47, தன் அருகில் நின்றிருந்த, சமூக நலத் துறை அமைச்சரும், பழங்குடியினத்தை சேர்ந்தவருமான, சந்தனா சக்மா, 32, இடுப்பில் கை வைத்தார்.இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.'பிரதமர், முதல்வர் முன்னிலையில், பெண் அமைச்சரிடம் ஆபாசமாக செயல்பட்ட, அமைச்சர், மனோஜ் காந்தியை பதவி நீக்கம்செய்யவேண்டும்'என,எதிர்க்கட்சிகளானஇடதுமுன்னணிவலியுறுத்தியது.இந்த சம்பவம் பற்றி கருத்து கூற, அமைச்சர் மனோஜ் காந்தி மறுத்துள்ளார். இருப்பினும், 'அமைச்சர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், இடது முன்னணி செயல்பட்டு வருகிறது' என, ஆளும், பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 8:07 pm

வால்சாத்: குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் கன்னத்தில், பெண் தொண்டர் ஒருவர் முத்தம் கொகுஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டார். அவர் மேடை ஏறிய உடன் நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பெண் நிர்வாகிகள் சிலரும் மேடையேறினர். அப்போது பெண் ஒருவர், ராகுல் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதனை, ராகுலும் சிரித்தவாறு ஏற்று கொண்டார். முத்தம் கொடுத்த பெண்ணின் பெயர் காஷ்மீராபென். அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது.இது குறித்து காஷ்மீரா பென் கூறுகையில், சூரத் பகுதியை சேர்ந்த நான் கட்சியில் 48 ஆண்டுகளாக உள்ளேன். ராகுலின் நலம் விரும்பி. நானாகத் தான், அவருக்கு முத்தம் கொடுத்தேன். இதற்கும், காதலர் தினத்திற்கும் தொடர்பு இல்லை. ராகுல் எனது சகோதரர் போன்றவர். அவர் இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமர் ஆக வேண்டும் என விரும்புகிறோம். தேர்தலுக்கு பின் அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் ராகுல் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என உறுதி அளித்தோம். இதன்படி, 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்த பின்னர் அதனை செய்துள்ளோம். சத்தீஸ்கர் அரசு விவசாயிகளின் நிலத்தை திருப்பி கொடுத்தது. பிரதமர் மோடி, தனது பணக்கார நண்பர்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார். விவசாயிகள் குரலை யாரும் ஒடுக்க முடியாது. ரூபாய் நோட்டு வாபஸ் மூலம் குஜராத் தொழிலதிபர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது. நேர்மையான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வருமான உறுதியளிப்பு திட்டத்தை அமல்படுத்தி, தினசரி பதினேழு ரூபாயை விட அதிகமான பணத்தை ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம் என்றார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 8:12 pm

சென்னை: தமிழக சட்டசபையின் கடைசி நாளான இன்று, ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பரிசுக்காக நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய பதில் திருப்தி அளிக்காததால் திமுக எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 8:13 pm

யவத்மால்: மஹாராஷ்டிர மாநிலம், யவத்மாலில், இரண்டாவது மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை, முதல் மனைவியும், தாயும், பொது இடத்தில் அடித்து, உதைத்தனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜு நாராயண் தோட்சம், தன், 42வது பிறந்த நாளையொட்டி, விளையாட்டு நிகழ்ச்சியை, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அப்போது, அவரது இரண்டாவது மனைவி பிரியாவும் உடன் இருந்தார்.அப்போது, ராஜுவின் முதல் மனைவி அர்ச்சனாவும், ராஜுவின் தாயும், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர் களுடன் அங்கு வந்தனர். பிரியாவை, அர்ச்சனாவும், அவரது மாமியாரும் சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க முயன்ற ராஜுவுக்கும் உதை விழுந்தது.'பழங்குடியினத்தை சேர்ந்தவரும், பள்ளி ஆசிரியையுமான, அர்ச்சனா வுக்கு நீதி வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள, ஸ்வவலம்பன் சமிதி என்ற, பழங்குடியின அமைப்பு தலைவர், கிஷோர் திவாரி கூறுகையில், ''எம்.எல்.ஏ., ராஜு, தன் முதல் மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் நியாயம் வழங்க வேண்டும். ''இரு நாட்களில் அவர் திருந்தாவிட்டால், பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிடுவோம்,'' என்றார்.பா.ஜ., பழங்குடியினர் பிரிவு நிர்வாகியான, அங்கித் மைதான் கூறியதாவது:முதல் மனைவியையும், இரு குழந்தைகளையும் நடுத்தெருவில் தவிக்க விட்டு, இரண்டாவது மனைவியுடன், ராஜு, கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. முதல் மனைவிக்கும், அவரது குழந்தைகளுக்கும், வாழ்வாதாரத்துக்கு, அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்.இதற்கு உரிய பதில் அளிக்காவிட்டால், விரைவில், பிரதமர் நரேந்திர மோடி, யவத்மால் மாவட்டத்துக்கு வரும்போது, இது குறித்து புகாரளிப்போம். பிரதமர் அமர்ந்திருக்கும் மேடையில், ராஜுவை ஏற விடமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Thu Feb 14, 2019 8:16 pm

புதுடில்லி: ''பொய், அச்சுறுத்தல், சகிக்க முடியாத வகையில் சத்தமாக பேசுதல் ஆகியவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தத்துவங்கள்,'' என, காங்., மூத்த தலைவர், சோனியா குற்றஞ்சாட்டி உள்ளார்.டில்லியில் நேற்று, காங்., பார்லிமென்ட் கட்சி பொது குழு கூட்டத்தில், சோனியா பேசியதாவது: நாடு முழுவதும், சச்சரவுகளும், அச்சுறுத்தலுமாக காணப்படுகிறது. விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை, புதிய நம்பிக்கையுடனும், தீர்க்கமாகவும் சந்திப்போம். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காங்.,கிற்கு கிடைத்தவெற்றி, புதிய நம்பிக்கையை தந்துள்ளது. நம் எதிரிகள், தங்களை வெல்ல முடியாதவர்களாக தம்பட்டம் அடித்தனர். காங்., தலைவர், ராகுல், லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி, புதிய உத்வேகத்துடன் தேர்தலை சந்தித்தார். எதிரிகளின் கோட்டைகளாக கருதப்பட்ட மாநிலங்களில், காங்., சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை தகர்க்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.மத்திய அரசு அமைப்புகளில், அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர். எதிர்ப்பு குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமான, பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. பொய், அச்சுறுத்தல், சகிக்க முடியாத வகையில் சத்தமாக பேசுதல் ஆகியவை, மத்திய அரசின் தத்துவங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by T.N.Balasubramanian on Thu Feb 14, 2019 8:34 pm

அரசியல் துளிகள். 3838410834 அரசியல் துளிகள். 103459460


 ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26738
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by ayyasamy ram on Thu Feb 14, 2019 9:29 pm

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்
42 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரர்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால்,
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:40 pm

சென்னை: முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, சாதனை மலர், குறும்படம், முதல்வரின் பொன்மொழிகள்,காலப்பேழைபுத்தகம்ஆகியவை,நேற்றுவெளியிடப்பட்டன.இ.பி.எஸ்., அரசு பொறுப்பேற்று, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், 'சாதனைகள் ஈராண்டு, தொடரும் பல்லாண்டு' என்ற தலைப்பில், இரண்டாண்டு சாதனை மலர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், முதல்வர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு; சட்டசபையில் பேசிய உரைகளின் தொகுப்பு; முதல்வரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி, நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.புத்தகங்களை, முதல்வர் வெளியிட்டார்; துணை முதல்வர், பன்னீர்செல்வம் பெற்றார். அரசின் இரண்டாண்டு சாதனைகளின் குறும்படத்தை, செய்தித் துறை அமைச்சர், ராஜு பெற்றார். காலப்பேழை புத்தகத்தை, முதல்வர் வெளியிட, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் பெற்று கொண்டார்.விழாவில், அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, மாலை அணிவித்தனர். அதன்பின், அனைவரும் அமர்ந்து, அரசின் சாதனைகளை விளக்கும் குறும்படத்தை பார்த்தனர். செய்தித் துறை செயலர், வெங்கடேசன் வரவேற்றார். இயக்குனர், சங்கர் நன்றி கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் on Sat Feb 16, 2019 7:43 pm

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடந்தது.இதில், ஆளும் கட்சி அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, டிச., 13ல், முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். அவருடன், முகமது அலி மட்டும், உள்துறை அமைச்சரானார். இருவரை தவிர, வேறு யாரும் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. புதிய ஆட்சி அமைந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அமைச்சரவை விரிவுபடுத்தப்படாதது, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிட நிபுணர்கள் ஆலோசனைப்படி, அமைச்சரவை விரிவாக்கத்தை, சந்திரசேகர ராவ் காலம் தாழ்த்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், வரும், 19ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும், தெலுங்கு காலண்டரின்படி, மகா சுதா பவுர்ணமி தினம் என்பதாலும், அன்று, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய,சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக, கவர்னர் நரசிம்மனை சந்தித்து, பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலை, அவர் அளித்துள்ளதாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மொத்தம், 119 சட்டசபை உறுப்பினர்களை உடைய, தெலுங்கானா மாநிலத்தில், அமைச்சரவையில், அதிகபட்சமாக, 17 பேர் இடம்பெற முடியும்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4454
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அரசியல் துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum