புதிய பதிவுகள்
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 Poll_c10 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 Poll_m10 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 Poll_c10 
54 Posts - 40%
heezulia

35 Posts - 26%
Dr.S.Soundarapandian

31 Posts - 23%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 Poll_c10 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 Poll_m10 மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 Poll_c10 
305 Posts - 50%

182 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82615
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Dec 2018 - 9:28

2019-ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் முதல் நான்கு
(மேஷம், ரிஷம், மிதுனம், கடகம்) ராசிகளுக்கான
பலன்களைக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப்
பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நண்பர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செயல்களுக்கு வரவேற்பு கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தோர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் வலிமையாக எடுத்துக்கூறி சாதித்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பையே நம்பி வாழ்வீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது.

உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களைத் தட்டிக் கொடுத்து செல்வீர்கள். பழைய நண்பர்களையும் மறக்க மாட்டீர்கள். எவருக்கும் அவர்கள் கேட்காமலே அறிவுரைகளைக் கூற வேண்டாம். எவரும் உங்களை இந்த காலக்கட்டத்தில் ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்றும் இந்த காலகட்டத்தில் பூர்த்தியாகும்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பல காரியங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அவைகளைப் பதற்றமில்லாமல் செய்து முடிப்பீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட, யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். ஆன்மிகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.

வருமானம் சீராகவே இருக்கும். ஓரளவு பணம் மிச்சப்படும். சேமிப்புகளும் உயரும். பேச்சில் வசீகரம் கூடும். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவீர்கள். உற்றார் உறவினர் மற்றும் உடன்பிறந்தோரிடம் பாசமாகப் பழகுவீர்கள்.

பெற்றோர் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். முக்கிய வேலைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். புதிய வருமானம் பெற சில திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

வெளிநாடுகளுக்கு உத்தியோகம் அல்லது கல்விப் பயணம் செய்ய நேரிடும். அரசு அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். நூதனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி கரிசனத்துடன் நடந்துகொள்வார்கள். வேலைகளை பதற்றப்படாமல் அமைதியாகச் செய்வீர்கள். அனுபவங்களால் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றமடைய அதிகமான முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். போட்டியின் காரணமாக நீங்கள் சற்று அதிகமான அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.

வங்கிகளிடமிருந்து விரும்பியபடி கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.கொடுக்கல் வாங்கல்களில் இருந்த கருத்து வேறுபாடுகளும் விரோதங்களும் மறையும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும்.

நீர்ப்பாசனத்தைப் பெருக்கி நல்ல விளைச்சலைப் பெற முயற்சி செய்வீர்கள். மகசூல் நன்றாக இருப்பதால் இந்த ஆண்டு கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும் என்றால் மிகையாகாது.

அரசியல்வாதிகள் எதிலும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும்.

கட்சியில் உங்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞர்களால் பணவசதியும் விருதுபெறும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

பெண்மணிகள்
கணவரிடம் ஒற்றுமையை காண்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பயணங்களின் போது உடைமைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும். \

மாணவமணிகள்
சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். வருங்காலத்திற்காக நீங்கள் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உற்சாகமான மனநிலையில் இருக்கும் அண்டாக அமைகிறது என்றால் மிகையாகாது.

பரிகாரம்:பிரதோஷ காலத்தில் பார்வதி பரமேஸ்வரர்களை தரிசிக்கவும்.

[

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82615
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Dec 2018 - 9:37

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களில் திறமையுடன் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். பெரும் பணிகளை ஏற்று நிர்வாகத் திறமையுடன் செயல்படுத்தி புகழடைவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் உங்கள் சொல்கேட்டு நடப்பார்கள். எதிரிகளின் தொல்லை இராது. எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.

ஆன்மிகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். அடக்கத்துடன் ஆரவாரம் இல்லாமல் காரியமாற்றுவீர்கள். பலவகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குழந்தைகள் பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். வழக்குகள் வெற்றியடையும். அரசு வழியில் நன்மைகள் உண்டாகும்.

களவு போயிருந்த பொருள்கள் திரும்பக் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். உடன்பிறந்தோருடன் இணக்கமான உறவை வைத்துக் கொள்வீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். அதனால் ஆகார விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் பழகத் தொடங்குவீர்கள். முரண்டு பிடித்த நண்பர்களை உங்கள் வழிக்கு கொண்டு வருவீர்கள்.

சிலர் சொந்த வீடு வாங்கி குடிப்பெயர்வார்கள். இதுவரை இருந்து வந்த நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டி பந்தயங்களிலும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவைகளிலும் ஆதாயம் கிடைக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். அனுகூலம் தரும் சில பயணங்களைச் செய்வீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மற்றபடி குடத்திற்குள் இட்ட விளக்காக இருந்தவர்கள் வெளிச்சத்திற்கு வரும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளைர்களின் ஆதரவு நிறைந்திருப்பதால் தைரியமாக புதிய கடைகளைத் திறப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை ஓங்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கனிகளைப் பயிரிடுவீர்கள். விவசாயத்தைப் பெருக்க புதிய உபகரணங்கள் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். பிரசாரங்களிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உட்கட்சிப்பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் கவனத்துடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். வசீகரப்பேச்சினால் அனுகூலங்களைக் காண்பீர்கள்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சேமிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோரிடமிருந்து பாகப்பிரிவினை மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார அபிவிருத்தி உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் மனதில் உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். ஓய்வு எடுப்பதைக் குறைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அள்ளுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை, அனுமனை ஒரு சேர வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82615
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Dec 2018 - 9:39

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எந்த காரியத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து நல்ல விஷயமாக இருந்தால் மட்டுமே ஈடுபடுவீர்கள். மனதில் நிம்மதி உண்டாகும். புத்திசாலித்தனம் கூடும். தொடர்ந்து வந்த மனக்கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள்.

புதிய ஊர்களுக்குச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். புதிய கடன்களும் கிடைக்கும். இதனால் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளிலும் ஈடுபடுவீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள். செய்தொழிலில் முன்னேற்றம் அடைய விடாமல் இருந்த இடைத் தரகர்கள் விலகி நேரடியாகப் பொருள்களை விற்பனை செய்வீர்கள்.

நண்பர்களும் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளை மேற்படிப்புக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். மேலும் உங்களின் சூட்சும புத்தியும் விவேகமும் செயல்களில் வெளிப்படும்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்தில் இருந்த சிரமம் குறையும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தடைகளையும் இடையூறுகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சுயநலமில்லாமல் பொது நலமாக வலம் வருவீர்கள். உங்கள் பேச்சினால் கடினமான காரியங்களையும் சுபலமாக முடித்து விடுவீர்கள். சிலருக்கு புதிய மொழிகளைக் கற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் நாணயமாக நடந்து கொள்வார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய காலகட்டமிது. வாராக் கடன் என்று நினைத்திருந்த பணம் ஆச்சரியப்படும் வகையில் கை வந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து அதனால் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.

எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்புக்கும் கௌரவத்திற்கும் குறைவு வராது. உங்களின் சிறிய முயற்சிகளும் பெரிய வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் கொடுத்த வேலைகளை மனம் சலிப்படையாமல் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்பாக நடந்து கொள்வார்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் நல்ல லாபம் ஈடுட்டுவார்கள். உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் கூடுதல் வருமானம் பெறுவார்கள். பால் வியாபாரிகள் நலம் கூடக் காண்பார்கள். வயல் வரப்பு பிரச்னைகளில் தீர்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்தவும். அவைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படலாம். முக்கியப் பிரச்னைகளில் எதையும் பேசி மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். பெயர், புகழ் பெறுவதற்காக சாதனைகளைச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதியும் கணவரிடம் பாசமும் கூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளிலும் சேர்வீர்கள். எக்காலத்திலும் உங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இந்த ஆண்டு சிறப்பாக கிடைக்கும்.

பரிகாரம்: பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82615
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Dec 2018 - 9:40

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடத்தொடங்கும். தேடாமலேயே விரும்பியவை கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாட்டிற்கு பயணப்படுவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் அதிர்ஷ்ட வாய்ப்புகள்  கிடைக்கும். அரசு அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். சிலருக்கு விருது பெரும் யோகமும் உண்டாகும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் தேடி வரும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாசனை திரவியங்களை பயன்படுத்துவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

பழைய காலத்தில் உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள். உங்களின் புத்திசாலித்தனமும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் விரும்பிய பாடப்பிரிவுகளிலும் விரும்பிய கல்லூரிகளிலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் உங்களின் சமயோசித புத்தி கைகொடுக்கும்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களும் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். செய்தொழில் சிறப்பான வளர்ச்சி அடையும். அரசு வேலைக்குக் காத்துக்கொண்டிருந்தவர்கள் அதைப் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். வரவேண்டிய இடத்திலிருந்து பணம் கைவந்து சேரும். பங்கு

மார்கெட் போன்ற துறைகளிலிருந்தும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நெடுங்காலம் விற்காமல் இருந்த நிலம், வீடு நல்ல விலைக்கு விற்பனையாகி சேமிப்புகள் உயரத்தொடங்கும். குழந்தைகள் படிப்பில் சாதனைகளைச் செய்வார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த சங்கடங்களும் இடையூறுகளும் மறையும்.  எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

முக்கிய முடிவுகளை தக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பின்பே எடுக்கவும். உங்கள் எண்ணங்களை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருந்து மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கவும். எவரிடமும் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு சற்று கூடும். உழைப்பிற்கேர்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் பகைமை பாராட்ட நேரிடலாம். எல்ல காரியங்களிலும் காலதாமதம் ஏற்படும். உடலில் சோர்வும் மனதில் தெளிவற்ற தன்மையும் காணப்படும்.  வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் காலம் தாழ்த்தியே பலன் தரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். கொள்முதல் லாபங்களும் தொடருமாகையால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். வேலை செய்பவர்களை அனுசரித்துச் சென்று உங்கள் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு உதவும் முக்கிய பிரச்னைகளை முன்னின்று ஒடுக்க முயல்வர். எதிரிகளின் பலம் குறையும்.

அரசு அதிகாரிகளிடம் தேவையான ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளே கிடைக்கும். ஆக்கபூர்வமான எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம் மனநலம் இரண்டும் சிறப்பாக அமையும்.

ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் சுமுகமாகப் பழகவும். மாணவமணிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்படுவதால் ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்து படிக்கவும். ஆசிரியர்களின் ஆதரவு குறைந்து காணப்படும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு சிறந்தது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Dec 2018 - 13:26

மற்றவர்களுக்கு????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 25 Dec 2018 - 18:25

மொபைல் நம்பர் மாறாமல் வேறு நெட்ஒர்க்குக்கு மாறுவது போல்,
வெவேறு ராசிக்கு நாம் மாறுவது போல் இருந்தால் நன்றாக இருக்கும்.
SUN நெட்ஒர்க் தான் வழிகாட்டவேண்டும். புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக