புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இராஜேந்திர சோழன் காலத்தில் எத்தனையோ போர்களைத் தன் ஆட்சிக் காலத்தில் நடத்திய போதும் அவன் வடக்கே சென்று கங்கையையும், கடல் கடந்து கடாரத்தையும் வெற்றி கொண்டமைதான் அக்கால மக்கள் மனதையும், புலவர்கள் மனதையும் கவர்ந்து நின்றன.
கல்வெட்டுக்கள் பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று அவனைப் புகழ்ந்தன. கலிங்கத்துப் பரணியில் புலவர் செயங்கொண்டார்,
களிறு கங்கை நீ கருண்ண மண்ணையில்
காய்சினத் தொடே கலவு செம்பியன்
குளிரு தெண்டிரைக் குரைக டாரமுங்
கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்
என்றும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்,
தண்டேவிக்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
கங்கா புரிபரந்த கற்பகம்
என்றும்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்
என்றும் இராஜேந்திரனைப் புகழ்ந்தனர்.
சோழன் கடாரம் வென்றது வரலாறு. வீசும் காற்றை நம்பிக் கப்பலை ஓட்டிக் கடாரம் போய்ச் சேர சில நூறு நாட்களாவது ஆகும். அவ்வாறு போய்ப் புதிய தேசத்தில் போர் செய்வது சுலபமானதன்று. ஆயினும் இதனைச் செய்ய நாடு பிடிக்கிற நோக்கத்திற்கு அப்பால் வேறு காரணங்கள் வலுவாய் இருப்பதாக வரலாறு கூறுகின்றது.
சோழர் காலத்திலும் தமிழரின் வர்த்தகம் கடல் தாண்டி நடந்திருக்கிறது. கடாரம் எனும் பகுதியிலும் கடல் தாண்டிய வாணிகம் மேலோங்கி அரபு, சீனா வர்த்தகர்களின் வர்த்தகச் சந்தையும் அவர்களோடு தமிழ் வர்த்தகர்களின் வர்த்தகமும் கொடி கட்டிப் பறந்தன.
தொடக்கத்தில் சோழ ராச்சியமும் கடார ராச்சியமும் தம்முள் நட்புக் கொண்டிருந்தன. ஆனால், காலப் போக்கில் கடாரத்தை ஆண்டு வந்த ஸ்ரீவிசய நாட்டின் அதிகாரிகள் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டதை ஒற்றர்கள் மூலமும், வர்த்தகர்கள் மூலமும் அறிந்த சோழ மன்னன் இராஜேந்திர சோழன் கடல் வழியே படையெடுப்பைக் கடாரத்தின் மீது மேற்கொண்டு கடாரத்தை வென்றான்.
கடாரம் சோழ மன்னன் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழரின் கடல் தாண்டிய வர்த்தகம் மட்டுமல்ல; வேறு நாட்டவர்களின் வர்த்தகமும் தடையின்றி நடந்தது. கடாரம் என்ற கடற்கரைப் பிரதேசத்தைப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலையில்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்
என்ற வரிகள் சொல்லப்படும் காழகம் என அதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் கருதினார். காழகம் எனத் தமிழின் சங்க இலக்கியம் சொன்ன நிலமே கடாரம் ஆகும். அந்தக் கடாரமே இன்று மலேசியாவின் மேற்குக் கரையின் தென்பக்கத்திலுள்ள கெடா மாநிலமாகும். அக் கெடா மாநிலத்தில் சோழன் ஆட்சி செய்ததற்கான சான்றுகளாகப் புராதனச் சின்னங்கள் குவிந்து கிடக்கும் இடம்தான் பூஜாங் பள்ளத்தாக்கு ஆகும்.
பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும். புஜங்க எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லோடு தொடர்புடையதென்றும் மெர்போக், பூஜாங் ஆகிய பெரிய ஆறுகளின் ஓடுபாதை பெரிய ஒரு நாகப்பாம்பின் உருவத்தை ஒத்த காரணத்தால் அந்த ஆறுகள் பாய்ந்து ஓடும் பள்ளத்தாக்கிற்குப் பூஜாங் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
லெம்பா பூஜாங் என மலாய் மொழியில் அழைக்கப்படும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கு ஏறக்குறைய ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புடையதாகும். அந்தப் பெரிய நிலப்பரப்பில் பாய்ந்து ஓடும் ஆறுகளுள் மெர்போக், பூஜாங், மூடா, சிம்போர், பாசிர் எனப்படும் ஆறுகளும், மெர்போக் கெச்சில் எனப்படும் சிற்றாறும் அடங்கும். மேற்கூறிய ஆறுகளில் மிகப்பெரிய ஆறுகளாக விளங்குபவை கிழக்கிலிருந்து மேற்கில் மலாக்கா நீரிணையை நோக்கிப் பாயும் மெர்போக் ஆறும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி மெர்போக் ஆற்றோடு கலக்கும் பூஜாங் ஆறுமாகும்.
பூஜாங் வெளியில் ஓடும் ஆறுகளின் கரையோரத்தில் புராதனச் சின்னங்களின் சிதைவுகள் நிறையவே இருக்கின்றன. பூஜாங் பள்ளத்தாக்கு 10-ஆம் நூற்றாண்டில் பன்னாட்டு வணிகர்களின் கப்பல்கள் வந்து நிற்பதற்குத் தோதான துறைமுக வசதிகள் கொண்ட கரையோர நகரமாய் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
இராஜேந்திர சோழன் தமிழகத்திலிருந்து படை திரட்டி வந்து இந்த இடத்தைக் கைப்பற்றினான் எனறால் அது முக்கியமான இடமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்தப் பள்ளத்தாக்கில் கிடைத்து வரும் பழங்காலப் பொருள்கள் இந்தப் பள்ளத்தாக்கு சிற்பக்கலை, நெசவுக்கலை, கட்டடக்கலை முதலியவற்றில் நாகரிகம் படைத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஒரு நாகரிக வெளிப்பாடுகள் நிறைந்த பன்னாட்டுத் துறைமுகமும் அதனை நிர்வகிக்கிற அமைப்பும் இருந்ததைத் தெளிவு படுத்துகிறது.
பூஜாங் பள்ளத்தாக்கை ஒட்டி உணவு உற்பத்தியில் நெல் முதலிடம் வகித்ததையும், இரும்பு, பொன் முதலிய பொருள்கள் கிடைத்துள்ளன என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காழகம் என்பதில் காழ் எனும் வேர்ச்சொல்லில் உருவானது எனப் பார்க்கிற போது, இரும்பு உற்பத்தியில் பூஜாங் வெளி சிறப்புப் பெற்றிருக்கிறது.
பூஜாங் பள்ளத்தாக்கு 14-ஆம் நூற்றாண்டு வரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகவும், செழிப்பும் வனப்பும் நிரம்பிய பகுதியாகவும், கடல் வர்த்தகப் பகுதியாகவும் விளங்கியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த கடலோடிகளும், வர்த்தகர்களும், பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்கியிருந்தபோது தங்கள் கலாச்சாரத்தையும், மதச் சடங்குகளையும் கடைப்பிடித்திருக்கிறார்கள். இதன் தாக்கம் அக்கால கட்டத்தில் அங்கிருந்தவர்களையும் தழுவியிருக்கிறது.
இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையே கப்பல் பயணம் மேற்கொள்கிறவர்கள், வீசும் பருவக் காற்று மாற்றத்திற்காகக் காத்திருக்கவும், ஓய்வெடுக்கவும், பாதுகாப்புத் தேடியும் இப் பூஜாங் பள்ளத்தாக்குத் துறைமுகத்தையே தேர்ந்தெடுத்தனர்.
பூஜாங் பள்ளத்தாக்கில் சைவசமய வழிபாட்டுச் சின்னங்கள், சிதைவுகளில் இருந்து கண்டெடுக்கப்படுவது போல் புத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. கி.பி. 4 முதல் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புத்தமதத்தைச் சார்ந்தவர்களால் வழிபாட்டுத் தலங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான புராதனச் சின்னங்களும், கலைப்பொருள்களும் சிவன், விநாயகர், துர்க்கை ஆகிய உருவங்களைக் கொண்ட தெய்வச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைத்துள்ளனர். சிதைந்த நிலையில் பூஜாங் பள்ளத்தாக்கில் தென்பட்ட முதல் ஆலயம் 1840-இல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட சிறு வழிபாட்டுத் தலங்கள் சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டன. சாந்தி (சாண்டி) என அழைக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள், மரணமடைந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வழிபடவும், மதச்சடங்குகள் மேற்கொள்ளவும் அப்போது பயன்பட்டிருக்கின்றன.
அடுத்த பதிவில் மேலும்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆரம்பமே நன்றாக உள்ளது.தொடருங்கள் .
செய்திகளின் மூலம் யாதோ? குறிப்பிடவும் .
ரமணியன்
செய்திகளின் மூலம் யாதோ? குறிப்பிடவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1278784T.N.Balasubramanian wrote:ஆரம்பமே நன்றாக உள்ளது.தொடருங்கள் .

இந்த பதிவு நான் ஈகரை கட்டுரை போட்டிக்காக உருவாக்கியது.
வயல்வெளி பகுதியில் கிடந்த புத்தர் சிலையை பார்த்து அதை பற்றிய விபரங்களை சேகரித்து கட்டுரை வடிவில் அமைத்துள்ளேன்.நீண்ட பதிவாக இருக்க வேண்டாம் என்பதற்காக பகுதி பகுதியாக பதிவிடுகிறேன்.புத்தமங்கலம் என்ற கிராமம் நாகை மாவட்டம் கீழ்வேளூர் க்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமம்.
இந்த கட்டூரை நம் ஈகரை வெளியிட்ட புத்தகத்தின் இடம் பெற்றுள்ளது.இந்த கட்டுரை வெளிவர காரணமாக இருந்த ஆதீரா அவர்களுக்கும், எனக்கு வரலாற்று ஆவணங்களையும், செய்தி குறிப்புகளையும் தந்து உதவிய கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர் முனைவர். பாலசுப்ரமணியம் அவர்களுக்கும்
மேலும் இந்த கட்டுரையை அங்கீகரித்து பிரசுரம் செய்ய உதவிய ஈகரை நிறுவாக குழுவுக்கும் , நிறுவனர் சிவா அவர்களுக்கும் , ஊக்குவிப்பு செய்த ராஜா அவர்களுக்கும் நன்றி .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி.
ஈகரை உறவுகள் கொடுத்து வைத்தவர்கள்.
ரமணியன்
ஈகரை உறவுகள் கொடுத்து வைத்தவர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பகுதி - 2
வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்றைய ஹைதராபாத், ஒடிஸா, வங்காளம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன’ என்று, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்ற சரித்திரம் படைத்த சரித்திர நூலில் மதன் குறிப்பிடுகிறார். அவர் எழுப்பியுள்ள வினாவைப்போல கஜினியும், ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் ராஜேந்திரனின் ஆர்வமோ மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது.
எவரும் சிந்திக்காத திசையில் ராஜேந்திர சோழனால் மட்டும் எப்படி யோசிக்க முடிந்தது? வாளைச் சுழற்றிக்கொண்டு வான் முட்டும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எப்படி வங்கம் வரை செல்ல முடிந்தது? காரணம் எளிது. எதிரியாய் எண்ணி அவர்கள் பலங்களைத் துல்லியமாகக் கவனித்து, அவற்றை உடைக்கும் வலிமையை உருவாக்கிக் கொண்டான். வெளிநாடுகளில் சிம்ம கர்ஜனை புரிந்து சீறி எழுந்து அந்நாட்டு வீரர்களை துவம்சம் செய்ய அவனால் எளிதில் முடிந்ததற்கு அவனுடைய இந்த உத்தியே காரணம்.
போர் என்பது உடல்களுக்குள் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல, அது மனங்களிடையேயும் நிகழும் மல்யுத்தம் என்பதை அவன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே ஊகித்து அவற்றைக் கச்சிதமாக உடைத்துத் தகர்த்தவன் அவன்.
தந்தை ராஜராஜன் என்கிற மாபெரும் நிர்வாகி உருவாக்கித்தந்த அடித்தளமும், ஈட்டிய செல்வப்பொதியும், உண்டாக்கிய நிலநிர்வாக முறையும், அடிக்கல் நாட்டிய கடற்படையும் அவனுக்குப் பரந்துபட்ட வாய்ப்பை உருவாக்கியது. அதில் மளமளவென கட்டுமானம் செய்து உயர்ந்த கோபுரத்தை அவனால் எழுப்ப முடிந்தது.
ராஜேந்திரசோழனின் சாகசங்கள் சுவாரசியமானவை. அவனும் அவன் தந்தையும் ராஷ்டிரகூடர்களைப் போர்க்களத்தில் ஓட ஓட விரட்டியவர்கள். வடமேற்குக் கர்னாடகா, தெற்கு மகாராஷ்டிரம் ஆகியவற்றில் சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர். துங்கபத்ராவைத் தாண்டி சாளுக்கியர்களை வீழ்த்தினார்கள். பனவாசி, மனயகேடா நாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக்கண்டதும் பயந்துபோய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்து கொண்டார்கள். வடக்கு ஹைதராபாத்தையும் கைப்பற்றினர்.
பராந்தகன், பாண்டியர்களைப் பந்தாடிய போது, பயந்து ஓடிய பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தை ஒப்படைத்து ஓடிப்போனான். அதைத் தன் படையெடுப்பில் மீட்டான் ராஜேந்திரன். சிங்களமன்னனின் மகுடத்தைத் தட்டிப்பறித்து அவனைக் குறுகச் செய்தான். சிங்கள மன்னன் ஐந்தாம் மஹிந்தனைக் கைது செய்ய... அவன் 12 ஆண்டுகள் சோழர் சிறையில் இருந்து இறந்துபோனான்.
பாண்டியர்களையும், சேரர்களையும் அமுக்கி வைத்துக் கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான். பிறகு தன் மகனை ஜயவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் மதுரையின் ஆளுநராக நியமித்தான். ராஜேந்திரன் கலிங்கத்தை வென்றான். அப்போது கோதாவரிக்கரையின் படையின் பின்வரிசையில் அவனே நின்று பகைவர்கள் தாக்காதபடி பாதுகாப்பு வளையம் அமைத்தான். வங்க மன்னன் மஹிபாலாவை போர்க்களத்தில் வென்றான்.
ராஜேந்திரசோழன் இயல்பாகவே துணிச்சலும், வீரமும் கொண்ட தளபதி. போரின் நுணுக்கங்களையும், அசைவுகளையும் சரியாகக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன். எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்ட அவன் எப்படிப் போர்க்களத்தில் அவனை எதிர்த்து வந்த மதம் பிடித்த யானையை தனியொரு வீரனாக வெட்டிச் சாய்த்தான் என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுவரை தமிழகத்தில் படை திரட்டுவது என்கிற பழக்கமே இருந்தது. ஆனால் ராஜராஜன் நிலையான படையை உருவாக்கி, அதில் இருக்கும் வீரர்களை செதுக்கி செதுக்கி சிறந்த திறன் கொண்டவர்களாக மாற்றினான். அவனுடைய மகனும் அவர்கள் எப்போதும் கூர்மைப்படுத்தப்பட்ட குத்தீட்டியாகத் திகழும்படி போர்களை வடிவமைத்தான். ராஜேந்திரன் காலத்தில் சோழப்படை துளியும் ஓய்வின்றி தொடர்ந்து போர்க்களத்திலேயே கழித்தது. ஆனாலும் அவர்கள் அலெக்ஸாண்டருடைய வீரர்களைப்போல ‘ஹோம் சிக்’ என்று அடம்பிடிக்கவில்லை.
ராஜேந்திரனுடைய வங்கப்படையெடுப்பு அவனுடைய கடற்படை தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுப்பதற்கான முன்னோட்டமாகவே இருந்தது. பிற்காலச் சோழர்கள் இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் நிலப்பரப்பாக நினைக்குமளவு கப்பல் கட்டும் பணியில் தேர்ந்து விளங்கினர். கடலும், காற்றும் அவர்கள் கலங்களுக்குக் கட்டுப்பட்டன. அவர்கள் கடல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இரவும் பகலும் சோழக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வணிகக்கப்பல்கள் பத்திரமாகப் பயணிக்கப் பாதுகாப்பு அளித்தன. அதுவரை அப்படியொரு அமைப்பு தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை. வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய், விரிவுபெற்று சக்தி வாய்ந்த கடற்படையாக உருவம் பெற்றது. ‘சோழர்கள் கடலின் தோழர்கள்’ என்ற நிலை ஏற்பட்டது.
பத்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் மூன்று புதிய சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின. எகிப்தில் பாட்டிமிட்ஸ், சீனத்தில் சாங், இந்தியாவில் சோழர்கள். மூவருமே இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர். வரலாற்று ஆசிரியர்கள், சோழர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து கடற்படையெடுப்பை நடத்தியதாக சிலாகிக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அவசரக் கோலத்தில் படையெடுப்பு நிகழ்த்தவில்லை. எந்தப் போர்க்களத்திலும் சின்ன சிராய்ப்புகூட ஏற்படாமல் சோழப்படை தொடர்ந்து வெற்றிக்கொடியையே நாட்டியது. இலங்கையும், மாலத்தீவுகளும் அவர்களுடைய கடல் வணிகத்திற்கு முக்கிய மையங்களாகத் தேவைப்பட்டன. ஒரிஸா, வங்கம் போன்ற நாடுகளும் அவர்களுடைய கடல்வணிகத்தைத் தடைசெய்து அவ்வப்போது வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஏற்பட்ட எரிச்சலால் அவற்றை அடித்து நொறுக்கி, ‘வாலைச் சுருட்டிக்கொண்டு இருங்கள், இல்லாவிட்டால் நான் வாளை உயர்த்தவேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதற்காகவே ராஜேந்திரன் படைகளுடன் திக்விஜயம் செய்தான்.
சோழர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்கிற சூழல் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல் ஆரவாரம் நிகழ்த்தும். பிரளயம் போன்ற பேரோசையுடன் கம்பீரமாய் நீரைக் கிழித்துச் செல்லும். சோழர்கள் நாவாய் புறப்பட்டால், கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவு மரக்கலங்கள் அணிவகுக்கும். அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே எதிரிநாட்டு மன்னர்கள் நடுங்கி ஒளியுமளவு அவை காட்சியளித்தன. அங்கோர்வாட் மன்னன் முதலாம் சூர்ய வர்மன் விசுவாசத்தை நிரூபிக்க, எதிரிகளை வதைக்க உபயோகப்படுத்திய அவனுடைய சொந்தத்தேரை ராஜேந்திரனுக்குப் பரிசாக அளித்து தாஜா செய்தான்.
கடாரத்தை ஆண்ட ஸ்ரீவிஜய ராஜ்ஜியத்திற்கும் சோழர்களுக்குமிடையே நட்புறவு இருந்துவந்தது. ராஜராஜன் காலத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளைச் சோழர்களுக்கு அளித்து, அவர்களிடம் கடார மன்னர்கள் கடமைப்பட்டவர்களாகவே காட்டிக்கொண்டனர். 1016ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் ஜாவாவை வீழ்த்தியவுடன், சீனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பெரும் சக்தியாக ஊடுருவப் பார்த்தார்கள். ராஜேந்திரன் சீனத்திற்கு 1020ம் ஆண்டு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, சாங் சாம்ராஜ்ய மன்னன் எந்த வகையிலும் கடற்படையெடுப்புக்கு ஊறு விளைவிக்காதவாறு பார்த்துக்கொண்டான். அதுதான் அவனுடைய ராஜதந்திரம். ஏற்கெனவே 1022-23ம் ஆண்டுகளில் கலிங்கம் மூலமாக கங்கைவரை சென்று எச்சரிக்கை செய்து, தான் எடுக்கவிருக்கும் படையெடுப்புக்கு இடைஞ்சலில்லாமல் பார்த்துக்கொண்டான். புலிவேட்டைக்குப் போகும்போது, எலிகள் வந்தால் அவற்றை நசுக்க சக்தி விரயமாகுமே என்பதால்தான்.
1025ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் நாட்டிற்குச் சோழக் கடற்படை புறப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் திறம் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சோழ வீரர்கள். வாளைச் சுழற்றுவதிலும், அம்பில் பந்தத்தைச் சுற்றி நெருப்புக்கோளங்களை குறி தவறாமல் எறிவதிலும் அவர்கள் கில்லாடிகள். உணவு, உடை, ஆயுதம் என்று நுணுக்கமாகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளுடன் அந்தப் படையெடுப்பு முடுக்கிவிடப்பட்டது. ஏற்கெனவே பரிச்சயமான வழியில், ஏதோ பள்ளிக்குப் போவதைப்போல பதற்றமில்லாமல் பயணம். சோழர்கள் வழியில் மலாய, சுமத்ரா என்று அவர்கள் அத்தனை துறைமுகங்களையும் அடித்து நொறுக்கியவாறு முன்னேறினர். சீனத்துடன் தொடர்பில்லாமல் இருந்த அந்த நாடுகள், சீன உதவியையும் கோரமுடியவில்லை.
நேர்த்தியாக வாள் வீசும் வாள் பெற்ற கைக்கோளர்களும், குறி தப்பாமல் அம்பை இலக்கில் சரமாரியாகச் செலுத்தும் வில்லிகளும் எதிரிகளை வெட்டிச்சாய்த்தும், குத்திக்கிழித்தும் கடலைச் சிவப்பாக்கும் வேலைகளைச் செய்தனர். கடாரம் படையெடுப்பின்போது ராஜேந்திரனே சோழப் படையின் தளபதியாய் இருந்தான். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் சோழப் படையெடுப்பில் ஆடிப்போனது. சோழர்களின் மரக்கலங்களை எதிர்த்து புறப்பட்டு வந்த ஸ்ரீவிஜயக் கப்பல்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த எரியம்புகளாலும், தீப்பந்தங்களாலும் சேதமடைந்து சின்னாபின்னமாயின. ராஜேந்திரனின் வீரர்கள் விட்ட அம்புகள் கப்பல் செலுத்தியவர்களின் கழுத்திற்குக் குறி வைத்தன. சீறிப் பாய்ந்த சோழவீரர்கள் அந்தப் படகில் இருந்த கடார சிப்பாய்களைக் கண்டந்துண்டமாக வெட்டினர். கடார சிப்பாய்களின் கால்சராய் நனைய கடல் மட்டம் உயர்ந்தது. சோழப்படையின் வேகமும், புயல் போன்ற தாக்குதலும் அவர்களை கதிகலங்க வைத்தன. கடாரத்தையும், ஸ்ரீவிஜயத்தையும் சோழர்படை சூறையாடியது.
அந்நாட்டு மன்னனே கைதியாகும் சூழல் ஏற்பட்டது. சங்க்ரம விஜயதுங்கவர்மன் சிறைபிடிக்கப்பட்டான். ராஜேந்திரனின் கால்களில் விழுந்து விடுதலை பெற்றான். கப்பற்படை திரும்பி வரும் வழியில் மலேயா, சமிரி, நிக்கோபார் தீவுகளையெல்லாம் வெற்றிபெற்றுத் திரும்பியது.
ராஜேந்திரனுடைய தொடர் வெற்றி, படை பலத்தாலோ உணர்ச்சியும், உள்ளுணர்வு மிக்க வீரர்களாலோ மட்டும் விளையவில்லை. அது நேர்த்தியான ஒருங்கிணைப்பின் பலன். பல்லாண்டுகள் சிறிது சிறிதாக வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கோட்டை. எதிரிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து அந்தத் தடைகளை அப்புறப்படுத்திவிட்டு சுற்றுலா போவதைப்போல அவன் படைகள் சென்றுவர ஏற்பாடுகள் செய்தான். அவனுக்கு அவனே எதிரியாய் எண்ணி செயல்பட்டதால், எதிரிகள் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் பெருமைக்காகப் படையெடுக்கவில்லை. அந்த நாட்டின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீரனின் உள்ளத்தில் ஏற்பட்டதாலும், பொருளாதாரம் மேம்படும் பொது நோக்கமிருந்ததாலும் அவன் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்திக்கவில்லை.
மேலும் அடுத்த பதிவில்

கார்த்திக் செயராம் wrote:பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும்.
மலாய் மொழியில் bujang என்பது திருமணமாகாதவர் என்று பொருள்படும். நாகபாம்பிற்கு ular tedung எனக் கூறுவார்கள். ராஜ நாகத்திற்கு raja ular tedung .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
அருமை
அருமை
அருமை
தினமும் ஒரு பகுதியை
அன்போடு அளிக்கவும் .....
அருமை
அருமை
தினமும் ஒரு பகுதியை
அன்போடு அளிக்கவும் .....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279330சிவா wrote:கார்த்திக் செயராம் wrote:பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும்.
மலாய் மொழியில் bujang என்பது திருமணமாகாதவர் என்று பொருள்படும். நாகபாம்பிற்கு ular tedung எனக் கூறுவார்கள். ராஜ நாகத்திற்கு raja ular tedung .
அப்போ நம்ம ராஜா மலாய் மொழிலும் raja தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1279441T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279330சிவா wrote:கார்த்திக் செயராம் wrote:பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும்.
மலாய் மொழியில் bujang என்பது திருமணமாகாதவர் என்று பொருள்படும். நாகபாம்பிற்கு ular tedung எனக் கூறுவார்கள். ராஜ நாகத்திற்கு raja ular tedung .
அப்போ நம்ம ராஜா மலாய் மொழிலும் raja தான்.
ரமணியன்
ஆமாம், ராஜாவுக்கு ராஜாதான்! மலாய் மொழி பல மொழிச் சொற்களின் கலவையால் உருவானதுதான்!
https://en.wikipedia.org/wiki/List_of_loanwords_in_Malay இதில் உள்ளது மிகக் குறைவு, இன்னும் அதிகமாக தமிழ் மொழிச் சொற்கள் உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2