ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

3 posters

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:48 pm

வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

கள் - பன்மை விகுதிக்கு வலிமிகுமா, மிகாதா என்னும் ஐயங்கள் அனைத்துக்குமான விடைகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவற்றைப் பின்பற்றுக.
**
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ? என்று எப்போது நிலைக்கூற்று எழுதினாலும் அது நூற்றுக்கணக்கில் விருப்பங்களையும் பின்னூட்டங்களையும் ஈட்டித் தரும். அப்படித் தீரவே தீராத இடர்போல் இது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.

எனக்கு வந்த உள்பெட்டி ஐயங்களில் இதைமட்டுமே நூற்றுக்கணக்கானோர் கேட்டிருப்பார்கள். நானும் பதில்சொல்லி ‘ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துப் பசுபதிபோல் பஞ்சாசனத்தில் களைத்துச் சாய்ந்துவிட்டேன். எதற்கும் இருக்கட்டுமென்று ‘கள்’ விகுதிக்கு வலிமிகுமா மிகாதா என்று தெளிவாகத் தொகுத்து விளக்கிவிடுகிறேன்.

வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:48 pm

கள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எவையுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதிகள் தெளிவாக இருக்கின்றன.

வாய்மொழி உச்சரிப்பின்படி எழுதுவது ஏற்புடையதன்று என்பதை முதற்கண் ஏற்றுக்கொள்ளுங்கள். வாய்மொழி அளவீடு என்றால் ல,ழ,ள வேறுபாடு கற்பித்து எழுத இயலாது. மேலும் வாய்மொழியின்படி எழுதுவது கொச்சை மொழி என்றே அறியப்படும். இலக்கணப்படி எழுதப்படும் எழுத்து மொழியே செம்மொழியாகும். .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:49 pm

1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள்.

2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள். இவ்விரண்டையும் ஒரே விதியாய் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் நெடில் எழுத்தை அடுத்து ‘கள்’ விகுதி தோன்றினால் வலிமிகும்.

3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள். வடுக்கள். இலக்கணத்தில் இவற்றை “இரட்டைக்குறில் உகர ஈற்றுச் சொற்கள்” என்பார்கள். இவையே முற்றியலுகரங்களாகவும் அறியப்படும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:50 pm

4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள். “இரட்டைக்குறில் இகர ஈற்றுச் சொற்களில்” கள் விகுதிக்கு வலிமிகுவதில்லை.

5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள். கள் விகுதிக்கு முன்புள்ள இரண்டு எழுத்துகள் வல்லின மெய்யாய் இல்லாதபோதும், அவை குறிலிணை முற்றியலுகரங்களாக (அணுக்கள், பருக்கள்) இல்லாதபோதும் வலி மிகுவதில்லை.

6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:50 pm

இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள்.

ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள்.

பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்).

மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்).

இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:51 pm

கள் என்பது சொல் அன்று. சொல்லுறுப்பு என்று கருதத்தக்க ஒரு விகுதி. கள் என்பது பன்மைக்கு வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி.

‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே’ என்னும் விதி இயற்கையோடு ஒட்டியதாய் அமைந்திருக்கிறது. குற்றியலுகரத்தில் குற்றுயிராய்க் கிடக்கும் ஈற்றெழுத்துக்கு வருமொழியோடு புணரும் வலிமை எங்கிருந்து வந்தது ? அது புணராது.

7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதலாம். இங்கே ஆள்கள், நாள்கள் என்றெழுதுவது பிரித்தெழுதுவதற்கு ஒப்பாகும். உரைநடையில் பிரித்தெழுதுவது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:51 pm

8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது. இவற்றைப் பிரித்தெழுத முயன்றால் அச்சொற்கள் உகர ஈறு பெறும். முள்ளு, புல்லு, சொல்லு என்றாகும். முள்ளுகள், புல்லுகள், சொல்லுகள் என்றெழுதுவது செய்யுளில் அசையிடிக்கு வழிவகுக்கும் என்பதால் முட்கள், புற்கள், சொற்கள் என்றெழுதியிருக்க வேண்டும் என்பது என் துணிபு.

9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:52 pm

10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது. “மருந்து கடை” என்றால் “மருந்தைக் கடைவாயாக” என்றும் “மருந்துக் கடை” என்றால் மருந்தை விற்கும் கடை என்றும் பொருள்படும். அதனால் விதிவிலக்குகள் பல.

கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள் !

- கவிஞர் மகுடேசுவரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by Dr.S.Soundarapandian Fri Mar 08, 2019 9:23 am

வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834 வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:25 pm

Dr.S.Soundarapandian wrote:வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834 வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 9:19 pm

அருமை ஐயா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

Back to top Go down

வலிமிகும் & வலிமிகா இடங்கள். Empty Re: வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை