புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவம் பற்றிய சட்டம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 12:52 am

First topic message reminder :

1. மாதவிடாய்

பெண்களின் கற்பப் பையின் அடியிலிருந்து நோய் ஏதும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியாகும் இரத்தம் மாதவிடாய் எனப்படும். பெண் களுக்கு இறைவன் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளது தான் மாதவிடாயாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் கற்பத்திலுள்ள குழந்தைக்கு அதை உணவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். குழந்தை பிறந்த பின்பு அது பாலாக மாறிவிடுகிறது. ஒரு பெண் கற்பமாகவோ பாலூட்டக்கூடியவளாகவோ இல்லாதபோது அது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. பெண்கள் தங்கள் உடல் பழக்கத்தை வைத்து அந்த நாள் எது என்பதை அறிந்து கொள்வார்கள்.

2. மாதவிடாய்க்கான வயது

பொதுவாக ஒன்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரை மாதவிடாய் வெளியாகும் வயதாகக் கணிக்கப் படுகிறது.

''மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது

பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாத விடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன்: 65:4)

இந்த வசனத்தில் நிராசையாகிவிட்டவர்கள் என்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர். மாதவிடாய் ஆகாதவர்கள் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களைக் குறிக்கும் என தீர்மாணித்துக் கொள்ளலாம்.

3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள்

1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்கூறுகிறான்: ''(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலம் யிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணு காதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 2:222)

மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.

'' (மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.

மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் கணவன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டாலும் மர்ம உறுப்புக்கள் சேராதவிதத்தில் மனைவியிடம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

''பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் உடலுறவைத் தவிர (விரும்பிய) மற்றதை செய்து கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.

''ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.

''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)

நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.

மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: ''பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 56:79)

''நபி(ஸல்) அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்கி என்பவருக் கும் எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர யாரும் முஸ்ஹஃபைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.'' (நூல்: நஸயீ)

இது பிரபலமான, சரியான ஹதீஸாகும். துய்மையா னவர்களைத் தவிர மற்றவர்கள் முஸ்ஹஃபைத் தொடக் கூடாது என்பதே நான்கு இமாம்களின் கருத்தாகும்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசிய மான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 12:58 am

இஸ்லாமிய பெண்மணியே! உன்னுடைய கருவறை யில் அல்லாஹ் படைத்ததை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உனக்கு உள்ளது அதை நீ மறைப்பது கூடாது.

''அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அந்தப் பெண் கள் நம்புவார்களாயின் தங்கள் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.'' (அல்குர்ஆன் 2:228)

எந்த நிலையிலும் கருக்கலைப்புச் செய்வதற்கு சூழ்ச்சி செய்யாதே! கர்ப்பமான நிலையில் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது உனக்கு கடினமானதாக இருக்கு மானால் அல்லது கருவுக்கு கேடு ஏற்படுமானால் அம்மாதத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ உனக்கு சலுகை வழங்கியுள்ளான். இக்காலத்தில் பரவியுள்ள கருக்கலைப்பு மற்றும் அறுவைச் சிம்ச்சைகள் தடுக்கப் பட்டதாகும். கருவறையில் உள்ளதற்கு உயிர் ஊதப் பட்டப்பின்னர் கருக்கலைப்பால் கருவான அக்குழந்ததை இறந்துவிடுமானால் நியாயமான காரணமின்றி உயிரைக் கொலைசெய்த குற்றத்திற்கு அப்பெண் ஆளாம் விடுகின்றாள். இதன் மூலம் குற்றவியல் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளதோ அதைப் பெற்றுக் கொள் வதற்கு அவள் தகுதியாகிவிடுகிறாள். இதன் பரிகாரமாக இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையை அவள் உரிமை விட வேண்டும். அதற்கு சக்தி பெற வில்லையெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். என இமாம்கள் சிலர் கூறியுள்ளனர். இச்செயல் உயிருடன் புதைப்பதற்குச் சமம் என அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

கருவறையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்று தெரியாத வரை அதைக் கலைப்பது கூடாது என ஷேக் முஹம்மத் இப்ராஹீம் தம் ஃபத்வாத் தொகுப்பில் 11ழூ ழூ151 ல் குறிப்பிட்டுள்ளார்.

சவுதியில் உள்ள மார்க்க அறிஞர்களின் சபை 20.06.1407 ஹிஜ்ரியில் வெளியிட்டுள்ள தன் தீர்மானம் 140ல் பின்வருமாறு கூறியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 12:59 am

1. இஸ்லாம் கூறக்கூடிய மிக நெருக்கடியான எந்தவித மான காரணமும் இல்லாதபோது கருக்கலைப்புச் செய்வது கூடாது.

2. முதல் ஆரம்ப நாற்பது நாட்களில் குழந்தை வளர்ப்பு சிரமம் என்பதற்காகவோ அல்லது அவர்களை வளர்ப் பதும் அவர்களுக்கு கல்விபோதிப்பதும் முடியாது என்ற பயத்தின் காரணத்திற்காகவோ, அல்லது அவர் களின் எதிர்காலத்தைப் பயந்தோ அல்லது தங்களிடமுள்ள குழந்தைகள் போதும் என்று கருதியோ கருக்கலைப்பு செய்வதுகூடாது.

3. கருவறையில் உள்ளது சதைக்கட்டியாக இருக்கும் நிலையில் அது கருவில் இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்துநேர்ந்துவிடும் என உறுதியான மருத்துவ சான்று இல்லாதவரை கருக்கலைப்பு செய்வது கூடாது. எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு கடைசியாகத்தான் இந்தமுடிவிற்கு வரவேண்டும்.

4. கற்பத்தின் மூன்றாவது நிலையான நான்கு மாதகாலம் புர்த்தியான பின்பு ஏதோ காரணங்களினால் குழந்தை தாயின் கற்பத்தில் இருப்பது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்குழு உறுதிசெய்யாத வரை கருவைக் கலைப்பது கூடாது. கற்பத்திலுள்ள குழந்தையைக் காப்பாற்றுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபிறகே இந்த முடிவிற்கு வரவேண்டும். இந்த நிபந்தனைகளோடு கருவைக் கலைப்பதற்கு காரணம், இரண்டு விதமான தீங்குகளில் பெரியதீங்கை தடுத்து நிறுத்துவது கடமை என்ற அடிப்படையிலும், இரண்டு நலன்களில் சிறந்ததை தேர்வு செய்யவேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உறுதியோடும் இறையச்சத்து டனும் செயல்படுமாறு இச்சபை கேட்டுக்கொள்கிறது.

''பெண்களுக்கான இயற்கை இரத்தம் என்ற பெயரில் உள்ள நூலில் ஷேக் முஹம்மத் இப்னு உஸைமீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ''கருவறையில் உள்ளதை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உயிர் ஊதப்பட்ட பின்னர் கருக்கலைப்புச் செய்வது சந்தேகமின்றி தடை செய்யப்பட்டதாகும். நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்ததாகக் கருதப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யில் தடைசெய்யப்பட்டுள்ள உயிரை கொலைசெய்வது விலக்கப்பட்டதாகும். மேற்கூறப்பட்டதில் பக்கம் - 60

'அஹ்காமுன்னிஸா' என்ற நூலில் பக்கம் 108 ல் இப்னு ஜவ்ஸி குறிப்பிடுகிறார்: திருமணம் செய்வதன் நோக்கமே மகப்பேறுக்காகத்தான். எல்லா நீரிலிருந்தும் குழந்தை ஏற்பட்டுவிடாது. குழந்தை உருவாக்கப்பட்டு விட்டால் நோக்கம் நிறைவேறிவிடும். அதைக் கலைப்பது அடிப்படை நோக்கத்திற்கு மாற்றம் செய்வதாகும். கருவறையில் உயிர் ஊதப்படுவதற்கு முன்னால் கற்பத்தின் ஆரம்ப காலத்தில் கருக்கலைப்பு செய்வது பெரிய பாவமாகும். உயிர் ஊதப்பட்ட பின்னர் செய்யப்படும் கருக்கலைப்பை விட குறைந்த குற்றம்தான் இதற்கு. உயிர் ஊதப்பட்டதை கலைப்பது இறைநம்பிக்கையாளன் ஒருவனைக் கொலை செய்த குற்றத்திற்கு சமமானதாகும்.

''உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.'' (அல்குர்ஆன் 81:8,9)

இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! எந்த நோக்கத்திற்காகவும் இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந் தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 08, 2010 7:38 pm

ரொம்ப விரிவான விளக்கம் நன்றி தலை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக