உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.
by velang Today at 7:30 am

» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

Admins Online

இரும்புத் தாயே!

இரும்புத்  தாயே! Empty இரும்புத் தாயே!

Post by ப.அமுதா on Wed Aug 29, 2018 7:13 am

இரும்புத் தாயே!

தாயிற் சிறந்தவை உண்டோ ? இத்தரணியிலே!
உதித்தாயடி கண்மணியே! பஞ்சம்பரந்த பாரதத்திலே
உன்தாய் உதிரம் உதிர்த்து உதித்தாய்
கைமாறிப் போனாய் உன்பாட்டன் வீட்டிற்கு
உறவுகள்கூடி உரிமையோடு அழைத்தனவென்று நினைத்தாயோ?

கற்கும் பருவத்தில் கொய்யாவும்நெல்லியும் விற்றாயே!
அங்குதான் நீ கணிதம் பயின்றாயோ?

எழுத்துகளின் அறிமுகம் இன்றி வாடினாயே
தன்கூட்டுப் பிள்ளைகள் பள்ளிசெல்லக் கண்டாயே
தாழ்வுமனப்பான்மையால் தடம்மாறாது கையொப்பமிடக் கற்றாயே
அங்குதான் நீ தன்னம்பிக்கையை வென்றாயோ?

நெடும்பயணங்களுக்கு கண்மணி நீயே வழித்துணையடி
ஊரின் வழித்தடமெல்லாம் உன்விழியில் விரிந்ததடி

பாவாடைப்பருவத்திலே ஆமணக்குவேப்பங் கொட்டைகளை காசாக்கினாயடி
மும்மாரியும் முப்போகமும் செல்வம் சேர்த்தனடி
நீ வாழ்ந்த வீடு செழித்தது
கிட்டியதெல்லாம் கேப்பங்களிதானடி;வழிந்தது உன்விழிநீரடி
நெல்லஞ்சோற்றுக்கு நெஞ்சுக் கிரங்கிப் போவாயடி
அண்டைவீடு உனக்கு அன்னைமடி தானடி
அங்குமட்டும்தான் உனக்கு கிட்டும் நெல்லஞ்சோறு

பூப்பெய்திப் புறப்பட்டாய்உன் பிறந்த வீட்டிற்கு
வந்தாள் ராணியென வரவேற்றவர் ஒருவருமிலர்
கைதேர்ந்தவள் ஆனாயடி கைத்தறி நெசவில்
பகலிரவு பாராது பட்டுக்கு ராணியானாய்
உன்திறமைபோற்றத் தமையனைத் தவிர எவருமிலர்
நெசவுக் கலையில் கைதேர்ந்தவள் ஆனாயடி

கைபிடித்தவனால் கைவிட்டாயடி நெஞ்சம்நிறைத்த நெசவை
கனவுக்கோட்டைகள் சிதறுண்டு காரிருள் சூழந்ததடி
கருப்பு நிறத்து அகத்து அழகியே
மண்ணெண்ணையால் கரியாக அல்லவா நினைத்தாய்
கரம்பிடித்த காரணத்தினால் காப்பாற்றினான் உன்கணவன்

காலத்தால் உணர்ந்தாயடி உன்வாழ்க்கைப் பாடத்தை
காற்றாய்ச் சுழன்றாய் கடும் உழைப்பாளியானாயடி
ஓராண்டில் ஓட்டைக்கூரை ஓட்டுவீடு ஆனதடி
ஓட்டுவீடு வளர உன்வயிற்றினுள்ளும் கருவளர்ந்ததடி
வீடு உருப்பெருமுன்பே உன்மகன் உலகம்பார்த்தானடி
ஓட்டுவீடு வீடல்ல; உன்உழைப்பின் ஓர்உருவம்

சுற்றம் உன்னை ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை
சுற்றத்துச் சுடுசொற்களுக்கும் அயரா உழைப்பிற்கும் சளைக்காதவளடி நீ

வைரம் பாய்ச்சிய நெஞ்சமல்லவா உனது
வைராக்கியமும் துணிவும் தன்னம்பிக்கையுமே உனதுடைமைகள்
கடின உழைப்பும் பொறுமையும் உனது ஆயுதங்கள்
சுற்றத்திடம் நல்லவேலைக்காரி குழந்தைகளிடம் பெரியம்மா
உன்உலகில் இவைதான் உன் அடையாளம்

எப்படித்தான் பெற்றாயோ இத்தனை வலிமைஎல்லாம்
பிள்ளைப் பருவத்தில் ஓடத் தொடங்கியவள்
பிராயம் நாற்பத்தைந்தைத் தொட்டும் ,வாழ்க்கை
ஓட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை

தன்இதயம் வலுவற்ற போதும் உலக இதயங்களுக்காகப்
பலம் பெற்றாள் உலக அன்னை தெரசா

என்அன்னை மெழுகுவர்த்தி வழிவந்தவள் போலும்
அவள் வாழும்வரை அவளும் வாழ்வாள்
பிறரையும் வாழ வைப்பாள்

நான் கண்ட இரும்புப் பெண்ணே ! உன்னிடம்தான்
எத்தனை பரிமாணங்கள் எத்தனை நற்குணங்கள்
எத்தகு வலிமை எத்தகு அனுபவ முதிர்வு
எல்லாம் வியக்கவைப்பதோடு நில்லாது
வாழ்க்கைப் பாடத்தை உணர ஊன்றுகோலாகியதே!

வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் அன்னைக்காக
நடந்துகொண்டிருக்கும்
அவள் மகள் எழுதியது..............ப.அமுதா
ப.அமுதா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 13/07/2018
மதிப்பீடுகள் : 10

http://amuthasurabhi888@gmail.com

Back to top Go down

இரும்புத்  தாயே! Empty Re: இரும்புத் தாயே!

Post by SK on Wed Aug 29, 2018 10:31 am

அருமை தோழி   இரும்புத்  தாயே! 3838410834 இரும்புத்  தாயே! 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

இரும்புத்  தாயே! Empty Re: இரும்புத் தாயே!

Post by ப.அமுதா on Wed Aug 29, 2018 12:59 pm

நன்றி ஐயா
ப.அமுதா
ப.அமுதா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 13/07/2018
மதிப்பீடுகள் : 10

http://amuthasurabhi888@gmail.com

Back to top Go down

இரும்புத்  தாயே! Empty Re: இரும்புத் தாயே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை