புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 11:45 am


ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்
பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு
மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?

ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு
உருவாக்கப்பட்டது ‘பிராவிடண்ட் பண்ட்’
(சுருக்கமாக பி.எப்.) எனப்படும் வருங்கால வைப்புநிதித்
திட்டம்.

ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்
பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு
மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப்.
பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்
கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...

மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால
வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப்
பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊழியரின் பங்களிப்புத்
தொகையில் 50 சதவீதம் மட்டும்தான் விடுவிக்கப்படும்.

திருமணமாகாத ஒருவர், தனது திருமணத் தேவைக்காக
வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட
பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன்,
மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின்
திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம்.

ஆனால் தாம் செலுத்திய பங்களிப்புத் தொகையில்
50 சதவீதம் மட்டுமே இந்தக் காரணங்களுக் காகத் திரும்பப்
பெற முடியும்.

தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது
ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல்
இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து
மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை
உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ
ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல
நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது
கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப்
பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத
பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு
மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத்
தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்
கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து
சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த
நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன்
பங்களிப்புத் தொகை முழுவதையும் தொழிலாளர்
திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 11:47 am




காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம்
பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப்
பெற்றுக்கொள்ள முடியும்.

குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால்
6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட
அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன்
வழங்கப்படும்.

கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும்
இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து
சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத்
தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி,
பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு
நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக
மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க
முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி
ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு, உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க
வேண்டும்.

அப்போது 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது
வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது
உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது
ஒன்று வழங்கப்படும்.

உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை
வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற
அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு
முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத்
திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.

55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத்
தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி
அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ
அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு
செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு
செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால
வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும்.
ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை
நிறைவு செய்திருக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி
செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு
நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ,
மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின்
பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி
விடுவிக்கப்படும்.
-
---------------------
மாலைமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 4:47 pm

பயனுள்ள தகவல் ஐயா

ஒரு ஊழியர் 5 வருடங்களுக்கு மேல் வேலை செய்தால் சேமிப்பு தொகையில் 50%
லோன் ஆகா பெறலாம் திருப்பி செலுத்த தேவை இல்லை நமக்கு வரும் சென்டல்மெண்டில் கழிந்து விடும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக