புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 11:51 am

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? 7bCn06HzQhfdaKIxwluI+_104460755_gettttt
இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து தமிழ்நாடு தொடர்ச்சியாக சுனாமி, வெள்ளம், புயல், வறட்சி எனப் பேரிடர்களைச் சந்தித்துவருகிறது. இனி பேரிடர்களை எதிர்கொள்வதிலும் தவிர்ப்பதிலும் மாநில அரசின் பார்வை மாற வேண்டும் என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். அந்தத் திசையில் செயல்பட ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறது மாநில அரசு.

தமிழ்நாட்டின் உள்ள கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இது இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பதினைந்து சதவீதம். 2004ல் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, பெரும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது.

2000வது ஆண்டு புயல், 2005ல் ஃபானூஸ் புயல், 2008ல் நிஷா புயல், 2010ல் ஜல் புயல், 2011ல் தானே, 2012ல் நிலம் புயல், 2016ல் வர்தா, 2017ல் ஒக்கி, 2018ல் கஜ என இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இப்போது வரை 9 புயல்கள் தமிழகத்தைத் தாக்கியிருக்கின்றன.

‘கஜ’ புயல் பாதிப்பு: "மீண்டும் தென்னை மரங்கள் உருவாக ஒரு தலைமுறையாகும்"
‘கஜ’ புயல்: பூப்பெய்திய மகளின் மரணத்தை தடுக்க முடியாமல் தவித்த தாய்
செல்லமாக வளர்த்த கால்நடைகளை கொன்ற கஜ: பெண்கள் கண்ணீர் #GroundReport

இது தவிர, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் சுமார் 650 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் இழப்பையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு புயலின் போதும் மாநிலத்தின் எட்டு சதவீத மக்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

நன்றி
பிபிசி தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:26 pm

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? SXA2TPwtSfmdp9Tm4syZ+_104458830_937e0d06-3eba-4cb0-a387-269799f2e4d7

இவற்றைத் தவிர, தமிழகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்பட்டு வரும் வறட்சி, விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. மாநிலத்தில் மதுரை, ராமநாதபுரம், தர்மபுரி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் எப்போதுமே எளிதில் வறட்சிக்கு இலக்காகக்கூடிய மாவட்டங்களாக இருக்கின்றன.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் பெரும்பாலானவை கடலரிப்பால் பாதிப்பிற்குள்ளான நிலையிலேயே இருக்கின்றன.

இவை தவிர, கடல்நீர் உட்புகுவது, வெப்ப அலை, காட்டுத் தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம் ஆகியவையும் மாநிலம் எதிர்கொள்ளும் பேரிடர்களாக இருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இப்போதுவரை புயல்களை சந்தித்தவகையில் ஒடிஷா, ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.

"ஒவ்வொரு முறையும் புயல் வருவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பிறகு புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்ற பிறகு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது மாநில அரசு. தமிழகத்தைத் தாக்கும் புயல்கள், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பேரிடர்களுக்கென மாநில அரசு ஒரு முழுமையான கொள்கைத்திட்டத்தை வடிவமைத்து, செயல்பட வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:27 pm

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? WTV65j1iROGYKeUnRVnO+_104458832_87a5a4b7-8524-49de-932e-b041cd0f5525

இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தை புயல் தாக்கிவருகிறது, இது ஆண்டிற்கு ஒருமுறை என மாறும், பிறகு ஆண்டிற்கு இரண்டு என்று வரும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து வளங்களும் பேரிடர் தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் பயன்படும். வேறு எந்த மக்கள் நல திட்டங்களும் செய்யமுடியாது என்கிறார் அவர்.

இந்தத் திசையில் முதலில் விழித்துக் கொண்ட மாநிலம் ஒதிஷாதான். 1999ல் ஏற்பட்ட மாபெரும் புயலை அடுத்து ஒரிசா மாநில பேரிடர் குறைப்பு ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. பிறகு ஒரிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமாக மாற்றப்பட்டது.

இதற்குப் பிறகு, வந்த பேரிடர்கள் அனைத்தும் இந்த ஆணையத்தால் கையாளப்பட்டன. ஒவ்வொரு புதிய பேரிடரின்போதும் இந்த ஆணையம், அந்த அனுபவத்தைக் கொண்டு தன்னை தொடர்ந்து புதுப்பித்துவருகிறது. குறிப்பாக 2013ஆம் ஆண்டில் ஃபாலின் புயல் ஒரிசாவைத் தாக்கியபோது சுமார் 11,54,000 பேரை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றியது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:28 pm

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? AUTRte5SXKZ96Osy3bz5+_104458833_c93c9e28-401e-445a-b2ec-55ec09b18853

அந்தப் புயலின்போது ஒரிசா பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்பட்ட விதம் பெரும் பாராட்டுக்கு உள்ளானது.

ஒரிசாவுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது. 2001 ஜனவரி 26ஆம் தேதியன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்தே அதே ஆண்டில் பேரிடர் மேலாண்மைக்கென இந்த ஆணையத்தை உருவாக்கியது குஜராத். இப்போது தாலுகா மட்டம்வரை தனது கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது குஜராத் மாநில பேரிடர் ஆணையம்.

இந்த இரு ஆணையங்களின் கட்டமைப்பின் அடிப்படையில்தான் தேசிய அளவில் பேரிடர் மேலாண்மைக்கென 2005 டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஆணையம் 2003ல் துவக்கப்பட்டுவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:30 pm

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? WhMgtcE7QWyNpME3x48D+_104458834_1889c87c-5b72-41be-a329-a6d935511580

"எல்லா மாவட்டங்களின் பெரிய பிரச்சனைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே பாதிக்கப்படக்கூடிய எல்லா இடங்களையும் அடையாளம் கண்டிருக்கும் வெகுசில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அவற்றை எதிர்கொள்வதற்கான இலக்குகளும் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அந்த இலக்கை நோக்கி செயல்படும்போது பேரிடருக்கான ஆபத்து குறையும். புயல், வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, வெப்ப அலை போன்றவற்றால் பாதிப்பு ஏற்படக்கூடிய 4399 இடங்களை அடையாளம் கண்டிருக்கிறோம்" என்கிறார் தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையர் கே. சத்யகோபால்.

பேரிடர்களை எதிர்கொள்வதில் தமிழகம் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்கிறார் அவர். ஒவ்வொரு பேரிடரின்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்காலிகத் தீர்வு, நிரந்தரத் தீர்வு ஆகியவை மிகத் துல்லியமாக பின்பற்றப்படுகின்றன என்கிறார் அவர்.

மாநிலம் எதிர்கொள்ளும் பாதிப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு இப்போது மிக அதிக பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய பகுதியில் துவங்கி, மிகக் குறைவான பாதிப்பை எதிர்கொள்ளும் பகுதி வரையில் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும் அவையனைத்தும் தமிழக வரைபடத்தில் குறிக்கப்பட்டு, அங்கு ஏன் பேரிடர் ஏற்படுகிறது, அவற்றைக் குறைக்க, எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்பது வரையில் திட்டம் தீட்டப்பட்டுவிட்டது என்கிறார் சத்யகோபால்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:31 pm

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? SS52hJJQHuoFksmbICNw+_104459865_e8383826-d215-4867-91e4-9da3e5a48ab2

இருந்தபோதும் ஒவ்வொரு பேரிடரின் போதும் மக்கள் பெரும் இழப்புகளை சந்திப்பது ஏன் என்று கேட்டபோது, "இவற்றையெல்லாம் முழுமையாக செயல்படுத்தி முடிக்க நீண்டகாலம் பிடிக்கும். தற்போதைய சூழலில் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அது மிக முக்கியமானது" என்கிறார் சத்யகோபால்.

"தமிழகத்தைத் தாக்கிய சுனாமிக்குப் பிறகு, நம் சிந்தனையே மாறியது. அதற்குப் பிறகு கடற்கரையோரத்தில் அரசு கட்டிக் கொடுத்த வீடுகள், புயல், சுனாமி, அதீத காற்று, வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொள்ளக் கூடியது. அந்த வீடுகளில் எல்லாம் வீட்டின் கூரைக்குச் செல்ல படிகள் இருக்கும். நாம் கணிக்க முடிந்ததைவிட அதிக வெள்ளம் ஏற்பட்டு, வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேறவும் முடியாமல் போனால், வீட்டின் கூரையில் ஏறித் தப்பிவிடலாம். எந்த ஒரு மாநிலமும் இந்தத் திசையில் செயல்படுவதற்கு முன்பாக நாங்கள் இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோம்" என்கிறார் அவர்.

அதாவது ஒரு பேரிடர் நிகழ்வு நடந்தால், அதைச் சீரமைத்து புதிய கட்டமைப்பை உருவாக்கும்போது பலவகையான பேரிடரை எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பை உருவாக்குகிறோம். இதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என்கிறது மாநில அரசு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:33 pm

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? NrdC7RBTQRmmzCResl3d+_104459866_62b6986d-6309-4bb5-a65e-4b821d17e609

இந்த பேரிடர்களை எதிர்கொள்வதிலும் எதிர்காலத்திற்காக தயாராவதிலும் நிதி ரீதியாக சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் மாநில அரசின் அதிகாரிகள். "தற்போது உள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை நிதி என்பது, அந்த நேரத்து இடரைக் களைய அளிக்கப்படும் உதவிதான். அவை, பேரிடரைத் தவிர்ப்பதற்கோ, இழப்பீடு வழங்குவதற்கோ போதுமானதல்ல. ஆனால், நமக்கு பேரிடரைத் தவிர்ப்பதற்காந நிதி தேவை. அப்போதுதான் படிப்படியாக பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்க முடியும்" என்கிறார் சத்யகோபால்.

2016க்குப் பிறகு தமிழ்நாடு இந்த திசையில் தீவிரமாக செயல்படத் துவங்கியுருக்கிறது. மாநில வருவாய்த் துறையின் பெயர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் நிர்வாகத் துறை என பெயர் மாற்றப்பட்டது.
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? GiPRxGTV2ecHPgA9f4QN+_104459867_dc1cad04-5cf7-4624-ac92-b3d9d034e30d

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 12:37 pm

கஜ புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயலின் பாதிப்பு நீங்கினாலும், வீடுகளை இழந்த மக்களை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இத்தனை ஆண்டுகால பேரிடர் மேலாண்மைத் திட்டங்களுக்குப் பிறகும் இதுதான் நிலையா?

"இதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது மாநிலம் முழுவதும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுபோல முன்பு கட்டப்பட்டவை மிகச் சிறியவை. இப்போது ஒவ்வொரு மையத்திலும் 2,000 பேர் வரை தங்க முடியும்." என்கிறார் சத்யகோபால்.

ஒதிஷா போன்ற மாநிலங்கள் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல மடங்கு முன்னேறியுள்ளன. பேரிடர் காலங்களில், ஒதிஷாவின் நிலப்பரப்பில் தேவையான பகுதியை கணிணியில் தேர்வுசெய்து, ஒரே ஒரு க்ளிக்கில், அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கைச் செய்தியை அனுப்புகிறார்கள்.

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? BEfbHglqTiqNAzmlHS5z+_104459871_9f330deb-7731-4f10-a654-cf437f6206a5

பேரிடர் மேலாண்மை மையத்தில் அமர்ந்தபடி, ஒரேஒரு பொத்தானை இயக்கி, கடற்கரை முழுவதும் அபாயச் சங்கை ஒலிக்கச் செய்கிறார்கள்.

கஜ புயல் புதிய சவால்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அதையும் கருத்தில்கொண்டு செயல்படுவோம் என்கிறார் சத்யகோபால்.

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Sat Nov 24, 2018 2:49 pm

மக்களின் பார்வைக்கு, மேலும் உண்மை கண்டறிய உங்களின் மூன்றாவது கண் உபயோகித்து நலம்.

HAARP என்னும் அழிவாயுதம்
கஜா புயல் இயற்கையாக நடந்தது அல்ல...

ஹார்ப் (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும்..

இதைப் பயன்படுத்தி வல்லாதிக்க நாடுகளால் இயற்கைக்கு மாறாக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இதோ HAARPஐப் பற்றி அறிந்து கொள்ள கீழே காணும் லிங்க்-களை பாருங்கள்...

ஆனால் இதெல்லாம் எதற்காக என நீங்கள் கேட்கலாம்...

நமது டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து, மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் திட்டம், போன்ற அழிவுத் திட்டங்களை திணிக்க நினைத்த அவர்களின் கனவுகளை கடுமையான போராட்டங்களின் வாயிலாக நம் மக்கள் தடுத்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்...

அதற்கு பதிலடியாகத்தான் வல்லாதிக்க நாடுகள் இத்தகைய பருவநிலை மாற்ற இரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது...

இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம்...

புயலினால் விவசாயம் அழிந்தால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்...

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டால் மக்கள் விவசாயத்தை விட்டு விடுவர்...

விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படும்...

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மத்திய அரசு தனது விருப்பம் போல மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவுத் திட்டங்களைக் கொண்டு வருவார்கள்...

இந்த ஒப்பந்தத்தால் தோராயமாக மத்திய அரசிற்கு கிடைக்கும் கமிஷன் வருமானம் 5000கோடி, ஒப்பந்தம் இடுகிற வல்லாதிக்க நாடுகளின் வருவாய் 5 இலட்சம் கோடி...

தமிழக மக்களுக்கு தெருக்கோடி...

லின்க் இங்கு அனுமதிப்பது இல்லை தேவை என்றால் தருகிறேன்

ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 7:42 pm

Code:

மக்களின் பார்வைக்கு, மேலும் உண்மை கண்டறிய உங்களின் மூன்றாவது கண் உபயோகித்து நலம்.

HAARP என்னும் அழிவாயுதம்
கஜா புயல் இயற்கையாக நடந்தது அல்ல...

ஹார்ப் (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும்..

ஞானமுருகன் உங்களுடைய பதிவு
அதிர்ச்சி அளிக்கிறது.
இப்படி கூட இருக்குமா??

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக