ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

Admins Online

புணர்ச்சி விதிகள் !

Go down

புணர்ச்சி விதிகள் !  Empty புணர்ச்சி விதிகள் !

Post by தூயவள் on Wed Oct 17, 2018 8:28 pm

வணக்கம் !

இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....

வருத்தும் வினா

மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?

தேற்றும் விடை:

இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !

நன்றி !
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

புணர்ச்சி விதிகள் !  Empty Re: புணர்ச்சி விதிகள் !

Post by ஞானமுருகன் on Wed Oct 17, 2018 9:00 pm

நீங்கள் கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வேண்டியவர். மேலும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

புணர்ச்சி விதிகள் !  Empty Re: புணர்ச்சி விதிகள் !

Post by T.N.Balasubramanian on Wed Oct 17, 2018 9:11 pm

கருத்து மிக்க பதிவு. அருமை.

ரமணியன் .


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

புணர்ச்சி விதிகள் !  Empty Re: புணர்ச்சி விதிகள் !

Post by SK on Wed Oct 17, 2018 11:58 pm

அருமையான கருத்து பதிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

புணர்ச்சி விதிகள் !  Empty Re: புணர்ச்சி விதிகள் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 18, 2018 7:27 am

அருமையான தகவல்கள் ,நல்ல நிறைவான
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

புணர்ச்சி விதிகள் !  Empty Re: புணர்ச்சி விதிகள் !

Post by தூயவள் on Fri Oct 19, 2018 11:21 pm

@ஞானமுருகன் @T.N.Balasubramanian @SK @பழ.முத்துராமலிங்கம் எனது பதிவில் உள்ளிடப்பட்டக் கருத்தையேற்று, ஊக்குவிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வழங்கியமைக்கு உங்களனைவர்க்கும் என் பணிவான நன்றி ! புணர்ச்சி விதிகள் !  1571444738
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

புணர்ச்சி விதிகள் !  Empty Re: புணர்ச்சி விதிகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum