புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
2 Posts - 1%
prajai
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
2 Posts - 1%
சிவா
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
435 Posts - 47%
heezulia
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
30 Posts - 3%
prajai
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புணர்ச்சி தேவையா? Poll_c10புணர்ச்சி தேவையா? Poll_m10புணர்ச்சி தேவையா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புணர்ச்சி தேவையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 9:35 am


- அருணகிரி
நன்றி- கீற்று இணையதளம்
----------------------------------------------


பிழை இன்றித் தமிழ் பேச எழுத என்ற தலைப்பில்,
‘புணர்ச்சி விதியை அகற்றுவோம்’ என்று நான் எழுதி இருந்த
கருத்துக்கு, முனைவர் கன்னியப்பன் அவர்கள் எழுதி இருந்த
எதிர்வினையை, நன்றியோடு வரவேற்கிறேன்.

ஒரு விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன்.
இது தொடர்பாக, என்னுடைய கருத்துகள் சிலவற்றை,
எடுத்துக்காட்டுகளுடன், ‘கீற்று’ இணையதள வாசகர்களுடன்
பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அச்சு ஆணியா? அச்சாணியா?

எப்போதும் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டே இருப்பது
என் வழக்கம். அப்படி ஒருநாள், வீட்டில் பாடிக்கொண்டு இருந்தேன்.

‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை

என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே

இரண்டு அன்புள்ளம் தேவை’

என்ற பாடல் வரிகளை நான் பாடும்போது,
‘சே... அப்பா சாணி தேவை என்று பாடுகிறார், அம்மா!’
என்றாள் என் மகள்.

‘அது சாணி இல்லையம்மா; அச்சு ஆணி’ என்று பிரித்து,
பொருள் விளக்கினேன்.

இங்கே, அச்சும் ஆணியும் புணரும்போது, அச்சும் மறைந்தது
- ஆணியும் காணாமல் போய், ‘அச்சாணி’யாகி விட்டது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 9:37 am


தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன் ஆள்பவர்க்கு

என்ற குறளை எடுத்துக்கொள்வோம்.

ஒரு மாணவனை அழைத்து இதற்குப் பொருள் சொல்லும்படிக்
கேட்டுப் பாருங்கள். ‘துணி உடைமை’ என்று சொல்லக்கூடும்.
‘துணிவுஉடைமை’ என்றே எழுதினால், பொருள் விளக்கம்
சொல்லத் தேவை இல்லையே?

‘அன்னியர்க்கி

டங்கொடோம்’ - என்ன இது? புதுச்சொல்லாக இருக்கிறதே
என்று பார்க்கிறீர்களா?

தமிழ்ச்சொற்களைத் தனித்தனியாக முழுமையாக எழுதுவது
பற்றி, அண்ணன் முனைவர் சபாபதி மோகன்
(மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர்) அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன்.

‘ஆமாம் நீங்கள் சொல்வது சரியான கருத்துதான்.
இளம்வயதில் நானும், என் தங்கையும் சேர்ந்து படிக்கும்போது,
என் தங்கை ‘அன்னியர்க்கி டங்கொடோம் ....
அன்னியர்க்கி டங்கொடோம்’ என்று படிப்பார்.

அப்படிப் படிக்கக்கூடாது - ‘அன்னியர்க் கிடங்கொடோம்’
என்றுதான் படிக்க வேண்டும் என்று நான் திருத்துவேன்.
ஆனால், அவரது வசதிப்படி, மீண்டும் மீண்டும் அப்படித்தான்
படித்தார்.

வேகமாகப் படித்தாரே தவிர, அதன் பொருளைப் புரிந்து
படிக்கவில்லை. எனவே, தமிழ்ச்சொற்களைப் பிரித்து
முழுமையாக எழுதினால்தான், இளைய தலைமுறையினர்
ஓரளவேனும் பொருள் புரிந்து படிப்பர்’ என்றார்.

‘அன்னியர்க்கிடங்கொடோம்’ என்பதை,
‘அன்னியர்க்கு இடம் கொடோம்’ என்று அச்சிட்டு விட்டால்,
பிரச்சினை இல்லையே?
(‘அன்னியர்’ என்பதும் தமிழ்ச்சொல் அல்ல.)

இன்றைய குழந்தைகள் இப்படிப் பொருள் விளங்கிக்
கொள்கிறார்கள். இன்றைக்கே நிலைமை இப்படி இருந்தால்,
எதிர்காலத்தில் எப்படியோ?

புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியப் பாடல்கள்
பாமர மக்களிடம் போய்ச் சேராமல், எளிதில் புரிந்து கொள்ள
இயலாமற் போனது ஏன்?

அதைக் கண்டு மாணவச் செல்வங்கள் அஞ்சுவது ஏன்?
மனப்பாடம் செய்யத் தடுமாறுவது ஏன்?

அவற்றில் உள்ள சொற்கள் ஒன்றோடு ஒன்று புணர்ந்து
இருப்பதே ஆகும். பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும்
சங்க இலக்கியப் பாடல்களுள், தேர்வுக்கான பாடல்களை,
எப்படியோ மனனம் செய்து எழுதி விடுகிறார்கள்.

ஆனால், தங்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான பொருளை
அவர்கள் அறிந்து கொள்வது இல்லை. என்னையும்
சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.

இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற என் மகளை,
நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிக்கச் செய்து, அருகில்
இருந்து கேட்கிறேன்.

எப்படித் தடுமாறுகிறார் என்பது புரிகிறது. திருத்துகிறேன்.
அதுபோல, உங்கள் பிள்ளைகளையும் வாசிக்கச் செய்து
கேட்டுப் பாருங்கள். பிரித்து எழுதப்பட்ட சொற்களை எளிதில்
புரிந்து கொள்கிறார்கள் என்பதை உணர முடியும்.

பொருள் பிரித்து எழுதும்போது, தொடக்கத்தில் அது கொஞ்சம்
மாறுபாடாகவே தோன்றும். எளிதில் ஏற்றுக் கொள்ள இயலாது.

சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.
எனவே, போகப்போகச் சரியாகி விடும்.
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 9:39 am



மொழி வரலாறு எழுதிய அறிஞர் மு.வ. அவர்கள், பண்டித
நடையில் எழுதாமல், எல்லோருக்கும் புரியும்படியான எளிய
நடையில் எழுதினார்.

இறவாத இலக்கியங்களைப் படைத்தார். அவர், புணர்ச்சி
விதிகளைக் கையாண்டு, புரியாமல் எழுதி தமிழர்களை
அச்சுறுத்தக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

‘நன்றாகவிருந்தது’ என்று எழுதாமல் ‘நன்றாக இருந்தது’
என்று எழுதினார்.

‘தமிழாசிரியர்’ - ‘தமிழ் ஆசிரியர்’

‘தமிழறிஞர்’ - ‘தமிழ் அறிஞர்’

மேற்கண்ட இரண்டு சொற்களையும், பலமுறை
தனித்தனியாக ஒலித்துப் பாருங்கள். ‘தமிழாசிரியர்’ என்று
எழுதும்போது, தமிழ் என்ற சொல் முழுமை பெறுவது இல்லை.

‘ஆசிரியர்’ என்பதும் ‘ழாசிரியர்’ என்றுதான்
ஒலிக்கப்படுகிறது. ஆனால், ‘தமிழ் ஆசிரியர்’ என்று ஒலிப்பது
முழுமையாகவும், இனிமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

பேசும்போது எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
ஆனால், அதையே எழுத்தாக, ஆவணமாகப் பதிவு செய்யும்
போது சொற்கள் முழுமையாக இருப்பதே சிறப்பு.
பெயர்ச் சொற்களைப் பிரிக்க வேண்டாம்.

நாள் இதழ்களில் ‘தனியார்மயப்படுத்தப்பட்டுவிட்டன’
என்று 19 எழுத்துகளை ஒரே சொல்லாக எழுதுகிறார்கள்.
அதையே ‘தனியார் மயம் ஆனது ’ அல்லது
‘தனியாரிடம் கையளிப்பு’ என சொற்களைப் பிரித்து
எளிமையாக எழுதலாமே?

தமிழாராய்ச்சி - தமிழ் ஆராய்ச்சி, தமிழ் ஆய்வு

தமிழீழம் - தமிழ் ஈழம்

அறிந்திருக்கவில்லையா? -
அறிந்து இருக்கவில்லையா? அறியவில்லையா?

தெரிந்திருந்தும் - தெரிந்து இருந்தும், தெரிந்தும்

பதவியிலிருந்து - பதவியில் இருந்து

உலகறிய - உலகு அறிய

வந்துள்ளது - வந்து உள்ளது, வந்து இருக்கிறது.

குறிப்பிடத்தக்கதாகும் - குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து - சென்னையில் இருந்து

சின்னாபின்னப்பட்டுக்கொண்டிருந்த -
சிதறிக்கொண்டு இருந்த, சின்னாபின்னமாகிய

கண்டிக்கத்தக்கதாகும் -
கண்டிக்கத்தக்கது, கண்டனத்துக்கு உரியது.

தலைவிரித்தாடுகின்றன -
தலைவிரித்து ஆடுகின்றன.

காற்றழுத்தம் - காற்று அழுத்தம்

உளத்திருத்துக - உள்ளத்தில் இருத்துக.

பணியிலீடுபட்டேன் - பணியில் ஈடுபட்டேன்

நூலாசிரியர் - நூல் ஆசிரியர்

இருந்திருக்கிறார்கள் - இருந்தார்கள்.

சமையல் செய்தார்கள் - சமைத்தனர்.

சிலை செய்தார்கள் -
சிலை வடித்தார்கள், செதுக்கினார்கள்

தனியிதழ் - தனி இதழ்

திங்களிருமுறை - திங்கள் இருமுறை
-
-----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 9:41 am


‘ப்பட, உடைய, கூடிய’ தேவையா?


1984 ஆம் ஆண்டு. நான் பூடான் நாட்டில் வேலைக்குச் சேர்ந்த
புதிது. டாடா நிறுவனத்தின் பூடான் டாலமைட் சுரங்க
அலுவலகத்தில், என்னோடு பணியில் இருந்தவர்கள் ஒன்பது
பேர். நான் ஒருவன்தான் தமிழன்.

மலையாள உடன்பிறப்பு ஒருவர் இருந்தார். மேலாளர், மைதிலி
மொழிக்காரர். பிஹார் மாநிலத்தின் மிதிலாஞ்சல் பகுதியில்
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்ற மொழி அது.
துணை மேலாளர் போஜ்புரி மொழி பேசுபவர். அதுவும்,
பிஹாரி மொழிதான். பெங்காலி, அஸ்ஸாமி, ஒரிய நண்பர்களும்
அங்கே இருந்தார்கள்.

தொடக்கத்தில் ஒன்றிரண்டு மாதங்கள் நான் மலையாள
உடன்பிறப்போடு மட்டும்தான் பேசிக்கொண்டு இருந்தேன்.
நான் தமிழில்தான் பேசுவேன். அவர் மலையாளத்தில் பேசுவார்.
இருவரும் புரிந்து கொள்வோம்.

அஸ்ஸாமி, பெங்காலி நண்பர்கள் எங்கள் அருகில் உட்கார்ந்து
கொண்டு, நாங்கள் பேசுவதையே உற்றுப் பார்த்துக் கொண்டு
இருப்பார்கள்.

‘நீங்கள் இருவரும் பேசுவது, டப்பாவில் கல்லைப் போட்டுக்
குலுக்குவது போல் ஒலிக்கிறது; கேட்கவே அச்சமாக இருக்கிறது’
என்று சொன்னார்கள். ஏன்?

திராவிட மொழிகளைப் பேசும்போது, அவர்களுடைய காதுகளில்,
‘கடபுட, படபட’வெனக் கேட்கிறது. அதாவது, ‘ப்பட, கூடிய,
உடைய’ இந்த மூன்று இணைப்புச் சொற்களும், அவர்களுடைய
காதுகளில், அப்படிக் கேட்கிறது. அதைக் கேட்டு அஞ்சுகிறார்கள்.

எனவே, மிகவும் தேவையான இடங்களில் மட்டுமே இச்சொற்களை
ஒலிக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் பேசுகின்ற
சொற்பொழிவாளர்களைப் பாருங்கள். புரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட இணைப்புச் சொற்களைத் தவிர்த்தால், தமிழ் மேலும்
இனிமையாக இருக்கும்.

‘தவிர்க்கப்படுதல் வேண்டும்’ என்பதை,
‘தவிர்த்தல் வேண்டும்’ அல்லது ‘தவிர்க்க வேண்டும்’
அல்லது தவிர்க்கலாம் என்று எழுதலாம்.

‘வழங்கப்பட’ வேண்டும்’ என்பதை, ‘வழங்க வேண்டும்’
என்று சொல்லி முடித்து விடுங்கள்.

தனியார்மயப்படுத்தப்பட்டுவிட்டன -
தனியாரிடம் ஒப்படைப்பு

கூடி இருக்கக்கூடிய - கூடி இருக்கின்ற

திரண்டு இருக்கக்கூடிய - திரண்டு இருக்கின்ற

கழகத்தினுடைய செயல்மறவர்களே -
‘கழகத்தின் செயல்மறவர்களே

என்னுடைய எழுத்து நடை எளிமையாக இருக்கின்றது என்று
சில நண்பர்கள் கூறுகிறார்கள். காரணம், ‘ப்பட, கூடிய, உடைய’
ஆகிய சொற்களை இயன்ற அளவில் தவிர்த்து விடுகிறேன்.

சொற்களைப் பிரித்து, எளிய நடையில் எழுதுவதால்தான்.
ஒவ்வொரு நாளும் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு,
எழுத்து நடையை மேம்படுத்தி வருகின்றேன்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 9:58 am


கம்பன் அறநிலையின் தமிழ்ப்பணி

கோவை பாப்பநாயக்கன்பாளையம், ‘கம்பன் அறநிலை’
என்ற அமைப்பினர், கம்ப இராமாயணப் பாடல்களில் உள்ள
சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து எழுதி வெளியிட்டு
இருக்கின்றனர்.

படிப்பதற்கு எளிதாக இருக்கிறது- பொருள் புரிகிறது.
ஆனால், அந்தப் பாடலுக்கு விளக்கம் அளித்து எழுதி உள்ள
உரைநடையில், சொற்களைச் சேர்த்துத்தான் எழுதி
இருக்கின்றனர்.

அவற்றிலும் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும் என்று
சில ஆண்டுகளுக்கு முன்பு, அறநிலையின் தலைவர்,
மதிப்புக்கு உரிய பெரியவர் பெருந்தொழில் அதிபர்
ஜி.கே.சுந்தரம் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்.

அக்கருத்தை ஏற்றுக்கொண்டு, அடுத்த பதிப்பில் உரை
நடையிலும் சொற்களைப் பிரித்து எழுதி வெளியிடுவதாக
எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

பெரியாரின் கொள்கை வழியில், 13 வயது முதல் நான்
ஒரு கடவுள் மறுப்பாளன். கருப்புச் சட்டை அணிபவன்.
கம்ப இராமாயணத்தை நான் படித்தது இல்லை.

ஆனால், மேடைகளில் நிறையக் கேட்டு இருக்கிறேன்.
கம்பன் அறநிலை வெளியிட்டு இருக்கின்ற இராமாயணத்தை,
இப்பொழுதுதான் கையில் எடுத்துப் படித்து வருகிறேன்.

12,000 பாடல்கள், எட்டு தொகுதிகள், விலை ரு 800 மட்டுமே.
உங்கள் இல்லங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்க் கருவூலம்.
இராமாயணக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லா
விட்டாலும், இலக்கிய நயத்துக்காக, சொல்வளத்துக்காகப்
படிக்கிறேன்.

பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் வழங்கி வந்த
இலட்சக்கணக்கான சொற்கள் இராமாயணத்தில் பதிவு ஆகி
உள்ளன. தமிழ் எழுத்தாளர்கள், அந்தச் சொற்களைப் படித்து
உள்வாங்கிக் கொண்டு, ஏற்றவகையில் தங்களுடைய
படைப்புகளில் எழுத வேண்டும்.

சில கவிஞர்கள் மட்டுமே அதைச் செய்து வருகிறார்கள்-
அதனால், புகழ் பெறுகிறார்கள்.
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 9:59 am


ஆங்கில மொழியில் பத்து இலட்சம் சொற்கள் சேர்ந்து
இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார்கள். அதுபோல,
நாம் எண்ணுவோம் என்று கருதினேன்.
ஆனால், அது தனி ஒருவனால் மட்டுமே முடியக்கூடிய
செயல் அல்ல.

எனவே, தமிழில் எத்தனை சொற்கள் இருக்கின்றன
என்பதை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அல்லது
சென்னைப் பல்கலைக்கழகம் எண்ணிச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு எண் கொடுக்க வேண்டும்.

புணர்ச்சியால் புதிய உயிர்கள் பிறக்கின்றன.
ஆனால், தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியால், இருக்கின்ற
இரண்டு சொற்களும் மறைந்து, உருவாகின்ற புதுச்
சொல்லும் முழுமையான பொருளைத் தராமல்,
பிறமொழியினர் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல்
போய்விடுகின்றது.

அதுவே, தமிழின் வளர்ச்சிக்குத் தடைக்கல் ஆக இருக்கின்றது.

ஆங்கில மொழியில் இரண்டு சொற்களைச் சேர்த்து
எழுதுவது இல்லை. அவ்வாறு இருந்தால், அது அரிதினும்
அரிதுதான். இந்தி மற்றும் பிற மொழிகளிலும் அப்படித்தான்.
தமிழில், ‘உரைநடை’ என்பதும் புதிதுதானே?

எனவே, தமிழில் புணர்ச்சி இலக்கணம் தேவையா?
கருத்துகளைப் பரிமாறுங்கள்.

- அருணகிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 3:49 pm

கருத்து மிக்க ஆராய்ச்சி /அலசல்.
ரசிக்கும்படியாக இருக்கிறது .

எந்தன் கருத்து ...........
புணர்ச்சி நிச்சயம் அவசியம்.
தமிழின் சிறப்பே புணர்ச்சி என்று கூறலாம்.
சிலேடைகள் உருவாக இது பெரும் பங்கேற்கிறது.
உயிர் மெய்யெழுத்துத்தே புணர்ச்சியில் உருவானதுதான்..

ஆங்கிலத்தில் சில வாக்கியங்கள் புணர்ச்சி மூலம் உருவாகி உள்ளன.
என் நினைவில் உடனே வருவது ஒரு வார்த்தை.
fantastic + fabulous =fantabulous .

மீண்டும் நினைவில் வருகையில் பதிவிடுகிறேன்.

திரு Jagadeesan அவர்கள் கருத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும். 
எதிர்பார்ப்போம்.

 ரமணியன்


@"MJagadeesan"



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 4:30 pm

பொதுவாக ஈகரையில் தமிழ் மொழிக்கே முதன்மை கொடுப்பதால் 
மற்ற மொழி பதிவுகள் தவிர்க்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் உதாரணம் கொடுக்கவேண்டுமென்பதால் 
ஆங்கில வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Code:
ஆங்கில மொழியில் இரண்டு சொற்களைச் சேர்த்து [size=17][/size]
எழுதுவது இல்லை.

இப்போதெல்லாம் எழுதுகிறார்கள் /பேசுகிறார்கள்.
சமீப காலங்களில் சேர்த்து எழுதுவது பழக்கத்தில் உள்ளது.
ஏற்கனவே ஒரு உதாரணம் கொடுத்து இருந்தேன்.
மேலும் சில ஆங்கிலத்தில் சொற்களின் புணர்ச்சியால் 
உண்டானதை தருகிறேன்.

INTERNET =INTERNATIONAL +NETWORK.
GUESSTIMATE=GUESS+ ESTIMATE
EMOTICON=EMOTION+ICON
electrocution (electricity/execution): Death by electricity.

 சேர்ந்ததால் சேர்ந்தது.: liger (lion +/tiger)  = LION ம்  TIGER  ம்   புணர்ந்ததால்  


ரமணியன் 
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 04, 2019 9:15 pm

தற்போது பல பேர் இங்கு குறிப்பிட
படியே எழுதுவது வழக்கம் ஆகி விட்டது

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 06, 2019 1:22 pm

செய்யுளில் புணர்ச்சி , வேண்டுமா அல்லது வேண்டாவா என்பதை ஒரு சிறு உதாரணத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் .

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று . ( 108 )

என்றுதான் இக்குறளை அச்ச்சிட்டிருப்பார்கள் .

சிலர் கேட்கலாம்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று ,

என்று அச்சிட்டால் என்ன தவறு ? என்று .

" நன்றல்லது " என்று அச்ச்சிடும்போது நேர் நேர் நிரை என்று வருகிறது அதாவது தேமாங்கனி என்று வருகிறது . வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது என்பது விதியாகும் .
எனவேதான் " நன்றல்ல தன்றே மறப்பது நன்று " என்று அச்ச்சிட்டிருப்பர் .

வெண்பா இலக்கணம் கெடாதவரை சொற்களைப் பிரித்துப் போடுவதில் தவறில்லை .

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கைப்
பண்பும் பயனு மது . ( 45 )

இக்குறட்பாவை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது .

என்று பிரித்து எழுதினாலும் யாப்பிலக்கணம் கெடுவதில்லை .

எனவே யாப்பு மிகவும் இன்றியமையாதது . யாப்பு கெடாத வரை பிரித்து எழுதுவதில் தவறில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக