உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் இலவச பதிவிறக்கம்
by rajabhai Today at 10:34 pm

» புத்தகம் தேவை?
by prajai Today at 10:02 pm

» திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்
by T.N.Balasubramanian Today at 8:31 pm

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by ayyasamy ram Today at 8:18 pm

» சினிமா குறித்த தகவல்கள்
by ayyasamy ram Today at 8:04 pm

» பி பி ஸ்ரீநிவாஸ் - எஸ்.ஜானகி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:55 pm

» வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
by ayyasamy ram Today at 7:34 pm

» கொரோனா தாக்கம்: உலக ஏழைகளில் 5ல் ஒருவர் இந்தியர்
by ayyasamy ram Today at 7:29 pm

» விவிஐபிகளுக்கு பரிசு கிடையாது; மஹா., கவர்னர் சிக்கன நடவடிக்கை
by ayyasamy ram Today at 7:26 pm

» சிறுவர் பாடல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:25 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:05 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:45 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by karthiannamalai Today at 12:35 pm

» கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
by ayyasamy ram Today at 12:09 pm

» சினிமா பாடல்கள் -அஞ்சலிதேவி ஸ்பெஷல் |
by ayyasamy ram Today at 12:06 pm

» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by ayyasamy ram Today at 8:48 am

» "தேடி வரும் தெய்வம்..."
by ayyasamy ram Today at 8:45 am

» ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
by ayyasamy ram Today at 8:38 am

» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
by ayyasamy ram Today at 8:06 am

» பணியின் போது உயிர் தியாகம்; 5 இந்தியர்களுக்கு ஐ.நா., விருது
by ayyasamy ram Today at 7:50 am

» எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு
by ayyasamy ram Today at 7:45 am

» ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்
by ayyasamy ram Today at 7:42 am

» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
by ayyasamy ram Today at 7:38 am

» கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 7:36 am

» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
by ayyasamy ram Today at 7:32 am

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Yesterday at 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Yesterday at 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Yesterday at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Yesterday at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Yesterday at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Yesterday at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Yesterday at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Yesterday at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Yesterday at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 12:52 am

Admins Online

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Empty உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

Post by ayyasamy ram on Tue Nov 06, 2018 6:43 pm

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? 138386_thumb
எப்போதும் குழந்தைகளைக் கவர்ந்திழுத்துவிடும்
ரோவன் அட்கின்சன் இந்தப் படத்தில் நமக்கு என்ன
வைத்திருக்கிறார்? #JohnnyEnglishStrikesAgain
படம் எப்படி?

`மிஸ்டர் பீன்' புகழ் ரோவன் அட்கின்சனிற்கு மற்றுமொரு
மணிமகுடமாக இருக்கும் என்று ஆரம்பித்த படத்தொடர்
ஜானி இங்கிலீஷ். படத்தின் கதை இதுதான் என்று
பிரத்தியேகமாக எதையும் கூறிவிட முடியாது.

காட்சிக்குக் காட்சி ஜேம்ஸ் பான்ட் ரக ஸ்பை படங்களைக்
கலாய்ப்பதுதான் இதன் வேலை. கிட்டத்தட்ட ஸ்பூஃப் பட
ரேஞ்சுக்கு இறங்கி அடிப்பதுதான் ஜானி இங்கிலீஷ் ஸ்டைல்.
விமர்சகர்களிடம் திட்டு வாங்கினாலும் வசூலில் ஜானி
இதுவரை டாப்பில்தான் வந்துள்ளார்.

ஜானி இங்கிலீஷ், ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் ஆகிய இரண்டு
படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகமாக
வெளியாகி இருக்கிறது ஜானி இங்கிலீஷ்
ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன். எப்போதும் குழந்தைகளைக்
கவர்ந்திழுத்துவிடும் ரோவன் அட்கின்சன் இந்தப் படத்தில்
நமக்கு என்ன வைத்திருக்கிறார்?
#JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Johnny-english-strikes-again-review-752x490_16357
ரோவன் அட்கின்சன்

பிரிட்டனில் நிகழும் ஒரு சைபர் அட்டாக், அப்போது அன்டர்கவர்
சீக்ரட் ஆபரேஷனில் இருக்கும் ஏஜன்ட்களின் முழு விவரங்களைப்
பகிரங்கமாக உலகுக்குத் தெரியப்படுத்துகிறது.

இதை நிகழ்த்திய ஹேக்கரை கண்டுபிடிக்க ஓய்வுபெற்ற
ஏஜன்ட் ஒருவனின் உதவியை பிரதமர் (எம்மா தாம்ப்ஸன்) நாட
வேண்டிய நிலை. தன் ஓய்வு வாழ்க்கையில் ஒரு பள்ளியில்
புவியியல் ஆசிரியராக இருக்கும் முன்னாள் ஏஜென்ட்
ஜானி இங்கிலீஷிடம் (ரோவன் அட்கின்சன்) இந்தப் பொறுப்பு
ஒப்படைக்கப்படுகிறது.

டிஜிட்டல் உலகில் ஜித்தனாக இருக்கும் அந்த ஹேக்கரை நெருங்க,
முழுக்க முழுக்க டிஜிட்டல் கேட்ஜெட்ஸ் எதுவுமின்றி, பழங்கால
டெக்னிக்கல் சமாசாரங்கள் கொண்டு, தன் பழைய உதவியாளர்
பஃப் (பென் மில்லர்) உதவியுடன் களமிறங்குகிறார்
ஜானி இங்கிலீஷ். மிஷனில் வெற்றி பெற்றாரா?

படத்தின் மிகப்பெரிய பலம் ரோவன் அட்கின்சன்.
தட்டுத் தடுமாறும் உடல்மொழி, அப்பாவியாகச் செய்யும்
குறும்புத்தனங்கள், அறியாமலே பல செயல்கள் புரிந்து சிக்கலில்
மாட்டிக்கொள்வது, இறுதியில் அது சரியான ஒன்றாகவும் முடிவது
என ஜானி இங்கிலீஷ் தொடரின் முந்தைய படங்களின்
அதே டெம்ப்ளேட்தான் இங்கேயும்.

இருந்தும் அதில் கொஞ்சம்கூட தளர்ச்சி இல்லை. குறிப்பாக
அதீத ஆற்றல் தரும் மருந்தை உட்கொண்டு, மீண்டும் பழைய
மிஸ்டர் பீன் நடனத்தை ஆடும் அந்தக் காட்சி, தியேட்டரையே
கலகலக்க வைக்கிறது.

முன்னர், தனக்கு வயதாகிவிட்டதால் குழந்தைகளின் சூப்பர்
ஸ்டாரான மிஸ்டர் பீனாக இனி நடிக்கப் போவதில்லை என்று
தடாலடியாக அறிவித்து அனைவரையும் சோகக்கடலில்
ஆழ்த்தினார்.

ஆனால், இந்த மிஸ்டர் பீன் நடனத்தை மீண்டும் திரையில்
பார்ப்பவர்கள், மனிதர் ஏன் மிஸ்டர்.பீனிற்கு பை-பை சொன்னார்
என்று யோசிப்பார்கள். உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Empty Re: உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

Post by ayyasamy ram on Tue Nov 06, 2018 6:45 pm

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? JohnnyEnglish_Img_13_16037
-

செல்போன் திருடுவதற்காக ஹோட்டலில் அதகளம் செய்வது,
கப்பலில் காந்த ஷூக்கள் மாட்டிக்கொண்டு திரிந்து
வகையாகச் சிக்கிக்கொள்வது, விர்ச்சுவல் ரியாலிட்டி (VR)
ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஒரே இடத்தில் நிற்பதாக
நினைத்துக்கொண்டு தெருதெருவாகத் திரிவது,

இறுதிக்காட்சியில் பழங்கால போர் உடையை அணிந்து
கொண்டு திண்டாடுவது எனக் குறிப்பிட்டு சொல்லும்
படியான நகைச்சுவை காட்சிகள் நிறையவே உண்டு.

ஜானி இங்கிலீஷின் உதவியாளராக வரும் பஃப்
கதாபாத்திரத்துக்கு மற்ற இரண்டு படங்களில் என்ன
வேலையோ, அதேதான் இந்தப் படத்திலும்.

ஜானி இங்கிலீஷ் முட்டாள்தனமாகச் செய்யும்
விஷயங்களுக்கு நடுவே ஓர் சாதாரண அதிகாரியாக இவர்
செய்யும் விஷயங்கள்தாம் துப்புத் துலங்க உதவும். இறுதியில்
ஜானியி


Last edited by ayyasamy ram on Tue Nov 06, 2018 10:01 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Empty Re: உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

Post by ayyasamy ram on Tue Nov 06, 2018 6:48 pm


ஆனால், ரோவன் அட்கின்ஸனின் ஜானி இங்கிலீஷ்
கதாபாத்திரத்தாலும், முடிந்தவரை நகைச்சுவை சேர்த்து
ஜனரஞ்சகமான படமாகத் தர வேண்டும் என்ற
முனைப்பாலும் காமெடி கதையாக திரையில் விரிகிறது
ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன்.

அதிலும் எந்நேரமும் தன்னுடைய செயற்கை நுண்ணறிவுடன்
பேசிக்கொண்டு, எல்லாவற்றையும் நொடியில் முடித்துவிடும்
அந்த வில்லன் கதாபத்திரத்தை ஃபேஸ்புக் நிறுவனர்
மார்க் சக்கர்பெர்க் போன்றே வடிவமைத்து இருக்கிறார்கள்.

அனலாக் (டிஜிட்டலல்லாத பழங்கால டெக்னாலஜி முறை)
டெக்னாலஜி முறையால் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை.
அதை வைத்து டிஜிட்டல் சக்தி படைத்த வில்லனை தவிடு
பொடியாக்கலாம் என்பதெல்லாம் சரிதான்.

ஆனால், அதற்காக எல்லா டிஜிட்டல் கேட்ஜட்ஸும்
குற்றங்களுக்குத்தான் உதவுகிறது, அதை கன்ட்ரோல் செய்யும்
பலம் மற்றும் பணம் படைத்தவர்கள் அனைவரும்
தீவிரவாதிகள்தான் என்பது போன்ற தொனியைத்
தவிர்த்திருக்கலாமே?
உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Johnny-English-Strikes-Again-Trailer-2_16421

ஜேம்ஸ் பாண்ட் பாணி இசை காமெடிக்கு என்றாலும்,
ஜானி இங்கிலீஷுக்கு அது ஒரு மாஸ் விஷயமாக
நன்றாகவே க்ளிக்காகி இருக்கிறது.

ஸ்பை படங்களில் பறந்து பறந்து சுழல வேண்டிய கேமரா,
இதில் காமெடி என்பதால் சற்று அடக்கியே வாசித்திருக்கிறது.
கிளைமாக்ஸில் உலக நாடுகள் மாநாடு நடக்கும் இடத்துக்கு
அப்படி ஓர் இடத்தை செட் போட்டதையெல்லாம் காமெடி
படம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் கடந்து போக
வேண்டியிருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட்டை கலாய்த்து படம் எடுப்பது எல்லாம்
ஓகேதான். ஆனால் அதற்காக ஜானி இங்கிலீஷ் பயன்
படுத்தும் அத்தனை விஷயங்களில் ஒன்றில்கூட லாஜிக்
இல்லாமல் இருப்பது ஏனோ? ஸ்பூஃப் படம்தான்,

அதற்காக ஒரு நாட்டின் பிரதமர், சந்தேகத்தின் வலையில்
இருக்கும் டிஜிட்டல் வில்லனிடம் நாட்டின் சாவியையே
கொடுக்க முன் வருவதெல்லாம், குழந்தைகள்கூட ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள் பாஸ்!

எது எப்படியோ குழந்தைகளை மட்டுமல்லாமல் நம்மையும்
வெடித்துச் சிரிக்க வைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்
இந்த ஜானி இங்கிலீஷ். அதற்காக இவரின் சாகசங்களை
திரையரங்கில் தாராளமாகப் பார்க்கலாம்.
-
--------------------------------
ர.சீனிவாசன் - விகடன்
-------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Empty Re: உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:25 am

மனம் விட்டு சிரிக்க இவர் படங்கள் பார்க்கலாம்.
மனக்கவலை உள்ள நேரங்களில்
இவர் படங்களை டிவியில் ஒளிபரப்பாகும்
போது தவறாது பார்த்து வாய் விட்டு
சிரித்து மன பாரத்தை குறைப்பேன்.

சிரிப்பு நமக்கு அருமருந்து.

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14192
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3649

Back to top Go down

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? Empty Re: உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை