புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Poll_c10டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Poll_m10டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Poll_c10 
29 Posts - 58%
heezulia

14 Posts - 28%
Barushree

1 Post - 2%
nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Poll_c10டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Poll_m10டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Poll_c10 
83 Posts - 74%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 26, 2018 1:18 pm

மழைக்காலங்கள்தோறும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களின் உயிர்களைக் காவு வாங்குவது தொடர்கதையாகிவிட்டது. டெங்கு காய்ச்சலால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது இரட்டைக் குழந்தைகளான தக் ஷன், தீக் ஷா இருவரும் உயிரிழந்து விட்டார்கள். இந்தச் சம்பவம், சென்னையை மட்டுமல்லாது, மொத்த தமிழகத்தையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. `அபாயக் கட்டத்தில் கொண்டு வந்ததால் காப்பாற்ற முடியவில்லை’ என்று மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

19- ம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்னையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக டெங்கு தாக்கம் நிலவி வருகிறது. இப்போது தீவிரமழை தொடங்கும்முன்பே, பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது. சென்னையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 50 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். டெங்கு பாதிப்பு அதிகமாக, மக்கள் மத்தியில் போதிய விழிப்புஉணர்வு இல்லாததே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, அது எப்படி மற்றவருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன என அனைத்துச் சந்தேகங்களுக்கும் இங்கே விடை காணலாம்.
டெங்கு காய்ச்சல் என்பது என்ன?

“டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன.

நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி’ (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

“வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

“`ஏடிஸ்’ கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.”

`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா’ அல்லது `பிற காய்ச்சலா’ என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

“ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ளவேண்டும்.”

“டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே `அதிர்ச்சி நிலை’ (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ ஏற்படலாம். அதாவது, தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்தத் தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே மருத்துவக் கண்காணிப்பிலிருந்து, உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்ற முடியும். சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.

நிச்சயமாக வரலாம். ஆனால், ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவில் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகை வைரஸ்கள் உள்ளன.

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை `ஏடிஸ்’ கொசு கடித்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது முறை வரும் டெங்கு முன்பு வந்ததைவிடத் தீவிரமாக இருக்கும்.

டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் தொடர்ந்து 3 முதல் 5 நாள்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். மீண்டும் டெங்கு தொற்றுள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மிகச்சில நாடுகளில் டெங்வாக்ஸியா (Dengvaxia) என்ற தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கான கிளினிக்கல் ட்ரையல் (Clinical Trials) ஆராய்ச்சி நடந்துவருகிறது. தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் தேசிய அமைப்பான அபெக்ஸ் கமிட்டி (Apex Committee) இதுவரை இந்தத் தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில், டெங்கு ரத்தக் கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் சூழல் வந்தால் அதற்கான செலவு சேர்க்கப்பட்டுள்ளது.”

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. அப்படி மறுக்கும்பட்சத்தில் 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களிலும் 9444340496 / 9361482899 என்ற மொபைல் எண்களிலும் தொடர்புகொள்ளலாம். டெங்கு பற்றிய சந்தேகங்களுக்கும் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 104 என்ற எண்ணையும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான பிரத்தியேக சிகிச்சை மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகளும், காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்குப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொதுச் சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83 மற்றும் 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, உரிமையாளர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

“வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கிடக்கும் பயன்படுத்தாத பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்கவேண்டும். கொசு வலை போன்ற கொசுத்தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

“டெங்கு மட்டுமல்லாது எல்லாக் காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது பலன் தரும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நிலவேம்புக் குடிநீர் அருமருந்தாகும். காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம். கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தாராளமாகக் குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது சிறந்தது.

நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாகக் குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். சாதாரணமாக, ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். குழந்தைகள் (3 – 12 வயதுக்குட்பட்டோர்) 15-30 மி.லி, பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை அருந்தலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு 3 தடவை குடிக்கலாம். காய்ச்சல் இல்லாதவர்கள் ஒருநாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும்.

டெங்கு உறுதி செய்யப்பட்டால், ஆடாதொடைச்சாறு 15 முதல் 30 மி.லி, பப்பாளி இலைச்சாறு 10 மி.லி. முதல் 30 மி.லி குடிக்கலாம். ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க இவை உதவும். இதையும் சுயமாகச் செய்யக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்றே அருந்த வேண்டும். ரத்த தட்டணுக்கள் 50 ஆயிரத்தை விடக் குறையும்போது ரத்தம்வழியாக தட்டணுக்கள் ஏற்றப்பட வேண்டியது அவசியம்.

இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். காரம் அதிகமாகச் சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைச் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி அல்லது தானியத்தில் செய்த கஞ்சியை இரண்டு வேளை கொடுக்கவேண்டும். தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும், பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.

அன்னாசிப் பூ சேர்த்துத் தயாரித்த தேநீர், லவங்கப்பட்டை சேர்த்த டீ, திரிகடுகம் காபி ஆகியவற்றையும் குடிக்கலாம். கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் தவிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2018 9:03 pm

சென்னை, ''டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, காப்பாற்றப்பட முடியாது என, கைவிடப்படுவோரையும், சித்த மருத்துவத்தில் காப்பாற்ற முடியும்; அதற்கான, பாரம்பரிய மருந்துகள் சித்தாவில் உள்ளன,'' என, சித்தா டாக்டர் வீரபாபு கூறினார்.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் மக்களை மிரள வைத்துள்ளது. நடப்பாண்டில், 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு, அலோபதி மருத்துவத்தை காட்டிலும், சித்த மருத்துவமே சிறந்த தீர்வாக உள்ளது.

டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்படுவோரில், 10 சதவீதம் பேருக்கு, ரத்த தட்டணுக்கள் குறைந்து, உடலுறுப்பில் ரத்த கசிவு ஏற்படுவதால், உயிர் இழப்பு ஏற்படுகிறது. கடைசி நேரத்தில், ரத்த தட்டணுக்கள் குறையும் நோயாளிக்கு, அலோபதி மருத்துவத்தில், செயற்கை தட்டணுக்கள் ஏற்றப்படுகின்றன. ஆனாலும், சிலரது உயிரிழப்புகளை தடுக்க முடிவதில்லை.

இதுபோன்ற நோயாளிகளை, கடைசி நேரம் என்றாலும், சித்தமருத்துவத்தில் காப்பாற்ற முடியும் என, சித்தா டாக்டர்கள் சவால் விடுகின்றனர்.இதுகுறித்து, சென்னை, கிண்டி, கத்திப்பாரா அருகே, 'வேரும், தழையும்' என்ற, மருத்துவமனை நடத்தி வரும், சித்தா டாக்டர், கே.வீரபாபு கூறியதாவது:டெங்கு காய்ச்சலுக்கு, அலோபதி மருத்துவத்தில், இதுவரை முழுமையான சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 'இனி, எங்களால் காப்பாற்ற முடியாது' என, அலோபதி டாக்டர்களால் கைவிடப்படும், டெங்கு நோயாளிகளையும், நிச்சயம் காப்பாற்ற முடியும்.

மனித உடலில், 1.5 லட்சம் முதல், 4 லட்சம் வரை, ரத்த தட்டணுக்கள் இருக்கும். டெங்கு பாதிப்பால்,ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்திற்கு கீழ் குறையும்போது, ரத்தக்கசிவு துவங்கும். முதலில், கண்ணில் ரத்த தட்டு தெரியும்; பல் ஈறுகளில் ரத்தம் கசியும். சிறுநீர், மலத்திலும் ரத்தக்கசிவு தென்படும்.ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்துக்கும் குறைந்து, ஆபத்தை நோக்கி செல்லும்போது, அலோபதி மருத்துவத்தில், செயற்கை ரத்த தட்டணுக்களை ஏற்றி, உயிரை காப்பாற்றுகின்றனர்.

இந்த முறை, 2 சதவீதம் பேருக்கு கை கொடுக்காமல், உயிரிழப்பு ஏற்படுகிறது.சித்த மருத்துவத்தால், 2 சதவீதம் பேரையும் காப்பாற்ற முடியும். அலோபதியில், இனி காப்பாற்ற முடியாது என, கைவிடப்படும் நோயாளிகளை, என்னிடம் ஒப்படைத்தால், இலவசமாக சிகிச்சை அளித்து, அவர்களின் உயிரை காப்பாற்றி காட்டுவேன்.

இவ்வாறு, வீரபாபு கூறினார்.

சித்தா டாக்டர் வீரபாபுவை, 98402 78009 என்ற, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 01, 2018 11:10 pm

டெங்குவில் இருந்து விடுபட
------------------------------------------
ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால்
டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.

2. புதினா கீரை கைப்பிடி அளவு.

3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.

5. வாழைத்தண்டு 100 கிராம்.

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய
நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி,
பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில்
விரட்டி விடலாம் !

.—————————————
சேலம் டாக்டர். அழகு
வாட்ஸ் அப் பகிர்வு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக