புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
47 Posts - 65%
heezulia
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரணம் ஆயிரம் !


   
   
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Fri Nov 30, 2018 7:39 am

வணக்கம் !

குறிஞ்சியும், நெய்தலும் கொஞ்சும் தமிழகத்தின் வளமிக்கச் சோற்றுவட்டிலும், மீனவர் ஆளும் ஆழிக்கட்டிலும் இன்று தத்தமது அழகையும்,ஆற்றலையும் இழந்து தவிக்கும் நிலை. ஊருக்குச் சோறிட்ட உழவருக்கு இன்று தமது மாற்றுத்துணிக்கும் கையேந்த வேண்டிய நிலை. அலைகளோடு உறவாடிக் கயல்களோடு கரைசேரும் வலைஞருக்குத் தமது வாழ்வாதாரமாகிய படகுகள் உடைந்த கையறுநிலை. அண்ணன் பிள்ளையைக் காட்டிலும் பாசத்துடன் வளர்த்தத் தென்னம் பிள்ளைகளும், தலைமுதல் கால்வரை பயன்தரும் வாழைத்தோப்புகளும், பாலுக்கும், தோலுக்கும் மேய்த்துவந்த கால்நடைகளும், பறந்தும் திரிந்தும் பார்த்தப் புள்ளினங்களும் -தமது உயிரை நீத்துத் தரையில் சாய்ந்த காட்சிகளைக் கண்ட மூன்றாம் நபரின் உள்ளமும் உருகுமெனில், உணர்வோடு வளர்த்த உரிமையாளர் மனங்கள் என்ன பாடுபடுமென நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா ?

புயல்களும், போராட்டங்களும் நம் மக்களுக்குப் புதிதில்லையாயினும், பொருளாதாரத்தின் உயிர்நாடியைத் தற்காலிகமாகத் தொலைத்துவிட்டு நிற்கும் அவர்களின் இரைஞ்சல்கள் உரியோரின் செவிகளில் விழுந்தும் விழாமலிருந்தால் தான் அவர்களுக்கு அது பேரிடர். நடுவண் அரசும், மாநில அரசும் தத்தமது கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதாக உறுதியளிப்பினும், இழப்படைந்த பொதுமக்களின் கூக்குரல்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றன.

எங்கேயோ ஒருவர்க்குத் துன்பமென்றாலும், விழிநீர்ப் பெருக்கும் பெருந்தன்மையுடைய தமிழ் மக்களாகிய நாம் , இன்று நம் மக்களில் ஒரு பகுதிக்கு வந்த துயரைப் போக்கத் திரளமாட்டோமா என்ன ? யானையின் பெயர் சூட்டப்பட்டப் புயலினால் உருவான சேதங்களைக் களைந்து அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் அவர்களது உடனடித் தேவைகளுக்கும், நீண்டகால வாழ்வாதார மீட்டெடுப்புக்கும் தமிழ் மக்களும், தமிழரோடு உணர்வால் இணைந்திருக்கும் மாற்றுமொழி உறவுகளும் பொருளுதவி வழங்கிவருதலோடு , தத்தமது நேரத்தையும், கவனத்தையும், அறிவாற்றலையும், உடலுழைப்பினையும் வழங்கிவருவது மிகவும் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துவதோடு, நம்மாலியன்ற உதவியையும் உடனே செய்வதே நலமாகும். அதை வலியுறுத்தியே இப்பதிவு, வற்புறுத்துவது நோக்கமல்ல ! தங்கள் புரிதலுக்கு நன்றி !

அன்னம் விளைந்த பூமியிலே
ஒன்றும் எஞ்சி இருக்கவில்லை !
ஊருக்குச் சோறிட்ட மக்களுக்குப்
பிறரிடம் கைகள் ஏந்துநிலை !
தண்ணீர் நம்பி விவசாயம்
கண்ணீர்க் கடலில் மூழ்கியதே !
ஆற்றில் நீரைத் திறந்திடவே
மனமற்ற மாந்தர்கள் மறுக்கின்றார் !
இயற்கையனுப்பிய புயலாலோ இன்று
அனைத்தும் சாய்ந்து அழிந்ததுவே !
நூறாண்டாய் நின்ற மரங்கூட
வேரோடு மண்ணில் சாய்ந்தனவே !
மேற்கூரையென்று ஏதோ வொன்று
தலையைக் காக்க இருந்ததுவே !
அதுவும் காற்றுக்கு இரையாக
வீடின்றி வீதிக்கு வந்தாரே !
வாத்துகள் கோழிகள் பறந்தனவேயின்று
அத்தனையும் உயிர் விட்டனவே !
கால்நடை பலவும் இருந்தனவே
பால்வளம் நன்றாய்ப் பொழிந்தனவே !
யானையின் பெயரைத் தாங்கிவந்தப்
புயலால் அவைகள் மாய்ந்தனவே !
கடல்சார் மீனவர்க் கலங்கிடவே
மீன்பிடி படகுகள் உடைந்தனவே !
உடல் சார்ந்துழைப்பவர்த் தவிக்கின்றார்
ஒருவேளைச் சோற்றுக்கு அலைகின்றார் !
ஈரங்காயா நிலமுழுது பசியரக்கனின்
பாரத்தை அவர்த் தணித்தார் !
தீராக் கோபத்தில் இயற்கையன்னைத்
தண்டித்தாலவர் என்ன செய்வார் ?
வயல்வெளியாடி ஏருழுது எந்தப்
புயல் வந்தபோதும் கலங்காது
சேற்றில் நின்றுறவாடி அவர்
சோற்றை நமக்கு ஈந்தாரே !
காற்றாய்க் காலன் சுழன்றதினாலவர்
மாற்றுத் துணியின்றிப் போனாரே !
வேற்றாராய் அவர்ப் போவாரோயில்லைக்
கரங்களுண்டோ அவர்த் துயர்க்களைய ?
நம் மக்கள் துன்புற்றிருக்கையிலே
நாமிங்கு எப்படி இன்புறுவோம் ?
எளியவர்ப் படுந்துயர்த் துடைத்திடவே
உளமாரப் பொருள் கொடுத்திடுவோம் !
சிறுதுளி பெருவெள்ளம் நாமறிவோம் !
புயல்வெள்ள பாதிப்பை உணர்வோமா ?
மறுப்பின்றி நம்மால் இயல்கின்ற
சிறிதொரு உதவியைப் புரிவோமா ?
நன்றி நவில்வோம் இயற்கைக்கு
நமக்கொரு வாய்ப்பைத் தந்ததற்கே !
அறிவினைக் கொண்டு உதவிடுவோம்
உழைப்பை வழங்கி வாழ்வளிப்போம் !
பொன்வைக்கும் இடத்தில் பூவைப்போம்
நன்மைநாடிக் கடமை செய்வோம் !
வாழ்வதென்றால் நாம் எல்லோரும்
சேர்ந்தே வாழ்வோம் என்றுணர்வோம் !
வீழ்வதென்பது நாம் அறியோம்,
உலகிற்கிதை நாம் உணர்த்திடுவோம் !

நன்றி !


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 30, 2018 12:07 pm

Code:

அன்னம் விளைந்த பூமியிலே
ஒன்றும் எஞ்சி இருக்கவில்லை !
ஊருக்குச் சோறிட்ட மக்களுக்குப்
பிறரிடம் கைகள் ஏந்துநிலை !
தண்ணீர் நம்பி விவசாயம்
கண்ணீர்க் கடலில் மூழ்கியதே !
ஆற்றில் நீரைத் திறந்திடவே
மனமற்ற மாந்தர்கள் மறுக்கின்றார் !
இயற்கையனுப்பிய புயலாலோ இன்று
அனைத்தும் சாய்ந்து அழிந்ததுவே !
நூறாண்டாய் நின்ற மரங்கூட
வேரோடு மண்ணில் சாய்ந்தனவே !
மேற்கூரையென்று ஏதோ வொன்று
தலையைக் காக்க இருந்ததுவே !
அதுவும் காற்றுக்கு இரையாக
வீடின்றி வீதிக்கு வந்தாரே !


கஜாவின் கோர தாண்டவம் கொடுமையிலும் கொடுமையே...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 30, 2018 1:49 pm

அருமையான முகவுரை
அதையும் மிஞ்சிடும் கவிதை.
கவிதை நடையை ரசிக்கையில்
அதன் கருத்துக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
நடுவில் சிலநாள் இடைவெளி ஏனோ?
கஜா புயல் கொடுமையை நேரிடையாக காண சென்றீரோ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Fri Nov 30, 2018 5:56 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
கஜாவின் கோர தாண்டவம் கொடுமையிலும் கொடுமையே...
மேற்கோள் செய்த பதிவு: 1287595
ஆம், ஐயா ! 'கஜா' பெயருக்கேற்றாற்போல் பல பகுதிகளை ஒரு மிதி மிதித்திருக்கிறது.
T.N.Balasubramanian wrote:அருமையான முகவுரை
அதையும் மிஞ்சிடும் கவிதை.
கவிதை நடையை ரசிக்கையில்
அதன் கருத்துக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
நடுவில் சிலநாள் இடைவெளி ஏனோ?
கஜா புயல் கொடுமையை நேரிடையாக காண சென்றீரோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287599
என்னை நினைவில் வைத்தமைக்கும், பதிவிற்கு வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி ஐயா ! என்னால் நேரில் சென்று அம்மக்களுக்கு உதவ இயலவில்லை, இருந்த இடத்திலுள்ளபடியே இறை வேண்டுதலோடு என்னால் இயன்றதைச் செய்கிறேன். நான் பதிவிடுவதைவிடப் பிறர்ப் பதிவுகளைப் படிப்பதற்கே ஆர்வம். வாரணம் ஆயிரம் ! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 30, 2018 8:05 pm

பிறர் பதிவுகளை படித்து,மறுமொழி கருத்தாக இடுவதும் சாலச்சிறந்ததே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 01, 2018 7:09 am

பிழையில்லாத தமிழ்நடை ; கருத்தாழமிக்க கவிதை ! உங்களிடம் தமிழார்வம் உள்ளது . உங்களுடைய கவிதை மரபுக் கவிதையாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தக் கவிதையை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தால் அருமையான இலக்கியமாக அமைந்திருக்கும். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முயலுங்கள் ! வாழ்த்துக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 01, 2018 7:18 am

M.Jagadeesan wrote:பிழையில்லாத தமிழ்நடை ; கருத்தாழமிக்க கவிதை ! உங்களிடம் தமிழார்வம் உள்ளது . உங்களுடைய கவிதை மரபுக் கவிதையாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தக் கவிதையை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தால் அருமையான இலக்கியமாக அமைந்திருக்கும். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முயலுங்கள் ! வாழ்த்துக்கள் !

வாரணம் ஆயிரம் ! 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Sat Dec 01, 2018 10:10 pm

T.N.Balasubramanian wrote:பிறர் பதிவுகளை படித்து,மறுமொழி கருத்தாக இடுவதும் சாலச்சிறந்ததே.
மேற்கோள் செய்த பதிவு: 1287629
தங்கள் கருத்தை ஏற்கிறேன் ஐயா ! வாரணம் ஆயிரம் ! 1571444738
M.Jagadeesan wrote:பிழையில்லாத தமிழ்நடை ; கருத்தாழமிக்க கவிதை ! உங்களிடம் தமிழார்வம் உள்ளது . உங்களுடைய கவிதை மரபுக் கவிதையாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தக் கவிதையை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தால் அருமையான இலக்கியமாக அமைந்திருக்கும். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முயலுங்கள் ! வாழ்த்துக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1287637
வணக்கம் ஐயா ! தங்களைத் திருக்குறள் ஆசானாகவேக் கருதி மிகவும் மதிக்கிறேன். எனது பதிவைப் படித்து ஊக்கமளிக்கும் பின்னூட்டம் வழங்கியமைக்கு மிகவும் நன்றி ! இலக்கணம் கற்காமல் இலக்கியம் படைப்பது நிகழாது. நான் இலக்கியவாதியல்லள், சராசரி இல்லத்தரசி மட்டுமே ! பள்ளி,கல்லூரியில் தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டுமேப் படிக்க முடிந்தது. வேலையும் மொழி சார்ந்த துறையில் அமையாததால், பேச்சுக்கும், புத்தக வாசிப்பிற்கும், அவ்வப்போது எழுதும் மடல்களுக்குமென்றே எனது தமிழ் வழக்கு மிகவும் சுருங்கிவிட்டது. செழுமைமிகு நம் மொழியின் ஆழ்ந்த இலக்கண விதிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை என்பதைக் குற்ற உணர்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன். எனது அறியாமையை மன்னியுங்கள். தங்களைப் போன்றோரின் அறிவுப் பகிர்வால் என்னைப் போன்றோருக்கு நற்றமிழ்ப் படிக்கக் கிடைக்கின்றது. அதற்கு என் பணிவான நன்றி ! தாங்கள் அறிவுறுத்தியபடியே, யாப்பிலக்கணம் பயில முயல்கிறேன். அதற்கு இவ்வலைத்தளம் மிகவும் உதவும் என்றும் எண்ணுகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக