புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிவன் பாடல்கள்  Poll_c10சிவன் பாடல்கள்  Poll_m10சிவன் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் பாடல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:15 am



அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே
துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே
வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே
அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே
நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே



சிவன் பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:20 am



நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க — 5

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க — 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி — 15

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். — 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் — 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் — 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே — 35

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே — 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே — 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை — 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, — 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் — 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் — 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே — 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் — 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் — 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று — 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே — 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. — 95

திருச்சிற்றம்பலம்



சிவன் பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:25 am




வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஓலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஓளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகியோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்து என்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கு தேவனாய் நின்றாய் போற்றி
கான தீயாடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி ஆன நிழலே போற்றி
நேர்வார் ஓருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சில்லுருவாய் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனு தீயானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

இமையாது உயிராய் இருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆக தணைத்தாய் போற்றி
ஊழியே ஆன ஒருவா போற்றி
அமையா அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன்று அயாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலாய் என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்து உகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொற் கேட்டாய் போற்றி
பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.



சிவன் பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:31 am





ஈஷ, கிரீஷ, நரேஷ, பரேஷ, மகேஷ, பிலேஷய பூஷண போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஹே ஈஸ்வரா! உயர்ந்த மலைகளில் வசிப்பவரும், மாதா பார்வதியின் நாயகரும், யோகியும், சரணாகதியளிப்பவரும், தேவாதிபதியும், சர்ப்பங்களை அணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

உமையா திவ்ய சுமங்கள விக்ரஹா வலிங்கித வமங்க விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

உமாபதியே, பூமண்டலத்தின் மங்கள அமங்கலங்களை நிர்ணயிப்பவரே, உங்களை இணைந்திருக்கும் மாதா பார்வதிக்கு இடபாகம் அளித்தவரே, சர்ப்பங்களை அணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

உரி குறு மம அஜ்னம் அனதம், துரி குறு, மே துரிதம் போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

நிர்கதியான என் அறியாமையைப் பொருத்தருள வேண்டும். என் சிந்தனை மற்றும் செயல்களால் என் ஆத்மாவிற்கு உண்டான இன்னல்களை நீக்கியருள வேண்டும். சர்ப்பங்களை அணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

ரிஷி வர மனச ஹம்ச, சரா சர ஜனன ஸ்திதி, லய காரண போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

உயர்ந்த யோகிகளான மகாரிஷிக்களின் மனம் அன்னம் போன்று தனக்கு கிடைப்பவற்றை எல்லாம் சுத்தி செய்து, அவசியமானதைப் பகிர்வது போல எனக்கு அவசியமானவற்றை மட்டும் அளிப்பவரே, ஜனன மரணங்களுக்குள், எல்லா ஜீவராசிகளையும் ரக்ஷிப்பவருமானவரே, சர்ப்பங்களை அணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

அந்த காரண விஷுதிம் பக்திம், ச த்வயி சதிம் பிரதேஹி விபோ
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

மாதா சதி (பார்வதி) யையும் உங்களையும் நமஸ்கரிக்கும் போதெல்லாம் எனக்கு முன்வினைகளின் குற்றவுணர்வோ பயமோயின்றி மரணத்தை எதிர்கொள்ளும் மனபலத்தையும் ஆத்மசுத்தியும் பக்தியையும் தருபவரே, சர்ப்பங்களை அணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

கருணா வருணாலய மயி தச உதஸஸ்தவோசித்தோ ந ஹி போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

கருணையை மழையாக வருஷிப்பவரே, உன்னையே சரணாகதி என நம்பும் என்னை உதாசீனம் செய்வது சரியில்லை. சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

ஜய கைலாச நிவாச, பிரமத கணதிஷா பூ சுர அர்ச்சித போ
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

கைலாசநாதருக்கு ஜெயம். குற்றங்களைக் களைந்து அருள்பவரே, கணங்களையும் திசைகளையும் திக்குக்களையும் அணிந்தவரே, சகல ஜீவன்களாலும் வணங்கப்படுபவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

ஜனுத கஜ கிங்கினு ஜ்ஹனுதத் ஷப்தைர் நடசி மஹா நட போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

பூமண்டலத்தின் அணுக்களனைத்தையும் அசைத்து ஜனு, கஜ, கிண்கிணி ஆகிய சப்தலயங்களை எழுப்பி நடம் புரிபவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

தர்ம ஸ்தாபன தக்ஷ த்ரயக்ஷ குரோ தக்ஷ யஞ்ன ஷிக்.ஷக போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

தர்மத்தை நிர்மாணிப்பவரும், முக்கண்ணுடையவரும், தக்ஷயாகத்தில் தக்ஷனுக்கு தகுந்த பாடம் புகட்டியவரும், சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

பலம் ஆரோக்யம் ச்ச ஆயுஸ் த்வத் ருசிதாம் சிரம் பிரதேஹி பிரபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஹே பிரபோ! மனபலத்தையும், உடலாரோக்கியத்தையும், எப்போதும் என் தலை வணங்கியே இருக்க அருளுங்கள். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

பகவான், பார்க்க பயாபஹா பூத பதே, பூதி பூஷிதங்க விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஹே பகவானே! பாவங்களை நசிப்பவரே, பயங்களை நீக்குபவரே, உடலெங்கும் நீறு பூசி இருப்பவரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

சர்வ தேவ சர்வோத்தம, சர்வத துர்வ்ருத ஹரண ப்ரபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

சர்வோத்தமா! நீங்கள் அனைத்தையும் நொடிகளில் அளித்து விடும் வல்லமை கொண்டவர். என்னுடைய அனைத்து துர்குணங்களையும் கருவத்தையும் அழித்துவிடுங்கள். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

ஷத் ரிபு, ஷதூருமி, ஷத் விகார ஹர, சண் முக ஷண்முக ஜனக விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

ஆறுவகை எதிரிகளையும் (ஆசை, பேராசை, கோபம், காமம், கருவம், பொறாமை), ஆறுவகை வியாகூலங்களையும் / ஆவல் (தாகம், பசி, துக்கம், ஈர்ப்பு, முதுமை, மரணம்) ஆறுவகை மாற்றங்களையும் (இருப்பு, பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி, அழிவு, மரணம்) அழிப்பவரே, ஷண்முகக் கடவுளின் தந்தையாரே, சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

சத்யம், ஞானம், அனந்தம், ப்ரம்மே த்யல்ல லக்ஷண லக்ஷித போ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

உண்மை, அறிவு, தெளிவு, அழிவின்மை ஆகிய லக்ஷண குணங்களாலான இறைவா! சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

ஹஹா ஹூஹூ முக சுர காயக கீதபாடன பத்ய விபோ,
சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்

அப்சரஸுக்களும், தேவ, கணங்களும் வண்டினங்களின் ஒலி போன்ற ஹா ஹா ஹூ ஹூ என்ற த்வனியில் உங்களது புகழைப் பாடுகிறார்கள். சர்ப்பங்களையணிந்தவருமாகிய சாம்ப சதாசிவா, சம்போ, சங்கரா, உங்களைச் சரணடைந்து நமஸ்கரிக்கிறேன்.

இதி ஸ்ரீ சங்கராச்சார்யா க்ருத ஸ்வர்ணமால்ய ஸ்துதி.
(ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய ஸ்வர்ணமால்ய ஸ்துதி முற்றியது)



சிவன் பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:43 am



போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாக இரதாரக

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப
கமகம புத பிரபஞ்ச ரஹிட
நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த
ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க


போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

திமித திமித திமி திமிகிட தகதோம்
தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம்
மதங்க முனிவர வந்திட இஷா
சர்வ திகம்பர வெச்டிட வேசா
நித்திய நிரஞ்சனா நித்திய நடேஷ
இஷா சபேஷ சர்வேசா

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

சிவ சம்போ ஸ்வயம்போ
சிவ சம்போ ஸ்வயம்போ
சிவ சம்போ ஸ்வயம்போ
சிவ சம்போ ஸ்வயம்போ





சிவன் பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 12, 2018 8:04 am


ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
-


-
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
-
கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ
-
செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ
-
தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ
-
அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ
-
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
-
--------------------------


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Oct 12, 2018 5:17 pm

சிவா சிவாய போற்றியே! 
நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே!
பொறுத்தருள் அநேகனே!

பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்!
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்!

யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!

கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!

எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே

அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் அந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் பந்தமே!
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 12, 2018 9:04 pm



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Oct 12, 2018 11:51 pm

அருமை ஐயா ரசித்தேன் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இந்த பாடல் மீது ஒரு விதமான ஈர்ப்பு



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Oct 15, 2018 9:26 am

ayyasamy ram wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1281577

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக