புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_c10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_m10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_c10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_m10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_c10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_m10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:01 pm

First topic message reminder :

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 PeFZUxpwTcKYLpmjyHbM+collagejpg

நான், எனது, எனக்கு என்று சுருங்கிவிட்ட உலகில், இன்றும் உள்ளம் நெகிழச் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம்மைச் சிலிர்க்க வைத்து, சிலாகிக்கவும் வைத்து, கவனம் ஈர்த்த சில நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக....

'ஐபிஎஸ்' மகளுக்கு பெருமையுடன் 'சல்யூட்' அடித்த காவல்துறை துணை ஆணையர்

காவல்துறையில் பலர் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து அடித்தே பழக்கப்பட்டுப் போயிருப்பர். ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வர சர்மா, தன் பணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு சல்யூட் அடித்தபோது பெருமைப்பட்டார்

நன்றி
இந்து தமிழ்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:57 pm

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 2zYXHxOHQCWKj61pRv8W+imagesjpg
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அம்மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல விவசாயிகள் நில அளவீடு செய்ய வரும் அதிகாரிகளிடம் அழும் காட்சி, போராடுவது, தற்கொலை முயற்சி செய்வது, அதிகாரிகள் காலில் விழுந்து அழுவது என, தங்களின் நில உரிமைக்காக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர். திட்டத்திற்கு எதிராகப் பேசுபவர்களும், பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்திப்பவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கான அவசியம் என்ன என பல கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். அதன்பின்பு, இதுதொடர்பான வழக்கில் இத்திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:58 pm

கருணாநிதி மறைவு

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 KPwhNsj6TKGX49JYBA4N+download-7jpg

திமுக தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி வயது மூப்பின் காரணமாக, தனது 94-வது வயதில் மறைவெய்தினார். 'என் பிறப்பே போராட்டம் தான்' என்று சொன்ன கருணாநிதி, இறந்த பின்பு அவருக்கான இடமான மெரினா கடற்கரையையும் சட்டப் போராட்டம் மூலமாகவே பெற்றார் என்பதற்கு தமிழகமே சாட்சி. தன் தலைவனான அண்ணாவின் நினைவிடம் அருகிலேயே கருணாநிதி இடம் பிடித்தது அவரைப் போன்றே தனி வரலாறாகியுள்ளது. திராவிடம், சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் குறித்து தமிழகத்தில் இளைஞர்களிடையே கருத்துப் பரிமாறல்களும், மீள் வாசிப்பும் கருணாநிதியின் மறைவை ஒட்டி இன்றளவும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:01 pm

பெரியார் சிலை அவமதிப்பு

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 ZRJmmEB4SfaEvloEejjh+download-6jpg(1)

பெரியார் குறித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என ட்வீட் செய்தது, பின்னர் அதனை தன்னுடைய 'அட்மின்' தான் பதிவிட்டார் என்று கூறி தன் கருத்திலிருந்து பின் வாங்கியது இணையத்தில் பேசுபொருளானது. எனினும், பெரியார் சிலையை அவமதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து கருத்துகள் கூறிவந்த நிலையில், பெரியாரின் பிறந்த நாளன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் பாஜக நிர்வாகி ஒருவர் காலணியை வீசியது தமிழகம் முழுவது எதிர்ப்பு அலைகளை வீசியது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:02 pm

அமைதி இழந்த தமிழிசை சவுந்தரராஜன்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 PazrAl7DRTaWDi334R3B+download-8jpg

தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோஃபியா என்பவர் 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என முழக்கமிட்டார். இதனால் கோபமடைந்த தமிழிசை, அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "நானும் சொல்கிறேன் பாசிச பாஜக ஒழிக" என ட்வீட் செய்தார். இதையடுத்து ட்விட்டரில் 'பாசிச பாஜக ஒழிக' என்பது டிரெண்ட் ஆனது. இச்சம்பவத்தால் தமிழிசையின் நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:03 pm

விடுதலைக்காகக் காத்திருக்கும் அந்த 7 பேர்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 ZdEyCeQSGFpVS0uNcwyh+download-9jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என பலகட்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு தான் தீர்ப்பளித்தது. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி இதனை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால் அவர்களது விடுதலை தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. ஆளுநர் அரசியல் சட்டத்திற்கே எதிராக செயல்படுவதாக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:05 pm

டெல்டாவை சிதைத்த 'கஜா' புயல்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 8nTCwOyS0KDgxPYgrZym+images-1jpg

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் ஆண்டின் இறுதியில் ஏதேனும் ஒரு 'இயற்கை' பேரிடரில் சிக்கிக்கொள்கிறது. 2015 இல் சென்னை வெள்ளம், 2016 இல் வர்தா புயல் பாதித்த நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ’கஜா’ புயல் டெல்டாவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டது. வீடுகள் சேதம், தென்னை உள்ளிட்ட விவசாயம் நாசம், போக்குவரத்து தடை, மின் தடை என, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. அம்மக்களின் பல்லாண்டு கால உழைப்பையும், வருங்கால வாழ்வாதாரத்தையும் 'கஜா' புயல் அடியோடு எடுத்துக்கொண்டு போய்விட்டது.

தமிழக அரசு சரிவர நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை, பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை என குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த பேரிடரில் இருந்தும் மக்கள் மீள்வதில் தன்னார்வலர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:07 pm

தொடரும் கைதுகள்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 LicceIORYah6etxBkgt4+30chrgnthirumurugan-gandhijpg

அரசின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும், கருத்து சொல்பவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது எனலாம். தமிழக அரசு அடக்குமுறையை ஏவி மக்களின் குரலை நசுக்குகிறது என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேசியதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்தித்ததற்காக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, ஆளுநர் பன்வாரிலால் குறித்த கட்டுரைக்காக 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் என தமிழக காவல்துறையால் கைதானவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் ஒருநாள் முதல் மாதக்கணக்கில் சிறையில் இருந்தனர்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:08 pm

தலைமை ஏற்ற ஸ்டாலின்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 Zb5i1uLlQUqrG47pc1wE+download-11jpg

கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். மாநில அரசையும் மத்திய அரசையும் அகற்ற வேண்டும் என, தான் தலைவரான சமயத்திலிருந்து குரல் எழுப்பி வருகிறார். கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷாவை அழைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அமித் ஷா கலந்துகொள்ளாத நிலையில், நிதின் கட்கரி கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியிலும் பாஜகவை எதிர்த்து ஸ்டாலின் பேசினார். அதுமட்டுமல்லாமல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் கூட்டணியை அமைக்கத் திட்டமிடும் மாநிலத் தலைவர்களில் ஸ்டாலின் முதன்மை வகிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில், ராகுல் காந்தியை தலைமையேற்க அழைப்பு விடுத்ததன் மூலம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முதன்முதலாக முன்மொழிந்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:09 pm

சர்ச்சைகளுக்கு குறை வைக்காத தமிழக பாஜக தலைவர்கள்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 3 SI0KmY0JQcug5nGY2tCV+TamilNews483512520791jpg
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், தமிழிசை சவுந்தரராஜன் என தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பல சர்ச்சைகளில் சிக்கினர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த எஸ்.வி.சேகரின் ட்வீட்டுக்கு அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. ஹெச்.ராஜா பெரியார் குறித்த ட்வீட்டுகளுக்காகவும், தமிழிசை சவுந்தரராஜன் சோஃபியா விவகாரத்திற்காகவும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த ட்வீட்டுக்காகவும் சர்ச்சையைச் சந்தித்தனர். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து கேள்வியெழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாஜக நிர்வாகிகள் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின்னர் தமிழிசை அவரது வீட்டுக்கு சென்று 'நட்பு' பாராட்டினார். இந்த ஆண்டு பாஜகவினர் எழுப்பிய சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் குறைவே இல்லை.


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக