புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:50

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_m10 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84141
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 30 Dec 2018 - 9:16

 ஆயிரஞ்சூரியன் ஓருருவாகிய பாடல்! TN_120119180016000000


எட்டயபு ரத்தினில் உதித்திட்ட பாரதி
என்றும் மறைவதில்லை - அவன்
தொட்ட சிகரங்கள் தாண்டிஎப் புலவனும்
பயணந் தொடரவில்லை

விட்டஇ டத்தினைத் தொட்டுத் தொடரவோர்
ஆயுள் போத வில்லை - அவன்
வீரியப் பாடலில் ஆயிரஞ் சூரியன்
விதிவிலக் கேயில்லை!

இந்திய தேசத்து எல்லைகடந்தவன்
எங்கும் போனதில்லை - உலக
எல்லைகள் நீத்தவன் யாத்த கவிதைக்குப்
பிரபஞ்சம் போதவில்லை!

"வந்தே மாதரம்' என்கிற சொல்லுக்கு
மாநிலம் தாயானாள் - கவி
இந்திரன்ஆகிய ரவீந்த்ர னுக்குமே
பாரதி தாயானான்!

சந்திர மண்டலச் சக்திய ளந்திட
யந்திரக் கவிபுனைந்தான் - தெருச்
சந்திபெ ருக்கிபொய்ச் சாத்திரக் குப்பையைப்
போக்கிடுந் தமிழ்வனைந்தான்!

எந்தக் கவியிந்த பாரதிபோல் - இந்தப்
பாரினில் தோன்றியுளார்? - இவன்
சந்தக் கவிகேட்க தெய்வங்கள் முன்வந்து
இவனிடம் நின்றதையா!

சொந்தக் கவலைகள் சோகங்கள் துயரங்கள்
சொல்லி யழுததில்லை - பிஜித்
தீவினில் சோதரி யார்படுந் துயர்கண்டு
சொன்னதற் கீடு இல்லை!

சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று
அன்னையைச் சரண்புகுந்தான் - அந்த
அன்னையோ "அனுதினம்
என்னைநீ பாடெ'ன்று
இவனைச் சரண்அடைந்தாள்!

"உப்புக்கும் கேவலம் புளிக்குமோ என்மனம்
ஏங்கித் தவிக்குமெனில் - நானினி
நாத்திக னாவேன்' எனச்சூ ளுரைத்துத்
தெய்வத்தை எச்சரித்தான்!

எல்லை தனக்கெதும் இல்லையெனத் தமிழ்
இவன்வழி கண்டதையா! - புவி
எங்கும் நிறைந்த பரம்பொருளே வந்து
இவன்கவி யானதையா!

அல்லா யெஹேவா இயேசுவைப் போற்றி
அருட்கவி பாடியவன் - தெய்வம்
ஆயிர முண்டெனப் பொய்க்கதை
சொன்னோரைப்
பாடலால் சாடியவன்!

காக்கை குருவியைச் சாதியாய்க் கொண்டவற்
கேதுத னிச்சாதி? - அண்டங்
காக்கப் பிறந்தவன் பாரதி வகுத்ததே
உலகத்துக் குயர்நீதி!

ஆக்கப் பணிக்கவன் வகுத்திட்ட திட்டங்கள்
ஆயிர மாயிரமே! - அதை
அனுதினஞ் செய்திடில் பாரதம் உலகினில்
வல்லர சாகிடுமே!

"தனியொரு மனிதனுக் குணவிலை யெனிலிந்த
ஜகத்தினை யழி'ப்பதற் கோர்
கவிக்கணை படைத்தவன் பசிப்பிணி போக்கவும்
தமிழைச் சமைத்தவன்காண்!

புவிக்கெலாம் முதல்வன்நம் கவிக்கெலாம் இறைவன்
பாரதி ஒருவன்தான் - அவன்
அடிக்கடி நமக்குளே வெடிக்கும்
பல்பிரிவினை போக்கிடும் தலைவன்காண்!

மனைவியைத் தெய்வமாய், தெய்வத்தை மனிதமாய்ச்
செய்திட்ட மாகவிஞன்! - புவி
மக்களே நாம்தொழும் தெய்வங்கள் எனப்புது
வேதஞ்சமைத்த தவன்!

மின்னலைக் கையினில் ஏந்தி யிடியினைப்
பாடலாய் ஆக்கியவன் - கவி
சொன்னதால் வானமே பூமியாய் வந்திடக்
காற்றினை ஏவியவன்!

காலனை யோர்கணப் பொழுதில்உ தைத்திடும்
கால்பந் தாக்கியவன் - அவன்
ககன வெளிதனிற் கோள்களை ஓச்சியே
கைப்பந் தாடியவன்!

நாற்பது வயது வரும்வரை கூடஇம்
மண்ணி லிருக்கவில்லை - ஆனால்
நாற்றிசை புகழ்ந்திடும் அவன்தமிழ் வாழ்வது
என்றும் மரிப்பதில்லை!

முத்தத்தின் ஈரத்தில் வான்மழை தந்தவன்
மீட்டிய பாடல்களில் - புவி
மொத்தமும் விடுதலை சொத்தெனக் கொண்டினி
மானுடம் வாழுமடா!
-
--------------------------------------

- கிருங்கை சேதுபதி
நன்றி- தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 30 Dec 2018 - 10:05

Code:

மனைவியைத் தெய்வமாய், தெய்வத்தை மனிதமாய்ச்
செய்திட்ட மாகவிஞன்! - புவி
மக்களே நாம்தொழும் தெய்வங்கள் எனப்புது
வேதஞ்சமைத்த தவன்!



சூப்பருங்க சூப்பருங்க
அற்புதமான படைப்பு.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 30 Dec 2018 - 20:13

அருமையான பகிர்வு.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக