புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
366 Posts - 49%
heezulia
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
25 Posts - 3%
prajai
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_m10புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 1:48 pm

-
மேஷ ராசி அன்பர்களே...


6-ல் சூரியன்; 6,7-ல் புதன்; 7-ல் சுக்கிரன்; 7, 8 - ல் குரு;
9-ல் சனி; 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு
-
சூரியன், செவ்வாய் மாதம் முழுவதும், மாத முற்பகுதியில்
புதனும் குருவும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில்
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும்.

பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
எதிர்பாராத ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை
காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு
ஏற்படக்கூடும்.

காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள்
வெற்றியடையும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பும்
மரியாதையும் அதிகரிக்கும். பொது நிகழ்ச்சிகளை
முன்னின்று நடத்துவீர்கள்.

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுகத்
தொல்லைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள்
கிடைக்கும்.

சிலருக்கு அவர்கள் விரும்பியபடியே இடமாற்றம் கிடைக்கும்.
மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் சற்று நெருக்கடியான
நிலை ஏற்பட்டு நீங்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும்.
சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள்
நீங்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்
கொள்ள நேரிடும். இதுவரை ஏற்பட்டு வந்த அதிகப்படியான
செலவுகள் குறையும். மாதப் பிற்பகுதியில் புதிய
முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்
பார்த்தபடி கிடைப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும்.
ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையும் சரிவரப் பயன்
படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.
மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பாடங்களைக் கூர்ந்து கவனிப்பீர்கள். மாதாந்திரத்
தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். மாதப்
பிற்பகுதியில் பாடங்களில் கூடுதல் அக்கறை எடுத்துக்
கொண்டு படிக்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான
மாதமாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்
வாய்ப்பு ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி
தரும். அவருடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும்.
அலுவலகம் செல்லும் பெண்கள் அலுவலகத்தில்
பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

-
அதிர்ஷ்ட நாள்கள்: செப் 21,22, 23, 27,28, அக். 2, 3, 9, 11
சந்திராஷ்டம நாள்கள்: அக். 12, 13, 14
-
பாராயணத்துக்கு உரிய மந்திரம்:
வெள்ளிக்கிழமைகளில்
ஶ்ரீலலிதாம்பிகை நவரத்ன மாலை பாராயணம் செய்யவும்.

பரிகாரம்
:
வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி
அர்ச்சனை செய்து வழிபடுவதும்,
சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்வதும் ந
ன்மை தரும்.
-
-------------------------------------
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
நன்றி- விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 1:49 pm


ரிஷபம்ரிஷப ராசி அன்பர்களே...

-
5 - ல் சூரியன்; 5,6-ல் புதன்; 6-ல் சுக்கிரன்; 6,7 - ல் குரு;
8-ல் சனி; 9-ல் செவ்வாய், கேது; 3-ல் ராகு
-
மாதம் முழுவதும் ராகு நன்மை செய்வார். மாதப் பிற்பகுதியில்
புதன், குரு ஆகியோர் நன்மை செய்வார்கள். மற்ற கிரகங்கள்
சாதகமாக இல்லை.

இந்த மாதம் முழுவதும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க
வேண்டியது அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு
நீங்கும்.

பூர்வீகச் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளில் அவசர முடிவு
எடுக்கவேண்டாம். மாத முற்பகுதியில் கணவன் -
மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறு பாடுகள் ஏற்பட்டு
நீங்கும்.

சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு
இருக்காது. மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகையில் இருந்த
பிரச்னைகள் நீங்கி, அனைத்து வகைகளிலும் அனுகூலம்
உண்டாகும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள்
கனிந்து வரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த
கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ராகுவினால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்பவர்களுக்கு மாத முற்பகுதியில் அலுவலகத்தில்
இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள்
கிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும். பணிச்சுமை
அதிகரிப்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும்.

மாதப் பிற்பகுதியில் அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக
இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய
இடமாற்றமும் சிலருக்குக் கிடைக்கும்.

வியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். சரக்குக்
கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள
நேரிடும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள்
ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் பங்குதாரர்களுடன் இருந்து
வந்த மனவருத்தம் நீங்கும். அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிரத்தையுடன் முயற்சி
செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும்.
சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

முக்கியமான விஷயங்களில் மூத்த கலைஞர்களின்
ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.தயாரிப்பு
நிர்வாகிகளை அணுகும்போது பொறுமை அவசியம்.

மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறைந்து
காணப்படும். அதன் காரணமாக ஆசிரியர்களின் கண்டிப்புக்கு
ஆளாக நேரிடும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் இருந்த
மந்தநிலை மாறி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். ஆசிரியரின்
கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லி பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மாத முற்பகுதியில்
அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது
மிகவும் அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம்
அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில்
பணிச்சுமை அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் உற்சாகமான
சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 22, 23, 24, 25, 30; அக்: 1, 5, 10, 11, 12, 14
-
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 17, 18, 19; அக்: 15, 16
-
பாராயணத்துக்கு உரிய மந்திரம்:
செவ்வாய்தோறும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்
ஆகியவற்றில் ஒன்றை பாராயணம் செய்யவும்.

பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசித்து
வழிபடுவதன் மூலமும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை
வழிபடுவதன் மூலமும் பிரச்னைகளின் கடுமை குறையும்.
-
--------------------------------
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
நன்றி- விகடன்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 1:54 pm


மிதுனம்மிதுன ராசி அன்பர்களே...


4 - ல் சூரியன்; 4,5-ல் புதன்; 5-ல் சுக்கிரன்; 5,6 - ல் குரு;
7-ல் சனி; 8-ல் செவ்வாய், கேது; 2-ல் ராகு

மாத முற்பகுதியில் புதனும் குருவும், மாதம் முழுவதும்
சுக்கிரனும் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களால்
அனுகூலப் பலன்கள் ஏற்படுவதற்கில்லை.

குரு வலிமையாக இருப்பதால், தெய்வ அனுகிரகம்
பரிபூரணமாகக் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக
முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

பெரியோர்களின் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும்.
மாத முற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான
வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில்
செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்
உண்டாகும்.

மாதப் பிற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே
கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர்
அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம்
தேவை.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான
சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை
குறைவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிகாரிகள்
அனுசரணை யாக நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களின்
விஷயங்களில் தலையிடவேண்டாம். மாதப் பிற்பகுதியில்
சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் மாத முற்பகுதியில் வியாபாரம் விறுவிறுப்பாக
நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக்
கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு
தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
மாதப் பிற்பகுதியில் வியாபார வளர்ச்சிக்காகக் கடுமையாக
உழைக்கவேண்டி வரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். பணவரவும் அதிகரிக்கும். படைப்புகளுக்கு
உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில்
கௌரவிக்கப்படுவீர்கள்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக
இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோரின்
பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மாதப் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின்
ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்
அனுசரணையாக நடந்துகொள்ளவும். வேலைக்குச் செல்லும்
பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமும் மகிழ்ச்சியும்
தருவதாக இருக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 25, 27, 28, அக்: 2, 3, 5, 12, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: செப்: 20, 21

பாராயணத்துக்கு உரிய மந்திரம்:

வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது
நல்லது.

பரிகாரம்:

ஞாயிறு அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும்,
பைரவர் வழிபாடும் நன்மைகளை அதிகரிக்கும்.
-
-------------------------------------
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
நன்றி- விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 1:57 pm



கடகம்கடக ராசி அன்பர்களே...

3 - ல் சூரியன்; 3,4 - ல் புதன்; 4-ல் சுக்கிரன்; 4,5 - ல் குரு;
6-ல் சனி; 7-ல் செவ்வாய், கேது; 1-ல் ராகு

சூரியன், சுக்கிரன், சனி மாதம் முழுவதும், புதன், குரு மாதப்
பிற்பகுதியிலும் நன்மை செய்வார் கள். முயற்சிகளில்
வெற்றி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே
முடியும்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்
வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களைத் தவறாகப்
புரிந்துகொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் தங்கள்
தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள்.

புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும்
ஏற்படக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையுடன்
ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறையும். தந்தையிடம்
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்
கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும்,
உடனே சரியாகிவிடும்.
பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், நேரம் காலம்
பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களிடம்
உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம்.

மாதப் பிற்பகுதியில் அதிகாரிகள் அனுசரனையாக
நடந்துகொள்வார்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும்
வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக
வியாபாரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகளை
முறியடிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து
கொள்வார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே
வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்கள் அனுசரணையாக
நடந்துகொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மூத்த
கலைஞர்களின் வழிகாட்டுதல் பயன் தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் பாடங்களில் ஆர்வம்
குறைந்து காணப்படும். அடிக்கடி குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. மாதப்
பிற்பகுதி யில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில்
அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும்
மாதம். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக்
கடைப்பிடிக்கவும்.

குடும்பத்தினர் அனுசரணையாக இருப் பார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை
மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
--

அதிர்ஷ்ட நாள்கள்:

செப்: 18, 19, 21, 27, 28, 29, அக்: 1, 4, 5, 9, 15, 16
சந்திராஷ்டம நாள்கள்:
செப்: 22, 23, 24

பாராயணத்துக்கு உரிய மந்திரம்:

திங்கள்கிழமைதோறும் திருஞானசம்பந்தரின்,
'வேயுறு தோளிபங்கன்' என்று தொடங்கும் கோளறு
பதிகத்தைப் பாராயணம் செய்யவும்.

பரிகாரம்:

திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால்
அர்ச்சனை செய்வதும், அஷ்டமியன்று பைரவருக்கு
நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
-
-----------------------------------
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
நன்றி- விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 2:02 pm


சிம்ம ராசி அன்பர்களே...

2 - ல் சூரியன்; 2,3 - ல் புதன்; 3-ல் சுக்கிரன்; 3,4 - ல் குரு;
5-ல் சனி; 6-ல் செவ்வாய், கேது; 12-ல் ராகு

புதன் மாத முற்பகுதியிலும், செவ்வாய், சுக்கிரன், கேது
ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தர இருக்கிறார்கள்.
புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக
முடியும். மன உறுதி அதிகரிக்கும்.

துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன்
பேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக்
கடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக்கூடிய
வாய்ப்பு கூடிவரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த
கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி
ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம்
கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மாதப்
பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள்
ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள்
பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். உங்கள்
ஆலோசனை களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு
விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.
பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய
முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால்
ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும்
வாய்ப்புகளுடன், புதிய வாய்ப்பு களும் கிடைக்கும். சக
கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.
ரசிகர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும்,
பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும்.
சக மாணவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான
சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில்
சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில்
உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 21, 22, 23, 24, 29, அக்: 1, 2, 3, 6, 7, 10, 11

சந்திராஷ்டம நாள்கள்: செப்: 25, 26

பாராயணத்துக்கு உரிய மந்திரம்:

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அம்மன் பதிகம்
பாராயணம் செய்வது நல்லது.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால்
அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது.
-
------------------------------
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
நன்றி- விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 2:04 pm


கன்னிகன்னி ராசி அன்பர்களே...

1 - ல் சூரியன்; 1,2 - ல் புதன்; 2-ல் சுக்கிரன்; 2,3 - ல் குரு;
4-ல் சனி; 5-ல் செவ்வாய், கேது; 11-ல் ராகு.

மாத முற்பகுதியில் குருவும், மாதப் பிற்பகுதியில் புதனும்,
மாதம் முழுவதும் சுக்கிரன், ராகு ஆகியோரும் நற்பலன்களைத்
தருவார்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.

அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும்.
வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இடையூறுகள்
ஏற்பட்டாலும், சாமர்த்தியமாக முறியடித்துவிடுவீர்கள்.

மாத முற்பகுதியில் உறவினர்கள் மற்றும் மூன்றாவது நபர்களின்
தலையீடு காரணமாகக் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கணவன் -
மனைவிக்கிடையே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி
செய்வார்கள்.

எனவே, ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.
அவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படக்கூடும் என்பதால்
பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள்
கிடைக்கும். பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.
அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் விரும்பிய இடத்துக்கு
மாறுதலும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில்
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம்
கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக
முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி
கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளை
முறியடிப்பீர்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள்
அதிகரிக்கும். பெயரும் புகழும் கிடைக்கும். சக கலைஞர்கள்
அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைநிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டு பாராட்டு பெறுவீர்கள்.

மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள
வேண்டியது அவசியம். சந்தேகங்களை ஆசிரியர்களிடம்
உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

நீங்கள் குழம்பி நிற்கும்போது ஆசிரியர்கள் ஆலோசனை
சொல்லி பக்கபலமாக இருப்பார்கள்.

குடும்ப நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு
மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். தேவையான பணம்
இருப்பதால் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள்.

உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில்
எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
செப்: 22, 23, 24, 25, 30, அக்: 2, 3, 4, 5, 9, 12, 14
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 27, 28

பாராயணத்துக்கு உரிய மந்திரம்:


தினமும் 'மந்திரமாவது நீறு' என்று தொடங்கும்
திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தை பாராயணம்
செய்வது நல்லது.

பரிகாரம்:


புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று
துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில்
நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மை
தரும்.
-
-------------------------------
ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
நன்றி- விகடன்





சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 15, 2018 4:25 pm

பொதுவான பலன்கள் . ஓரிருவருக்கு ஒன்றிரண்டு ஒத்துவரும்
பலருக்கு அந்த ஒன்றிரண்டுகூட ஒத்துவராது.>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக