உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் நிழல் நீயடி
3 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
என் நிழல் நீயடி
என் நிழல் நீயடி
அத்தியாயம் -1
நகரின் மத்தியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வெள்ளை தேவதைகளாய் செவிலியர்கள் உலா வர அமைதியான மெல்லிய குளிரோடு கூடிய அறையில் உரிய மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சுவாசித்து கொண்டு கொடுக்கபட்ட மருந்துகளின் விளைவால் உறக்கத்தின் பிடியில் இருந்தார் ஸ்ரீதரன்
நேர் எதிராக துளியும் ஊனுறக்கமின்றி கண்களில் உயிரை தேக்கி கொண்டு இறைவனிடம் கணவனின் உயிரை யாசித்தபடி நின்றிருந்தார் கலாவதி . அவருக்கு அருகே தன் தாயின் கரம் பற்றியபடியே ஆறுதல் சொல்லியவாறு நின்றிருந்தான் சரத்.கொஞ்சம் தள்ளி டாக்டர்களிடம் ஸ்ரீதரின் உடல் நிலை குறித்து விவாதித்து கொண்டிருந்தார் குமார்
இங்க பாருங்க குமார் இப்போ பேஷண்ட் இருக்குற உடல் நிலையில அவருக்கு அதிக கவலையோ இல்ல அதிக வேலயோ குடுக்க கூடாது அது மட்டுமில்லை அவருக்கு இது முதல் ஹார்ட் அட்டாக் வேற சரியான நேரத்துல கொண்டு வந்ததுனால எங்களால காப்பாத்த முடிஞ்சது அவரோட கவலை என்னனு கேட்டு அத தீர்த்து சந்தோஷமா வெச்சுக்க பாருங்க
ஒரு நாள் அப்செர்வேஷனுக்கு அப்புறம் அவரை டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம் இந்த ஹாஸ்பிட்டல் பில் எல்லாம் இன்ஷுரன்ஸ் ல கிளைம் ஆயிடுச்சு அதுனால பில்லை பத்தி கவலை படவேண்டாம் நைட் யாராவது ஒருத்தர் துணைக்கு படுத்தா போதும் தயவு செஞ்சு மத்தவங்களை வீட்டுக்கு போக சொல்லுங்க என்றனர்
கலாவதியிடம் வந்த குமாரோ ஏம்மா ஷியாமுக்கு சொல்லியாச்சா? என கேட்க சொல்லியாச்சு அவன் உடனே கிளம்பி வரேனு சொல்லிருக்கான் வர வேண்டிய நேரம்தான் நாந்தான் நேரா ஹாஸ்பிட்டலுக்கே வரசொல்லிருக்கேன் என்று சொல்லி வாய மூடவில்லை நமது ஹீரோ ஷியாம் ஓடி வந்தான்
வந்தவன் சரத்திடம் என்ன ஆச்சு சரத் இப்போ எப்படி இருக்கு என கேட்க குமார் டாக்டர் சொன்னதை எல்லாம் சொல்லி ஷியாம் உங்கப்பாவும் நானும் ரொம்ப வருஷமா ப்ரெண்ட்ஸ் ஒரே காலனில அடுத்த அடுத்த வீட்டுல வேற குடியிருக்கோம் அவன் ரொம்ப நல்லவன்பா இனிமேலாவது உன் பிடிவாதத்த விட்டு அவனை அப்பானு பழைய மாதிரி கூப்பிடு
சரி அங்கிள் நீங்க சரத்தையும் அவங்கம்மாவயும் வீட்டுல விட்டுடுங்க அவங்க ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வரட்டும் நான் இங்க நைட் துணை இருந்துட்டு அவரை காலையில வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் அங்க வெச்சு பேசிக்கலாம்
கண்ணீருடன் பேச முயன்ற கலாவதியின் முகம் கூட பார்க்கவில்லை ஷியாம் சரத்தும் குமாரும் சமாதானபடுத்தி அழைத்து செல்ல தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசி விட மாட்டானா? என திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டுக்கு சென்றார் கலாவதி
சீரான உறக்கத்தில் இருந்த ஸ்ரீதரனின் முகத்தை பார்த்தபடியே அருகே அமர்ந்திருந்தான் ஷியாம் இரவு பணியில் இருந்த நர்ஸ் வந்து தன் வழக்கமான சோதனைகளை முடித்த உடன் அவனை பார்த்து சார் எவளோ நேரம் தான் இப்படியே உக்காதிருப்பீங்க போய் நீங்க எதாவது சாப்பிட்டுட்டு வாங்க சார் ஆபிசுல இருந்து நேரா இங்க வந்த மாதிரி தெரியுது நீங்க வரவரைக்கும் நான் பெரியவரை பத்திரமா பாத்துக்கறேன் என சொல்ல அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு கேண்டீனுக்கு கிளம்பினான்
கிளம்பிய அவனை அந்த வாசலைக்கூட தாண்ட விடாமல் தடுத்தது அந்த உருவம் மெல்லிய குரலில் உனக்குதான் மாத்து ட்ரெஸ் சாப்பாடு எல்லாம் கொண்டு வந்திருக்கேன் உனக்காக எங்க வீட்டுல செஞ்சது யார் மேலயோ இருக்குற கோவத்தயெல்லாம் சாப்பாட்டுல காட்டாம ஒழுங்கா சாப்பிடு காலேல காபி டிபனோட வந்து பாக்குறேன் மவனே சாப்பிடாம இருந்தேனு வெச்சுக்க என்ன பத்தி தெரியுமுல என சொல்லிவிட்டு பின்னல் அசைந்தாட திரும்பி சென்றாள் அந்த தேவதை
அதுவரை இருந்த சோகம் மறைந்து மெல்லிய குறுநகையுடன் அவள் குடுத்த உணவை பெற்று கொண்டு திரும்பினான் விசித்திரமாக பார்த்த நர்ஸூக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி அனுப்பி விட்டு அவள் சொல்லியபடி உடை மாற்றிக் கொண்டு உணவையும் உண்டு முடித்தான்
சேரில் உட்கார்ந்தவாரே தன் தகப்பனை பார்த்துகொண்டிருந்த ஷியாம் மெல்ல கண் அயர்ந்தான் திடுக்கிட்டு கண் விழித்து பார்க்கையில் பொழுது புலர்ந்திருந்தது ஸ்ரீதரனும் கண்விழிக்க துவங்கினார் மெல்ல கண் திறந்து பார்க்கையில் ஷியாமை கண்டு நம்பமாட்டதவராக எழ முயற்சி செய்தார் உடனே அவரின் தோள் பற்றி படுக்க வைத்துவிட்டு நர்சை அழைத்து அவரின் உதவியுடன் காலை கடன்களை முடிக்க வைத்தான்
தம்பி எப்போ பா வந்தே ? மத்தவங்க எல்லாம் எங்கே? என ஸ்ரீதரன் கேட்க ஷியாம் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் எல்லாரும் வீட்டுல இருக்காங்க அங்கிள் என்று பதில் கொடுத்தபடி அவரிடம் வந்தாள் சந்தனா
பேருக்கு ஏற்றபடி பாலில் சந்தனமும் கலந்ததுபோல நிறத்துடன் நெற்றியில் திருநீற்றின் கீற்று துலங்க இடையை தாண்டி ஆடிய பின்னலோ கருநாகமென நீண்டிருந்தது குறுகுறுவென சதிராட்டம் ஆடும் கருவிழிகளின் குறும்பு மின்னும் மொத்தத்தில் அழகும் புத்திசாலிதனமும் குறும்பும் மின்னும் தேவதை பெண் இவள்
மெல்லிய புன் முறுவலுடன் உள்ளே வந்தவளை வா என தலையசைத்து அழைத்தார் ஸ்ரீதரன் என்னம்மா சவுண்ட் சரோஜா வரும் போதே ஊரை கூட்டாம வரமாட்டியா? உனக்கு சந்தனானு பேர் வெச்சதுக்கு சைரன் நு பேர் வெச்சிருக்கலாம் என வம்பிழுத்தபடியே வந்தான் ஷியாம்.
நற நற வென பல்லை கடித்தவாறே அங்கிள் உங்க பையன எங்கிட்ட வம்பு வெச்சுக்க வேணாமுனு சொல்லுங்க இல்ல நடக்குறதே வேற என சொல்ல அவளை தாண்டி அவன் சென்ற பார்வை யாரையோ தேடியது ம்ம் என கனைத்த சந்தனாவோ ஷியாம் நீங்க தேடுற ஆள் கீழ வண்டிய பார்க் பண்ண போயிருக்கு என காதை கடிக்க மெல்ல அசடு வழிந்தவாரே வந்திருக்காளா ? என கேட்டான்
நீ வந்ததுக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் அம்மணி வீட்டுல இருக்குமா ? நல்லா கேக்குறான் பாரு கேள்விய? போதும் லிட்டர் கணக்குல வழியுது தொடை என சந்தனா ஓட்ட எல்லாரும் சிரித்தனர் .மெல்லிய புன்முறுவலுடன் அந்த அறையில் நுழைந்த சக்தியின் கண்கள் ஷியாமிடம் நிலைத்தது அவளின் பார்வைக்கு பதில் பார்வை வீசியபடியே சந்தனாவிடம் ஆமா உன் கைல என்ன அது பேக்?
எல்லாம் உனக்கு பிடிச்சதுதான் காலேலயே எந்திரிச்சு செஞ்சு எடுத்துட்டு வந்தோம் என சந்தனா சொல்ல யாரு இத நீ செஞ்சே இத நான் நம்பனும் என ஷியாம் கேட்க நேத்து ராத்திரி மட்டும் நான் கொண்டு வந்து கொடுத்த உடனே சாப்பிட்ட அப்போ தெரியலயா யாரு செஞ்சதுனு என சந்தனா எகிற பசி ருசியறியாதுனாலும் அதை பாத்த உடனே நீ செஞ்சது இல்லனு புரிஞ்சு போச்சு அதனால தான் தைரியமா சாப்பிட்டேன் என்று வாரினான் ஷியாம் உன்னை என்ன பண்றதுனுனே தெரியல? நீ மட்டும் என்னிக்காவது எங்கிட்ட மாட்டு அன்னைக்கு உன்னை குர்பானி குடுத்துடறேன் என்றாள் சந்தனா
பேச்சின் இடையே அவர்கள் கொண்டு வந்திருந்த காலை உணவை காலி செய்தனர். பின்னர் கிளம்பிய பெண்கள் இருவரும் ஸ்ரீதரிடம் சொல்லி கொள்ள அவர்களை வாசல் வரை வந்து வழிஅனுப்பினான் ஷியாம் .போய் ஸ்கூட்டிய எடுத்துட்டு வரேன் என சந்தனா கிளம்ப வேண்டாம் பா இத பிடி நானே எடுத்துட்டு வரேன் என சாவியை பிடுங்கி கொண்டு ஓடினாள் சக்தி
ஷியாம் என்ன ஆச்சு உங்களுக்குள ? நான் உனக்கும் அவளுக்கும் பொதுவான ப்ரண்ட் எனக்கு தெரியும் நீயும் அவளும் எவள்ளவு உயிருக்கு உயிரா காதலிச்சீங்கனு இதோ இப்பொ கூட அவங்க அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு உன்னை பார்க்க ஓடிவந்திருக்கா ? வந்ததுலேர்ந்து பாக்கறேன் ஒரு வார்த்தை கூட ரெண்டு பேரும் பேசிக்க மாட்டேங்கறீங்க
சந்து இத நீ அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாமே? என ஷியாம் கேட்க
ஹீம் அவளா கல்லுல இருந்து கூட நார் உறிச்சிரலாம் அவகிட்ட இருந்து உன்னை பத்தி ஒரு விஷயத்த கறந்துட முடியுமா ? சரியான கல்லுளி மங்கியாச்சே வெக்கம் கெட்டு போய் கேட்டும் பாத்தேன் எனக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும் அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சமாச்சாரம் மாதிரி அதை ஏண்டி கேக்குறே? என சொல்லிட்டா என சொல்லி முடிக்கவும் வண்டியுடன் சக்தி வரவும் சரியாக இருந்தது சக்தியை கண்டவுடன் சந்தனா ஓட கண்கள் மின்ன தன்னிடம் விழியால் விடை பெற்றவளை கண்டு சிலையாய் நின்றான் ஷியாம்
ஷியாம் மற்றும் சரத்தின் துணையுடன் வீட்டுக்கு வந்த ஸ்ரீதரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கலாவதியும் சீதாவும் (குமாரின் மனைவி) கைத்தாங்கலாக கூட்டிகொண்டு வந்த தகப்பனை அமர செய்துவிட்டு கூட வந்த குமாரிடம் அங்கிள் நான் மாடிக்கு போய் ப்ரெஷ் ஆயிட்டு வரேன் ஊருக்கு கிளம்பற ஏற்பாட்ட பாக்கணும் என் சொல்லியவாறே மாடியேற எத்தனித்த ஷியாமை நில்லுப்பா நாங்களும் இங்க இருக்கோம் நாங்க சொல்றதயும் கேட்டுட்டு மாடிக்கு போயேன் என்றார் பரதன் (சக்தியின் அப்பா)
உனக்கும் என் பொண்ணுக்கும் நிச்சயம் முடிஞ்சு ஆறு மாசமாச்சு அன்னைக்கு எதோ சின்ன சண்டை நடந்துச்சுனு நீ உன்னை பெத்தவங்களோட பேசாம இருக்குறதும் என் பொண்ணு உன் கூட பேசாம இருக்குறதும் நல்லா இல்ல தவிரவும் ஊரரிய உனக்கு நிச்சயம் பண்ண பொண்ண இன்னொருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதும் கஷ்டம் உன்னை பெத்தவங்கள கேட்டா அவன் சரினா இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்க ரெடிங்கறாங்க என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லிட்டு ஊருக்கு நீ கிளம்பிக்கோ இது வரைக்கும் நான் பொறுமையா இருந்ததே உன் அப்பா என் நெருங்கிய ப்ரெண்ட்கறதுனாலதான் என பொரிய
அடிபட்ட விழிகளுடன் அவரை பார்த்தான் ஷியாம் அங்கிள் உங்க பொண்ணுக்கு சம்மதம் நா நான் நாளைக்கே தாலி கட்ட ரெடி ஆனா நான் இப்போ ஊருக்கு போறது என் வேலைய பெங்களூர் ப்ரஞ்ச் ல இருந்து சென்னைக்கு மாத்திக்கிட்டு வரத்துக்குதான்
என்னைக்கு உங்க பொண்ணு என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வராளோ அன்னைக்கு தான் என்னை பெத்தவங்களோட நான் பேசுவேன் அதிகபட்சமா இந்த மாச கடைசியில இந்த ஊருக்கு வந்திருவேன் நீங்களும் பாரதி ஆண்டியும் பேசி முடிவெடுத்துட்டு எங்க வீட்டுல சொல்லுங்க என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்
பரிதாபமாக ஸ்ரீதரனை பார்த்த பரதனோ கிளம்பறேன் பா என சொல்லிவிட்டு கிளம்ப நில்லுங்கண்ணா என ஒலித்தது கலாவதியின் குரல் அண்ணா இன்னைக்கு ஜனவரி 1 வர 26ம் தேதி நல்ல முகூர்த்த நாள் அன்னைக்கு கல்யாணத்துக்கு ரெடியாயிக்கங்க என் மருமக கேட்டுகிட்ட படி நான் பாரதிகிட்ட வந்து பேசி சரி பண்ணறேன் என்றாள்
எப்படி பாத்தாலும் நான் பாரதிய பேசுன விதம் தப்புதான் தப்பு பண்ண நான் அதை சரி பண்ணறதுதான் நியாயம் என்று சொல்லியபடியே வாசலை பார்த்தாள் அந்நேரம் கணவனை காண அங்கு வந்த பாரதியோ கலா பேசியதை கேட்டு வேண்டாம் கலா இப்படியெல்லாம் பேசாதே அப்படியென்ன நடந்திருச்சு நீ வருத்தபட நமக்குள்ளே ஆயிரம் இருக்கும் அதை கேள்விகேட்க நம்மை கட்டுனவங்களுக்கே உரிமை இல்ல இதுல நாம பெத்ததுங்க தலையிட்டதே மகா தப்பு இத காரணம் காட்டி சண்டை வேற போடுதுங்க பாரு இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது நீ வருத்த படாதே நீ சொன்ன மாதிரி வர ஜனவரி 26 கல்யாணம் நடக்கும் அந்த சக்தி கழுதைகிட்ட நான் பேசிக்கறேன் என சமாதான படுத்தினாள் அப்படியென்ன இவங்களுக்குளே சண்டைனு கேக்குறீங்களா நட்பூஸ் அத அடுத்த எபிசோடுல சொல்றேனே

Last edited by ANUBAMA KARTHIK on Tue Jan 15, 2019 10:59 pm; edited 1 time in total
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15
Re: என் நிழல் நீயடி
சொந்தங்களே இதோ என் அடுத்த படைப்பு . இதை வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை பதிப்பிக்கிறேன் . உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர் பார்க்கிறேன் நன்றி
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15
Re: என் நிழல் நீயடி
அத்தியாயம் -2
ஆறு மாதத்துக்கு முன் சக்தி ஷியாம் நிச்சயதார்த்தம் நடந்த அந்த நாளில் துவங்கிய பிரச்சனை இது அதை அறிந்து கொள்ள நாமும் அந்த நாளைக்கு செல்வோமா ?
முகம் முழுவதும் வெட்கம் பூசியபடி கன்னா கதுப்புகளில் இளம் ரோஜாக்கள் பூத்திருக்க சக்தி அமர்ந்திருந்தாள் கல்லூரி நண்பர்கள் கலாட்டா செய்துகொண்டிருக்க அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியபடி தன்னவளை பார்வையாலயே தின்று கொண்டிருந்தான் ஷியாம். சரத் அங்கும் இங்கும் பொறுப்பாக அலைந்து கொண்டிருக்க அவனை பின் தொடர்ந்த கண்ணையும் மனதையும் கட்டு படுத்தமுடியவில்லை சந்தனாவால்.
மெல்ல நிகழ்ச்சிகள் முடிவடைந்து குடும்பத்தினர்களும் நண்பர்களும் மட்டுமே அமர்ந்திருந்தனர் சீதாவும் சந்தனாவும் வீட்டுக்கு செல்ல புறப்பட அவர்களை விட்டுவிட்டு வர சென்றான் சரத் ஒரு முக்கிய பணி நிமித்தமாக குமார் வெளியூர் சென்றுவிட சரத் அந்த பொறுப்பை ஏற்றுகொண்டான்
அங்கே நுழைந்த வயதான தம்பதிகளை வாங்க என வரவேற்று அழைத்து சென்றாள் பாரதி அவர்களை கண்ட கலாவதியின் முகமோ வெளுத்தது மின்வெட்டாக ஸ்ரீதரின் பார்வையயை சந்தித்த போது அவர் அவர்களை எதிர்பார்த்தது போலவே நடந்துகொள்ள கண்மண் தெரியாத கோபம் வந்தது கலாவதிக்கு
எதிர்கால தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தப் பின் சாப்பிட்டுவிட்டு வரும் வரை பொறுமையாக இருந்த கலாவதி அவர்கள் முன் போய் நின்று எதுக்காக இங்க வந்தீங்க என் நிம்மதிய கெடுக்கவா? என கத்த சத்தம் கேட்டு கூடியவர்கள் ஒன்றும் புரியாமல் முழிக்க சட்டென அங்கு வந்த பாரதிய பாத்து நீதான் இவங்களை கூப்பிட்டயா? என கேட்டாள் ஆமாம் என பாரதி சொல்லி முடிப்பதற்குள் கலாவதியின் கை பாரதியின் கன்னத்தில் இடியென இறங்கியது பதிலுக்கு என்ன செய்யுறா கலா? என கத்தியவாறே வந்த ஸ்ரீதரன் ஓங்கி கலாவை அடித்துவிட அனைவரும் விக்கித்து நின்றனர் அவங்கள கூப்பிட்டது பாரதி மட்டுமில்ல நானும் தான் ஆனா உனக்கு தெரிஞ்சா சங்கடபடுவாயேனு மறைச்சோம் அவளோதான்
தன் உயிர் தோழியின் கைகளால் அடி வாங்கிய அவமானம் தாங்காமல் உள்ளே ஓடிய பாரதி அழுகையினூடே சுயநினைவை இழக்க துவங்க அவளை சமாதான படுத்த உள்ளே ஒடிய பரதனின் மற்றும் சக்தியின் அலறல் அனைவரையும் அங்கே இழுத்து வந்தது உடனடியாக செயல்பட்டு டாக்டர் வந்து பார்த்தபின் சாதாரண மயக்கம் என சொல்லிவிட்டு சென்றார்
ஒவ்வொருவராக பாரதியை வந்து பார்த்துவிட்டு செல்ல கடைசியில் வந்தார் கலாவதி அவள் வந்த நேரம் பாரதி கண்விழிக்க துவங்க அவரிடமும் பரதனிடமும் மன்னிப்பு கேட்டாள் கலாவதி இருக்கட்டும்மா நீ என்ன வேணுமினா அடிச்ச எதோ கோபம் கைய மீறிடுச்சு பரவாயில்லை இத இதோட விட்டுடுவோம் என பரதன் கூறினார்
அனைவரும் உறங்க செல்ல கனத்த மனதுடன் அடுத்தடுத்து நாட்களும் சென்றது ஒரு நாள் மதியவேளையில் வந்த தொலைபேசி தகவல் பாரதியையும் கலாவதியையும் உலுக்கி போட்டது ஆம் அந்த முதிய தம்பதிகளின் மரண செய்திதான் அது செய்தி கேட்டு அம்மா என பாரதி கூவ ஐயோ அத்தை என அலறினாள் கலாவதி
இரண்டு குடும்பங்களும் உடனே அங்கே செல்ல ஐயரின் வழிகாட்டுதலின் படி இறுதிசடங்குகள் ஏற்கனவே பங்காளிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தது கிட்டதட்ட கொள்ளி வைக்கும் நேரத்துக்கு சென்றபோது யார் கொள்ளி வைப்பது என்ற தகராறும் நடந்து கொண்டிருந்தது. யாரும் வைக்கவேண்டாம் இதோ இருக்கான் அவங்க பேரன் என ஸ்ரீதர் ஷியாமை கைகாட்ட
மெல்ல ஷியாமின் அருகில் வந்த பரதன் ஷியாம் இங்க எதுவும் பேசாதே நாங்க சொல்றபடி செய் நீ இப்போ கொள்ளி போட போறது உன் அப்பாவ பெத்த தாத்தா பாட்டிக்குதான் அதுவும் உன் அப்பா உயிரோட இல்லை அதனாலதான் என சொல்ல அதிர்ச்சி தாங்காது திகைத்து நின்றான் ஷியாம். இயந்திரகதியில் ஷியாமால் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு பெரியவர்கள் கரையேற்றபட உன் அப்பா உயிரோட இல்ல என பரதன் சொன்னதில் இருந்து குழப்பத்திலிருந்த ஷியாமோ தனிமை தேடி தவித்தான்
ஷியாம் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய அந்த நேரமும் வந்தது இறுதிக்காரியங்கள் நிறைவடைந்த அன்று வந்த அவர்களின் வக்கீல் பெரியவர்களின் உயிலை படித்தார் அதன்படி அந்த வீடு நிலங்களை விற்று வரும் பணம் ஷியாமை சேரும் எனவும் நகைகள் பண்ட பாத்திரங்கள் அனைத்தும் விற்று வரும் பணம் யாவும் தங்கள் மகளான பாரதியை சேருமெனவும் குறிப்பிட்டிருந்தனர் தாங்கள் உயிரோடு இருந்த போது செய்த தவறுகளுக்கு கலாவதியிடமும் ஸ்ரீதரனிடமும் மன்னிப்பு கேட்டிருந்தனர் .உயிலை படித்த வக்கீலோ சார் பெரியவங்க இருந்த போதே எல்லாம் ஏறத்தாழ முடிச்சி வெச்சிருக்காங்க நீங்க எப்போ கிளம்பரீங்கனு தெரிஞ்சா அதுக்கு தகுந்தமாதிரி ஏற்பாடு செய்யலாம் என்றார்
அதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்த ஸ்ரீதரன் வக்கீல்சார் பத்து நாளைக்குள்ள நாங்க கிளம்பற மாதிரிதான் இருக்கும் நீங்க இதுக்குள்ள எல்லா ஏற்பாடும் முடிச்சுக்குங்க தம்பிகிட்ட நான் பேசிக்கறேன் அன்று மாலை ஷியாமிடம் வந்த ஸ்ரீதர் வாப்பா நம்ம அப்படியே நடந்துட்டு வரலாம் என கூப்பிட அவர் எதோ தன்னிடம் தனியாக பேசவிரும்புகிறார் என புரிந்து கொண்டவன்
அவருடன் இணைந்து நடக்க துவங்கினான் அந்த ஊரின் ஆற்றங்கரைக்கு வந்த இருவரும் அமைதியாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர் மெல்ல பேசத்துவங்கிய ஸ்ரீதர் என்னப்பா எல்லாம் மர்மமா இருக்கா ? ஆமாம் உங்களை இதுவரைக்கும் அப்பானு தான் கூப்பிட்டு இருக்கேன் எங்கிட்ட போய் நான் உனக்கு அப்பா இல்ல அதனால உன் தாத்தா பாட்டிக்கு கொள்ளி வை அப்பிடினு சொன்னா எப்படி இருக்கும் ? இங்க பாரு ஷியாம் இவளோ உணர்ச்சி வசப்பட கூடாதுப்பா மொதல்ல என்ன நடந்தது நு தெரிஞ்சுகோ
நான் உங்க அப்பா எல்லாரும் இதே ஊரை சேந்தவங்கதான் உங்கப்பாவுக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருந்தது அவனை கண்ட்ரோல் பண்ண முடியாத உங்க தாத்தாவும் பாட்டியும் கல்யாணம் பண்ணா திருந்திடுவானு நினைச்சாங்க
உள்ளூருல யாரும் பொண்ணு கொடுக்க முன்வாராததால வெளியூர்ல பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க அப்போ தெரிஞ்ச தரகர் மூலமா தான் யாருமே இல்லாத அனாதையா இருந்த உங்கம்மாவ பத்தி தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சாங்க உங்கம்மா நல்ல அழகு மட்டுமில்ல குணவதியும் கூட கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே தன் புருஷன பத்தி தெரிஞ்சுகிட்ட அவங்க அவரை திருத்த முயற்சி பண்ணாங்க நடுவுல கொஞ்ச நாள் நல்லா போச்சு உங்க அத்தை பாரதிக்கும் கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போயிட்டாங்க
எனக்கும் சொந்த ஊரிலேயே டீச்சர் வேலை கிடைச்சு வந்தேன் எங்கப்பா உங்க தாத்தாவோட வயலுல தான் வேலை பார்த்து இருந்திருக்கார் அவர் இறந்ததுக்கு அப்புறம் எங்கம்மா என்னை இந்த ஊரை விட்டே கூட்டிகிட்டு போய்ட்டாங்க மறுபடியும் இந்த ஊருக்கு வந்த சந்தோஷத்துல எனக்கும் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருந்த வேளை அந்த சமயம் எனக்கு ஒரு வரன் கூடி வந்தது வேற யாரும் இல்லாததால உங்க தாத்தாவை போய் பாத்து பெண் பார்க்க அழைச்சிட்டு வந்தாங்க
பெண் பாத்து நிச்சயம் வரைக்கும் வந்தது. நிச்சயம் முடிஞ்சு ஊருக்கெல்லாம் கல்யாண பத்திரிகை வினியோகம் பண்ணிக்கிட்டு இருந்தோம் அப்படி ஒரு நாள் ராத்திரி வினியாகம் முடிஞ்சு வந்தப்ப உங்கம்மா நடுவழில மயக்கம் போட்டு விழுந்து கிடந்தத பாத்தேன் உடனே பக்கத்துல்ல இருந்த ஆஸ்பத்திரில சேத்துட்டு உங்க வீட்டுக்கு தகவல் சொல்ல போனேன் உங்கப்பாவையும் காணாம உங்க தாத்தாவும் பாட்டியும் தவிச்சுக்கிட்டு இருந்ததால மனசு கேட்க்காம எங்கம்மாவை உங்கம்மாவுக்கு துணைக்கு வெச்சிட்டு உங்கப்பாவ தேடிப்போனோம் நானும் உங்க தாத்தாவும் அங்க உங்கப்பா குடிபோதயில கள்ள சாரயத்தை குடிச்சிட்டு இறந்து கிடந்தார்
அவர் கூட வெளில போன உங்கம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு வழில பாத்த பழைய நண்பனோட சரக்கு அடிக்க போயிருக்கார் உங்கப்பா நடுராத்திரில தனியா வந்த உங்கம்மாவ நாலு ரவுடிங்க துரத்த தப்பிச்சு ஓடி வந்த போதுதான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க என்ன பார்த்த உடனே ரவுடிங்க ஓடிட்டாங்க உங்கப்பாவோட இறுதி காரியம் முடிஞ்ச உடனே என் கல்யாணத்தை நடத்த நினைச்சபோது தான் எனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு வீட்டுல அந்த பொண்ணுக்கு கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணுற விஷயம் உங்க அத்தை மூலமா தெரிய வந்தது கல்யாணத்த நிறுத்திட்டேன் இந்த ஊர்லேந்தும் மாற்றலாகி போயிட்டேன்
கொஞ்ச நாள் கழிச்சு உங்க தாத்தா பாட்டிய பாக்க வந்த போதுதான் உங்கம்மா கர்ப்பமா இருக்கறதும் நான் உங்கம்மாகிட்ட சகஜமா பேசுனத வெச்சு அவங்களையும் என்னையும் சேத்து வெச்சு உங்க தாத்தா பாட்டி சந்தேக பட்டதும் தெரிய வந்தது உங்க அத்தை மூலமா புரிய வெக்க முயற்சி பண்ணப்போ பிரச்சனை பெருசாகி ஊர் பஞ்சாயத்து கூட்டிட்டாங்க
பஞ்சாயத்துல தன் செல்வாக்கை உபயோகபடுத்தி உங்கம்மாவையும் எங்க குடும்பத்தையும் ஊரை விட்டே தள்ளி வெச்சார் உங்க தாத்தா எங்கம்மாவையும் கூப்பிட்டு பேசுனதுல எங்கம்மா அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வாடானு சொல்லிட்டாங்க வேற வழி இல்லாம தான் நான் உங்கம்மா கழுத்துல தாலி கட்டினேன்
நீ பிறந்ததுக்கப்புறம் உன்னை முதல்ல கைல வாங்கினேன் பாரு அன்னையில இருந்து உன்னை என் மூத்தமகன் நு நினைச்சிருக்கேன் நீ பிறந்து கொஞ்ச நாளைக்கு அப்புறமா உங்க அத்தை என்ன வந்து பாத்தாங்க அவங்க சொல்லித்தான் உங்க தாத்தாவோட நல்ல குணம் எனக்கு தெரிஞ்சது
தன் மகனோட சாவினால இந்த சின்ன பொண்ணோட வாழ்க்கை பாதிக்க பட கூடாது நு நினைச்சிருக்கார் அதுமட்டுமில்லாம அன்னைக்கு துரத்திக்கிட்டு வந்த ரவுடிங்களால உங்கம்மாவுக்கு எதுவும் ஆகல அப்படிங்கறது தெரிஞ்சது நான் ஒருத்தன் தான் என்னை தவிர வேற யாரூம் உங்கம்மாவை நல்ல படியா பாத்துக்க முடியாதுனு தோணி போச்சு அதுனாலதான் எங்கம்மா சம்மததோட இப்படி செய்திருக்கார் நு தெரிஞ்சது
அதுக்கப்புறம் கலாவுக்கு தெரியாம நானும் போய் உங்க தாத்தா பாட்டிய பாத்துட்டு வர ஆரம்பிச்சேன் அப்படி ஒருநாள் போயிட்டு வரும்போது தான் ரோட்டோரம் இருந்த குப்பை தொட்டில ஒரு குழந்தை அழற சத்தம் கேட்டு எட்டி பாத்தேன் அங்க இருந்த குழந்தைய எடுத்துகிட்டு வந்து கலாகிட்ட கொடுத்து வளர்க்க சொன்னேன் சந்தோஷமா அவ ஒத்துக்கிட்டதும் என்னை ஒரு கேள்விகூட கேக்காததும் என் மனசை அசைச்சுடுச்சு கலாகிட்ட எல்லா உண்மையயும் சொல்லி மன்னிப்பு கேட்டேன் அதுக்கு அமைதியா அவ நீங்க போயிட்டு வரது எனக்கு தெரியும் என் கோபமெல்லாம் எனக்கு அவங்க மறுமணம் பண்ணிவெக்க நினைச்சதுல இல்ல அவங்க பிள்ளை பத்தி தெரிஞ்சும் நான் அனாதைங்கற ஒரு காரணத்தால அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சேங்களே அதுதான்.அவங்க பொண்ணா இருந்தா அப்படி பண்ணி இருப்பாங்களா?அதை கூட மன்னிச்சிருவேன் மறுமணம் பண்ணிக்க சம்மதிக்கலன போது என் மேல களங்கத்த பூசுனாங்களே அதை என்னால மன்னிக்க முடியாது சொல்லிட்டா
உங்க மாமா பரதன் உன் தாத்தா பாட்டியோட பொறுப்பை எடுத்துகிட்டார் என் கூட ஸ்கூலுலதான் அவரும் வேலை பாத்தார் குமாரும் நானும் ஏற்கனவே நல்ல ப்ரெண்ட்ஸ் இப்போ இங்க உன்னை கூட்டிகிட்டு வந்தது கூட அவங்களுக்கான இறுதிகாரியம் செய்ய மட்டும்தானே தவிர இந்த சொத்து விஷயத்துல நீ என்ன முடிவு எடுக்கறயோ அதுக்கு நான் ஆதரவு தருவேன் என சொன்னார்
எல்லாம் கேட்டு பின் யோசனையாக இருந்த ஷியாம் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தெளிந்த முகத்துடன் இருந்தான் பிறகு பரதனை கூப்பிட்டு மாமா எனக்கு இந்த சொத்து வேண்டாம் என்னைக்குமே எனக்கு அப்பா ஸ்ரீதரன் தான் என சொல்ல அங்கு வந்த பாரதி தம்பி என் அண்ணன் பண்ண தப்புக்கு எங்க அப்பா அம்மா என்ன பண்ணுவாங்க அவங்களை நிராகரிக்காதீங்க என சொல்ல அதுவரை அமைதியாக இருந்த கலாவோ வேண்டாம் பாரதி உங்கப்பா அம்மாவால நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என் பேருல அநியாயமா களங்கம் சுமத்தினாங்க அதை இப்பொ கூட நான் மறக்கலை
உங்க அண்ணன் பிள்ளைக்குதான் உன் பொண்ணை குடுக்கனுமுனு நீ நினைச்சா இப்போவே நம்ம சம்மந்தத்தை முடிச்சுக்கலாம் என சொல்ல சிலையாக நின்றாள் பாரதி டக்கென்று முன்னே வந்த சக்தியோ போதும் அத்தை எங்க அம்மா நினைச்சதுல தப்பொண்ணும் இருக்கறதா எனக்கு தெரியல உங்களை மறுமணம் செஞ்சுக்க வெக்க தாத்தா பாட்டி போன வழி தப்பா இருக்கலாம் ஒருத்தங்க இறப்போட அவங்கள பத்தின கெட்டத மறந்திடனும் ஆனா நீங்க அத இன்னமும் மனசுல வெச்சுக்கிட்டு உங்களுக்கு சப்போர்ட்டா இருந்த எங்கம்மாவ பேசிட்டீங்க இதுக்கு அப்புறமும் நான் உங்க வீட்டுக்கு எப்படி மருமகளா வருவேன்?
ஷியாமை நேருக்கு நேராக பார்த்து நீயும் நானும் காதலிச்சது எல்லாருக்கும் தெரியும் நான் உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதே சமயம் இனி உங்கம்மா எங்கம்மா கிட்ட தானா வந்து பேசாம உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் வாங்கம்மா கிளம்பலாம் என இழுத்து சென்றுவிட்டாள்
அம்மா உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்துதான் நான் சொத்து எதுவும் வேண்டம்னு முடிவெடுத்தேன் மேல நான் பேசி முடிக்கறத்துக்குள்ள அவ ஏன் மா இப்படி சொன்னீங்க ? என் உயிர் அம்மா அது தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுவீங்க நு நான் நினைக்கல எனக்கு நீங்க எவளோ முக்கியமோ அவளும் அவளோ முக்கியம் இனி நான் உங்க கூட பேசனுமுனா அது சக்திக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் இப்போ நான் கிளம்பறேன் என கிளம்பி விட்டான் விக்கித்து நின்றாள் கலா அவளை சமாதான படுத்தி ஊருக்கு அழைத்து வருவதற்க்கும் வேலை கிடைத்து ஷியாம் பெங்களூர் செல்வதற்க்கும் சரியாக இருந்தது
முதலில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் ஷியாமின் பிடிவாதத்தாலும் பாரதியின் நல்ல மனதாலும் இளகிய கலா கடைசியில் ஸ்ரீதரின் உடல்நிலையால் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார் கல்யாணத்துக்கு பின் ஷியாம் சக்தி வாழ்வு மலருமா?
தொடரும்

நீங்கள் ரசித்த கவிதை இதில் முன்னோடியாக வரவில்லையே.
அதைத்தான் நான் விரும்பி படிப்பேன்.
ரமணியன்
அதைத்தான் நான் விரும்பி படிப்பேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: என் நிழல் நீயடி
ரோட்டோரம் இருந்த குப்பை தொட்டில ஒரு குழந்தை அழற சத்தம் கேட்டு எட்டி பாத்தேன் அங்க இருந்த குழந்தைய எடுத்துகிட்டு வந்து கலாகிட்ட கொடுத்து வளர்க்க சொன்னேன்
இந்த குழந்தை யார்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: என் நிழல் நீயடி
அந்த குழந்தை யாரென அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் ஐயா
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15
Re: என் நிழல் நீயடி
தனி தொகுப்பாக கவிதைகள் மட்டும் பதிவிடுகிறேன் ஐயா
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15
Re: என் நிழல் நீயடி
மேற்கோள் செய்த பதிவு: 1292052ANUBAMA KARTHIK wrote:தனி தொகுப்பாக கவிதைகள் மட்டும் பதிவிடுகிறேன் ஐயா
வரவேற்கிறோம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: என் நிழல் நீயடி
மேற்கோள் செய்த பதிவு: 1292059 நன்றிT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1292052ANUBAMA KARTHIK wrote:தனி தொகுப்பாக கவிதைகள் மட்டும் பதிவிடுகிறேன் ஐயா
வரவேற்கிறோம்
ரமணியன்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15
Re: என் நிழல் நீயடி
அத்தியாயம் -3
கெட்டி மேளம் முழங்க மங்கையவள் சங்கு கழுத்தில் மங்கல நாண் கட்டி தன்னவள் ஆக்கி கொண்டான் ஷியாம் . சுற்றி நின்ற பெரியவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு மங்கல அக்ஷதை தூவினர் ஆனால் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய காதலர்களோ குழப்பத்தில் இருந்தனர் விடுமுறை நாள் என்பதாலும் ஷியாமின் நண்பர்கள் சக்தியின் தோழியர் என இளமைப்பட்டாளம் கல்யாணமண்டபத்தை கலகலக்க வைத்து கொண்டிருந்தனர்
நண்பர்களின் சீண்டல்களுக்கு தக்கபடி பதில் கொடுத்து கொண்டிருந்த ஷியாமின் கண்கள் நொடிக்கொருதரம் சக்தியை வருடி சென்றது சக்தியின் அருகில் இருந்த சந்தனாவின் விழிகள் இதனை குறும்புடன் நோட்டமிட்டன அவள் ஷியாமின் அருகில் இருந்த சரத்தை பார்த்து சரத் மண்டபத்துல எங்கயோ தண்ணி லீக்கேஜிருக்கு போல வா போய் பார்த்துட்டு வரலாம் என கூப்பிட அவளின் கிண்டலை புரிந்து கொண்ட சக்தியும் ஷியாமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் புரிந்து கொள்ளாத சரத் உண்மையென நம்பி கிளம்பினான்
உக்காரு சரத் சந்தனா பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறா என வாரினான் ஷியாம் . பதிலுக்கு சந்தனாவோ யாரு நாங்க பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குரோமா? இங்க உள்ளதுக்கே வழிய காணோமாம் இதுல பாயாசம் வேற கிடைச்சிட்டாலும் என நொடித்தாள்
அது வரை சுவாரசியமாக உரையாடலை கவனித்த சக்தி விஷயம் புரிந்து ஷியாமின் முகத்தை பார்க்க அவனோ கண் இமைத்து ஆம் என்றான் மாலை வரவேற்பும் களைக்கட்டியது ஒன்று போல சேலை அணிந்து சந்தோஷ முகத்துடன் வளைய வந்தனர் பாரதியும் கலாவதியும் வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து கம்பீரமுகத்துடன் இருந்தனர் ஸ்ரீதரும் பரதனும் என்னம்மா கல்யாணம் உங்களுக்கா இல்ல உங்க பசங்களுக்கா? என குமாரும் சீதாவும் கலாய்தபடி வர அங்கே ஒயாத சிரிப்பலை எழுந்தது
தாய் தந்தையை கண்ட சந்தனா அவர்களுடன் போய் ஒட்டிக்கொள்ள அப்போது வாசலில் வந்த ஒரு விருந்தாளியை வாசலுக்கே சென்று வரவேற்று கூட்டி வந்தான் சரத் அந்த பெண்ணை கண்ட மறுகணம் ஸ்ரீதரனின் முகம் இருண்டது .ஸ்ரீதரின் முகம் போன திசையில் பார்த்த கலாவும் பேரதிர்ச்சி அடைந்தார் .சில வினாடிகளிலேயே முகத்தை சமநிலைக்கு கொண்டு வந்த இருவரும் தங்களுக்குள் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துகொண்டனர் .
எதோ வேலை இருப்பது போல மெல்ல நழுவிய ஸ்ரீதரும் கலாவதியும் அந்த பெண்மணி கிளம்பி செல்லும் வரை அவரின் கண்களில் படாமல் கண்ணாமூச்சி காட்டியபடி இருந்தனர் மேடையில் இருந்தபடி இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்ட சக்திக்கு மனதில் எதோ விவகாரமாக பட சரத்திடம் வந்தவர் குறித்து விசாரிக்க துவங்கினாள்
அவர் தானும் ஷியாமும் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி என்றும் ஷியாமை வாழ்த்தவே வந்ததாகவும் கூறினான் அவர் சென்றவுடன் வெளியே வந்த ஸ்ரீதரன் மற்றும் கலா முகத்தில் தென்பட்ட நிம்மதி இவர்களுக்கு இடையே எதோ ஒன்று உள்ளது என்று சக்திக்கு அறிவுறுத்தியது
கூட்டம் குறைந்த பின் கலாவதியை தேடி சென்ற சக்தி தான் கண்டது குறித்து கேட்க பதில் சொல்லமுடியாத நிலையில் இருந்த கலாவோ சக்தியிடம் இதோ பாருமா இது உனக்கு தேவை இல்லாத விஷயம் இப்போதான் உன் கழுத்துல தாலி ஏறிருக்கு அதுக்குள்ள தேவை இல்லாம கேள்வி கேக்குற வேலை வெச்சுக்காதே உனக்கு எது தேவையோ அதை உன்கிட்ட கட்டாயம் நாங்க சொல்லுவோம் என கடிந்து பேச
ஏற்கனவே தன் தாயை கலாவதி கோபித்து கொண்டதிலும் கல்யாணத்தை நிறுத்த சொன்னதிலும் அவர்மீது வருத்ததிலிருந்த சக்தி இப்போ கொந்தளித்து விட்டாள் என்ன அத்தை பேசுறீங்க உங்க பையன் எப்போ என் கழுத்துல தாலி கட்டினாரோ அப்பேலேர்ந்து இந்த வீட்டுல நானும் ஒருத்தி . இங்க இனி நடக்கபோற நல்லது கெட்டது எல்லாமும் எனக்கும் தெரியனும் ஒண்ணு நீங்க சொல்லுங்க இல்ல ஷியாம் கிட்ட நான் கேட்டு தெரிஞ்சுக்கறேன் என்று சொல்ல கோபத்தில் இருந்த கலாவோ போம்மா போய் கேளு நீ என்னதான் கேட்டாலும் இதுபத்தி அவன் ஒரு வார்த்தை பேச மாட்டான் என சொல்லி விட்டு விடு விடுவென சென்றுவிட்டாள்
திருமணம் என்ற பெயரில் இருவரும் ஒன்றாக சேர்ந்த பின்னர் தன்னவனை தனியே சந்திக்க அலங்கார பதுமையென தயாரானாள் சக்தி மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளியபடி ஷியாம் மீது கொண்ட காதலே மனதில் நிறைந்திருந்தது மற்றதை ஒதுக்கிவிட்டு அவனுடன் இல்லறம் நடத்த தயாரானாள் சக்தி உள்ளே வந்த பின் அவள் அழகை அள்ளி பருகியபடி அசையாது நின்றிருந்தான் ஷியாம்
மெல்ல சுயநினைவுக்கு வந்த ஷியாமிடம் சக்தி தான் மனதில் உள்ளதை பேசத் துவங்கினாள் அவளின் சந்தேகத்தை கேட்ட ஷியாமுக்கோ அதற்கான விடை தெரியாதது அவமானமாய் இருக்க அதை காட்டிக்கொள்ளாது அவளின் கவனத்தை திசை திருப்ப முயன்றான் கலாவதியின் வார்த்தைகளின் தாக்கம் ஏற்படுத்திய விளைவால் ஷியாம் தன்னிடம் இருந்து விஷயத்தை மறைப்பதாகவே நினைத்தாள் சக்தி அதன் விளைவு அங்கே அவர்களுக்குள் வாக்கு வாதம் மூண்டது
போதும் ஷியாம் வந்ததுலேந்து கேக்குறேன் எனக்கு சரியா பதில் சொல்லாம நீங்க நடந்துக்கறது நல்லா இருக்கா?
ஏன் சக்தி டென்ஷன் ஆகுறே ? இதுல என்ன இருக்கு ? இன்னைக்கு நமக்கு முதலிரவு எத்தனை நாளா உன்னை கல்யாணம் பண்ணனும்னு கனவு கண்டு இன்னைக்குதான் அது நடந்திருக்கு இப்பொ நம்ம வாழ்க்கைய பத்தி பேசுரத விட்டுட்டு சும்மா சும்மா தேவை இல்லாதத பத்தி பேசிகிட்டு இருக்குறே? என ஷியாம் கேட்க
ஷியாம் உங்கம்மாவும் இத எனக்கு தேவை இல்லாத விஷயம் நு சொன்னாங்க நீங்களும் இப்பொ அப்படியே சொல்லறீங்க எப்போ நான் உங்களுக்கு பொண்டாட்டியானேனோ அப்பவே நம்ம குடும்பத்துல நடக்குற நல்லது கெட்டதுக்கு எனக்கும் பங்கு உண்டு பீளிஸ் ஷியாம் சொல்லுங்க என்ன நடக்குது யார் அவங்க ? அவங்கள பாத்த உடனே ஏன் அத்தையும் மாமாவும் பயப்படனும் என சக்தி கெஞ்ச அவளின் தீவிரத்தை உணர்ந்த ஷியாம் அவளை அமர வைத்து பேசத்துவங்கினான் சக்தி நீ இதுல இவளோ தீவிரமா இருப்பேனு நான் நினைக்கல
.
அவங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கு தெரியாது ஆனால் அதை அம்மா அப்பாகிட்ட கேக்க முடியாது எங்கம்மாவை பொறுத்தவரைக்கும் அவங்க விருப்பபடலேனா தலைகீழா நின்னா கூட அவங்க வாயிலிருந்து விஷயத்த வாங்க முடியாது அப்பாவோ அம்மா பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டார் கொஞ்சம் பொறுமையா இரும்மா எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம் அதுக்கு உனக்கு என்ன உதவி வேணுமுனாலும் நான் செய்யறேன் என உறுதியளித்தான்
மறுநாள் காலை விழித்து எழுந்த ஷியாம் தன் பக்கத்தில் கண்டது காலி படுக்கையை தான் அவனுக்கு முன்னாடியே எழுந்து வந்த சக்தியை எதிர் கொண்டது கலாவதியும் பாரதியும் தான் முந்தைய நாள் நடந்த வாக்கு வாதங்களின் சுவடு எதுவும் இன்றி மலர்ந்த முகத்துடன் இருந்த கலாவதியை பார்த்த சக்தி ஆச்சரியப்பட்டாள்.
கலைந்த தலையும் சேலையும் ஆயிரம் கதைகள் சொல்ல அனுபவபட்ட தாய்மாரோ தங்கள் மக்களின் வாழ்வு மலர்ந்து விட்டதை புரிந்து கொண்டனர் தன் தாயின் முகத்துக்கு இணையாக கலாவதியின் முகமும் மலர்ந்திருப்பதை கண்ட சக்தி அவரின் கோபம் போய் விட்டதை உணர்ந்தாள்
சக்தி போய் குளிச்சிட்டு சாமி கும்பிட்டு விளக்கேத்திட்டு வாம்மா என பாரதி சொல்ல இரு பாரதி இன்னமும் பொழுது விடியல இங்க பாரு பனி எப்படி கொட்டுதுனு போம்மா போய் முகம் கை கால் கழுவிட்டு வந்து காபி குடிசிட்டு வா வெந்நீர் ரெடியானதுக்கப்புறம் குளிக்கலாம் ஷியாம் எழுந்திருசிருந்தா அவனுக்கும் காபி எடுத்துட்டு போ என சொல்லியவாறே அவ்விடம் விட்டு நடந்தார் கலா
குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு வந்த சக்தியை தேடி வந்த ஷியாம் சக்தி வேலைக்கு எத்தனை நாள் லீவு போட்டுருக்க என வினவினான் இல்ல ஷியாம் கல்யானத்துக்கு முன்னாடியே நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் எனக்கு அந்த வேலை செட் ஆகலை இனிமேதான் வேற வேலைதேடணும் உனக்கு சொல்லாம செஞ்சுட்டேன் பா தப்பா எடுத்துக்காதே
ஹே ஆங்ரி பேர்ட் இதுக்கெல்லாம் கோச்சுக்குவேனா நான் .
என்னது ஆங்ரி பேர்ட் ஆ எப்பொலேர்ந்து இந்த பட்ட பேரு வெச்ச ஷியாம் என சக்தி வினவ அத்தையும் அம்மாவும் சண்டை போட்ட உடனே அதுக்கு என்கிட்ட பேசம இருந்த பாரு அதுலேருந்துதான்
வரலாமா என குரல் கொடுத்துகொண்டே அங்கே வந்தாள் சந்தனா போச்சுடா என முணுமுணுத்து கொண்டே வாம்மா சைரன் எங்க இந்த பக்கம் வந்தே இது உனக்கு நடுராத்திரி ஆச்சே என ஷியாம் கேட்க
இங்க பாரு சக்தி உன் புருஷன் கிட்ட சொல்லிவை எப்போ பாரு என்ன சைரன் சைரன் நு கூப்ப்ட்டுகிட்டு இருக்கான் அப்புறம் இதுக்கும் சேத்து பின்னாடி வருத்தபட வேண்டிருக்கும் என கொதிக்க அது நடக்குறப்ப பாத்துக்கலாம் இப்போ நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு எங்க இந்தபக்கம் காலங்காத்தால காத்து வீசுது என மறுபடியும் ஷியாம் கலாய்க்க
அத நான் சொல்றேன் ஷியாம் என்றபடி ஆஜரானான் சரத் குட்மார்னிங் அண்ணி ஒரு நிமிஷம் வந்து ஷியாம் பக்கத்துல நில்லுங்க என சேர்த்து நிக்க வைத்து விட்டு அவர்கள் கைகளில் இருவரும் சேர்ந்து ஒரு கவரை திணித்தனர் அதை கையில் வாங்கிய ஷியாமும் சக்தியும் பிரித்து பார்க்க அவர்கள் சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்தில் போய் வரவும் மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்ல அங்கு தங்க , ஊர் சுற்ற உண்ண என அனைத்து வசதிகளும் கொண்ட ஹனிமூன் செல்வதற்க்கான பேக்கேஜ் அதுவும் இன்றே கிளம்ப ஏற்பாடு செய்திருந்தனர் அதை கண்டு திகைத்த முகத்துடன் நிமிர்ந்த ஷியாமை கண்டு குறும்பாக நகைத்த சந்தனா இப்போ ஏன் தெரியுதா என் காத்து இந்த பக்கம் வீசிச்சுனு ?
அப்பொ இது உன் வேலையா ? என ஷியாம் கேட்க
இது என் வேலை மட்டுமில்ல உன் தம்பியும் இதுல பார்ட்னர் அதுனால எங்கள மொறைக்காம காலா காலத்துல கிளம்பற வழிய பாருங்க என சந்தனா விரட்ட இல்ல அத்தை மாமா கிட்ட சொல்லாம எப்படி என சக்தி தயங்க அங்கு வந்த கலாவும் ஸ்ரீதரும் எங்க ரெண்டுபேருக்கும் சொல்லிட்டு தான் அவங்க இத ஏற்பாடு பண்ணாங்க ஸோ போய் தயக்கமில்லாம கிளம்புங்க என சொன்னார்கள்
யாருக்கிட்ட என கெத்து காட்டியபடியே சந்தனா சிரிக்க இளையவளின் குறும்பை ரசித்தபடியே அந்த இடம் விட்டு நகர்ந்தனர் மூத்த தலைமுறையினர்
சரி வா சக்தி ரெடியாகி வரலாம் என கூப்பிட்ட படியே சென்றான் ஷியாம் எல்லாம் வருவா நீ முன்னாடி போ இந்தோ இப்போ அனுப்பிவைக்குறேன் என் சந்தனா சொல்ல சிரித்தவாரே நகர்ந்தனர் ஷியாமும் சரத்தும்
அவர்கள் சென்றபின் தன் தோழியை சீண்ட எண்ணி ஆமா நாங்க இங்க வந்த போது யாரோ ஆங்ரி பேர்ட தேடிக்கிட்டு இருந்தீங்களே நீயும் சக்தியும் எங்கே பா ? என கேட்டாள் தனக்கு தன் கணவன் வைத்த செல்ல பெயரை சொல்லி தன் தோழி கிண்டல் செய்ய வெட்கத்தால் முகம் சிவந்த சக்தியோ சொல்ல மாட்டேன் போடி என சொல்ல
இப்போ நீ சொல்லல ஆள் வெச்சு அடிப்பேன் தெரியுமில்ல?
ஹாங் எல்லாம் தெரியும் போடி இந்த வீட்டுல உன் கையாள் யாருனு எனக்கு தெரியும் ஆளு வெச்சு அடிக்கற முகரய பாரு உன் ஆளு அதுகெல்லாம் சரிவர மாட்டாரு என சக்தி சொல்ல இப்போது முகம் சிவப்பது சந்தனாவின் முறைஆயிற்று
வெட்கத்தில் சிவந்த தன் தோழியின் முகத்தை பார்த்த சக்தியோ ஹனிமூன் முடிச்சுட்டு வந்து உன்னை வெச்சு செய்யறேன் சந்து என ராகம் பாடிவிட்டு சென்றாள் இவர்கள் நினைத்ததெல்லாம் இனிதே நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்

அத்தியாயம் -4
ஜோடி ஜோடியாக தம்பதிகள் பக்தியுடன் வலம் வரும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் முதலிரண்டு நாட்கள் ஊர் சுற்றமனமின்றி அறையிலேயே ஹனிமூன் கொண்டாடிய ஷியாமும் சக்தியும் கடைசி நாளான இன்று ஊர் சுற்றி பார்க்க வந்தனர்
கடவுளிடம் மனமுருகி வேண்டியபடியே தம்பதிகள் பிரகாரம் சுற்றி வர உச்சி கால பூஜை முடிந்து கோவில் நடைசார்த்தும் நேரமும் நெருங்கியது அப்போது அவசர அவசரமாக வந்த ஒரு மத்திய வயது பெண்ணுக்கு ஏம்மா இன்னைக்கு இவளோ நேரம் ஆயிடுத்து என விசாரித்தபடியே அர்ச்சனையை முடித்து பிரசாதம் கொடுத்தார் அர்ச்சகர்
அதற்க்கு அவரோ நியாபகம் இல்லாம தூங்கிட்டேன் சாமி என்னதான் இருந்தாலும் எனக்கும் வயசு ஆகுது இல்லயா ? முதலாளியை கவனிச்சுட்டு வரத்துக்குள்ளா இன்னைக்குகொஞ்சம் லேட் ஆயிரிச்சு என சொல்ல சரிமா போய் பிரகாரம் சுத்திட்டு வாங்க மா பிரசாதம் ரெடி பண்ணி வைக்கிறேன் என சொன்னார்
பிராகாரம் சுற்றி முடித்து ஷியாம் தம்பதி அமரவும் சுற்ற ஆரம்பித்த அந்த அம்மாள் அவ்விடம் வந்ததும் மயங்கி விழவும் சரியாக இருந்தது அவர் மயங்கி விழுந்ததை கவனித்த சக்தி ஒடி சென்று தாங்கி பிடித்தாள் பின்னாடியே ஒடி வந்த ஷியாமிடம் தண்ணி எடு ஷியாம் என கேட்டு வாங்கி அவரின் முகத்தில் தெளித்தாள்
அவளை போலவே அவர் மயங்கி விழுந்ததை பார்த்து ஒடி வந்தவர்களின் உதவியுடன் மயக்கம் தெளிவிக்க சற்றே தன்னை நிதானபடுத்திக் கொண்டு மெல்ல கண் திறந்த அவர் சக்தியை கண்டு அதிர்ச்சியானார்
மெல்ல கண் விழித்த உடன் எப்படியம்மா இருக்கேங்க என கேட்க என சக்தி கேட்க ஷியாமின் கண்களுக்கு அவரின் அதிர்ச்சி தப்பாது தெரிந்தது
இப்பொ பரவா இல்லமா என அவர் பதில் கொடுக்க
உங்களால தனியா வீட்டுக்கு போக முடியுமா ? கூட யாராவது வந்து இருக்காங்களா? இல்ல நாங்க கொண்டு வந்து விடவாமா? என கேட்ட படியே அவர் எழ உதவி செய்தனர் சக்தியும் ஷியாமும்
இங்க பக்கத்துல தான் அம்மா எனக்கு வீடு என் கூட யாரும் வரல. என் முதலாளி தான் இருக்கார் உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பல மா நானே போய்க்கிறேன்
இதுல என்ன இருக்கு வாங்க மா என அழைத்து கொண்டு நடக்க துவங்கினர் சக்தியும் ஷியாமும்
அங்கே வீட்டை அடைந்த போதோ சாதரண வீட்டை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியாக அவர்களை வரவேற்றது பிரம்மாண்ட மாளிகை
வீட்டின் வாசலியே அம்மா பத்திரமா உள்ள போயிக்குங்கமா நாங்க கிளம்பறோம் என்று கூறிய படியே கிளம்பிய சக்தியையும் ஷியாமையும் இருங்க பா வீட்டுக்குள்ளே வந்து ஒரு வாய் தண்ணியாவது குடிச்சிட்டு போங்கப்பா என அவர் கெஞ்ச சரியென உள்ளே சென்றனர் தம்பதிகள்
வந்தவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு உள்ளே சென்றவர் ஒரு வயதான பெண்மணியை கூட்டி கொண்டு வந்தார் அவர் கூடவே கையில் காபி டம்ளர்களுடனும் ஒரு சமையல்காரரும் வர மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர் ஷியாமும் சக்தியும் தள்ளாடியபடி வந்து நின்ற அந்த பெண்மணி கூர்ந்து கவனித்தது சக்தியைத்தான் அவளை பார்த்த மாத்திரத்தில் நீ பாரதி -பரதன் பொண்ணுதானே என கேட்க ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினாள் சக்தி உனக்கு கல்யாணம் எப்போ ஆச்சு? உன் புருஷன் பேர் என்னமா? என கேட்க
மேடம் உங்களுக்கு எங்க அப்பா அம்மாவ தெரியுமா ? என சக்தி கேட்க மேடம் நு எல்லாம் கூப்பிட வேண்டாம் பா எனக்கு உங்க பாட்டி வயசு தான் இருக்கும் என்ன பாட்டினே கூப்பிடலாம் அப்புறம் என்ன கேட்டே? உங்களுக்கு எங்க அப்பா அம்மாவ தெரியுமானு தானே? உங்கம்மாவ நல்லா தெரியும் அத விட உன் அத்தை கலாவையும் தெரியும் என சொல்ல
என்ன உங்களுக்கு எங்க அம்மாவயும் தெரியுமா ? என ஷியாம் கேட்க ஓ கலாவதி பையனா நீ? என கேட்டார் ஆமாம் பாட்டி என கோரசாக இருவரும் பதில் சொல்ல அங்கே ஒரு மௌனம் நிலவியது
மெல்ல மௌனத்தினை கலைத்த அந்த பெரியவர் முதலில் இவர்களை கூட்டி வந்த பெண்ணை பார்த்து வசுந்தரா என்னால ரொம்ப உக்கார முடியல என சொல்ல நீங்க போங்க பெரியம்மா நான் அவங்களை கவனிச்சு அனுப்பறேன் சொல்லி பெரியவரை ஓய்வுக்கு அனுப்பினார்
பின்னர் ஷியாமிடம் தம்பி நீங்க இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பீங்க ? உங்ககிட்ட பேசனுமே என கேட்க நாங்க இன்னைக்கு கிளம்பறோம் அம்மா நான் SS குரூப்ஸ் ல ஜென்ரல் மனேஜரா இருக்கேன் என் தம்பியும் அங்கதான் வேல பாக்குறான் லீவு இன்னையோட முடியுதுமா? அதுனால நாங்க கிளம்பிதான் ஆகணும்
ஆமாம் அவங்க யாரு அம்மா? என கேட்டான்
தம்பி எந்த SS குரூப்ஸ் ல நீங்க ஜென்ரல் மனேஜரா இருக்கீங்களோ? அந்த SSகுரூப்ஸ் முதலாளி சுமித்ரா தேவியோட அம்மா நந்தினி தேவிதான் பா இவங்க
சரிம்மா நாங்க கிளம்பறோம் என எழ இருப்பா மேல வந்து பெரியம்மா கிட்ட இரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பு என்றார் வசுந்தரா
தலையை ஆட்டியபடியே சக்தியும் ஷியாமும் அவரை பின் தொடர்ந்து பெரியவரின் அறைக்குள் அவரிடம் சொல்லி கொண்டு கிளம்பினர் அப்போது அந்த அறையில் இருந்த ஆளுயர படத்தை பார்த்த ஷியாம் இது யார் என கேட்க இது எங்க சின்னையா தம்பி அவர் இப்போ இல்லப்பா என சொன்னார் வசுந்தரா ஆனா அவர நான் எங்கயோ பாத்திருக்கேன் மா என சொல்ல
வசுந்தராவோ தம்பி அவர் இறந்து கிட்டதட்ட 20 வருஷத்துக்கு மேல ஆச்சுபா இது பத்தி மேல எதுவும் இங்க வெச்சு பேச வேண்டாம் இன்னமும் கொஞ்ச நாளுல நானும் பெரியவரும் சென்னைக்கு வந்திருவோம் அதுக்கப்புறம் ஒருநாள் சவகாசமா பேசலாமே என அவர் பேச்சை முடித்துவிட தோளை குலுக்கியவாறே விடைபெற்றான் ஷியாம்
தங்கி இருந்த அறையை அடைந்த பின்னும் ஷியாம் மௌனமாகவும் யோசனையுடனும் இருந்ததை பார்த்த சக்தி ஹேய் என்ன ஆச்சுப்பா என கேட்க
சக்தி அந்த பாட்டிமா ரூமுல இருந்த படத்துல இருந்தவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி தோணுது அதுதான் யோசிச்சுட்டு இருக்கேன்
ஆமாம் ஷியாம் எனக்கும் அது தோணிச்சு சரி விடு எப்பயாச்சும் நினைப்பு வரும் இப்போ வந்த வேலைய பாப்போம்
என்ன வேல மா பாக்கணும் என கேட்ட ஷியாமின் முகத்தில் குறும்பு கூத்தாட கேள்வியின் அர்த்தம் புரிந்த சக்தியோ அவன் முகத்தினை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை கவிழ்ந்தபடி போதும்டா மாமு நாளைக்கு கிளம்பனும் பிளீஸ் என முணங்க
ஹே ஆங்ரி பேர்ட் என்னனு கூப்பிட்ட மாமுவா? கேக்கும்போதே கிக்கா இருக்குடி இன்னொரு தடவை கூப்பிடேன் ம்ஹீம் மாட்டேன் போ என சொல்லி விட்டாள் சக்தி
இப்போ நீ கூப்பிடலே நா பாரேன் என அவளை நோக்கி ஷியாம் நடக்க தொடங்க அவன் கைகளில் சிக்காமல் இருக்க மங்கையவள் பின்னோக்கி நகர துவங்கினாள்அந்த அறையின் சுவர் மேலும் அவளை பின்னோக்கி நகர விடாது தடுக்க முன்புறம் அவனின் வலிய கரங்களின் சிறையில் தன் இதயதுடிப்பின் ஓசையை கேட்டபடி நெற்றியில் வியர்வை பூக்கள்பூக்க உதடு கடித்து நின்றாள்
அவனோ தாபத்தில் ஹேய் ஒரு தடவை மட்டுமாவது கூப்பிடுடீ என கெஞ்ச துவங்க அவளின் இதழ்கள் மெல்ல அசைந்து மாமூ என்றது தன் ஆசையை நிறைவேற்றிய அவ்விதழ்களுக்கு பரிசளிக்க நினைத்து அவள் முகம் நோக்கி குனிந்தான்
அந்நேரம் அவனின் செல்பேசி சிணுங்க துவங்க அதன் ஓசையில் கவனம் கலைந்தான் யாரென எடுத்து பார்த்த போது சரத் அழைப்பதாய் அது அறிவிக்க சக்தியிடம் இருந்து பேசும்படி சைகை வர எடுத்து பேசதுவங்கினான் ஆனால் அதில் பேசியவர் சுமித்ரா தேவி அவரின் குரல் உச்ச பட்ச பதட்டதில் இருக்க அது தம்பதிகளை நடப்புக்கு கொண்டு வந்தது
ஹேய் ஷியாம் சாரிமேன் உன்னோட பர்சனல் டைம்ல தொந்தரவு பண்ணிட்டேன் நீ கொடைக்கானல் ல இருக்கறதா சரத் சொன்னான் அங்கதான் எங்கம்மா இருக்காங்க அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்னு போன் வந்தது நான் அங்க வரவரைக்கும் நீ அங்க போய் ஹெல்ப் பண்ண முடியுமா? என கேட்க
ஷுயூர் மேடம் என பதில் சொன்னான்
தென் நான் உனக்கு இப்பொ டீடைல்ஸ் மெசெஜ் பண்றேன் கொஞ்சம் அங்க போய் எனக்கு அவங்க ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு பா
ஓகே மேடம் என சொல்லி விட்டு சக்தியை பார்த்து நீ தனியா இருந்துப்பியா சக்தி பாட்டிமாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் பாஸ் போன் பண்ணி ஹெல்ப் கேக்குறாங்க என கேட்டான் நானும் உங்களோட வரேன் ஷியாம் என அவள் சொல்ல இருவருமாக கிளம்பினர்
அங்கே ஹாஸ்பிட்டலில் ஐசியூ வாசலில் வசுந்தரா கவலையுடன் நிற்க வேகமாக அவரிடம் சென்று என்னாச்சுமா என கேட்டாள் சக்தி அவரின் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண்ணோ சக்தியை கண்டவுடன் உறைந்து நின்றார்
தொடரும்
அத்தியாயம் -5
திகைத்த தோற்றத்திலிருந்த அவர் வசுந்தராக்கா அங்க வரது யாரு ? என கேட்க திரும்பி பார்த்த வசுந்தராவோ அழுகையை கட்டுபடுத்தி கொண்டே ஆமாம் சின்னாம்மா அது பாரதி பொண்ணுதான் கூட வரது நம்ம கலாவோட பையன் ரெண்டுபேருக்கும் இப்பொதான் கல்யாணம் ஆயிருக்கு தம்பி நம்ம சுமித்ரா அம்மா கிட்டதான் வேலை பாக்குது
அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே பக்கத்தில் வந்து விட்ட ஷியாமையும் சக்தியையும் வசுந்தரா அறிமுகபடுத்த இவங்க யாருமா? என கேட்டாள் சக்தி
இவங்க எங்க சின்னம்மா ரத்னா தேவிமா பெரியம்மாவுக்கு துணையா இங்க இருக்காங்க என சொன்னார் அவரை கை கூப்பி வணங்கிய ஷியாமும் சக்தியும் மேற்கொண்டு பேச துவங்கும் முன் அங்கு வந்த மருத்துவர் பெரியவரின் உடல்நலம் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்ல அந்த செய்தியை சுமித்திரா தேவியிடம் தெரிவித்தான் ஷியாம் அவரோ தான் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார்
மெல்ல பெரியவருக்கு சுயநினைவு திரும்பி கண் விழித்த உடன் அவர் வசுந்தராவை பார்க்க விரும்புவதாக சொல்ல உள்ளே சென்ற வசுந்தரவிடம் அவ வந்திருக்காளா என கேட்டார்
ஆமாம் அம்மா சுமிக்கா வந்துகிட்டு இருக்காங்க அப்போ சரி அவ வந்த உடனே என்ன வந்து பாக்க சொல்லு என சொல்லிவிட்டு கண்களை மூடி உறங்கத் துவங்கினார்
அந்த நேரம் அரக்க பரக்க உள்ளே நுழைந்த சுமித்திராதேவியோ ரத்னா அம்மா எப்படி இருக்காங்க கேட்டபடியே வந்தார் இப்போ பரவாஇல்லை மேடம் அபாய கட்டம் தாண்டிட்டாங்க என பதில் சொன்னது ஷியாம் தேங்யூ ஷியாம் உன் பெர்சனல் டைம்ல கூட நான் கேட்டுகிட்டதுக்காக வந்து ஹெல்ப் பண்ணிருக்க பா ரொம்ப தேங்ஸ் எங்க பா உன் மிஸஸ் அவங்களும் வந்திருக்காங்களாமே கூப்பிடு அன்னைக்கே சரியா நான் பாக்கல அவளுக்கும் தேங்ஸ் சொல்லணும்
இட்ஸ் ஒகே மேடம் அதுனால என்ன எதோ எங்களால முடிஞ்ச உதவி என சொல்லியபடியே அங்கே சக்தி வர
அவளை குழப்பத்துடன் பார்த்த சுமித்ராவோ ஷியாம் உங்க அம்மா அப்பாவ நான் ரிசப்ஷனுக்கு வந்த போதே பாக்கல அவங்களை நான் பாக்கணுமே போட்டோ எதாவது இருக்கா என கேட்க திருமணதினத்தில் எடுத்த குடும்ப போட்டோவை அவரிடம் காட்டியபடியே எதுக்கு மேடம் என கேட்டான் ஷியாம்
அவன் காட்டிய போட்டோவில் இருந்தவர்களை பார்த்த சுமித்ராதேவி ஒரு பெருமூச்சுடன் சரத்துக்கு போன் போடு ஷியாம் உன் குடும்பம் எல்லாரும் உடனே இங்க வரணும் என கட்டளை இடும் குரலில் சொல்லிவிட மேடம் எனக்கு புரியலயே என ஷியாம் கேட்க உன் பேரண்ட்ஸ் வந்த உடனே உனக்கே புரியும் இப்போதைக்கு நான் சொல்றத மட்டும் செய் என சொன்னார்
ஷியாம் போன் செய்தவுடன் குடும்பத்தினரை அழைத்து கொண்டு வந்த சரத்தை வாயிலிலே நின்று வரவேற்றார் சுமித்ரா அங்கே வந்த கலாவை பார்த்த ரத்னாவோ கலாக்கா என்ற கூவலுடன் அணைத்துகொள்ள அதை பார்த்த மற்றவர்களின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது
கலாக்கா என் கண்ணப்பூ எங்க ? என கேவலுடன் ரத்னா கேட்க சரத்தை இழுத்து அவள் முன் நிறுத்தினார் ஸ்ரீதரன் அண்ணா அப்போ இது என கேள்வியாய் நோக்க ஆமாம் மா நான் குப்பையிலிருந்து எடுத்த உன் குழந்தைதான் மா இவன்
எல்லாம் வாசலியே நின்னு பேசவேணாம் ரத்னா இனிமேதான் நிறைய வேலை இருக்கு தயவு செஞ்சு எல்லாரும் உள்ளே வாங்க என எல்லாரையும் உள்ளே அழைத்து சென்றார் சுமித்ராமேடம் இங்க என்ன நடக்குது தயவு செஞ்சு யாராச்சும் சொல்லுங்க பிளீஸ் என சக்தி கேட்க சொல்றேன் பா என பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் சுமித்ரா
எங்க அப்பா அம்மாவுக்கு நான் நா ரொம்ப செல்லம் சக்தி செல்வமும் செல்வாக்குமா இருந்த எங்கப்பாவுக்கு நானும் என் தம்பியும் தான் வாரிசுகள் எனக்கும் என் தம்பினா உசிரு அவனும் எங்கிட்ட ஒரு நண்பனாத்தான் பழகினான் என் நேரம்னுதான் சொல்லுவேன் நான் என் கூட படிச்ச தனசேகர விரும்பினேன் அவரையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு வீட்டுல அடம் பிடிச்சேன்
ஆரம்பத்தில எல்லாம் நல்லபடியாதான் போச்சு நாளடைவில என் வீட்டுக்காரர் குணத்துல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது அவரை நம்பி பிஸினெஸ் குடுத்து வெச்சிருந்தோம்
பணம் புழங்க ஆரம்பிச்சதும் அவருக்கு பேராசை வந்திருச்சு எல்லாம் தனதா ஆகனும் நு நினைச்சாரு இதுக்கிடையில என் தம்பி ரத்னாவ காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிக்கிட்டு வந்தான் இதுனால எங்கப்பாவுக்கும் என் தம்பிக்கும் ஒத்து போகல்ல எனக்கு தெரியாம என் வீட்டுக்காரர் இந்த பகைய பெருசாக்க முயற்ச்சி பண்ணார்
உங்க அத்தை பாரதியும் ரத்னாவும் பிரெண்ட்ஸ் அதுனால அவங்க வீட்டு பக்கத்துல என் தம்பிய தனி குடித்தனம் வெச்சோம் அப்பதான் உங்கப்பா தவறி போய் இருந்ததுனால ஒரு ஆறுதலுக்காக பாரதிய பாக்க ரத்னா போனா அவ கூட நானும் அவரும் போனோம் அங்கதான் உங்கம்மா பழக்கம் ஆனாங்க உங்கம்மாவுக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணமும் ஆச்சு அந்த சமயத்துல ரத்னா கர்பவதியானா
கல்யாணம் ஆகியும் ரொம்ப நாள் எனக்கு குழந்தை இல்லாததால எங்கே சொத்தெல்லாம் கையவிட்டு போயிடுமோனு என் வீட்டுக்காரருக்கு பயம் வந்திடுச்சு அதுகேத்தமாதிரி உன் தாத்தாவும் என் தம்பிய வீட்டுக்குள்ள சேத்துக்க முடிவுப் பண்ணார்
அவங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தோம் ஆரம்பத்துல இருந்த மாதிரியே என்கிட்ட நல்ல பழகறமாதிரி நடிச்சார் நானும் அவர்மேல இருந்த அவநம்பிக்கைய விட்டுட்டு சந்தோஷமா இருந்தேன் என் தம்பிக்கு கொஞ்சம் சந்தேகம் அவர் மேல இருந்தாலும் அவன் எனக்காக அவர்கிட்ட நல்ல படியா நடந்துகிட்டான்
இதுக்கு இடையில என் அப்பாவுக்கு என்ன தோணிச்சோ தெரியல்ல எல்லா சொத்தையும் என் தம்பிகுழந்தைக்கு எழுதிட்டார் அதுக்கு கார்டியனா என்னையும் ரத்னாவையும் போட்டார் எங்க ரெண்டு பேர் உயிருக்கு எதாவது ஆச்சுனா அந்த சொத்து முழுதும் தர்மத்துக்கு போகணும்னு எழுதிட்டார்
இந்த விபரம் எங்க யாருக்கும் தெரியாது இந்த சமயத்துல நாங்க எல்லாருமா குடும்பத்தோட சந்தோஷமா கொண்டாட இந்த கொடைக்கானல் வீட்டுக்கு வந்தோம் ஜாலியா சந்தோஷமா இருந்தோம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நு வீடு களைகட்டிச்சு எல்லாம் முடிஞ்சு கிளம்பற நாளும் நெருங்கிச்சு
வீட்டுக்கு கிளம்பற நேரத்துல அவர் வயத்தகலக்குதுனு பாத்ரூம் ல போய் உக்காந்துகிட்டார் அப்போ எங்கப்பாவும் எந்தம்பியும் எங்கம்மா அப்புறம் ரத்னாவோட ஒரு கார் ல போறதுனும் என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியானதும் நாங்க வரதுனும் முடிவாச்சு அவங்க கிளம்பினதும் கொஞ்ச நேரத்துல உடம்பு சரியாகிட்டதா சொல்லி இவரும் கிளம்பிட்டாரு
நாங்க வீட்டுக்கு போற வழியில ஒரு இடத்துல எதோ ஆக்ஸிடென்ட் ஆயிட்டதா சொல்லி ஒரே கூட்டமா இருந்துச்சு இறங்கி பாத்துட்டு வரேன் நு இவர் போனார் பொழுது போகாம கார் விட்டு நான் கீழ இறங்கி வந்தேன் அங்க இருந்தவங்க கார் ஆக்ஸிடென்ட்ல செத்தது முன்னால இருந்தவங்கனும் பின்னால இருந்த ரெண்டு லேடிஸ்ல ஒருத்தர் கர்பம் நு பேசிக்கிட்டு போனது என் மனச உறுத்த ஆரம்பிச்சது
நான் பின்னாடியே இறங்கி போய் பாத்தேன் அங்கே ரத்த சகதியா எங்க குடும்பம் இருந்தது ஐயோனு இருந்தது அப்பானு கத்திகிட்டே அவங்க கிட்டே போய் பார்த்தேன் அவர் எங்கிட்ட எதோ சொல்ல வந்தார் அதுக்குள்ளே சுத்தி நின்னுகிட்டு இருந்தவங்க என்ன கிட்ட போக விடாம பிடிச்சுகிட்டாங்க நான் இவர தேடி பாத்த போது அங்க இருந்த போலிஸ் கிட்ட இவர் பேசிக்கிட்டு இருந்தார் கிட்ட போய் பார்த்தபோது அவர் முகம் கல் மாதிரி இருந்தது ஆனா கண்ணுல சந்தோஷம் தெரிஞ்சிச்சு
நான் பக்கத்துல வரத உணர்ந்த அவர் கண்ணுல நீர் கோத்துகிச்சு ஒரு நிமிஷம் நான் பார்த்தது பொய்யோனு தோணிச்சு என்னை அணைப்புல வெச்சுகிட்டு யாரையோ பார்த்து கை கட்டை விரலை உயர்த்தி காட்டினத நான் பின்னாடி இருந்த கார் கண்ணாடில பார்த்தேன் அந்த உருவம் என் மனசுல பதிஞ்சு போச்சு அப்போ இருந்த மன நிலைல அதை பத்தி அவர் கிட்ட கேக்கணும்னு தோணல
எங்க வீட்டுல இறுதி காரியங்கள் முடிஞ்ச உடனே வக்கீல் உயில பத்தி சொன்னபோது அவர் ஆடின ஆட்டத்துலதான் அவரோட சுயரூபம் புரிஞ்சது ஆனாலும் அம்மாவும் ரத்னாவும் ஹாஸ்பிட்டல்ல இருந்ததுனாலயும் பிஸ்னஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியாததாலயும் என்னால அவரை ஒண்ணும் பண்ண முடியல
அப்புறம் வக்கீல் சமாதானம் பேசுனார் அதன்படி அவர் பிஸ்னெஸ நிர்வாகம் பண்ணுறதுனும் நான் அம்மாவயும் ரத்னாவயும் பாத்துக்கறதுனும் முடிவுபண்ணினோம் ரத்னாவோட குழந்தைதான் சொத்தை பத்தி முடிவு எடுக்க முடியும்னும் அதுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா சொத்து தர்மத்துக்கு போயிடும்னும் வக்கீல் சொல்ல வேற வழி இல்லாம அதுக்கு அவர் ஒத்துக்கிட்டார்
அம்மா ரத்னா அப்புறம் நான் மூணு பேரும் மன நிம்மதிக்காக தம்பியும் ரத்னாவும் இருந்த பழைய வீட்டுக்கு போய்ட்டோம் இங்க எங்களை பத்தின கவலை இல்லாம அவர் அங்க ஆட்டம் போட ஆரம்பிச்சார் எங்க என் வாழ்க்கை வீணா போயிடுமோனு பயந்து எங்க அம்மா என்னை வற்புறுத்தி அவர் கூட அனுப்பி வெச்சாங்க அதுக்கு நானும் மாசமா இருந்ததும் ஒரு காரணம்
சரின்னு எங்க வீட்டுல ரொம்பநாளா வேலை பார்த்த இந்த வசுந்தராவை துணைக்கு வெச்சுட்டு நான் அவர் கூட போனேன் எனக்கு ஒருவேளை குழந்தை பிறந்தா அவர் திருந்திடுவாறுனு ஆசை இருந்ததும் அதுக்கு ஒரு காரணம் ஆனா நான் இங்க இருந்து கிளம்பினதுமே எனக்கு தெரியாம அவர் வசுந்தராவை வேலைய விட்டு துரத்திட்டு அவருக்கு சாதகமா இருக்குற ஆட்களை வேலைக்கு வெச்சிருக்கார் அது எனக்கு தெரியாமையும் பாத்துகிட்டார்
ரத்னாவுக்கும் பிரசவ வலி எடுத்து ஹாஸ்பிட்டல சேத்த தகவல் கேட்டு நான் ரத்னாவ பாக்க அவருக்கு தெரியாம அங்க போனேன் போறவழில எனக்கு பிரசவ வலி எடுத்துச்சு எங்க நல்ல காலம் அவர் வேலைய விட்டு துரத்தினதும் வசுந்தரா வேற வழி இல்லாம அந்த ஹாஸ்பிட்டல வேலைக்கு சேர்ந்திருந்தா அவரோட ஆட்கள் மூலமா அவருக்கு ரத்னாவுக்கு வலி எடுத்த விஷயம் தெரியறத்துக்குள்ள சரத் பிறந்துட்டான்
ஆனா அவர் கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்த ஏற்கனவே நாங்க போட்ட திட்டபடி அவரோட ஆட்களை தாக்கிட்டு எங்க ஆட்கள் சரத்தை தூக்கிகிட்டு போய்ட்டாங்க அப்படியும் அவர் ஆட்கள் சரத்தை கைபத்த முயற்சி பண்ணாங்க இந்த சண்டையில அந்த ஆட்கள் அவனை குப்பை தொட்டில போட்டதும் அந்த வழியா வந்த ஸ்ரீதர் அண்ணன் காப்பாத்தி உன்னை எடுத்துகிட்டு போனதும் அந்த ஆட்களை பின் தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருந்த வசுந்தரா மூலமா எங்களுக்கு தெரிஞ்சது
அந்த ஆட்கள் அவரோட கோபத்துக்கு பயந்து குழந்தை செத்துட்டதா அவர் கிட்ட சொல்லிவிட அதே நேரத்துல பிறந்த எங்க குழந்தைய ரத்னாவோட பையன் நு சொல்லி ஏமாத்த அவர் திட்டம் போட்டார் தட்டி கேட்ட என்ன இதுக்கு சம்மதிக்கலனா அம்மாவையும் ரத்னாவையும் குழந்தையும் கொன்னுடுவேன் நு சொல்லி மிரட்டினார்
வேற வழி இல்லாம நானும் இதுக்கு சம்மதிச்சேன் கொஞ்சநாள் கழிச்சு உங்கம்மாகிட்டயும் பாட்டிகிட்டயும் உண்மைய சொல்லி நீ கலாகிட்ட வளர்ரதையும் சொல்லி சமாதானபடுத்தினேன் பாரதியோட கலா அண்ணிகறதுனால எங்களுக்கு உன்னை பத்தி எந்த கவலையும் வரல
எப்படியோ அடியாட்கள் மூலமா சரத் உயிரோட இருக்குறதை தெரிஞ்சுகிட்ட அவர் என்னை பின் தொடர்ந்து சரத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணார் அதுக்கு இடம் கொடுக்காம நான் கவனமா இருந்தேன் வசுந்தரா மூலம் கலாண்ணிக்கும் ஸ்ரீதர் அண்ணாவுக்கும் சரத் யாருங்கறத தெரியபடுத்தினேன் அவங்களும் கவனமா சரத்தை தன் மகனாகவே வளத்துனாங்க கொஞ்ச நாளில் அவர் கவனம் வேறபக்கம் திரும்பிடுச்சு இங்க சுரண்டுன காசுல வெளிநாட்டுல தொழில் பண்ண ஆரம்பிச்சார்
யாரையும் நம்பாம எனக்கு தொழில பழக்கி விட்டார் என் மகன எந்தம்பி மகனா அடையாளம் காட்டி முழுக்க அவர் கட்டுபாட்டுல வளத்தார் எங்களுக்கு பிறந்த குழந்தை இறந்துட்டதா நம்ப வெச்சார் தொழில நான் நல்லா கத்துகிட்டதும் என் மகனை எங்கிட்ட இருந்து பிரிச்சு வெளிநாட்டுல படிக்க வெச்சு வளத்தார் அவரும் அவனோட தங்கி கிட்டு இருக்கார் இதை பத்தி நான் வெளில சொன்னா என் மகனை சொத்து போனாலும் பரவால்லனு கொன்னுடுவேனு மிரட்டரார்
ஷியாமை வேலைக்கு எடுத்தபோது ஷியாமோட பயோடட்டால இருந்த விபரங்களை வெச்சு அவனை தெரிஞ்சுகிட்டேன் என் தம்பி சாயல் சரத்கிட்ட இருக்கறத வெச்சு அவனையும் நான் தெரிஞ்சுகிட்டேன் அதனாலதான் அவனை என்கூட வெச்சுக்கறத்துகாக வேலை குடுத்தேன் சக்திக்கும் பாரதிக்கும் இருந்த ஜாடை ஒத்துமைனால ரொம்ப நாள் ஆனாலும் என்னால உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது
இன்னமும் கொஞ்ச நாளுல என் புருஷன் இங்க வந்திடுவார் அப்புறம் என்ன நடக்க போகுதுனு தெரியல என கவலைபட்டார்
தொடரும்
அத்தியாயம் -6
கவலைகளை பகிர்ந்து கொண்ட பின் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த சுமித்ரா தேவியின் தோள்களை பரிவாக வருடியபடி அமர்ந்திருந்தார் வசுந்தரா பிறகு மெல்ல சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்த சுமித்ராவோ அனைவரிடமும் பொதுவாக இதுவரைக்கும் உங்க யாருக்கும் சொல்லம சமாளிச்சுடலாம் நு நினைச்சேன்
எதோ ஒரு வகையில என் புருஷன் பண்ண தப்பை சரி பண்ணிடமுடியும் நு தோணிக்கிட்டு இருந்துச்சு அதுனாலதான் என் தம்பி பையன் நு தெரிஞ்சும் சரத்தை இது வரைக்கும் என் ஸ்டாப்சுல ஒருத்தரா வெச்சிருந்தேன்
எங்கப்பா உயில் படி என் தம்பி மகனுக்கு என்னைக்கு கல்யாணம் ஆகுதோ அன்னையோட எங்க கார்டியன்ஷிப் முடிவுக்கு வந்திடும் என் மகனுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சாச்சு அதுனால கல்யாணத்துக்கு பிறகு அவனுக்கு வர சொத்தை வெச்சு என்ன பண்ணனும் நு திட்டம் போட்டு இருக்காருனு தெரியல என சொன்னார்
அதோட இனி எங்கம்மாவையும் ரொம்பநாள் இங்க வெச்சிருக்க முடியாது வசுந்தரா திரும்ப எங்க கிட்ட வேலைக்கு வந்தது அவருக்கு தெரியாது அவர் வரத்துகுள்ளே வசுந்தராவுக்கும் ஒரு நல்ல வழி காட்டணும் என்ன பண்ணுறதுனு ஒண்ணும் புரியலை என்றபடி பெருமூச்சு விட்டு கொண்டார்
பிறகு கலாவின் கைகளை பிடித்து கொண்டு என் நன்றிய வார்த்தைல சொல்ல முடியாத அளவுக்கு உங்களுக்கு நான் கடமை பட்டிருக்கேன் நீங்க மட்டும் சரியான நேரத்துல சரத்தை காப்பாத்தி உங்க பிள்ளையா வளர்க்கலேனா அவன் எப்படி எங்க இருந்திருப்பானோ? என சொல்ல
தொண்டையை கனைத்து கொண்டு பேச துவங்கினார் கலா ஆரம்பத்துல என்னவோ குழந்தையை காப்பாத்துறதுக்காகதான் நான் வளர்க்க ஆரம்பிச்சேன் நாளாகநாளாக சரத்தையும் நானும் அவரும் எங்க சொந்த பிள்ளையாதான் பாத்தோம் அன்னைக்கு உங்களை சக்தி ஷியாம் கல்யாண மண்டபத்துல உங்களை பாத்த உடனே எங்கே உங்க கணவரும் வந்திருப்பாரோனு பயந்துதான் போனோம் அவருக்கு எங்களை தெரியாதுனாலும் சரத்தை பார்த்தா சந்தேகம் வரவும் வாய்ப்பிருக்கு என சொல்ல
ஓ அதுனாலதான் முன்னால வராம இருந்தீங்களா? என வினவினாள் சக்தி
நான் உங்ககிட்ட இது பத்தி கேட்டப்போ ஏன் கோபப்பட்டீங்க நு இப்போ புரியுது சாரி அத்தை உங்களை நான் தப்பா நினைச்சுட்டேன் – சக்தி
பரவாஇல்லை சக்தி அதை அன்னைக்கே நான் மறந்துட்டேன் -கலா
பிறகு ஸ்ரீதர் சரத்தை பார்த்து தம்பி எங்களை தப்பா நினைக்காதே உன் கிட்ட உண்மைய சொல்லணும்னு நினைக்கும் போதெல்லாம் எங்க நீ அதுக்கு அப்புறம் எங்க கூட இருக்க மாட்டியோனு தோணும் அதனாலதான் நாங்க சொல்லலியே தவிர உங்கிட்ட மறைக்கனும்னு நினைச்சதில்லை இப்போவரைக்கும் உன்னை என் சொந்தமகனாதான் பாக்குறேன்
இப்போ வரைக்கும் உங்களை தான் என் சொந்த அப்பாம்மானு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆன அது பொய்னு தெரியவரும் போது எனக்கு சங்கடமா இருக்கு
இதுக்கப்புறம் எப்படி நான் நம்ம வீட்டுல இருப்பேன் உங்கள எந்த உரிமைல நான் அம்மானும் அப்பானும் கூப்புடுறது என சொல்ல துவங்க அங்கே வேகமாக வந்து அவன் வாயை தன் கையால் பொத்திய ஷியாமோ போதும் பிதற்றாதே சரத் என்ன நடந்திருந்தாலும் எப்பவும் நீ என் தம்பிதான் உனக்காக நாங்க இருக்கோம் என சொல்ல ஆமாம் சரத் ஷியாம் சொல்றது சரிதான் என வழி மொழிந்தனர் கலாவும் ஸ்ரீதரும் அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் ஆமோதிக்கவே செய்தனர்
சுமிம்மா என மெல்ல குரல் கொடுத்த வசுந்தரா ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சுமா எல்லாரும் சாப்பிடவாங்க என கூப்பிட வீட்டாளாய் அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார் ரத்னா
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் வீட்டிற்க்கு பெரியவராக எல்லாரும் இப்போ ரெஸ்ட் எடுங்க எதுவாய் இருந்தாலும் நாளைக்கு காலையில பேசிக்கலாம் என சொல்லிவிட்டு சென்றார் ரத்னா
மறுநாள் பொழுது விடிந்த நேரம் அனைவருக்கும் முன்னே வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர் ஸ்ரீதரும் கலாவும் பின்னர் அங்கே காலை பானம் குடுக்க வந்த வசுந்தரா மூலம் அனைவரையும் வரவழைத்தனர்
அனைவரும் வந்தபின் பேச்சை துவங்கிய ஸ்ரீதர் அம்மா நீங்க வர சொன்னீங்க நு சொன்னவுடனே போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம் இன்னைக்கு நாங்க ஊருக்கு கிளம்பறோம் மேற்கொண்டு என்ன பண்ணனும்னு சொல்லி அனுப்புங்கமா அதுபடியே நடக்க ரெடியா இருக்கோம் என சொல்ல அங்கே கையில் பெட்டிகளுடன் வந்த ஷியாமும் சக்தியும் கிளம்பதயாரானார்கள்
நில்லுங்க என குரல் கொடுத்து கொண்டே வந்த சரத் என்ன விட்டுட்டு எல்லாரும் கிளம்பதயாராகிட்டேங்க இல்ல என சொல்ல அவன் முன்னே வந்த கலா அது அப்படி இல்ல சரத் இது வரைக்கும் உன்னை பெத்தவங்க கிட்ட இருந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் உன்னை பிரிச்சு வெக்கவேண்டிய நிர்பந்தம் இனிமேலாவது நீ அவங்களோட சந்தோஷமா இருக்கணும் அதுனாலதான்
அப்போது அங்கே நிலவிய அமைதியை உடைத்தது ரத்னாவின் குரல் கலாக்கா நான் வளத்திருந்தா கூட இப்படி வளத்தமுடியாது அவ்வளவு நல்லபடியா அவனை நீங்க வளத்துருக்கீங்க என்னதான் பெத்தது நானா இருந்தாலும் என் முகத்தை பார்க்கமுன்னே அவனை நான் அவனை தொலைச்சிட்டேன் இப்பொ அவனை பாக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு
ஆனா அவன் சந்தோஷம் உங்க கூட இருக்குறதுதான் அதுனால இதுவரைக்கும் இருந்த எதையுமே மாத்த வேண்டாம் அவன் உங்க கூடவே இருக்கட்டும் இதோ இன்னமும் கொஞ்ச நாளுல நாங்களும் சென்னைக்குதான் வரப்போறோம் எனக்கு அவனை பார்க்கணும்னு தோணிச்சுனா நான் அங்க வந்து பார்த்துக்கறேன் என முடிக்க அனைவரின் முகத்திலும் நிம்மதி நிலவியது
சுமித்ரா மேடம் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் நீங்க இல்லாட்டி என்னை பெத்த அம்மாவும் பாட்டியும் என்னவாகி இருப்பாங்களோ தெரியாது அதே மாதிரி ரத்னா அம்மா சொன்னமாதிரி கலாம்மாவையும் விட்டுட்டு வர முடியாது எனக்கு இந்த சொத்து மேல எல்லாம் ஆசையே கிடையாது
அதுனால நீங்க பயப்படாதீங்க என் அப்பா உயிரோட இருந்தப்போ உங்க மேல பாசமா இருந்ததாகவும் உங்களுக்கா உங்க கணவரை பொறுத்துக்கிட்டதாகவும் சொன்னீங்க அவர் மகன் நான் மட்டும் விதி விலக்காக முடியுமா ? என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு சொத்து எதுவும் வேண்டாம் அது உங்க மகன் கிட்டயே இருக்கட்டும்
உங்க மனசை போட்டு குழப்பிக்காம தயவு செஞ்சு எப்பவும் போல இருங்க இங்க நடந்த இந்த விஷயம் எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் எப்பவும் போல எல்லாம் நடக்குறபடியே நடக்கட்டும்என சொல்ல அனைவரும் அமைதி பெற்றனர்
இது என்னடா சோதனை எல்லாம் அவன் நினைத்தபடி நடந்து விட்டால் மேல் கொண்டு எப்படிங்க கதைய தொடர்வது அவன் பாட்டுக்கு அவன் சொல்லட்டும் நம்ம வேலைய நாம பாப்போம் என்ன நான் சொல்றது சரியா? மக்களே

அத்தியாயம் -7
சென்னை பன்னாட்டு விமான நிலையம் பலமொழி பேசும் பலநாட்டு மக்களும் வந்துபோகுமிடம் மனிதனை சுமந்து கொண்டு பறவையை போல பறக்கும் இயந்திர பறவைகளின் வேடந்தாங்கல் சரத்தும் சந்தனாவும் இருபுறமும் நிற்க இருவரிடமும் சிரித்து பேசி கொண்டிருந்தாலும் சுமித்ரா தேவியின் காதுகள் ஒலிபெருக்கியின் குரலில்தான் கவனமாய் இருந்தது
இதோ அவர் எதிர்பார்த்த அறிவிப்பை கேட்டவுடன் பரபரப்புடன் அவரின் கண்கள் சென்றது வருகை வாயிலை நோக்கிதான் அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் வெளியே வந்த அவனுக்கும் சரத்தின் வயதுதான் ஒரு கையில் மடித்து போடப்பட்ட கோட்டும் மறுகையில் பயணசுமைதாங்கிய தள்ளுவண்டியுமாய் கண்ணில் போடவேண்டிய குளிர்கண்ணாடி தலையில் இருக்க யாரையும் மயக்கும் கம்பீர அழகுடன் அவர்களை நோக்கி வந்தான் சந்தோஷ் இவந்தாங்க நம்ம கதையில குட்டி வில்லன்
ஹலோ ஹலோ மேடம் ஒரு நிமிஷம் கொஞ்சம் நிறுத்தரீங்களா? சந்தனா எங்கிருந்து இங்க வந்தா அதுவும் சுமித்ரா தேவியோட?அப்படினு நீங்க கேக்குறது புரியுது
இதுவும் நம்ம ஷியாம் வேலைதாங்க கொடைக்கானலுல இருந்த பாட்டிய சென்னைக்கு கூட்டி வந்ததுக்கு அப்புறமா வசுந்தரா அவங்க கிராமத்துக்கே திரும்பி போய்ட்டாங்க அவங்க இடத்துக்கு பாட்டிக்கு காம்பேனியனா சக்திய சேத்து விட்டுட்டான் அதுமட்டுமா செஞ்சான்
சந்தனா சரத்தை காதலிக்கறதையும் அதை சரத் புரிஞ்சுக்காம இருக்கறதையும் பக்குவமா சுமித்ரா தேவிகிட்ட போட்டும் குடுத்துட்டான் இதை கேள்விப்பட்ட உடனே சுமித்ரா தேவி செஞ்ச முதல் வேலை சந்தனாவ தன்னோட P A வா அப்பாய்ண்ட் பண்ணதுதான்
சுமித்ரா தேவி நினைச்சதென்னவோ புத்திசாலியான சந்தனா தன்னோட காதலை சரத்துக்கு புரிய வெச்சிருவானுதான் அவங்க என்னமோ ரெண்டுபேருக்கும் நல்லது பண்ணறதுக்குதான் அப்படி ஒருமுடிவு எடுத்தாங்க ஆனா அதுகுள்ள அவங்க எல்லாரும் எவ்வளவு சோதனைய சந்திக்கணுமோ? அப்புறம் சரத் பையன் மனசுல என்ன எண்ணம் இருக்கோ? இது ரெண்டும் என்ன பண்ண போகுதுகளோ எல்லாம் ஆண்டவனுக்குதாம்பா வெளிச்சம்
சரி இப்பொ நம்ம நடப்புக்கு வருவோம் கண்ணுல தன்னைமீறி வழியற கண்ணீரகூட தொடைக்கணும் நு தோணலை சுமித்ராதேவிக்கு எங்கே கண் சிமிட்டினா எதிரே தெரியர தன் மகனோட உருவம் மறைஞ்சிடுமோனு பயந்தாங்க ஆனா பாருங்க சந்தோஷ் அந்த அளவுக்கு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறவனா தெரியல
பக்கத்தில் வந்த அவன் உதடுகள் புன்னகைத்தாலும் கண்களிலும் குரலிலும் கடுப்பை காட்டியபடியே ஆண்ட்டி போதும் இது ஏர்போர்ட் என கடுகடுத்தான் தான் பெற்ற மகன் தன்னை ஆண்ட்டி என அழைத்ததை கேட்ட சுமித்ராதேவியின் முகம் கன்றியது
பின்னர் எதோ நினைத்தபடி சந்தோஷின் தோள்களுக்கு பின்னே யாரயோ சுமித்ரா தேவியின் கண்கள் தேடின கேள்வியாக அவரை பார்த்த சந்தோஷிடம் அவர் வரலையாப்பா என கேட்க யாரை கேட்க்கின்றார் என புரிந்துகொண்ட சந்தோஷின் முகம் கனிவுடன் மலர்ந்தது
இல்லை ஆண்ட்டி பாஸ் வரல கிளம்பும் போது கொஞ்சம் தொழில்ல இருந்த விவகாரங்கள் பத்திதெரியவந்தது அதை சரி பண்ணிட்டு வருவார் இது பத்தி நேரம் கிடைக்கும் போது உங்க கிட்ட அவரே பேசுறதா சொல்லி இருக்கார் என பதில் சொன்னான்
ஏனோ இதை கேட்ட சுமித்ராதேவியின் முகம் வாடிவிட மெல்ல யாருமறியாது தன்னை சுரண்டிய சந்தனாவின் செயலில் சுய உணர்வு பெற்ற அவர் சரத்தை ஏறிட்டு பார்க்க அவரின் பார்வயின் அர்த்தம் புரிந்த சரத்தோ ஹாய் சார் ஐயாம் சரத் நான் உங்க கம்பெனி மேனேஜர்கள்ல ஒருத்தன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டான்
பதிலுக்கு அலட்சியமான தலையசைப்புடன் அவனை பார்த்த சந்தோஷின் தோரணையில் என்ன தோன்றியதோ சரத்துக்கு சுமித்ராதேவியிடம் திரும்பி மேம் நீங்க எல்லாரும் பின்னாடி வாங்க நான் முன்னாடி போய் காரை எடுத்துட்டு வரேன் என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினான் இதை பார்த்து கொண்டிருந்த இருபெண்களின் மனநிலையோ இருவேறுவிதமாக இருந்தது
சரத்தின் கண்களில் தெரிந்த வலியும் சந்தோஷின் அலட்சியமும் சுமித்ரா தேவிக்கு அதிர்ச்சியை தந்தது என்றால் சந்தனாவிற்குள்ளே மினி எரிமலையையே வெடிக்க செய்தது தன்னை கட்டுபடுத்தி கொண்ட சுமித்ராதேவி சந்தனாவை அறிமுகம் செய்யத்துவங்கினார்
அழகும் குறும்பும் மின்னும் தேவதைப்பெண்ணாய் இருப்பவளை யாருக்குதான் பிடிக்காது சந்தோஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?
முதல் அறிமுகத்திலேயே ஆர்வம் மின்னும் பார்வையை அவள் மீது செலுத்தியவாரே கை குலுக்க கைகளை நீட்டினான் சந்தோஷ் ஆனால் சரத்திடம் அவன் காட்டிய அலட்சியத்தில் மனம் கொதிக்க நின்றிருந்த சந்தனா நாசூக்காக பதிலுக்கு கரம் குவித்து வணக்கம் வைத்தாள்
ஆராய்ச்சியாக அவளை பார்த்த சந்தோஷுக்கோ உதட்டளவே எட்டிய புன்னகையும் கண்களில் கண்ட எரிமலையும் சரியாக புரியாமல் போனது அவன் துரதிர்ஷ்டமே
அவளின் கைகூப்பலையும் கன்னத்தில் கண்ட கோபசிகப்பையும் வெட்கம் என தவறாக எண்ணிக்கொண்ட அவன் தன் தோற்றமும் செல்வநிலையும் அவளை கவர்ந்ததால் தன்னை கண்டு வெட்கப்படுவதாக எண்ணி கர்வம் கொண்டான்
ஹாய் மிஸ் சந்தனா டோண்ட் பீ ஷை யா பீல் ப்ரீ டொ ஸ்பீக் வித் மீ என சொல்லி அவளின் கவனத்தை பெற முயன்றான் அதற்க்குள் காரை வாயிலில் கொண்டுவந்து நிறுத்திவிட்ட சரத் சுமித்திராவுக்கு போன் செய்ய போலாமாப்பா என கேட்டவாறே நகரதுவங்கிய அவருடன் சந்தனாவும் இணைந்து கொண்டாள்
தனக்கு பதில் எதுவும் சொல்லாததையும் சுமித்திராவுடன் இணைந்து நடந்ததையும் புதிரான பார்வையுடனும் யோசனையுடனும் கடந்தான் சந்தோஷ்
காரின் அருகில் வந்தவுடன் சுமித்திரா பின்புறம் ஏற அவருடன் வந்த சந்தனாவோ டக்கென முன்புறம் டிரைவிங் சேட்டில் அமர்ந்திருந்த சரத்தின் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் அவர்களின் பின்னால் போன் பேசியபடி வந்த சந்தோஷுக்கோ சுமித்ராவின் அருகில் அமரவதை தவிர வேறுவழி இல்லை
சந்தனாவின் அருகே அமர ஆசைப்பட்டவன் அதை செயல் படுத்த விடாக்கண்டனாக சரத்தை அப்புறபடுத்தும் முயற்சியாக சரத்தை பார்த்து ஹேய் சரத் நீ இறங்கி வேற டேக்சி பிடிச்சு கிளம்பு நானும் ஆண்ட்டியும் கொஞ்சம் பெர்சனலா பேசணும் ஸோ நானே டிரைவ் பண்ணிக்கறேன் என சொல்ல கன்றிய முகத்துடன் காரில் இருந்து இறங்கினான் சரத்
அவன் இறங்கும் முன்னே இந்தபக்கம் அமர்ந்திருந்த சந்தனாவும் இறங்கி விட அதை எதிர்பாராத சந்தோஷோ நோ சந்து யூ ஸ்டே தேர் ஐ வில் டிராப் யூ என சொல்ல
இல்லை சார் நீங்களும் மேமும் எதோ பெர்சனலா பேசனும்மு சொன்னீங்களே என ஸோ இட்ஸ் ஓக்கே சார் நான் சரதோட போய்க்கிறேன் ஹீ வில்ல் டிராப் மீ டோண்ட் ஒரி
ஒன் மினிட் சரத் நானும் வரேன் என சொல்லி விட்டு கிளம்பிவிட்டாள்
அவள் கூறியதை கேட்ட சந்தோஷ் சரத்தை பார்த்த பார்வையில் அவளை அழைத்து செல்ல மறுக்கும்படியான கட்டளை இருந்தது அதை கவனிக்காத சரத்தோ பை சார் பை மேம் வா சந்தனா என கூறியவாறே விடைபெற்றான் இப்போது சந்தோஷின் பார்வையில் இருந்த அனலோ ஆயிரம் சூரியனின் வெப்பத்துக்கு இணையாக இருந்தது அதன் விளைவு சரத்தை பொசுக்கும் போது பீனிக்ஸ் பறவையாய் அதிலிருந்து அவனால் மீளமுடியுமா? காலம் மட்டுமே அறியும்
இனி

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய