புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_m10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 
30 Posts - 83%
heezulia
 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_m10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_m10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_m10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_m10 கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 5:37 pm


நாகை:
திருக்குவளை அருகே கீழை ஈசனூர் பகுதியைச் சேர்ந்தவர்
சேகர். இவர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக
பணியாற்றி வந்தார்.

இவருக்கு குடல் இறக்க நோய் இருந்ததால், நாகையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு ரத்தக்
கசிவு இருந்ததால், 8ம் தேதி தஞ்சையில் உள்ள மற்றொரு
தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ரூ.2.50 லட்சம் கட்டும்படி மருத்துவமனை நிர்வாகம்
கூறியுள்ளது. பணம் கட்டியதும் தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்வதாகவும்
மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் அவரது உடல்
நிலையில் முன்னேற்றம் இல்லாததால்
அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாக
உறவினர்கள் கூறியுள்ளனர்.

அப்போது, மருத்துவமனை நிர்வாகம் சேகரின்
சிகிச்சைக்காக ரூ.5 லட்சத்தைக் கட்டுமாறு கோரியுள்ளது.
தற்போது பணமில்லை, இருந்த ரூ.50 ஆயிரத்தைக்
கட்டிவிட்டு மிச்சப்பணத்தை பிறகு தருகிறோம் என்று
எழுதிக் கொடுத்துவிட்டு சேகரை தஞ்சை மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்
உறவினர்கள்.

அங்கு சேகரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,
அவர் இறந்து 3 நாட்கள் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த
குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் எப்போது
உயிரிழந்தார் என்பது சரியாக தெரியவரும் என்பதால்
அதன்பிறகு மருத்துவமனை மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி
ரூ.3 லட்சம் வரை பிடுங்கியிருப்பது, விஜயகாந்த் நடித்த
ரமணா படத்தையே நினைவுபடுத்துகிறது.
-
-----------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 29, 2018 7:03 pm

நடைமுறையில் சிறிய பெரிய கார்பொரேட் ஆசுபத்திரிகளில் நடக்கும்
விஷயம்தான். டாக்டர்களை தெய்வமாக நினைத்த காலம் போயி
அவர்களை வியாபாரிகளாக பார்க்கும் காலம்.
முன்பெல்லாம் படித்து, நல்ல மார்க்கு வாங்கியவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது.
இப்போதெல்லாம் 50 /60 லக்ஷம் பணம் கொடுத்து இடம் பிடிக்கிறார்கள்.
போட்ட முதலை நம்மிடம் இருந்து கறக்கிறார்கள்.
வெட்கக்கேடு.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 29, 2018 7:19 pm

எனக்கு ஏற்கனவே வந்த செய்தி.வாட்சப் மரபிற்கேற்ப இன்றும் வந்தது.
ஆனால் சரியான சமயத்தில் வந்துள்ளது ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள.
As received
An Excellent write up by XXX narrating the way Apollo Hospitals treated his dad
அப்போல்லோவா??? அப்பால போ!
நான்கு நாட்களாக motion போகாமல் அவதிப்பட்டு, மேலும் அவதிப்பட [அதுவும் லக்ஷக்கணக்கில் குடுத்து] 73 வயதான ஒருவர் அப்போல்லோ ஹாஸ்பிடல் போனார். எனிமா குடுத்தும் முழுவதும் சுத்தம் செய்ய முடியாமல் போனதால், வாய் வழியாக டியூப் போட்டு உள்ளே சுத்தப்படுத்துவதற்காக ஒரே ஒரு நாள் அட்மிட் ஆனார். அவருக்கு பத்து வருஷமாக ஹைப்போநட்ரேமியா. அதாவது ஸோடியம் [உப்பு] குறைவதால் மிகவும் வீக்காகி, நினைவு தப்பும் குறை. அந்த சமயத்திலெல்லாம் நாட்ரைஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டதும் சரியாகிவிடும். அப்போலோவில் எனிமா குடுக்கும் படலத்தில் அவருடைய உப்பு சத்து குறைந்ததால், மூச்சுவிட மிகவும் ஸ்ரமப்பட்டார். அவருடைய மனைவி டாக்டரிடம், ஸோடியம் ஏற்றினால் சரியாகிவிடுவார் என்று சொன்னதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், ICU வில் அட்மிட் பண்ணி, ஒருநாளில்லை இரண்டு நாளில்லை கிட்டத்தட்ட 45 நாட்கள் [ஒரு நாளைக்கு சுமார் Rs 30000 த்திலிருந்து 50000/- வரை ] அதிலேயும் வென்டிலேட்டரில் சுமார் 20 நாட்கள், அதிலும் CCU வில் கொஞ்ச நாட்கள் என்று அவரையும், குடும்பத்தாரையும் நொந்து நூலாக்கி விட்டார்கள் அப்போல்லோ அரக்கர்கள். தினமும் பேஷண்ட்டுக்கு போடவேண்டிய ஊசியைக் கூட, அவர்கள் கேட்கும் பணத்தை கட்டிய பின் தான் போடும் அவலம் !
அவசியமே இல்லாமல், ட்ரக்காஸ்ட்டமி என்ற ஆபரேஷனை தொண்டையில் பண்ணி, ஒரு குழாயைச் சொருகி விட்டு, "இனி இவருக்கு குரல் வரவே வராது; speech theraphy குடுத்தால் ஒரு வேளை குரலும், பேச்சும் வரலாம்" என்று குடும்பத்தை பயமுறுத்தி சில லக்ஷங்களைக் கறந்தார்கள். கடைசியாக தொண்டையில் சொருகி இருந்த டியூபை எடுத்தாலும் speech theraphy குடுக்காமல் அவரால் பேச முடியாது என்று சொல்லி, கையில் விதவிதமான டியூபுகளோடு வந்து, அவருக்கு ஏற்கனவே போட்டிருந்த டியூபை தொண்டையிலிருந்து எடுத்ததும், அவர் பேச ஆரம்பித்துவிட்டார்! அத்தனை நாள் இந்த டியூபால்தான் அவரால் பேச முடியவில்லை என்று அந்த அறிவாளிகளுக்கு யார் புரிய வைப்பது? எல்லா "logist" டாக்டர்களும் அவரை ICUவில் வந்து பார்த்து, கிட்டத்தட்ட 12 ஸ்கேன்கள் [ஒவ்வொன்றும் Rs 12500/-] இதில் ஒரு ஸ்கேன் எடுக்க மற்றொரு அப்போல்லோவுக்குப் போக ஆகும் ஆம்புலன்ஸ் இத்யாதி [Rs 3000+] இவர்கள் தலையில். பல வகை டெஸ்ட்டுகள், கைகளிலும் கால்களிலும் மாத்தி மாத்தி ஊசியால் குத்தி, அவர் உடம்பை ரணகளமாக்கி, கடைசியில் ஹார்ட், கிட்னி, lungs, மற்ற எல்லாம் "Normal" என்று முத்திரை குத்தினார்கள். ஒவ்வொரு நாளும், "அவருக்கு எல்லாம் நார்மல்" என்பதை லக்ஷக்கணக்கில் செலவழித்து திரும்பத் திரும்ப எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் சொல்ல ICU வுக்கு "விசிட்" செய்யும் 10-12 "....logist" களுக்கு விஸிடிங் fees குடுத்தே ஒழிந்து போனார்கள்.
அவருடைய மனைவி ஸோடியம் குறைவுதான் காரணம் என்று அத்தனை டாக்டர்களிடமும், நர்ஸ்ஸுகளிடமும் முட்டிக் கொண்டதை "எல்லாம் தெரிந்த மேதாவிகள்" அலட்சியம் பண்ணினார்கள். ஒருநாள் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் மிகுந்த ஸ்ரமம் உண்டானதால், அவருடைய மகன் ஒரு டாக்டருக்கு போன் செய்து விவரத்தை சொல்லி, உதவி கேட்டதிற்கு அந்த டாக்டரின் பொறுப்பான பதில், "உனக்கு யார் இந்த நம்பரைக் குடுத்தது? மூளை இருக்கா உனக்கு? முதல்ல போனை வை!.." அந்த டாக்டர் நீடூழி வாழ்க!
சுமார் ஒண்ணரை மாதங்கள் அப்போலோவில் படுத்திய பாட்டில், அவர் மனைவி அவரை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று சொன்னதும், வீட்டில் வாட்டர் பெட், ஆக்ஸிஜன் இத்யாதிகளுக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டபின் சொல்லுங்கள், டிஸ்சார்ஜ் செய்து விடுகிறோம் என்று பெருங்கருணை கொண்டு சொன்னதும், மற்றொரு நண்பர் சொன்னதன் பேரில், மாம்பலத்தில் உள்ள Public Health Centre க்கு அவரை கொண்டுபோய் அட்மிட் செய்தார்கள். அப்போலோவின் ஆம்புலன்ஸில் [தனியாக Rs 3000+] Public Health Centre வந்தார். எப்படி? மூக்கு, வாய்,தொண்டை, என்று உடல் முழுதும் டியூப் மயமாக அட்மிட் ஆனார்.
PHC யில் இருந்த டாக்டர் பாஸ்கர் உண்மையிலேயே அவரை மிக அழகாகக் கையாண்டார். அப்போல்லோவின் "எல்லாம் நார்மல்" என்று கூறும் ஏகப்பட்ட ஸ்கேன், டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, "எதுக்கு இத்தனை டியூப்? அவருக்கு ஒன்றுமே இல்லையே! என்று கூறி, மூக்கில் உள்ள டியூபைத் தவிர அத்தனையையும் எடுத்தார். ஒண்ணரை மாதங்களுக்குப் பின் நன்றாகத் தூங்கினார் அந்த முதியவர். அவர் மனைவியுந்தான்! PHC யில் நல்ல திறமை வாய்ந்த டாக்டர்கள், அன்பான, அனுபவசாலியான,ஆத்மார்த்தமாக சேவை மனப்பான்மையோடு பணி புரியும் திருமதி சாந்தா போன்ற நர்ஸ்களுடைய கவனிப்பால், பத்தே நாட்களில் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டார்.
மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் அப்போலோ மாதிரியோ, மற்ற பெரிய ஹாஸ்பிடல்ஸ் மாதிரி hi-fiயாக இல்லாமல் இருக்கலாம். அப்போல்லோ மாதிரி "பெரிய" multi speciality ஹாஸ்பிடல் எல்லாம் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கும் பெரிய மனிதர்களுக்கென்றே இருக்கட்டும். நடுத்தர வர்கத்துக்கும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும், உண்மையில் உழைத்து உழைத்து சம்பாதிப்பவர்களுக்கும், பப்ளிக் ஹெல்த் சென்டர் மாதிரி நோயாளிகளின் மனநிலையை சரிவரப் புரிந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்த, காசு பிடுங்காத, தைரியமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய வகையில் பணிபுரியும் டாக்டர்களும், நர்ஸ்களும் நிச்சயம் இருக்கிறார்கள். பத்து நாட்கள் அங்கு ஆனா மொத்த செலவு Rs 12000/- only!!!
நன்றாக நடந்து வந்து ஆஸ்பத்ரிக்குள் வந்தவரை, ஒண்ணரை மாதம் கழித்து கிழிந்த நாராக ஆம்புலன்ஸில் PHC க்கு அனுப்பி வைத்த பெருமை அப்போலோவுக்கே! இதற்கு அவர்களுக்கு அழுத அநியாய fees சுமார் Rs 12 லக்ஷம்!!
அப்போல்லோவில் கடைசியாகக் குடுத்த ரிப்போர்ட்டின் highlight என்னவென்றால்....."நோயாளிக்கு ஹைப்போநட்ரிமியா..உப்பின் அளவு கவனிக்கப்பட்டது. குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..!!!"
இதைத்தானேய்யா நான் மொதல்லேர்ந்தே சொன்னேன்! அவர் குடும்பத்தார் அங்கலாய்ப்பு அப்போல்லோ காதில் விழுந்தாலும், நோ யூஸ்!
கஷ்டப்பட்டு சம்பாதித்து, சிறுக சிறுக சேர்த்ததை, எந்தவித பிரயோஜனமும் இல்லாமல், லக்ஷலக்ஷமாய் அப்போலோவில் கொண்டுபோய்க் கொட்டுவதை விட, வசதிக் குறைவான PHC மாதிரி ஹாஸ்பிடல்களுக்கு மனமாரக் குடுத்து வளமாக வாழ்வோம்.
தயவு செய்து இதை படிப்பவர்கள் இனியாவது சுதாரித்துக் கொள்ளுங்கள்.

நன்றி வாட்சப்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 29, 2018 8:00 pm

தனியாரோ அல்லது அரசோ மருத்துவமும் கல்வியும் இலவசம் என்று சட்டம் வரவேண்டும்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:16 am

அய்யா அவர்கள் சுய சிந்தனைக்கு வேலை தராமல் அயல் பதிவை தேடி தேடியே பதிகின்றார் . பிறர் அறியசெய்கிறார் நல்லது....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 30, 2018 1:20 pm

SK wrote:தனியாரோ அல்லது அரசோ மருத்துவமும் கல்வியும் இலவசம் என்று சட்டம் வரவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1279831
நோயை உருவாக்கி அதற்கு சிகிச்சை என்று
பணம் பறிக்கும் கும்பல் இருக்கும் வரை இது தொடரும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக